I hate KBC - 3

கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியை, அமிதாப்பிற்கு அடுத்து தற்பொழுது ஷாருக்கான் தற்பொழுது நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த நிகழ்ச்சியை துரதிஷ்டவசமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.



மிகவும் பரப்பரப்பை ஏற்படுத்திய ஷாருக்கானின் இந்த வர்ஷனை பார்த்த பொழுது அவர் தொடர்ச்சியாக, Mr. Computer, Mr. Computer என்று குறிப்பிட்டுவந்ததை காண முடிந்தது. என்ன ஒரு துரதிஷ்டம்.

அது எப்படி ஷாருக்கான் அறிவாக சிந்திக்கக் கூடிய ஒரு பொருளை ஆணாக மட்டும் பார்க்கலாம். அது அறிவாக சிந்திப்பதாலேயே அதை Miss. Computer என்று சொல்லாமல் அவருடைய Male Chavanism த்தைக் காட்டி வருகிறார்.

இதை ஒரு பெண்ணியவாதியாக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த நிலை தொடர்ந்தால் ஷாருக்கானின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று சொல்லிக்கொள்கிறேன். இதனால் மக்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்காமல் ஒதுக்கி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இதனுடைய தமிழ் ஒளிபரப்பு விஜய் டீவியிலும் வருவதாக அறிகிறேன். அதிர்ஷ்டவசமாக அந்தத் தொலைக்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பில்லாததால் பார்க்க முடிந்த நபர்கள். அங்கேயும் கம்ப்யூட்டர் ஆணாக உருவகப்படுத்தப் பட்டிருந்தால் அதை பின்னூட்டத்தில் வெளியிடவும் கேட்டுக்கொள்கிறேன்.

ராமர் கோபம் - சுவாமி கண்டுபிடிப்பு

திரேதாயுதகத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது ராமர் பாலம். இந்தப் பாலத்தை சேது சமுத்திரக் கால்வாய்க்காக 107 டன் எடையுள்ள துரப்பணக் கருவியைக் கொண்டு இடித்துள்ளனர்.

ஆனால் அந்தக் கருவி உடைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பாலத்தை தொடர்ந்து இடிக்க முற்பட்டால் சேது சமுத்திரத் திட்டத்திற்கே ஆபத்து ஏற்படும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

ராமர் பாலத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக யுனெஸ்கோவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. வருகிற ஜூன் மாதம் நியூசிலாந்தில் நடைபெறும் யுனெஸ்கோ மாநாட்டில் இந்தக் கோரிக்கை ஏற்கப்டும் எனத் தெரிகிறது.

எனவே ராமர் கட்டிய பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.


இதைப் பற்றிய தட்ஸ்தமிழ் செய்தி
ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்ட கடல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல், ராமர் பாலம் தீவித் திட்டுகளை உடைத்துக் கொண்டிருந்தபோது அதன் கருவி உடைந்ததால் கடலை ஆழப்படுத்தும் பணியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கி, கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் 167 கிலோமீட்டர் தொலைவுக்கு கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது வேதாரண்யம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரியஸ் மற்றும் டிரஜ் 6 என்ற இரு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டிசம்பர் 10ம் தேதி முதல் இப்பகுதியில் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முக்கியப் பகுதியான ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் (தீவுத் திட்டுக்கள்) பகுதியில் ஆழப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

ஆனால், இந்தப் பாலம் இலங்கை செல்வதற்காக ராமர் கட்டிய பாலம் என இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் இந்தப் பாலத்தை இடிக்கக் கூடாது, அப்படி செய்தால் அது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கோரி வந்தன.

இந் நிலையில் நேற்று முதல் முறையாக ராமர் பால தீவுத் திட்டுகளை உடைக்கும் பணி தொடங்கியது. ஆனால் எதிர்பாராதவிதமாக பாலத்தை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவி சேதமடைந்தது.

தோண்டும் கருவியில் இருந்த 50 டன் எடை கொண்ட பகுதி அப்படியே துண்டித்து கடலுக்குள் போய் விட்டது. இதனால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. அந்தக் கருவியை கண்டுபிடித்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கிரேனுடன் கூடிய பெரிய கப்பல் ஒன்று சென்னையிலிருந்து விரைந்துள்ளது. இக்கப்பலுடன் 40க்கும் மேற்பட்ட நிபுணர்களும் வந்துள்ளனர். இவர்கள் கடலில் மூழ்கிய பகுதியை கண்டுபிடித்து எடுத்து சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ரிப்பேரை செய்ய ரூ. 2 கோடி செலவாகுமாம். சரி செய்யும் பணி விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியில் ராமர் எங்கக் கோபப்பட்டார் எனக்கேட்பவர்களுக்குப் பதில் என்னிடம் இல்லை.

வைகோ சொன்ன "கதை"

"ஈழத்தில் போர் புரிந்து விட்டு இளவரசன் அருள்மொழிவர்மன் தன் நண்பனான வந்தியத்தேவனுடன் சோழ மண்ணுக்கு கடல் வழியே திரும்பினான். அப்போது வந்தியத்தேவன் வந்த கப்பல் தீப்பிடித்து மூழ்கத் தொடங்கியது. எல்லோரும் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, தன் வசதி, வாழ்க்கையை எல்லாம் மறந்து விட்டு நண்பனுக்காக கடலுக்குள் குதித்தான் அருள்மொழி வர்மன். தன் உயிரை அடகு வைத்து நண்பனைக் காக்கிறான். நட்பென்றால் அதுதான் நட்பு. அப்படிப்பட்ட நட்பு இதயம் கொண்டவர்களும் சோழ மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள்"

இது வைகோ தமிழ் இலக்கிய விழாவில் எல்.ஜியை ஓட்டும் நோக்கில் பேசியதாக அறிகிறேன். எல்.ஜியை ஓட்டுவதைப் பற்றி எனக்கு எந்த ஒப்பீனியனும் இல்லை. அதற்கு மேற்கோளாக காட்டிய விஷயம் தான் கொஞ்சம் உறுத்தியது.

கல்கி எழுதியது அப்படியே உண்மை என நம்பும் ஒருவராக நான் வைகோவைப் பார்க்காததால் இந்த விஷயம் ஆச்சர்யமாக இருந்தது. ஒரு சிக்கலான நேரத்தில் சொல்லிக்காட்ட கற்பனை விஷயமா உங்களுக்குக் கிடைத்தது வைகோ.