நடிகர்களின் நாட்டுப் பற்று படம் ஓடுவதற்காகவே-தினகரனின் இன்னொரு சர்ச்சை சர்வே

சென்னை: தங்களது படம் ஓட வேண்டும் என்பதற்காகத்தான் தேசப்பற்றுடன் இருப்பதாக நடிகர்கள் காட்டிக் கொள்கிறார்கள் என்று தினகரன் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறந்தவர் யார், கருணாநிதியின் அடுத்த வாரிசு என இரு சர்ச்சைக்குரிய கருத்துக் கணிப்பை வெளியிட்ட தினகரன் நாளிதழ் மற்றும் ஏசி நீல்சன் ஆகியவை இணைந்து மீண்டும் ஒரு சர்ச்சைக் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

இன்றைய தினகரன் நாளிதழில் வெளியாகியுள்ள அந்தக் கருத்துக் கணிப்பில், நடிகர்களுக்கு உண்மையான தேசப்பற்று இல்லை என்ற தொணியில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகள்

தங்களது படம் ஓட வேண்டும் என்பதற்காகத்தான் நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் நடிகர்கள் பற்று கொண்டிருக்கிறார்கள் என கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 50 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆவலில் நாட்டுப் பற்று இருப்பது போல நடிகர்கள் காட்டிக் கொள்கிறார்கள் என 31 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர்.

14 சதவீதம் பேர்தான் நடிகர்களுக்கு நாட்டுப் பற்று இருக்கிறது என்று சொல்லியுள்ளனர். 5 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்பவில்லையாம்.

நாகர்கோவில் பக்கம்தான் நடிகர்களுக்கு உண்மையான நாட்டுப் பற்று இல்லை என்று அதிகம் பேர் சொல்லியுள்ளனராம். அடுத்து சென்னை நகரில் நடிகர்களுக்கு எதிராக கருத்து (58 சதவீதம்) தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

நடிகர்கள் போலியான நாட்டுப்பற்றுடன் இருப்பது போல கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது தினகரன்.

திரையுலகினர் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ, எப்படி பதில் சொல்லப் போகிறார்களா, பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி - தட்ஸ்தமிழ்

0 comments: