Video of Microsoft's Surface computing

இதைப் பற்றிய வீடியோ ஒன்றை முன்னாலே பார்த்திருக்கிறேன். இப்பொழுது வெளிவந்திருப்பது புதியவிஷயங்களை உள்ளடிக்கியது.

தயாநிதி, கலாநிதி, சன் டிவி, தினகரன் - கனிமொழி

இந்த மே மாதத்தில் இரு தினங்கள் கலைஞர் எரிமலையாய்ப் பொங்கி வெடித்ததையும், குற்றால அருவியாய்க் குளிர்ந்ததையும் தி.மு.க. வரலாறு மட்டுமல்ல, அகில இந்திய அரசியல் வரலாறும் கவனமுடன் பதிவு செய்து கொண்டது.

மே 13 அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழு, மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதிமாறனை விலக்கிக் கொள்ளும் அதிகாரத்தை தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. அன்றைய தினம் கனத்த இதயத்துடன் கூட்டரங்கத்தை விட்டு வெளியேறிய கலைஞர், பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்தார்.



அந்தச் செய்தி நாடு முழுவதிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து பதின்மூன்று நாட்களுக்குப் பிறகு, மே 27ம் தேதி தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு கலைஞர் தலைமையில் கூடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானம், கலைஞர் மனதில் தீராத வேதனையாக இருந்த மே 13ம் நாள் வேதனைகளுக்கு, மயிலிறகால் ஒத்தடம் தருவதைப் போல அமைந்தது. அந்த மகிழ்ச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கலைஞர், ராஜ்ய சபா வேட்பாளராக திருச்சி சிவாவும், கவிஞர் கனிமொழியும் நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.

அந்த அறிவிப்பு தமிழக மீடியாக்களில் மட்டுமல்லாமல், அனைத்திந்திய மீடியாக்களிலும் வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டன.

அன்றிரவு முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை சி.ஐ.டி. காலனியிலுள்ள கனிமொழியின் இல்லத்தில் நாம் அவரைப் பேட்டி கண்ட நிமிடம் வரை, தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் வாழ்த்து மழையில் கனிமொழி நனைந்து கொண்டேயிருந்தார். வாழ்த்துக்களுக்கிடையில் நம்மிடமும் பேசினார்.

‘‘கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே நான் அரசியலுக்கு வருவதாக முதன்முதலில் குமுதம் ரிப்போர்ட்டரில்தான் செய்தி வெளியிட்டிருந்தீர்கள். அந்த நினைவலைகளுடனேயே உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன்!’’ என்று நமது கேள்விகளை எதிர் கொண்டார் கனிமொழி...

ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளீர்கள். தி.மு.க.விலுள்ள எல்லா தலைவர்களின் வாழ்த்துகளும், வரவேற்பும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?

‘‘தி.மு.க.விலுள்ள பலரும் எனக்குத் தொடர்ந்து வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.’’

கலைஞர் குடும்பத்திலிருந்து முதன் முறையாக, பெண் வாரிசாக டெல்லிக்குச் சென்று குரல் கொடுக்கப் போகிறீர்கள்...

(கேள்வியை முடிக்கும் முன்பே இடைமறித்து பதிலளித்தார் கனிமொழி)

‘‘இந்தக் கேள்வியை எதற்காகக் கேட்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. பெண் வாரிசுக்கும் குரல் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? ‘என்னால் குரல் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டால், பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். பெண் வாரிசு, ஆண் வாரிசு என்று வித்தியாசப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.’’

கலைஞர் குடும்பத்திலிருந்து நேரடியாக தமிழ்நாட்டு அரசியலுக்கு வராமல் டெல்லி அரசியலுக்குச் செல்கிறீர்கள். கடந்த அறுபதாண்டுகளுக்கு மேலாக கலைஞரும், தி.மு.க.வும் போராடி வரும் கொள்கைகளுக்காக உங்களால் டெல்லியில் குரல் கொடுக்க முடியுமென்று நம்புகிறீர்களா?

‘‘நிச்சயமாக முடியும். திராவிடக் கொள்கைகள் என் ரத்தத்திலும் ஊறியிருக்கும் ஒரு விஷயம்தான். தி.மு.க.வும், கலைஞரும் வலியுறுத்தும் இட ஒதுக்கீடு, தமிழ் மொழி ஆளுமை உள்ளிட்ட பல விஷயங்கள் நான் இங்கேயே பல்வேறு மேடைகளில், போராட்டங்களில் வலியுறுத்தி வருகிற விஷயங்கள்தான். எனக்கு உடன்பாடில்லாத எந்த விஷயத்தையும் நான் பேசுவதில்லை. திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் எனக்கும் எந்த மாறுபாடும் இல்லை. அதனால், இத்தனை வருடங்களாக தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வரும் நான் டெல்லியிலும் போய்ப் பேசுவேன். இதில், எந்தவிதமான மாறுபாடும் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை.’’

‘தேர்தல் மூலம் மக்களை நேரடியாகச் சந்திக்காமல், அரசியல் வாரிசுகள் பின்வாசல் வழியாக அதிகார மையங்களுக்குச் செல்கின்றனர்’ என்ற விமர்சனம் உண்டு. இது உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?

‘‘எந்த அரசியல் தலைவரின் வாரிசுகள் பின்வாசல் வழியாக வருகிறார்கள்? அண்ணா (மு.க.ஸ்டாலின்) இருக்கிறார். எல்லா முறையும் அவர் தேர்தலைச் சந்தித்துத்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் ஒருமுறைகூட வேறு வாசல் வழியாக வரவில்லை. இப்போது தயாநிதி மாறன் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுத்தான் பதவிக்கு வந்தார். பல வாரிசுகள் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், இதையரு அரசியல் விமர்சனமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் ராஜ்ய சபாவுக்குப் போவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் இல்லை. அறிஞர் அண்ணாவாகட்டும், முரசொலிமாறனாகட்டும், வைகோவாகட்டும், மற்ற தலைவர்களாகட்டும் எல்லோரும் ராஜ்ய சபாவிற்குப் போயிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்... மக்களைச் சந்தித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதுதான் எனக்கும் உடன்பாடான விஷயமாக இருக்க முடியுமென்று சொல்லியிருக்கிறேன். ஆனால், சில சூழல்களில் நமக்குப் பிடித்ததுதான் முடிவு என்கிற நிலைப்பாட்டையும் நம்மால் எடுக்க முடியாது. அதனால், கடைசியாக நாம் சாதிக்க வேண்டிய விஷயம் என்ன என்பதுதான் முக்கியமே தவிர, எந்த வழி என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகக் கருத வேண்டிய கட்டாயமும் சில சமயங்களில் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.’’

டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி பின்வாசல் வழியாகத்தான் அரசியலுக்குள் நுழைந்தார் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விமர்சனம் செய்தார். அந்த மாதிரியான விமர்சனம் உங்களுக்கு எதிராகவும் கூறப்படும்போது உங்களுக்கு மன வருத்தம் ஏற்படாதா?

‘‘டாக்டர் அன்புமணிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்பை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லையே. அவர் எப்படிப் போனார், எப்படி வந்தார் என்பதையும் தாண்டி அவருடைய செயல்பாடுகள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த மாதிரியான விமர்சனங்களுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கெல்லாம் நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பொது வாழ்க்கைக்கே வர முடியாது.’’

தயாநிதி மாறன் மீதான நடவடிக்கைக்குப் பிறகு தி.மு.க.வில் ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் ராஜ்ய சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளீர்கள். இந்த அறிவிப்பிற்கு முன்பு இதுகுறித்து கலைஞர் உங்களிடம் பேசினாரா? சம்மதம் பெற்றாரா?

‘‘தி.மு.க.விற்கு இப்போது எந்த நெருக்கடியும் ஏற்பட்டதாக நான் கருதவில்லை. ஒரு வாதத்திற்காக அப்படியரு நெருக்கடி வந்திருப்பதாக வைத்துக்கொண்டாலும் கூட, அதையெல்லாம் தீர்த்து வைக்கிற ஓர் இடத்தில் நான் இருப்பதாக, என்னைப் பற்றி பெரிதாக நினைத்துக் கொள்ளவும் நான் தயாராக இல்லை. கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டால், அதற்குப் பல முக்கியத் தலைவர்களும் இத்தனை வருடம் அரசியலிலிருந்து பல விஷயங்களைச் சந்தித்த தலைவர்களும் உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தாண்டி வந்து நான் எந்தத் தீர்வையும் முன் வைத்துவிடப் போவதில்லை. அதனால், எந்த நெருக்கடியிலும் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. என்னை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பு அப்பா என்னிடம் பேசினார். அவரின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன்.’’

கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். அப்போதெல்லாம் நீங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், தயாநிதி மாறன் விலகலுக்குப் பிறகுதான் அந்த இடத்தை நிரப்புவதற்காக மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி மற்றும் கலைஞரின் குடும்ப உறவுகளின் முழு ஆதரவோடு உங்களைத் தீவிர அரசியலுக்கு அழைத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறதே?

‘‘இல்லை. இல்லை. அப்படியரு கட்டாயச் சூழல் எதுவும் இல்லை. எங்கள் வீட்டில் இதுவரை எந்த விஷயத்திலும் யாரும் யாரையும் ஒரு நெருக்கடி ஏற்படுத்தித் திணித்தது கிடையாது. நான் எப்படி தயாநிதி மாறனுக்கு மாற்றாக முடியும்? அவருடைய நம்பிக்கைகள், அவர் முன்வைத்து மக்களைச் சந்தித்த விஷயங்கள் எல்லாமே வேறுவேறான விஷயங்கள். நான் நம்பும் விஷயங்களும், நான் முன் வைக்க நினைக்கும் விஷயங்களும் வேறானவை. நான் எப்படி அவருக்கு மாற்றாக முடியும்? அரசியலைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் மாற்றாக முடியாது.’’

