எதற்காக இங்க இந்தியன் என்ற டெர்ம் வருதுன்னா, தமிழன் என்ற டெர்மை போட முடியாத காரணத்தினால் தான். சுலபமா இந்தியனாவோ இல்லை தமிழனாவோ இல்லாமல் மனுஷனா இருந்துறேன் அப்படிங்கிற பதில் சொல்லிவிடமுடியும். ஆனால் உங்களைச் சில விஷயங்கள் முன்நிறுத்துகின்றன என்றால் அதில் மிகமுக்கியமானது உங்களின் மொழி. அப்படியிருக்க மொழி இல்லாமல் போய்விட்ட, நியூட்ரலாகிவிட்ட மனிதர்கள் இல்லவேயில்லை என்று சொல்லாவிட்டாலும் % குறைவாகயிருப்பது உண்மை.
சிலசமயம் என்னிடம் இந்தக் கேள்வி வைக்கப்பட்டிருக்கிறது, அலெஜாண்ட்ரோ கன்சாலஸ் இன்னாரித்தோ, பெரோ அல்மோடோவர் படம் பார்க்கும் உன்னால் எப்படி சிவாஜி நல்ல படமென்று சொல்ல முடிகிறது என்று. ஒன்று நான் அந்தப் படங்களை ரசித்துப் பார்ப்பது பொய்யாகயிருக்க வேண்டும் இல்லை சிவாஜி பற்றி சொல்வது பொய்யாகயிருக்க முடியும். ஆனால் என்னைப் பொறுத்தவரை சிவாஜியை நோக்கி நான் நகர்த்தப் படுகிறேன் என்று தான் சொல்வேன். காந்த சக்தி ரஜினியிடம் இருக்கிறதா என்றால் இல்லை, சமுதாயம் நம்மை அப்படிச் செய்யச் சொல்லி நகர்த்துகிறது.
பெயரிலி சொல்லியிருப்பார் "not a weblog, but an optimized ego-engine" என்று உண்மைதான் பதிவுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்த பொழுது செய்திராத சில விஷயங்களை நான் தமிழ்நாட்டிற்கு வெளியில் செய்ய தள்ளப்பட்டிருக்கிறேன்.
முங்காருமலையையும் சிவாஜியையும் இங்கே கன்னடர்கள் ஒப்பிடும் பொழுது நீங்கள் அவர்களுக்கு முகத்துக்கெதிரில் சொல்லிவிடுவீர்களா வித்தியாசத்தை என்றால் உங்கள் மனம் இந்த Ego Engine போல் வருத்தப்படாது. ஆனால் அவர்கள் மனம் நோக வைக்கக்கூடாது என்று ஒரு எண்ணம் எப்பொழுதுமே ஓடிக் கொண்டிருப்பதால் அப்படி சொல்லமுடியவில்லை, பெரும்பாலும் வாய் மூடிக்கொண்டோ இல்லை வெட்டி சமாதானங்கள் சொல்லிக் கொண்டோயிருக்கும் பொழுது. எங்காவது ஒரு இடத்தில் இதை -பச்சையாக- சொல்ல முடியாவிட்டாலும், உள்ளுறை உவமையாக சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் சிவாஜி போஸ்டரை டெக்ஸ்டாப்பில் போடுவது, எப்பொழுதும் சிவாஜி பாட்டையே கேட்டுக் கொண்டிருப்பது போன்ற செயல்கள் என்று நினைக்கிறேன் நான்.
ஏன் இப்ப இந்தப் புலம்பல் என்று கேட்டால் இதுவரை KA ரெஜிஸ்ட்ரேஷன் வண்டெயொன்றைத்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். எந்த ஒரு சமயத்திலும் அந்த வண்டியை ஓட்டும் பொழுது தமிழ் பேசுவதில்லை; முடிந்தால் என்னுடைய ஆங்கில அக்சண்டில் இருந்தோ தவறான இந்தியில் இருந்தோ கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்றுதான். சிலசமயம் பக்வாஸான பிரச்சனை வரும் எப்படியென்றால் நான் ரொம்பத் தீவிரமாய் இந்தியில் பேசிக்கொணிடிருக்க அக்கா அந்த இடத்தில் தமிழில் பேசி என்னை தர்மசங்கடத்தில் மாட்டிவிடுவதுண்டு.
இப்ப பிரச்சனை என்னான்னா நான் TN போர்ட் வண்டி ஒன்றை தமிழ்நாட்டில் இருந்து வரவழைத்திருந்தேன் எவ்வளவு நாள் தான் நானும் Scooty Pep ஓட்டுவேன் சொல்லுங்க ;-). அது வந்ததில் இருந்துதான் பிரச்சனையே; பழைய ஞாபகத்தில் வண்டி ஓட்டும் வழி கேட்கவோ இல்லை டிராபிக் போலிஸிடம் பேசவோ நான் இந்தியை உபயோகிக்க, என்னுடைய TN போர்ட் வண்டி அழகாய் அடையாளம் காட்டிவிடும் நான் தமிழனென்று அப்புறம் கேட்கவும் வேண்டுமா கர்நாடகாவில் பிரச்சனையை. சும்மாயிருந்தாலே பிரச்சனை நான் வேற பெரிய டுபுக்கு மாதிரி இந்தியில் பேச இரண்டு பங்காகிக் கொண்டிருந்தது பிரச்சனை.
இந்த விஷயத்தில் சைக்காலஜி கொஞ்சம் போல் எல்லோரிடமும் மாறுபடுகிறது; நான் TNபோர்ட் வண்டி ஓட்டினாலும் தமிழில் பேசாமல் இந்தியில் வழிகேட்டால் சிலர் ஒத்துக்கொள்கிறார்கள் ஆனால் சிலருக்கு நான் அவர்களை ஏமாற்றப் பார்க்கிறேன் என்று கோபம் வருகிறது :(.
சமீபத்திலேயே இரண்டு மூன்று இன்ஸிடெண்ட்ஸ், எப்படியென்றால் என்னிடம் தப்பில்லாவிட்டாலும் நான் TN வண்டி ஓட்டுவதாலேயே என்னைத் திட்டிவிட்டுப் போனவர்கள்; நின்று சண்டை போடப் பார்த்தார்கள் என்று. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் நான் விட்டுக்கொடுத்துத் தான் வந்து கொண்டிருக்கிறேன். பயந்தாங்கொள்ளித்தனம் என்றால் சரிதான் மறுக்கவில்லை என்ன கோபப்பட்டால் என்னவாகும் என்றுத் தெரிந்திருப்பதால் வேறொன்றும் செய்யமுடியவில்லை, ப்ளாக் எழுதுவதைத் தவிர.
புனேவில் இருக்கும் பொழுதே எழுதியிருக்கிறேன், பெங்களூரில் இருக்கும் பொழுது செக்யூர்ட்டா இருப்பதைப் போன்ற ஃபீலிங் எனக்கு வரவே வராது. இங்கே தமிழனாக இருப்பதைவிடவும் 'இந்தி'யனாக இருப்பதால் பிரச்சனை வராது என்றால் நான் அதைத்தான் நிச்சயமாய்த் தேர்ந்தெடுப்பேன்.
--------------------------
செப்புப்பட்டயம் உதைக்குது - புதுப்பதிவை ஒத்துக்க மாட்டேங்குது.
Showing posts with label இந்தி. Show all posts
Showing posts with label இந்தி. Show all posts
பெங்களூரில் இந்தியனாய் இருத்தல்
Friday, July 27, 2007 | Labels: இந்தி, சொந்தக்கதை | 18 Comments
Subscribe to:
Posts (Atom)