I hate KBC - 3

கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியை, அமிதாப்பிற்கு அடுத்து தற்பொழுது ஷாருக்கான் தற்பொழுது நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அந்த நிகழ்ச்சியை துரதிஷ்டவசமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.



மிகவும் பரப்பரப்பை ஏற்படுத்திய ஷாருக்கானின் இந்த வர்ஷனை பார்த்த பொழுது அவர் தொடர்ச்சியாக, Mr. Computer, Mr. Computer என்று குறிப்பிட்டுவந்ததை காண முடிந்தது. என்ன ஒரு துரதிஷ்டம்.

அது எப்படி ஷாருக்கான் அறிவாக சிந்திக்கக் கூடிய ஒரு பொருளை ஆணாக மட்டும் பார்க்கலாம். அது அறிவாக சிந்திப்பதாலேயே அதை Miss. Computer என்று சொல்லாமல் அவருடைய Male Chavanism த்தைக் காட்டி வருகிறார்.

இதை ஒரு பெண்ணியவாதியாக நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த நிலை தொடர்ந்தால் ஷாருக்கானின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று சொல்லிக்கொள்கிறேன். இதனால் மக்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்காமல் ஒதுக்கி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இதனுடைய தமிழ் ஒளிபரப்பு விஜய் டீவியிலும் வருவதாக அறிகிறேன். அதிர்ஷ்டவசமாக அந்தத் தொலைக்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பில்லாததால் பார்க்க முடிந்த நபர்கள். அங்கேயும் கம்ப்யூட்டர் ஆணாக உருவகப்படுத்தப் பட்டிருந்தால் அதை பின்னூட்டத்தில் வெளியிடவும் கேட்டுக்கொள்கிறேன்.

1 comments:

Anonymous said...

// Miss. Computer என்று சொல்லாமல் //

Miss ங்கிறத உபயோகப்படுத்தினா கல்யாணம் ஆனவங்களா இல்லையான்னு கண்டுபிடிச்சிட முடியும். அதனாலத்தான் வந்தது. Ms. அப்படிங்கிறது.

இது தெரியாம நீயெல்லாம் என்ன ஒரு பெண்ணியவாதி.