நீங்கள் பத்திரிகையாளராக சில ஆண்டுகள் ‘இந்து’வில் பணியாற்றியுள்ளீர்கள். குங்குமத்திலும் உங்கள் பங்களிப்பு உண்டு. ஆனால், சமீபகாலத்தில் உங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்தில்தான் உங்களைப் பற்றிய செய்திகள் தினகரனிலோ, சன் டி.வி.யிலோ வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்று விவாதம் நடந்தது. அதுபற்றி உங்கள் பதில் என்ன?

‘‘அது பத்திரிகைகளுடைய சுதந்திரம். யாரைப் பற்றி, எந்த விஷயத்தைப் பற்றி, என்ன செய்தியைப் போடவேண்டும் என்பதைப் பற்றி அந்தந்த நிர்வாகம் தீர்மானிக்கிற விஷயம். அதனால், இந்த மாதிரியான செய்திகளைப் போட வேண்டுமென்று அந்த நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. அவர்களுக்கு விருப்பமில்லாத ஒரு செய்தியை அவர்கள் போடாமல் இருக்கலாம். அதுதான் பத்திரிகைச் சுதந்திரம். அதில் முழு நம்பிக்கையும், மரியாதையும் உடையவள் நான். அதனால், என் வளர்ச்சியைப் பிடிக்காமல், தடுப்பதாக நினைத்து, அவர்கள் எனது செய்தியைப் போடவில்லையென்று நான் எடுத்துக் கொள்ளவில்லை.’’

நீங்கள் சுய சிந்தனையாளர், சுதந்திரமான கவிஞர். கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர். உங்களுடைய கொள்கைகளுக்கும், தி.மு.க. கொள்கைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. இந்நிலையில் தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினராக நீங்கள் பணியாற்றும்போது, உங்கள் கருத்துச் சுதந்திரத்திற்குப் பாதிப்பு ஏற்படாதா?

‘‘தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கைகளுடன் எனக்கு எந்த மாறுபாடும் கிடையாது. அந்தக் கொள்கைகளுக்கு மாறாக நான் என்றைக்கும் என் வாழ்நாளில் பேசியது கிடையாது. ஒரு ஜனநாயக அமைப்பில் சில விஷயங்களில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும். அது ஒரு பெரிய குற்றமாகவோ, இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு வேறுபடுகிற விஷயமாகவோ அது மாற வேண்டிய அவசியமில்லை. பொதுவாகவே, தி.மு.க. என்பது நிச்சயமாக ஒரு சுதந்திரமான அமைப்புத்தான். அதனால், என்னுடைய நம்பிக்கைகள், என்னுடைய கருத்துகளை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை.’’

உங்களை ராஜ்ய சபா உறுப்பினராக்குவதே தி.மு.க.விற்கும் டெல்லிக்கும் இடையே பலமான உறவுப் பாலத்தை அமைக்கும் நோக்கத்தில்தான் என்று கூறப்படுகிறதே?

‘‘அப்படியெல்லாம் இல்லை. தேசியத் தலைவர்களோடு உறவுப் பாலத்தை ஏற்படுத்துவதற்கு தி.மு.க.வில் பல ஆண்டுகளாக டெல்லியில் பணியாற்றி வரும் முக்கியமான தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால், அதற்காக என்னை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் தி.மு.க. இல்லை. தி.மு.க. என்பது மிகமிகச் செழுமையான ஒரு கட்சி. அதனால் டெல்லிக்கும் தனக்கும் ஓர் உறவுப் பாலத்தை அமைக்க மிகப்பெரிய தேடலைத் தேடக்கூடிய நிர்ப்பந்தத்தில் தி.மு.க. இல்லை.’’

உங்களை முன்னிலைப்படுத்துவதற்குக் காரணம் ஆங்கிலம் தெரியும், ஹிந்தி தெரியும் என்று கூறப்படுவதுதானா?

(பலமாகச் சிரிக்கிறார்). ‘‘ஆங்கிலம் நன்றாகவே தெரியும். ஆனால் ஹிந்தியில் நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி பேசக்கூட தெரியாது.’’

தி.மு.க.வில் குடும்ப அரசியலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற விமர்சனம் ஏற்கெனவே இருந்துவரும் நிலையில், உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பும் விமர்சனத்திற்கு உரியதுதானே?

‘‘உலகம் முழுவதிலும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவதென்பது சாதாரணமாக நடந்து கொண்டுதான் வருகிறது. இதையெல்லாம் எதிர்க்கும் சிங்கப்பூரில் கூட லீகுவான் யூ மகன்தான் பிரதம மந்திரியாக இருக்கிறார். அவருடைய மகன் என்கிற ஒரே காரணத்தினாலேயே அந்த இடத்திற்கு அவர் வந்து விடவில்லை. மக்கள் தேர்ந்தெடுத்ததால்தான் அந்தப் பதவிக்கு அவரால் வர முடிந்திருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி பெற்றோர்களுக்கு ஈடுபாடுள்ள துறைகளில் அவர்களின் குழந்தைகளுக்கும் ஆர்வம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள்தான் அதிகமாக உள்ளன. ஒரு மருத்துவரின் பிள்ளைக்கோ அல்லது மற்ற துறைகளைச் சார்ந்தவர்களின் பிள்ளைகளுக்கோ அரசியலில் ஈடுபட மனத்தடையும் இருக்கிறது. அவர்களெல்லாம் அரசியலுக்கு வருவது கிடையாது. ஆனால், எங்களுக்கு _ அரசியல் சூழலிலேயே வாழ்கிற எங்களுக்கு மனத்தடை இருப்பதில்லை. இதிலிருந்து விலகி பல விஷயங்களுக்குப் போகிறபோதுகூட எங்களுக்கு மனத்தடை ஏற்படுவதில்லை.

மற்ற துறையைச் சேர்ந்த பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளை அரசியலுக்கு அனுப்புவீர்களா என்று கேட்டால், அவர்களுக்கு விருப்பமில்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், அரசியல் என்பது பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையாகத்தான் அவர்களுக்குப் படுகிறது. எதிர்காலம் என்னாகும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத வாழ்க்கையாகத்தான் அரசியல் இருக்கிறது. இந்த மாதிரியான நிலையை, பல நாடுகளில் நாம் கண்கூடாகப் பார்க்கலாம். அரசியலுக்கு வர அதிகளவு விருப்பமுள்ளவர்களாக இருப்பதுதான் நாங்கள் அரசியலுக்கு வரக் காரணமே தவிர, எங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது என்ற காரணமோ, வாதமோ வலுவானதல்ல.’’

சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் உங்கள் உழைப்பையும் ஈடுபாட்டையும் பார்த்து தனது ‘கலையுலக வாரிசு’ என்று உங்களை அறிவித்தார் கலைஞர். இப்போது அரசியலுக்கு வந்துள்ளீர்கள். இதில் உங்களின் செயல்பாட்டைப் பார்த்து எதிர்காலத்தில் எனது ‘அரசியல் வாரிசு’ கனிமொழிதான் என்று கலைஞர் பாராட்டுப் பெறும் அளவிற்கு உங்கள் பணி அமையுமா?

‘‘சங்கமம் விழா என்பது என்னுடைய தனிப்பட்ட உழைப்பு என்று சொல்லிவிட முடியாது. அதுவொரு கூட்டு முயற்சி. என்றாலும், எனக்கு அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அந்த விழாவில் அப்பா செய்த அறிவிப்பு என்னை நெகிழ வைத்தது. இருந்தபோதிலும் அந்தப் பெருமையின் உச்சியில் நான் இல்லை. முதல்படியில் இருப்பதாகவே உணருகிறேன். ஆனால், அரசியல் வாழ்வில் நிச்சயமாக முழுப் பெருமை சேர்க்கும் விதத்தில், என்னுடைய செயல்பாடுகள் அவருக்கு மகிழ்ச்சி தரும் விதத்தில் இருக்க வேண்டுமென்று விருப்பப்படுகிறேன்.’’

மாறன் சகோதரர்களால் கலைஞருக்கு ஏற்பட்ட மனவருத்தம் உங்களை எந்த வகையில் பாதித்துள்ளது?

‘‘ஒரு குடும்பத்திற்குள் சில மனக்கஷ்டங்கள் வரும் போது, குடும்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் மனவருத்தங்கள் ஏற்படுமோ அந்த வகையான பாதிப்புதான் எனக்கும் ஏற்பட்டது.’’

அரசியலுக்கு அப்பாற்பட்டு தொழில் ரீதியாக கலைஞர் தொலைக்காட்சி உருவாக்கப்படுகிறது. அதில் உங்கள் பங்களிப்பு உண்டா?

‘‘ஓரளவிற்கு இருக்கிறது. போகப் போக என்னுடைய பங்களிப்பு அதிகரிக்கக் கூடும்.’’

விரைவில் உங்களுக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய மத்திய அமைச்சர் பதவி தரப்படுமென்றும், மறைந்த முரசொலிமாறன் நிர்வகித்த வர்த்தகத் துறையே உங்களுக்குக் கிடைக்குமென்றும் கூறப்படுகிறதே?

‘‘வளமான கற்பனையில் தோன்றிய நல்ல விஷயமிது. அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது. இது குறித்து தலைவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது கூட, அவர் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.’’

மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

‘‘படிப்படியாகப் போகலாமே!’’

அழகிரி, ஸ்டாலின் ஆகியோரின் ஆதரவு உங்களுக்கு எந்தளவிற்கு உள்ளது?

