சுஜாதா சாய்பாபா ஜல்லி

‘சத்ய சாய்பாபாவை நீங்கள் போய் தரிசனம் செய்யவில்லையா?’ என்று எனக்கு சிலர் மெயில் போட்டிருக்கிறார்கள்.

‘ரஜினிகாந்த், சச்சின், கலைஞர், எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசுவாமி, சிவராஜ் பாட்டீல் என்று பல்வேறு தலைவர்கள் பார்த்து, தங்கச் சங்கிலி, மோதிரம் எல்லாம் காற்றிலிருந்து பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். சாய்பாபாவைப் பார்த்த கையோடு சச்சின் 160 ரன் அடித்திருக் கிறார். நீங்களும் போய் குட்டியாக ஒரு மோதிரம் பெற்றுக்கொள்ள வேண்டி யதுதானே? ‘கற்றதும்... பெற்றதும்...’ சிறப்பாக எழுத வருமே?’ என்று கேட்டார்கள்.

சாய்பாபாவின் மந்திரச் செயல் களை க்ளோஸப்பில் விளக்கும் வலை மனையே உள்ளது. அவர் எடுத்துக் கொடுக்கும் சங்கிலிகள் அவரிடம் எப்படிக் கொடுக்கப்படுகின்றன என் பதை ஸ்லோமோஷனில் காட்டுகிறார்கள். இருந்தும், சாய்பாபாவுக்கு வரும் கூட்டம் இம்மியளவும் கம்மி ஆவதில்லை. இதன் காரணம் என்ன? சிறந்த அறிவியலாளர்கள்கூட அவ ரது பக்தர்களாக இருக்கிறார்களே, இது எப்படி?

இதன் விடை எளிதானது. அறிவியல் சிந்தனையை ஓரளவுக்கு மேல் தொடர்ந்தால், வாழ்வில் எல் லாமே அர்த்தமற்றதாகப் போய்விடும். பிரபஞ்சமே வேஸ்ட் என்றாகிவிடும். ஷேக்ஸ்பியரின் மாக்பெத் சொல்வது போல்,

‘Life’s but a walking shadow, a poor player
That struts and frets his hour upon the stage
And then is heard no more: it is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.’

(வாழ்க்கை என்பது ஒரு நடமாடும் நிழல் மேடையில், தன் நேரத்தில் தடுக்கித் திணறிவிட்டு மறைந்து போகும் மோசமான நடிகன் நடித்த, ஒரு முட்டாள் சொன்ன கதை; ஆரவார மும் சீற்றமும் நிரம்பி எதையுமே நிரூபிக்காத கதை) என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும். ஓர் எல்லைக்கு மேல் கேள்வி கேட்காமல் நம்ப வேண்டியிருக்கிறது.

கற்றதும் - பெற்றதும் - ஆனந்தவிகடன்.

------------------------------

Wait a minite, wait a minite.

எங்க வீட்டில் சாய்பாபாவைத் தப்பாப் பேசினா சாப்பாடு போடமாட்டாங்க. வெளியிலதான் சாப்பாடு.

19 comments:

வடுவூர் குமார் said...

சரியாகத்தான் இருக்கு.
ஆமாம் அந்த சாப்பாட்டு விஷயம் உங்களுதா? சுஜாதாவோடதா?

Sridhar V said...

இது எப்படி 'ஜல்லி' என்று வகைப்படுத்தியிருக்கிறீர்கள்? மிக அருமையான correllation

கல்வெட்டு (நான் மிகவும் மதிக்கும் ஒரு சிந்தனையாளர்) இதே கருத்தை அசுரனின் ஒரு பதிவில் (பகத்சிங் / முகமது அப்சல் பற்றிய பதிவு என்று நினைக்கின்றேன்) அருமையாக சொல்லியிருப்பார்.

இது மாதிரி நம்பிக்கைகள் ஒரு ஊன்றுகோல் போல்.

இதைத்தாண்டினால் வெட்டவெளிதான். அது நிறையபேருக்கு பயம் தரும் இடம்தான்.

கலைஞர் போன்ற ஒரு திடமான / தெளிவான நாத்திகர் கூட இன்னும் ஒரு சில நம்பிக்கைகளை (மஞ்சள் துண்டு போன்ற)விடவில்லையே. ஆனால் அது அவருடைய கொள்கைகளை சிதைப்பதாக நாம் கருத முடியாது.

இன்னொரு quote நினைவுக்கு வருகிறது. தி ஜா -வின் நளபாகம் கதையில் ஒரு நாத்திகர் தன் வீட்டு பெரியவர்களின் பொருட்டு ஒரு ஆத்திகர் வீட்டுக்கு (அவருடைய நண்பர்தான்) வழிபட்டு திருநீறு வாங்க வருவார். ஆத்திக நண்பருக்கு அது மிக கிண்டலாக இருக்கும். பிறகு அதன் தவறை உணர்ந்து நடு இரவில் அந்த நாத்திகரின் வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்பார். அந்த வசனங்கள் மிக அருமையாக இருக்கும்.