‘‘அண்ணன்கள் தங்களுடைய தங்கையின் வளர்ச்சிக்கு எந்தெந்த வகையில் உதவுவார்களோ, அந்த வகையில் என்னுடைய அண்ணன்களும் எனக்கு உதவி வருகிறார்கள்.’’

ராஜ்ய சபா உறுப்பினரானதால் எதிர்காலத்தில் சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி விழுமோ?

‘‘இல்லவே இல்லை. இன்னும் சில ஆண்டுகள் அதை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதில் என் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். டிசம்பர் மாதத்தில் நடைபெறும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகள் போல, தமிழ்ப் பண்பாட்டை அடையாளப்படுத்தும் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் மக்களின் பங்களிப்போடு தொடர்ந்து நடைபெறும் அளவிற்கு, ஆழமான அடித்தளம் அமைக்கும் வரை என் பணி ஓயாது.’’

நன்றி ரிப்போர்ட்டர்.

சிவாஜி சிறுகுறிப்பு - சுஜாதா

மிகுந்த எதிர்பார்ப்பு-களுடன் ‘சிவாஜி’ படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இதன் உருவாக்கத்தில் பங்குகொண்டவன் என்கிற தகுதியில், இந்தப் படத்தைப் பற்றி ஒரு FAQ.

1. ‘சிவாஜி’ ரஜினி படமா, ஷங்கர் படமா?

ரஜினி நடிக்கும் ஷங்கர் படம்.



2. ரஜினி ரசிகர்களின் எதிர்-பார்ப்புகள் அனைத்தும் நிறை-வேறுமா?

நிறைவேறும், அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குப் பங்கம் வராமல்! அதே சமயம்...

3. அதே சமயம்..?

ஒரு ஷங்கர் படத்தின் கதைத் திருப்பங்களுக்கும் சுவாரஸ்யமான முரண்பாடுகளுக்கும் பிரமாண்டத்-துக்கும் குறைவிருக்காது.

4. ரஜினி என்றால், பன்ச் டயலாக் இருக்குமா?

இருக்கிறது. விவேக் மூலம் சொல்ல வைத்துவிட்டோம். பன்ச்சுக்கு பன்ச்; டிக்னிட்டிக்கு டிக்னிட்டி!

5. ஏன் இத்தனை தாமதம்?

நல்ல கேள்வி! படத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களும் இந்தியாவின் சிறந்த கலைஞர்கள். ரஜினி, ஷங்கர், ஏவி.எம். படம் என்பதால் தனிப்பட்ட சிரத்தையுடன் பார்த்துப் பார்த்துச் செய்ததால் தாமதம். லேட்டாக வந்தாலும் நீட்டாக வந்திருக்கிறது.

6. படத்தின் Tagline என்ன?

‘சிவாஜி’ அமெரிக்காவிலிருந்து வந்து, முதல் பாதியில் விழுகிறார்; இரண்டாம் பாதியில் எழுகிறார்!

7. கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்..?

சொல்கிறேனே... அடுத்த வாரம்!

ஓசை செல்லாவிற்காக ஒரு "A" பதிவு

ஓசை செல்லா வலைபதிவுலகத்தில் தீவிரமாக செயல்படமுடியாத குறையை தீர்ப்பதற்காக இந்தப் பதிவு. சரி சரி இப்பவே சொல்லிடுறேன் அடல்ஸ் ஒன்லி பதிவென்பதால், "சின்னப்புள்ளைங்க" எல்லாம் "Play"வை கிளிக் பண்ணாதீங்க.

ஷ்ஷ்ஷப்பா இந்தப் பெண்கள்!!!

வெட்டி நாயம், ஊர்ப் பஞ்சாயத்து, புரளி கிளப்புறது இப்படி இந்தத் தேவையில்லாத விஷயங்கள் எல்லாம் பெண்கள் தான் செய்வார்கள் என்ற நம்பிக்கை இதுநாள் வரையில் மூடநம்பிக்கை என்றே நினைத்து வந்திருந்தேன். ஆனால் அப்படியில்லை என பலசமயம் ப்ராக்டிகலாக பட்டு புரிந்து கொண்டாலும்; அப்படி இருக்கக்கூடாதென்றே நினைத்தும் வந்திருக்கிறேன்.



இப்பொழுது இப்படிப் புறம் பேசியதால் அமேரிக்காவில் நான்கு பெண்களுக்கு வேலை போயிருக்கிறது. என்னைக்கேட்டால் இந்தச் செயலை வரவேற்று நம் நாட்டிலும் நடைமுறைப் படுத்தினால் நன்றாகயிருக்கும் என்று நினைக்கிறேன். ஊர் நல்லாயிருக்குமோ தெரியாது வேலையிடம் நல்லாயிருக்கும்.

"Gossip, whispering, and an unfriendly environment are causing poor morale and interfering with the efficient performance of town business."

இதை நான் நிச்சயமாய் ஒப்புக் கொள்கிறேன்.

உண்மை நியூஸிற்கு - இங்கே கிளிக்கவும்

நடிகர்களின் நாட்டுப் பற்று படம் ஓடுவதற்காகவே-தினகரனின் இன்னொரு சர்ச்சை சர்வே

சென்னை: தங்களது படம் ஓட வேண்டும் என்பதற்காகத்தான் தேசப்பற்றுடன் இருப்பதாக நடிகர்கள் காட்டிக் கொள்கிறார்கள் என்று தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறந்தவர் யார், கருணாநிதியின் அடுத்த வாரிசு என இரு சர்ச்சைக்குரிய கருத்துக் கணிப்பை வெளியிட்ட தினகரன் நாளிதழ் மற்றும் ஏசி நீல்சன் ஆகியவை இணைந்து மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

இன்றைய தினகரன் நாளிதழில் வெளியாகியுள்ள அந்தக் கருத்துக் கணிப்பில், நடிகர்களுக்கு உண்மையான தேசப்பற்று இல்லை என்ற தொணியில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள்

தங்களது படம் ஓட வேண்டும் என்பதற்காகத்தான் நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நடிகர்கள் பற்று கொண்டிருக்கிறார்கள் என கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 50 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆவலில் நாட்டுப் பற்று இருப்பது போல நடிகர்கள் காட்டிக் கொள்கிறார்கள் என 31 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர்.

14 சதவீதம் பேர்தான் நடிகர்களுக்கு நாட்டுப் பற்று இருக்கிறது என்று சொல்லியுள்ளனர். 5 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லையாம்.

நாகர்கோவில் பக்கம்தான் நடிகர்களுக்கு உண்மையான நாட்டுப் பற்று இல்லை என்று அதிகம் பேர் சொல்லியுள்ளனராம். அடுத்து சென்னை நகரில் நடிகர்களுக்கு எதிராக கருத்து (58 சதவீதம்) தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

நடிகர்கள் போலியான நாட்டுப்பற்றுடன் இருப்பது போல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது தினகரன்.

திரையுலகினர் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ, எப்படி பதில் சொல்லப் போகிறார்களா, பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி - தட்ஸ்தமிழ்

முர்டோக்குடன் கைகோர்க்கும் சன் டிவி-ஆங்கில நாளிதழ் தொடங்க திட்டம்

மும்பை: உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சிகள்-பத்திரிக்கைகள் நிறுவனத் தலைவரான ருப்பர்ட் முர்டோக் தனது த சன் ஆங்கில நாளிதழை இந்தியாவில் வெளியிடவுள்ளார்.

இந்த திட்டத்தில் அவருடன் கைகோர்க்கப் போவது கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனமாகும்.

நியூஸ் கார்போரெசன் என்ற நிறுவனத்தின் கீழ் உலகெங்கும் பல முன்னணி தொலைக் காட்சிகள், பத்திரிக்கைகள், வார இதழ்களை நடத்தி வருபவர் முர்டோக்.

இந்தியாவில் ஸ்டார் டிவியை நடத்துபவரும் இவரே.

இப்போது சன் டிவி குழுமத்துடன் இணைந்து த சன் நாளிதழை முதல் கட்டமாக தென் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போகிறார் முர்டோக்.

சன் டிவி நிறுவனம் இப்போது பிற துறைகளிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய, சர்வதேச விமான சேவையிலும் இறங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தட்ஸ்தமிழ்

சாமியாராத்தான் போகணும்

என்னத்த சொல்றதுன்னே தெரியலை; இப்படியெல்லாம் ஸ்டேட்மென்ட் விட்டா என்ன பண்றது. சாமியாராத்தான் போக முடியும். ஏற்கனவே வாழ்க்கை தன்னுடைய நிறங்களை இழந்து கருப்பு-வெள்ளையாகத் தோற்றமளிப்பதாக தோன்றுகிறது. இப்ப சொன்ன ஸ்டேட்மென்ட் மட்டும் உண்மையா இருந்தா; இப்பவே சொல்றேன் கடுப்பாய்டுவேன்.

"The 22-year-old Pirates Of The Caribbean star said the pressures of fame have become too much to bear. Speaking to Elle magazine, Knightley said of her career: “The celebrity thing is completely crazy. I think I just have to move away or give it up altogether. I couldn’t have kids in the situation I’m in now. But I could just do something else. That’s probably what’s going to happen." Keira Nightly.



நேத்திக்குத்தான் "பே-வாட்ச்" புகழ் பமீலா ஆண்டர்சன்; Play Boy நாளிதழுக்கு நடுப்பக்கத்தில் போஸ் கொடுக்க Scarlett Johanssonஐ விட்டா இப்ப யாருமே இல்லைன்னு சொல்லி வயிற்றில் பாலை வார்த்து நாங்கள் சாமியாராப் போவதை தடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில். நம்ம Keira Nightly இப்படிச் சொன்னா எப்படி.



"Scarlett Johansson would definitely be my number one choice. But I doubt she would agree to do it.