Anonymous said...

/எங்க வீட்டில் சாய்பாபாவைத் தப்பாப் பேசினா சாப்பாடு போடமாட்டாங்க. வெளியிலதான் சாப்பாடு./

சொந்தமா சமைக்க கத்துக்க தல.
நீ சமைச்சா சாம்பார்ல உப்பு கொறைஞ்சா போய்டும்? :)

கார்த்திக் பிரபு said...

sabash venkat .

மது said...
This comment has been removed by a blog administrator.
பூனைக்குட்டி said...

குமார், சாப்பாட்டு விஷயம் என்னுது.

ஸ்ரீதர் வெங்கட், நான் ஜல்லின்னு சொன்னது ஒரு அளவிற்குப் பிறகு கேள்வி கேட்காமல் நம்பவேண்டியிருப்பது என்பதைத்தான்.

//ஓர் எல்லைக்கு மேல் கேள்வி கேட்காமல் நம்ப வேண்டியிருக்கிறது. //

ஏனென்றால் இதற்கு எல்லை இல்லை. சுஜாதாவுடைய எல்லைகள் வேறு என்னுடையவைகள் வேறு, மற்றவர்களுடையது வேறு. புரிகிறதா?

என்னுடைய எல்லை ஜாதின்னு சொல்லி அதை நான் கேள்விகேட்காமல் நம்புவேன் என்பது எப்படி முட்டாள்தனமோ அப்படித்தான் இதுவும்.

எப்பொருள்
யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்பதறிவு. (இது நான் எழுதின ஹைக்குவோ பொய்க்கூவோ இல்லை)

பூனைக்குட்டி said...

பெங்களூரில் சொந்தச் சமையல் தான் தல, இட்லி/தோசை மாவு - 20 ரூபாய், இட்லிப் பொடி(ஆனந்த பவன் / மற்றும் அம்மாவுடையது), முட்டை பத்து என என்னுடைய உணவு பெரும்பாலும் நான் சமைத்துக்கொள்ளக்கூடியது தான்.

இல்லாவிட்டால் தயிர் வெளியில் வாங்கி, சாதம் மட்டும் குக்கரில் வைத்துவிட்டு, இரண்டொரு ஆம்லெட், ஆப்பாயில் - மாங்காய் ஊறுகாய் இப்படி முடிந்துவிடுகிறது.

நான் வெஜிடேரியன் வேண்டுமென்றால், ஹோட்டல் ஸ்ரீதேவி(ஆந்திரா ஸ்டைல் தான்). காப்பி/டீ கூட சொந்தமாகத்தான் போட்டுக்கொள்வது வழக்கம்.

ஊட்டுல அக்காவை விட 'உப்பு' நாங்கத்தான் கரெக்டா போடுவோம் தெரியுமில்ல...

-----------------

அது ஒரு அங்கதத்திற்காக சொல்லப்பட்டது. எங்க வீட்டில் விசாழக்கிழமையில் ராஜ்டீவியில் சாய்பாபாவின் நிகழ்ச்சியின் பொழுது டீவிக்கு தீபாராதனையெல்லாம் காட்டப்படும்.

ஹே ஹே.

Anonymous said...

இதன் விடை எளிதானது. அறிவியல் சிந்தனையை ஓரளவுக்கு மேல் தொடர்ந்தால், வாழ்வில் எல் லாமே அர்த்தமற்றதாகப் போய்விடும். பிரபஞ்சமே வேஸ்ட் என்றாகிவிடும்.

It may be true of mean and small minds like Sujatha.Greater minds
like Daniel Dennet,Russel do not suffer from this illusion.Scientific humanism may be
unknown to Sujatha but many scientists practise that.They need
neither Sujatha nor SaiBaba to find
meaning in life,science and universe.

Anonymous said...

சாய்பாபா பார்ப்பனர் இல்லை. ஆனால் பார்ப்பனர்கள் ஏன் சாய்பாப்பாவைக் கும்பிடுகின்றனர் என்பது விந்தையான செய்தியாகவே இருக்கிறது

For that matter neither Rama or Krishna are brahmins.Nor are most
Alwars and Nayanmars.So the problem
is with your perception about brahmins, not with brahmins.

Sridhar V said...

//ஏனென்றால் இதற்கு எல்லை இல்லை. சுஜாதாவுடைய எல்லைகள் வேறு என்னுடையவைகள் வேறு, மற்றவர்களுடையது வேறு. புரிகிறதா?
//

எனக்கு புரிகிறது அவர் சொன்னது. அதை ஜல்லியாக நீங்கள் பார்க்கிறீர்கள். நல்ல Correllation-ஆக நான் பார்த்தேன். :-)) அவ்வளவே!
பின்னூட்டம் வெளியிட்டதற்கு நன்றி!

Gurusamy Thangavel said...