On the other hand it's kind of cool to be on the cover of Playboy, but on the other hand, for many actresses, it's not at all." பழம் புயல் பமீலா!

அட்டு பிகராயிருந்தாலும் "Paparazzi" களுக்கு வாழ்வழித்துக் கொண்டிருந்த பாரீஸ் ஹில்டனையும் தூக்கி உள்ளப்போட்டாச்சு. இதற்காக அமேரிக்க கவர்மென்ட்டை அன்புடன் கண்டிக்கிறேன்.



கம்பெனியில் எனக்கும் என்னுடைய இன்னொரு இன்டலக்சுவல் கலீக்கிற்கும் ஸ்கேர்லெட் ஜான்ஸனா, கியரா நைட்லியா என்று போட்டியே நடக்கும். இருவரும் மாற்றி மாற்றி; இரண்டு பிகர்களின் ஹை ரெஸல்யூஷன் பிக்சர்களை அனுப்பிக் கொண்டிருப்போம். நீங்களும் இதில் கலந்து கொள்ள வேண்டுமானால் சொல்லுங்கள்; தற்பொழுது ஹாலிவுட்டில் யார் அழகு. அந்த பிகரா இல்லை இந்த பிகரா?

விஜயகாந்த் - கோவேறு கழுதை - ஜெயகாந்தன்

முறுக்கிய மீசைக்குள் முளைத்துப் பூக்கும் அலட்சியப் புன்னகையின் அர்த்தம் என்ன? பேரருவியான பேச்சுக்கு நடுவே ஆழ்கடலாய் உறைந்திருக்கும் மௌனத்தின் அர்த்தம் என்ன?

வலது கையை ஜெயகாந்தன் சொடுக்க, பக்கத்தில் இருப்பவர் சிலுப்பியில் ‘மருந்து’ ஏற்றித் தருகிறார். புகைச் சுருள் பரவ, காலப் பெருந்தச்சனாய் கம்பீரமாய் கனைக்கிறார் ஜே.கே!

‘‘எப்படி இருக்கீங்க?’’

‘‘எப்படி இருந்தால் உங்களுக்குச் சவுகரியம்?’’ - பட்டென்று தெறித்து வரும் பதில் கேள்வியுடன் தொடங்குகிறது உரையாடல்...



‘‘வாழ்க்கையை, வாழ்க்கையாகவே பார்க்கிறேன். நிறைய கற்றுக்கொள்கிறேன். நான் கற்றதைப் பயில விரும்புபவர்களுக்குக் கற்றுத் தருகிறேன். லட்சியம் என்பது எனக்கு விதிக்கப்பட்டதை நான் நிறைவேற்றுவதே!

அதைத் திருப்திகரமாகவே நிறைவேற்றி வருகிறேன். இறுதி லட்சியம் என்பது போகப் போகத் தெரியும். இப்போது எனக்கு வேண்டுவதெல்லாம் கால் பதிக்க ஓர் இடமும், வெளிச்சமும்தான். பாதை தெளிவாகத் தெரிந் தால்தானே, இலக்கு தெளிவாகத் தெரியும்?’’

‘‘உங்களின் ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்ற நாவலை சினிமாவாக எடுக்கிறார்களே... அதில் உங்களின் பங்களிப்பு என்ன?’’

‘‘அவர்கள் என் நண்பர்கள். அடிப்படையில் என் வாசகர்கள். நல்ல முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களது முயற்சி அவர்கள் நினைத்தவண்ணம் வெற்றி அடைய வாழ்த்தியிருக்கிறேன், ஆசீர்வதித்திருக்கிறேன். மற்றவை மற்றவர்களால் செய்யப்படும். அவர்கள் என்னிடம் வந்து கேட்கும்போதெல்லாம் ஏதேனும் சொல்லியனுப்புகிறேன்.’’

‘‘நீங்கள் அடிக்கடி பாண்டிச் சேரி போகிறீர்கள். அங்கேயே செட்டிலாகப் போவதாகவும் செய்திகள் வந்தன. உண்மையா?’’

‘‘நண்பர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள். சில நண்பர்கள் அங்கேயே தங்க வேண்டும் என்கிறார்கள். எனக்கு எல்லா இடத்திலும் தங்க வேண்டும் என்று ஆசை. நிறைவேறினாலும் சரி, நிறைவேறாவிட்டாலும் சரி அல்ப விஷயத்துக்குதான் ஆசை என்று பெயர். திட்டம் போடாமல் எந்தக் காரியமும் நிறை வேறாது.’’

‘‘பத்து ஆண்டுகளுக்கு முன், நல்ல படைப்புகள் கவனிக்கப் படாமல் போவதும், மோசமான படைப்புகள் கொண்டாடப்படுவதும்தான் எழுத்தாளனின் பிரச்னை என்று கூறினீர்கள். இப்போது நிலை என்ன?’’

‘‘எப்போதும் அந்த நிலை இருக்கும். நாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் நம் லட்சணம் இப்படித்தான் இருக்கும் என்றால், அதற்கு யாரைக் குறை சொல்ல? ஆனாலும், நல்லது வந்துகொண்டே இருக்கும். தினசரி இருட்டும் வெளிச்சமும் மாறிமாறி வந்துகொண்டேதானே இருக்கிறது! வெளிச்சம்தான் சத்தியம். வெளிச்சம் இல்லாத இடத்துக்குப் பெயர் இருட்டு. தமிழ்நாட்டில் வாழ்க்கைத் தரம், பொருளாதார சமூகநிலை எல்லாமே இப்போது உயர்ந்திருக் கிறது. அந்தளவுக்கு கலை இலக்கியத் தின் கௌரவமும் உயர்ந்திருக்கிறது. நமது செயல்கள் மேலும் சிறப்படை வதாக!

ஒரு முத்து வேண்டுமென்றால் கூட ஒரு வண்டி கிளிஞ்சல்களை அள்ள வேண்டும். சலித்துப் பார்க்க வேண்டும். சலித்துப் போய்விடக் கூடாது.’’

‘‘திராவிட இயக்கத்தை ஆரம்ப காலம் தொட்டுக் கடுமையாக விமர்சித்து வந்த நீங்கள், ‘முரசொலி அறக்கட்டளை’ விருதை வாங்கியதில் பலருக்கும் ஆச்சர்யம்! ‘நான் வாங்கிய விருதுகளிலேயே இது தான் சிறந்த விருது’ என்று வேறு பேசி னீர்கள். இப்போது, உங்கள் மகனுக்கு கலைஞர் அரசாங்கப் பணி கொடுத்திருக்கிறார்...’’

‘‘இந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதால்தான் ‘முரசொலி அறக்கட்டளை விருது’க்கு அந்தச் சிறப்பு தந்தேன். மற்ற விருதுகள் எனக்குக் கிடைத்ததில் யாருக்கு ஆச்சர்யம்?

என் மகனுக்கு மந்திரிப் பதவி கொடுத் தால்தான் தவறு. அவருக்கு இருக்கிற தகுதிக்குதான் அந்த உத்தியோகத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்று நம்பு கிறேன். என்னிடம் காட்டுகிற அன்பையும், மரியாதையையும் அவரிடமும் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கலைஞர் ஒரு நல்ல தந்தையும்கூட!’’

‘‘இதைச் சமரசம் என்று எடுத்துக் கொள்ளலாமா?’’

‘‘யெஸ், ஐ யம் காம்ப்ரமைஸிங் வித் ஆல்! நான் எல்லோரோடும் சமாதானமாகவே செல்ல விரும்புகிறேன். சமரசம் தவிர, எனக்கு வேறு எதுவும் நோக்கமில்லை. ஆனால், இப்போதும் திராவிட இயக்கங்கள் மீதான பழைய விமர்சனங்களை நான் வாபஸ் பெற்றுக்கொள்ள வில்லை. கடுமையாகப் பேசியதற்காக வருத்தப்படவும் இல்லை. நான் மாறி விடவும் இல்லை. நான் அந்த வகையறாவைச் சேர்ந்தவன் அல்ல. அவர்களே அந்தக் கடுமையை எல்லாம் மறந்து விட்ட பிறகு, நான் அவற்றை நினைப்பது நாகரிகமாகாது. நன்று அல்லது அன்றே மறப்பது நன்று. திராவிட இயக்கத்தினர்தான் பாராட்டத் தகுந்த வகையில் மாறி வருகிறார்கள். இந்தப் பக்குவம் எல்லா தரப்பினரிடையேயும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நானும் கலைஞரும் முன்னுதாரணங்கள் என்று கொள்ளலாம்.’’

‘‘ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும் என்று முன்பு சொன்னீர்கள். இப்போதும் அதே கருத்தை வலியுறுத்துகிறீர்களா?’’

‘‘மாட்டேன். காங்கிரஸே வலியுறுத்தாதபோது எனக்கு ஏன் வீண் வேலை? மேலும், காங்கி ரஸை கலைஞர் நம்புகிறார். அந்த நம்பிக்கை தான் முக்கியம்.’’

‘‘தி.மு.க - வின் ஒரு வருட ஆட்சி எப்படி இருக்கிறது?’’

‘‘இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழ்நாடு. இந்திய அரசின் ஒரு பகுதிதான் தமிழக அரசு. இதற்கு தி.மு.க. அரசு என்று பெயர் அல்ல. இதற்குத் தலைவர் தி.மு.க&வின் தலைவர். ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்தின் கடைசியில் செய்ததை கலைஞர் ஆரம்பத்திலேயே செய் கிறார்!’’

‘‘காமராஜர் காலம்தொட்டு காங்கிரஸ்காரர்களைப் பார்த்து வருகிறீர்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?’’