//It may be true of mean and small minds like Sujatha.Greater minds
like Daniel Dennet,Russel do not suffer from this illusion.Scientific humanism may be
unknown to Sujatha but many scientists practise that.They need
neither Sujatha nor SaiBaba to find
meaning in life,science and universe.//

I agree with the Anony comment.

//நான் ஜல்லின்னு சொன்னது ஒரு அளவிற்குப் பிறகு கேள்வி கேட்காமல் நம்பவேண்டியிருப்பது என்பதைத்தான்.//

சுஜாதாவின் ஜல்லியை நன்கு போட்டுடைத்துள்ளீர்கள்.

G.Ragavan said...

என்னது சாய்பாபாவைப் போய்ப் பார்த்துதான் சச்சின் இத்தன ரன் அடிச்சாரா! அடக்கடவுளே! மேட்ச் பிக்சிங் அவ்வளவு தூரம் போயிருச்சா!

நியோ / neo said...

மோகன்!

பதிவுக்கு நன்றி! 'ஜல்லி'யைக் 'கண்டுபிடித்ததே' சுஜாதாதானே! அதை அவர் சிறப்பாகச் செய்வதில் வியப்பில்லை! ;)

>> It may be true of mean and small minds like Sujatha.Greater minds
like Daniel Dennet,Russel do not suffer from this illusion.Scientific humanism may be
unknown to Sujatha but many scientists practise that.They need
neither Sujatha nor SaiBaba to find
meaning in life,science and universe. >>

இது கொஞ்சம் தெரிஞ்ச அனானி மாதிரி தெரியுதே! ;)

ஆனாலும் இந்த அனானி சொல்றது உண்மை :) - நீங்க சொல்ற 'அளவுகள், எல்லைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்' என்பது சரியான பார்வை.

சாமியக் கும்பிட்டே தீருவேன்னா போய்க் கும்பிட்டுக்கோய்யா - உடனே Stephen Hawking, Carl Sagan எல்லாரும் கூட ஒரு எல்லைக்கு மேல 'ஒரு சக்திய' நம்பினாங்க-ன்னு கூட சுஜாதா சொல்வாரு போல!

அடங்க மாட்றாரு! தன் சாதிய அடையாளத்தையே இன்னும் நம்புகிறேன்னு சாதிச்சங்கக் கூட்டத்துக்குப் போனவரு - இந்த உட்டாலக்கடி லாஜிக் பேசுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! :)

பூனைக்குட்டி said...

ஸ்ரீதர் வெங்கட், அவர் எதை மைண்ட் சொன்னார்னு நானொரு விதமாகவும் நீங்க ஒரு விதமாகவும் நிச்சயமா எழுதலாம்.

ஆனால் எல்லையைப் பத்தி எழுதினதும் எனக்கு மனதில் பட்டது இதுதான். ஒரு இடத்தில் காம்ப்ரமைஸ் பண்ணிங்கன்னா முடிஞ்சு போச்சு.

அவ்வளவுதான்.

--------------------

ராகவன் - இது தெரியாது உங்களுக்கு. ;)

பூனைக்குட்டி said...

எனக்கு 21 Grams' ல் வரும் வசனம் தான் நினைவில் வருகிறது. என் தலையில் நடைபெறும் ஒவ்வொரு முடியும் நகர்வும் ஆண்டவனால் தான் முடிவெடுக்கப்படுகிறதுன்னு.

அப்படியிருக்கிறப்ப, கிரிக்கெட், மேட்ச் பிக்ஸிங் எல்லாம் சர்வ சாதாரணம் இல்லையா?

பூனைக்குட்டி said...

dfsafsf

Thamizhan said...

சாயி பாபாவின் மத அடிமைத்தனம் வேண்டும் ஆனால் சீரங்கம் ரெங்கராஜ ஐயங்கார் என்ற பெருமை குறைந்து விடக்கூடாது.கல்கியின் பார்வயும் அதுதான்.அவரைப் பெரிய மனிதனாக்கக் கூடாது ஆனால் சாயி பாபாவின் நண்பர்களாகவும் இருப்பார்கள்.சாயிபாபாவும் இவர்களைப் புரிந்து கொண்டு வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்துள்ளார்.கலைஞரை அவர் வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டாரே என்பது பெரிய ஆதங்கம் அதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை மற்றவர்கள்,நாம் உணர்ந்துகொண்டால் நல்லது.

Anonymous said...

this a least desirabe method of fed up and feedback fill up (fu & ffu) :)

சிறில் அலெக்ஸ் said...

நிஜமா சுஜாதா எழுதினதா?
ஹ்ம்ம்.

ஷேக்ஸ்பியரின் சொல்லாடல் சூப்பர்.

எப்பொருள் யார்வாய்..ஐயன் சொல்லாடலும் சூப்பர்.

என்ன சொல்றது போங்க.. நாம என்ன நம்பிகிட்டிருக்கோமோ அதுதான் அப்போதைக்கு நிஜம்.