‘‘அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே ஓர் அரசியல் கட்சியின் முழு வெற்றி ஆகாது. அப்படி எண்ணினால் காங்கிரஸ§க்கு ஏற்பட்ட கதிதான் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படும். அனுபவத் தால் படிப்பினை வரும்! காங்கிரஸ், கூட்டணி மந்திரி சபைக்கு மத்திய அரசில் இடம் தந்தது அனுபவத்தால் வந்த படிப்பினை அல்லவோ!’’

‘‘தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுக்கும் அடுத்தபடியாக விஜயகாந்த் ஒரு பெரிய எதிர் பார்ப்பை உருவாக்கி இருக்கிறாரே?’’

‘‘குதிரைன்னு ஒண்ணு உண்டு, கழுதைன்னு ஒண்ணு உண்டு, கோவேறு கழுதைன்னும் ஒண்ணு உண்டு. எல்லாம் ஜனநாயகத்தின் படைப்பு! இறைவனின் படைப்புகளில் எல்லா உயிர்களும் ஒன்றே என்பது மாதிரி இவர்கள் அனைவரும் ஒன்றே!’’


நன்றி ஆனந்த விகடன்.

Ex-C.I.A. Chief writes. “Al Qaeda is here and waiting.”

ஆப்பிரகாம் லிங்கனால் சொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த கோட் தான் நினைவில் வந்தது. குறிப்பிட்ட இந்தச் செய்தியைப் படித்ததும். என்ன சொல்றதுன்னே தெரியலை...

"You can fool some of the people all of the time, and all of the people some of the time, but you can not fool all of the people all of the time." -- Abraham Lincoln (1809 - 1865)


<<George J. Tenet, then the director of central intelligence, with President Bush and Vice President Dick Cheney, foreground, in March 2003. Mr. Tenet now says there was never a “serious debate” about the Iraq threat. >>

George J. Tenet, the former director of central intelligence, has lashed out against Vice President Dick Cheney and other Bush administration officials in a new book, saying they pushed the country to war in Iraq without ever conducting a “serious debate” about whether Saddam Hussein posed an imminent threat to the United States. மேலும் படிக்க

நிஜத்தில் உள்ளதை அப்படியே சொல்லக்கூடாது - அமீர்

அமீரின் சினிமா மொழி யதார்த்தமானது. அதைப் போன்றே தனது பேச்சு மொழியையும், கருத்தியலையும் இலகுவாக்கி வைத்திருக்கிறார். எந்த ஒரு கேள்விக்கும் பிரயத்தனப் படாமல் தட்டையாக பேசுவதைப்போல் பேசுகிறார். அவர் பேசிக் குவித்த வார்த்தைகளை திரும்பப் பொறுக்கிச் சேர்க்கையில் அதன் கனம் கூடிவிடுகிறது. தீராநதிக்காக ஒரு மாலை வேளையில் இரு தரப்பிற்குள்ளும் சாதுர்யம் காட்டாமல் நீண்ட பேச்சின் பதிவு இது.

தீராநதி: ‘பருத்திவீரன்’ தமிழ் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இவ்வெற்றி ஏற்கெனவே நீங்கள் தீர்மானித்த ஒன்றா?

அமீர்: இந்தக் கதையைத் தேர்வு செய்து இயக்க ஆரம்பித்ததிலிருந்தே இதன் வெற்றிக்காக ஃபிரேம் பை பிரேம் கடுமையாக எல்லோரும் சேர்ந்து உழைத்திருக்கிறோம். ஒரு இடத்தில் கூட சமரசம் செய்து கொள்ளாமல் படம் நினைத்த மாதிரி வர வேண்டும் என்பதில் ஒரு தெளிவு எங்களுக்குள் இருந்தது. ஆகையால் இந்தப் படத்தைப் பொறுத்த அளவிற்கு கதை ரீதியாக, காட்சி ரீதியாக நிச்சயம் வெற்றியடையும் என்பதில் எனக்கு எந்தவித சங்தேகமும் இருந்ததில்லை. ஆனால், பொருளாதார ரீதியாக இப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைச் சம்பாதித்துத் தரும் என்று நானும் சரி, தயாரிப்பாளரும் சரி உள்ளபடியே கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. இப்படத்தைப் பொறுத்தளவில் வியாபார ரீதியான வெற்றி என்பது எங்களைப் பொறுத்த அளவுக்கு ஆச்சர்யமான ஒன்றுதான்.

தீராநதி: இந்தப் படத்தில் குறிப்பாக சொல்லத் தகுந்த விஷயம் தமிழ் சினிமாவில் இதுவரை இருந்து வந்த ஹீரோ இஸத்தின் இமேஜை உடைத்திருப்பது. இதைப் பற்றி சொல்லுங்களேன்?

அமீர்: இதற்கு முன்பாகவே இதற்கான பாதை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறது. ஆனால், அதில் வண்டியை ஓட்டிக்கொண்டு போகிறவர்கள் எப்போதாவதுதான் போகிறார்கள். பாரதிராஜாவாகட்டும், மகேந்திரனாகட்டும், பாலு மகேந்திராவாகட்டும் இப்படி எல்லோரும் தங்களால் முடிந்த தூரம் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அங்கங்கே ஏதாவது ஒரு விதையை ஊன்றியும் இருக்கிறார்கள். ஆக, முன்னால் நிறையப் பேர் இருந்தார்கள். இந்தக் காலகட்டத்தில் இல்லை. அவ்வளவுதான், இப்போதுள்ள பிரச்னை. இவர்கள் எல்லாம் போன தூரத்திலிருந்து ஒரு படி தாண்டிப் போயிருக்கிறேன். ஆனால் இவ்வளவு தூரம் தாண்டிப் போக முடியும் என்று சொன்னவர்கள் அவர்கள்தான். இதில் தனியாக நின்று நெஞ்சை நிமர்த்திக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே கிடையாது.

தீராநதி: தமிழ் மண்ணிற்கே உரித்தான நையாண்டி மேளம், பறை, நாயணம், ஜிஞ்ஜா, உறுமி போன்ற கிராமிய கருவிகளின் முழு ஆக்ரமிப்பு, கரகாட்டம், ஒயிலாட்டம் என்று கிராமிய கலை நடனங்கள் என்று படம் முழுக்க பின்னப்பட்டு இருக்கிறது. இந்த மரபான இசையால் படம் தமிழ் வாசத்தோடு நகர்கிறது. இந்த இசை வடிவங்கள் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் கூட அச்சு அசல் தன்மை என்று சொல்லும் அளவிற்கு உங்களின் நட்டுப்புற இசைத் தேர்வு இருக்கிறது. இதைப் பயன்படுத்தினால் பொருளாதார ரீதியாக ஏதேனும் பாதிப்பு வருமா என்றில்லாமல் தைரியமாகச் செயல்பட்டிருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியமானது?

அமீர்: நான் சினிமாவுக்கு வந்த காலத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், என் தேவைகள் ரொம்பவே கம்மி என்பதுதான். கார், பங்களா கனவுகள் எல்லாம் எனக்குக் கிடையாது. என் கண்ணுக்கு முன்னால் நான் செய்யக்கூடிய வேலைதான் எனக்கு முக்கியம். அந்த வேலை சிறப்பான வேலையாக மக்களிடம் போய்ச் சேர்கிறதா என்பதுதான் என்னுடைய இலக்கு. அந்த தைரியம்தான் என்னை இந்த அளவுக்குச் செயல்பட வைக்கிறது. ஐயய்யோ அது செய்தால் இப்படி ஆகிடுமோ இது செய்தால் அப்படி ஆகிடுமோ என்று நான் கொஞ்சம்கூட யோசித்ததில்லை. என்னுடைய குறிக்கோள் அச்சு அசலாக என்னுடைய முகத்தை, என் தமிழ் மக்களுடைய முகத்தை அப்படியே பதியச் செய்வது. நினைத்தேன். எடுத்தேன். வந்தது, வெற்றி பெற்றது அவ்வளவுதான்.

தீராநதி: ஒரு கிராமத்து மண்வாசனைப் படம் என்றால் இசைஞானி இளையராஜா மாதிரி ஒரு இசையமைப்பாளரிடம் எல்லா வேலைகளையும் அப்படியே ஒப்படைத்துவிடுவது ரொம்பச் சுலபம். ஆனால் இந்த நாட்டுப்புற நிஜக் கலைஞர்களைத் தேடிப்பிடிப்பது என்பது கொஞ்சம் மெனக்கெடலான காரியம். இதற்காக நீங்கள் மெனக்கெட்டிருப்பது எவ்வளவு தூரம்?

அமீர்: படத்தின் வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே போய் இது சம்பந்தமான காசெட்டுகளை தேடித் தேடி வாங்கினேன். அப்புறம் ஒவ்வொன்றாக போட்டுக் கேட்டேன். அதில் நமக்குத் தேவையான குரல் எது? நமக்குத் தேவையான கலைஞர்கள் யார்? என்று முடிவு செய்தேன். ‘இது’ சரியாக இருக்கு என்று முடிவு செய்த பிற்பாடு அவர்களைத் தேடிப் போய் நேரில் சந்தித்தேன். ‘காரியாபட்டி லட்சுமி’ மாதிரியான நிறைய கலைஞர்களைச் சந்தித்தேன். அதில் லட்சுமி குழுவினரைத் தேர்வு செய்து ஒருமுறை மதுரையில் வைத்து பாடலைப் பதிவு செய்து அதை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து மறுபடியும் இங்கு அவர்களை வரச்சொல்லி ரீ_ரிக்கார்டிங் செய்தோம். இப்படி அதற்கான பிராசஸ் நிறைய நடந்திருக்கிறது.

தீராநதி: இந்த இசைத் தேர்வைப் பொறுத்தளவில் முழுக்க முழுக்க உங்களின் தேர்வில் வந்ததா அல்லது யுவன் ஷங்கர் ராஜா எடுத்துக் கொடுத்தாரா?

அமீர்: இல்லை. நான் எடுத்துக் கொண்டு போய் அந்த காசெட்டுகளை யுவனிடம் கொடுத்தேன். இவர்களை எல்லாம் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னேன். அவரும் சம்மதித்தார். ஏதோ ஒன்றைச் செய்கிறோம் என்றில்லாமல் ரசித்துச் செய்தேன். நாம் ஒன்றைச் செய்யும்போது தவறாக வந்துவிடக் கூடாதே என்ற பொறுப்புணர்வோடு அவர்களைப் பயன்படுத்தினேன். இன்று அந்த இசைக் குழுவினர் சொந்த மண்ணில் பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வெற்றி தமிழ் மண்ணிற்கும், தமிழ் அடையாளத்திற்கும் தமிழ் நாட்டுப்புற இசைக்கும் கிடைத்த வெற்றி.

தீராநதி : கிராமிய இசையைப் போலவே கிராமிய விளையாட்டுகளும் அதிநுட்பமாக படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. உங்களின் சிறு பிராயத்து நிஜ வாழ்க்கைப் பதிவாக இதை எடுத்துக் கொள்ளலாமா?

அமீர்: நீங்கள் இந்தப் படத்திலுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் இப்படிக் கேட்டுக் கொண்டே இருக்க முடியும். ஏனென்றால், அந்தப் படத்திலுள்ள பதிவுகள் அப்படி. நீங்கள் நினைப்பதைப் போல நான் கிராமத்தில் பிறந்தவன் கிடையாது. சுத்தமான மதுரை டவுனில் பிறந்து வளர்ந்தவன். நான் இஸ்லாமிய சமூகத்தில் மிகவும் ஒரு கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்தவன். வீட்டின் ‘கேட்’டை விட்டுக் கீழே இறங்க முடியாது. என்னுடைய அப்பா தொலைத்து விடுவார். அவ்வளவு கோபக்காரர். அவர் என் இளம் வயதிலேயே இறந்து விட்டார். அதற்கு அப்புறம் வீட்டில் கொஞ்சம் கட்டுப்பாடு சகஜமானது. நானும் கல்லூரிக்கு படிக்கப் போனேன். அங்குள்ள என்னுடைய நண்பர்கள் எல்லாம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடன் சேர்ந்து கிராமத்திற்குப் போவேன். அவர்களின் பழக்க வழக்கங்கள், சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாவற்றையும் கூர்ந்து பார்ப்பேன். அதுவெல்லாம் அப்போதே என் மனதில் பதிந்து போனது. ஒரு கிராமிய படம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்ததற்கு அப்புறம் இதையெல்லாம் மறுபடியும் ஞாபகப்படுத்தி ‘ஹோம் ஒர்க்’ பண்ணினேன். நேரடியாக அந்தக் கதை நடக்கும் கிராமத்திற்குப் போய் பிள்ளைகள் ஆடும் ஆட்டத்தையெல்லாம் மறுபடியும் பார்த்தேன். சரி, இன்று இப்படி இருக்கிறது. இன்னும் இருபத்தைந்து வருடத்திற்கு முன்னால் எப்படி இருந்திருப்பார்கள். இந்த பின்தங்கிய கிராமத்தில் அன்று என்ன தொழில் செய்திருப்பார்கள். இதையெல்லாம் தேடித்தேடி எடுத்து படத்தின் காட்சிகளில் சேர்த்தேன். நான் தேர்ந்தெடுத்த பல விளையாட்டுகளில் எனக்கும் கதைக்கும் ஒத்து வருகின்ற விளையாட்டுகளை மட்டும் காட்சியாக்கினேன். இப்படி இதனுடைய பிராஸஸ் என்பது ஒரு லாங் பிராஸ் என்றே சொல்ல வேண்டும். இந்த வேலைகள் முடிந்த பிறகு கதாபாத்திரங்களுக்குத் தேவையான பட்டப் பெயர்களைச் சேகரிப்பதில் இறங்கினேன்.

தீராநதி: இந்தக் கேள்வியினுடைய நோக்கமே இன்றைக்கு மண் சார்ந்த கலாசாரம், மண் சார்ந்த விளையாட்டுகள் எல்லாமே அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான். ‘பீஸா’வும் கிரிக்கெட்டும்தான் இன்றைய இளசுகளின் உலகமாக இருக்கிறது. இந்தத் தருணத்தில், தமிழ் சினிமாவில் நம் மரபான விளையாட்டு முறைகள் எந்த மாதிரி பதியப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அமீர்: நம்முடைய அடையாளம், நம்முடைய மூதாதையர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்தது, நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை. இவற்றையெல்லாம் தமிழ் சினிமா உள்வாங்கிக் கொண்டு பரிணமிக்க வேண்டும். நம்முடைய ஒரிஜினல் அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழ் சினிமா செய்ய வேண்டும். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் என்னுடைய கிராமத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். என்னுடைய மண்ணை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பதுதான் என்னைப் பொறுத்த அளவில் என்னுடைய வெற்றி என்று நினைக்கிறேன். ஹீரோ, ஹீரோயின் சக்ஸஸ் ஆனார்கள். படம் இத்தனை கோடி பணம் சம்பாதித்திருக்கிறது என்பதெல்லாம் அப்புறம்தான். இன்றைக்கு சென்னையில் இருக்கும் 22 வயசுப் பையனுÊக்கு கிராமம் என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால் இன்று அவன் என்படத்தை ஏற்றுக் கொண்டான். ஆஹா இதுதான் நம்முடைய மண்ணுடா என்று ஏற்றுக் கொண்டான். என்னுடைய தாத்தா, பாட்டி, அப்பா அம்மா, மாமன், மச்சான் எல்லாம் இங்கிருந்துதான் வந்திருக்கிறார்கள் என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறான். தொலைந்துபோன கிராமங்களையும், தொலைந்து போன தமிழர்களின் முகங்களையும்,தொலைந்து போன கலாசாரங்களையும் மீட்டெடுத்துக் கொண்டு வந்ததுதான் ‘பருத்தி வீரன்.’

தீராநதி: தமிழில் ‘மாற்று’ சினிமா குறித்தெல்லாம் இங்கு நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அது பற்றி ஏதாவது உங்களுக்குத் தெரியுமா? ‘மாற்று சினிமா’ வை உண்டாக்கப் போகிறோம் என்று வாய்கிழிய பேசி சினிமாவிற்குள்ளாகப் போனவர்கள் பலர் ‘மொக்கையான’ படத்தைத்தான் தந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதுமாதிரியான விவாத வட்டத்திற்குள் இருந்தவராக, பரிட்சயம் பெற்றவராகத் தெரியவில்லையே?

அமீர்: இதற்கு முன்னாலும் சரி, இப்போதும் சரி ‘மாற்று’ சினிமா என்று பேசுகிற, விவாதிக்கிறவர்களோடு எனக்கு எந்தத் தொடர்பும் இருந்தது கிடையாது. அதுமாதிரியான நண்பர்கள் வட்டமும் எனக்கில்லை. ஆனால் ரொம்பக் காலமாக ஒரு விஷயம் எனக்குள் ஊறிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு மொழிப் படங்களிலும் தங்களுடைய வாழ்க்கையின் அடையாளம் இருக்கிறது. சீன மொழியாகட்டும், ரஷ்ய மொழியாகட்டும் ஆங்கில மொழியாகட்டும், ஸ்பானிஷ் மொழியாகட்டும், ஈரானாகட்டும், ஜெர்மனாகட்டும் எந்தப் படமாக இருக்கட்டும் அதில் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது. ஆனால் நம் இந்தியப் படங்களில் மட்டும்தான் தங்களின் வாழ்க்கை அடையாளங்களைத் தொலைத்து விட்டு வேறு எதையோ சினிமாவாக காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஏன்? என்ற ஒரு கேள்வி என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. என்னுடைய முதல் இரண்டு படங்களைக் கூட கிட்டத்தட்ட அதற்குப் பக்கத்தில்தான் வைத்திருப்பேன். கிட்டத்தட்ட என்று கூடச் சொல்ல முடியாது. ‘ராம்’மில் அப்படியேதான் இருக்கும். ‘மௌனம் பேசியதே’ படத்தில் நகரத்தினுடைய சூழலைக் காட்டி இருப்பேன். அது என்னுடைய முதல் முயற்சி என்பதால், சூழல் எந்த அளவுக்கு அனுமதித்ததோ அந்த அளவுக்குச் செய்திருப்பேன். ஆனால் பருத்தி வீரனில் ஒருவன் எலும்பும் சதையுமாக நின்றால் எப்படி இருக்குமோ அதை அப்படியே காண்பித்து இருக்கிறேன். இது ஒரு கிராமத்தைப் பதிவு செய்யும்போது தானாக வரும். இதுதான் வர வேண்டும். இன்னும் இதுமாதிரி காண்பிக்க வேண்டிய முகங்கள் நிறைய இருக்கிறது. சென்னை நகரத்தில் இருக்கிறது. அப்பார்ட்மெண்ட்டுகளில் இருக்கிறது. நம் அலுவலகங்களில் இருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக அவற்றைக் காட்டுவேன்.

தீராநதி: ‘மாற்று’ சினிமா பற்றிய பரிட்சயம் இல்லை என்று சொன்னீர்கள். அதுமாதிரியான ‘ஐடியாலேஜ்’ உங்களுக்குத் தேவை இல்லை என்று நினைக்கிறீர்களா?

அமீர்: ஒரு இயக்குநருக்கு அது மாதிரியான இடங்களில் இருந்தால்தான் நல்ல படம் எடுக்க வரும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அந்த இடத்தில் இருந்தால்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் என்னால் உணர முடியும். பார்த்த விஷயங்களை, கேட்ட விஷயங்களை வைத்தே நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். அப்படி பார்த்து, கேட்ட விஷயங்களைத்தான் கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும்கூட, ஒரு இந்துவினுடைய கலாசாரத்தைக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன். இந்துவாகப் பிறந்திருந்தால்தான் என்னால் சொல்லி இருக்க முடியும். அந்த தேவர் சமுதாயத்தில் பிறந்திருந்தால்தான் அவ்வாழ்வியலைச் சொல்லி இருக்க முடியும் என்பதில்லை. இந்தத் திறமைகள் ஒரு கலைஞனுக்கே உரியது. இந்தத் திறமைகள் ஒரு கலைஞனுக்குள் இருக்கிறது என்பதில் எந்தப் பெரிய ஆச்சர்யமும் இருப்பதாக நான் கருதவில்லை. இது ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் இருக்க வேண்டும். அவன்தான் கலைஞன். எல்லாவற்றையும் அனுபவித்து அனுபவித்துதான் செய்ய வேண்டும் என்றால், அவன் ஒரு சராசரி மனிதன்தானே அப்புறம் எப்படி கலைஞன் என்ற பட்டியலில் ஏற முடியும். ஏறவே முடியாது.

தீராநதி : இந்துவாக வாழ்ந்தால்தான் அவர்களின் வாழ்க்கையைச் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஒரு இஸ்லாமியனான என்னால் கூட அவர்களின் வாழ்க்கையைச் சொல்ல முடியும் என்கிறீர்கள். இதில் ஒரு வகுப்புவாத நல்லிணக்கக் குரல் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. மதங்கள் பற்றி உங்களின் கருத்து என்ன?

அமீர் : இங்குள்ள மக்களிடத்தில் ஒரே ஒரு பிரச்னைதான். எல்லோரும் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இங்குள்ள மேல்தட்டு, கீழ்த்தட்டு கடைக்கோடி மனிதன் யாராக இருக்கட்டும் அவனிடம் ‘உலகத்தில் முதல் மனிதன் யார்’ என்றால் ஆதாம் ஏவாள் என்கிறான். முதல் மனிதன் ஆதாம், ஏவாள்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்றால் இல்லை. அப்போது ஆதாம் ஏவாளின் வழித் தோன்றல்கள் தானே நாம். ஆதாமின் ஏவாளின் வழித் தோன்றலாக நாம் இருக்கும் போது, நீங்கள் எப்படி செட்டியாராக முடியும்? நான் எப்படி நாடாராக முடியும்? அப்போது ஆதாம் என்ன முதலியாரா? செட்டியாரா? கிறிஸ்துவரா? முஸ்லிமா? அய்யரா? அய்யங்காரா? சைவப் பிள்ளைமாரா? தேவரா? பிரமலைக் கள்ளரா? குறவரா? யார் அவர் ஆதாம்? அவருடைய பிள்ளை, அவருடைய பிள்ளைக்குப் பிள்ளை அவருடைய பிள்ளைக்கு பிள்ளைக்குப் பிள்ளை என்று வழித் தோன்றல்கள் தானே நாம்?! ஆக, மனிதன் தோன்றியதில் யாருக்கும் பிரச்னைகள் இல்லை? மனிதர்கள் பிரிந்து கூட்டங் கூட்டமாகும் போது பிரச்னை வந்தது. அதை தான் எல்லா வேதங்களும் ‘உங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக கோத்திரங்களாகவும், சமூகமாகவும் பிரித்தோம்’ என்று சொல்கிறது. ஆனால் இதையே நாளடைவில் பல்வேறு நூற்றாண்டுகளுக்கு அப்புறம் மதங்களாகப் பிரிந்து கொண்டார்கள். ஆக, எல்லோருடைய அடிப்படை என்பது ஒன்றேதான்.

தீராநதி : ‘வெப்பன் சப்ளையர்’ போன்ற போலீஸ் லாங்வேஜ், அவர்களின் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் மிக யதார்த்தமாக ஒரிஜினாலிட்டியோடு படத்தில் காட்டி இருக்கிறீர்கள். காவல் துறையோடு நேரடி அனுபவம் பெற்ற ஒருவரால் பதிவு செய்யப்பட்ட காட்சியாகப் பல இடங்களில் காட்சிகள் இருக்கிறது?

அமீர் : நீங்கள் ஜெயிலுக்குப் போய் இருக்கிறீர்களா என்று நேரடியாகவே கேட்கலாம்!.

தீராநதி : ஜெயிலுக்குப் போன அனுபவம் உண்டா?

அமீர் : கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் போய் இருக்கிறேன். தண்ணி அடித்துவிட்டு நடு ரோட்டில் கலாட்டா பண்ணுவது, பஸ் கண்ணாடியை உடைப்பது என்று பல நிகழ்ச்சிகள் உண்டு. அப்போது பார்த்த காவல்துறையின் அணுகுமுறைகளையே இன்று அப்படியே பயன்படுத்தி இருக்கிறேன்.

தீராநதி : ஒரு கலைப் பொருளை சேகரிப்பவனைப் போல நீங்கள் இவ்வார்த்தைகளைச் சேகரித்திருக்கிறீர்களா?

அமீர்: தேடிச் சேகரிக்கவில்லை. அதுவாகவே ஆழ் மனதில் பதிந்து போய் இருந்தது. அப்படித்தான் என்னால் உணர முடிகிறது.

தீராநதி : ஹோர்ஹே ஸான் ஹீனஸ் (யிஷீக்ஷீரீமீ ஷிணீஸீழீவீஸீமீs) என்ற இயக்குநர் மலைவாழ் மக்களின் வாழ்வை அவர்களின் மொழியிலேயே படமாக்கியதைப் போல நீங்கள் விளிம்பு நிலையில் வாழும் மக்களின் மண் பரப்பை அப்படியே உறிஞ்சி எடுத்துத் தந்திருக்கிறீர்கள். நான் குறிப்பிடும் ஹீனஸின் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? உலக சினிமாவோடு உங்களின் தொடர்பு குறித்துப் பேசுவோமா?

அமீர் : உலக சினிமாவோட எனக்கு இது வரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே சொல்லுவேன். இனிமேல் அந்தத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆசைப் படுகிறேன். உலக சினிமாக்கள் என்ன என்ன மாதிரியாக வருகிறது என்பதை ‘ராம்’ படம் ‘சைப்ரஸ் பட விழா’வில் கலந்து கொண்ட போதுதான் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதையெல்லாம் பார்த்த பிறகு நம்மால் உலகளாவிய ஒரு தமிழ்ப் படத்தை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட ஹோர்ஹே ஸான் ஹீனஸ் படத்தை நான் பார்க்கவில்லை.

தீராநதி : சினிமா கனவுகளோடு சென்னைக்கு வரும் எந்த உதவி இயக்குநரும் தன் கையில் உலக அளவில் பா£க்க வேண்டிய 100 படத்தின் பட்டியலை வைத்துக் கொண்டு இருப்பான். நீங்கள் எப்படி இதில் எல்லாம் சிக்காமல் தைரியமாக இருந்தீர்கள்? ஒரு கட்டத்திற்கு மேல் தாழ்வு மனப்பான்மையில் மாட்டிக் கொள்ள வேண்டி இருக்குமே?

அமீர்: ஒரு வேளை அந்த மாதிரியான உலக சினிமாக்களை எல்லாம் பார்க்காததுதான் என்னுடைய பலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் என்னுடைய மூன்று படங்களிலுமே எவ்விதக் கலப்படமும் இல்லை. நான் என்ன நினைக்கிறேன் என்றால் நீங்கள் குறிப்பிடும் உலக சினிமா அனுபவம் எல்லாம் ஒரு தூண்டுகோலுக்கான விஷயமாக அமையுமே ஒழிய, அதுவே முடிவாகி விடாது.

தீராநதி: உலக சினிமா அனுபவம் பெறுவதனால் நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயத்தை இன்னும் செழுமையாகச் சொல்ல அது உதவிகரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்?

அமீர்: நிச்சயமாக நீங்கள் குறிப்பிடுவதைப் போலான விஷயங்களுக்கு அது உதவியாக மட்டுமல்ல பேருதவியாகவே இருக்கும். கற்றுக்கொள்ளக் கூடாது என்பதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு கமல் என்னை அழைத்துப் பாராட்டினார். எல்லோரும் பின்னி விட்டீர்கள், அசத்தி விட்டீர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், ‘இதோடு ஓய்ந்து விடாதீர்கள். இன்னும் வெகுதூரம் நீங்கள் ஓட வேண்டியது இருக்கிறது’ என்றார். அவரிடம் பிடித்த விஷயமே அதுதான். இந்த வயதிலும் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் பாருங்கள். ‘வெளி நாட்டிற்குச் சென்று சினிமாவைப் பற்றி நிறைய படியுங்கள்’ என்றார். நான் அவரிடம் ‘எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது’ என்றேன். ‘அதனால் என்ன ரஷ்யாவுக்குப் போய் படியுங்கள் அங்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியாது’ என்றார். எது ஒன்றும் தெரியவில்லை என்று முடங்கி விட வேண்டாம். எது எங்கு கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தி முன்னேறுங்கள் என்ற அவரின் அணுகு முறை என்னைக் கவர்ந்தது. ஆக என்ன சொல்ல வருகிறேன் என்றால் இனி கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதுதான்.

தீராநதி: நல்ல படங்களாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படும் ‘சேது’வில் ‘விக்ரம்’ லூசாகி திரிவதும், ‘காதல்’ படத்தில் ‘பரத்’ பைத்தியமாகிவிடுவதும் பருத்தி வீரனில் ‘கார்த்தி’ கொலைசெய்யப்பட்டு, ப்ரியாமணி கற்பழிக்கப்படுவதும் என்று எல்லாமே ஆன்டி க்ளைமேக்ஸ் தனமாகவே இருக்கிறது. நல்ல படம் என்றால் இந்த இலக்கணத்தோடுதான் முடிய வேண்டுமா?

அமீர்: அது ஒரு பதிவு. ஏன் அந்தப் பதிவு தேவைப்படுகிறது என்று கேட்பீர்கள் என்றால், இன்றைக்கு வரைக்கும் காதல் காவியங்களாகச் சொல்லப்படுவதில் சேர்ந்து வாழ்ந்ததாக ஒரு ஜோடி யாரையாவது நீங்கள் காட்டுங்கள் பார்ப்போம். வாழ்ந்து விட்டால் அது சராசரி விஷயமாகிவிடும். அதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது. எத்தனையோ பேர் வருகிறார்கள். வாழ்கிறார்கள், போய்விடுகிறார்கள். இதில் ஒருத்தன்தான் போராடி ஒரு இலக்கை அடைந்தவனாகிறான். அது பிறகு வரலாறாகிறது. அதுபோல பருத்தி வீரனும் முத்தழகும் தங்களின் இளமைப் பருவத்திலிருந்து சேர்ந்து காதலிக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கை நினைத்ததைப் போல நடக்கவில்லை. ஏன் நடக்கவில்லை. பருத்தி வீரனின் முன் ஜென்ம சாபத்தால் அப்படி நடந்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆக, பல கேள்விகளோடு அவர்களின் காதல் காவியமாக்கப்படுகிறது.

தீராநதி: இதில் சின்ன இடைஞ்சல் இருக்கிறது. நீங்கள் முன்பே சொன்னது போல மக்களுடைய வாழ்க்கையை அப்படியே அச்சு அசலாகச் சொல்கிறேன் என்கிறீர்கள். காவியம் என்பது மக்களின் வாழ்க்கையை அப்படியே கொண்டு வந்து வைக்கும் விஷயமில்லையே?

அமீர்: ஒரு படைப்புதான் காவியமாகிறதே ஒழிய காவியத்தை யாரும் படைப்பதில்லை. நான் ஒரு காவியம் படைக்கப் போகிறேன் என்று யாரும் போக முடியாது. நான் என்னுடைய படைப்பைத்தான் எடுத்து வைத்தேன். பின்னால் அது காவியமாகிறது. அதனால்தான் நான் யோசிக்காத விஷயத்தையெல்லாம் யோசித்து உங்களைப் போன்ற இலக்கிய வட்டாரத்தினர் ஆராய்ந்து கேட்கிறீர்கள். இதுதான் அதன் வெற்றியாகிறது.

தீராநதி: கிளாசிக்கல் மியூசிக் என்பது மனதோடு தொடர்புடையது. ஆனால் நாட்டுப்புற கிராமிய இசை என்பது மனிதனின் நாடி நரம்புகளில் புகுந்து உடல்இசையைத் தூண்டச் செய்வது. இந்த மண்ணிற்கே உரித்தான உடல் இசைதான் நம்முடைய படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என்று திட்டமிட்டே தேர்ந்தெடுத்தீர்களா அல்லது கிராமியப் படம் என்பதால் இந்த இசையை வைப்போம் என்று வைத்தீர்களா?

அமீர்: கிராமிய இசை வடிவம் என்பது கண்டிப்பாக உடல் இசையைத் தூண்டும் இசை என்பதைப் புரிந்து கொண்டுதான் வைத்தேன். ஏனென்றால் அந்த இசை நம் ரத்தத்தில் இருக்கிறது. இசையைப் பொறுத்த அளவில் மொழி கிடையாது. ஆனால் கலாசாரம் அதில் இருக்கிறது. கலாசாரத்தோடு ஒன்றிப் போகக்கூடிய இந்த இசை தான் என்னுடைய பார்வையாளனுக்கு நான் தர வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருந்தேன். அதனால்தான் அவற்றை தேடிப்பிடித்து பயன்படுத்தினேன். எந்த இசையை பயன்படுத்துகிறோம் என்பதை விட யாருக்கு இந்த இசையைக் கொடுக்கப் போகிறோம் என்று புரிந்து கொண்டதனால்தான் இவற்றை எல்லாம் சரிவர எடுத்துக் கையாண்டிருக்கிறேன்.

தீராநதி: விளிம்பு நிலை மக்களான அரவாணிகளை ஒரு இசைக் கலைஞர்களாகவே காட்டி இருக்கிறீர்கள். அது வரைக்கும் அது பெருமிதம் கொள்ளத் தக்கது. ஆனால் நீங்களும் அதில் சில இடங்களில் ‘சின்னத் தனமான’ வார்த்தைகளை எழுதி இருக்கிறீர்களே ஏன்?

அமீர்: அது மாதிரி ஏன் வைத்தேன் என்றால், அவர்கள் நிஜத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அதனால் அதை வைத்தேன். அதை வைத்து காசு பண்ண வேண்டும் என்பதற்காக அதை நான் செய்திருந்தால் அது தவறு. நான் அப்படிச் செய்யவில்லை.

தீராநதி: சரி, நிஜத்தில் இருக்கிறதைச் சொல்லி இருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் பொதுவாக நிஜத்தில் அப்படி இருந்தாலும் பொதுத் தளத்திற்கு அது வரும் போது ‘எடிட்’ பண்ணித்தான் சொல்ல வேண்டும் என்ற ஒரு மனோபாவம் இங்கு இருக்கிறது. அப்போது நிஜத்தில் இருப்பதை ‘எடிட்’ செய்யாமல் அப்படியே காட்டலாம் என்கிறீர்களா?

அமீர்: நீங்கள் கேட்ட கேள்வி நியாயமான கேள்வி. சமூகத்தில் அப்படி இருக்கிறது என்பதற்காக பட்டவர்த்தனமாக ஒரு விஷயத்தை அப்படியே சொல்லிவிட முடியாது. சொல்லவும் கூடாது. ஒரு படைப்பாளியின் முக்கியமான பொறுப்பு அது. படைப்பாளி என்பவன் பொது மக்களின் பிரதிநிதியாகி விடுகிறான். அப்படி பிரதிநிதியாகிவிடும்போது, அவன் மக்களுக்குச் சொல்லக் கூடிய விஷயம் நல்ல விஷயமாகத்தான் இருக்க வேண்டும். நான் பட்டவர்த்தனமாகச் சொல்லவே இல்லை. நான் அப்படி பட்டவர்த்தனமாகச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் நான் அதில் கொஞ்சம் ‘எடிட்’ செய்துதான் சொல்லி இருக்கிறேன்.

தீராநதி: லாரி டிரைவர்களின் பாலியல் பழக்க வழக்கம் பரதனின் மலையாளப் படமான ‘பரங்கி மலா’வைத் தழுவி சொல்லப்பட்டிருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இது உண்மையா? அதேபோல லாரி டிரைவர் என்றால் பாலியல் வெறிபிடித்த லோலாய் கேஸ§கள் என்பது போல ஒரு பொது புத்தி, உங்களிடம் இருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

அமீர்: எல்லா டிரைவர்களும் அப்படிப்பட்டவர்கள் என்று எந்த இடத்திலும் நான் சொல்லவில்லை. ஆனால் இதைத் தவறு என்று தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அதனால் அவர்கள் இதைப் பார்த்தாவது உணரட்டும் என்பதற்காகச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் செய்யும் தப்பை நியாயப்படுத்துகிறார்கள். பத்துப் பதினைந்து நாட்கள் நாங்கள் வெளியே போகிறோம் என்கிறார்கள். அப்போது ராணுவத்தில் வருடக் கணக்கில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும். அப்படியா இருக்கிறார்கள். அவர்களிடத்தில் ஒரு ஒழுங்கு இருக்கிறதல்லவா. அது ஏன் இவர்களிடத்தில் இல்லை என்பதுதான் என் கேள்வி. ஆண் என்றால் எத்தனை பெண்ணிடமும் போகலாம் பெண் மட்டும் ஒருவனோடே கடைசி வரை வாழ வேண்டும் என்று சொல்கிறார்கள். கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமா? ஆணுக்கும் அவசியமில்லையா? எத்தனையோ அப்பாவி லாரி டிரைவர்களின் மனைவிகளுக்கு எய்ட்ஸ் வந்து பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகிறார்கள். நான் அவர்களிடம் நேரில் பேசி இருக்கிறேன். அந்தப் பெண் இவனைத் திருமணம் செய்து கொண்ட பாவத்தைவிட என்ன தப்பு செய்தாள். அவனின் குழந்தை என்ன தப்பைச் செய்தது. இதைக் காட்டினாலாவது திருந்தமாட்டார்களா என்றுதான் காட்டினேன்.

தீராநதி: அப்படிப் பார்த்தால் நீங்கள் கூட முத்தழகுவை கடைசி வரை கற்பை காப்பாற்றி பருத்தி வீரனுக்குக் கொடுப்பவளாகத்தானே காட்டி இருக்கிறீர்கள். ஆக, பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு என்பது போலத்தானே ஆகிறது?

அமீர்: நூறு சதவீதம் நீங்கள் கேட்டது உண்மை தான். நம்முடைய மக்களிடத்தில் சமூகத்தில் இந்த மாதிரியான மனப்போக்கு இருக்கிறது என்பதைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். இதை நான் சரி என்று வாதாடவில்லையே? கதையைத் தாண்டி உணர்ந்து பார்த்தால் ஆணுக்கும் கற்பு இருக்கிறது என்பதை நான் சொல்லி இருப்பது புரியும்.

சந்திப்பு: கடற்கரய்
படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

---------------

நன்றி - தீராநதி