ராமர் கோபம் - சுவாமி கண்டுபிடிப்பு

திரேதாயுதகத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது ராமர் பாலம். இந்தப் பாலத்தை சேது சமுத்திரக் கால்வாய்க்காக 107 டன் எடையுள்ள துரப்பணக் கருவியைக் கொண்டு இடித்துள்ளனர்.

ஆனால் அந்தக் கருவி உடைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பாலத்தை தொடர்ந்து இடிக்க முற்பட்டால் சேது சமுத்திரத் திட்டத்திற்கே ஆபத்து ஏற்படும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

ராமர் பாலத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக யுனெஸ்கோவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. வருகிற ஜூன் மாதம் நியூசிலாந்தில் நடைபெறும் யுனெஸ்கோ மாநாட்டில் இந்தக் கோரிக்கை ஏற்கப்டும் எனத் தெரிகிறது.

எனவே ராமர் கட்டிய பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதில் பிரதமர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.


இதைப் பற்றிய தட்ஸ்தமிழ் செய்தி
ராமேஸ்வரம்: சேது சமுத்திரத் திட்ட கடல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல், ராமர் பாலம் தீவித் திட்டுகளை உடைத்துக் கொண்டிருந்தபோது அதன் கருவி உடைந்ததால் கடலை ஆழப்படுத்தும் பணியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கி, கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் 167 கிலோமீட்டர் தொலைவுக்கு கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

தற்போது வேதாரண்யம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரியஸ் மற்றும் டிரஜ் 6 என்ற இரு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

டிசம்பர் 10ம் தேதி முதல் இப்பகுதியில் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முக்கியப் பகுதியான ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் (தீவுத் திட்டுக்கள்) பகுதியில் ஆழப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

ஆனால், இந்தப் பாலம் இலங்கை செல்வதற்காக ராமர் கட்டிய பாலம் என இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் இந்தப் பாலத்தை இடிக்கக் கூடாது, அப்படி செய்தால் அது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கோரி வந்தன.

இந் நிலையில் நேற்று முதல் முறையாக ராமர் பால தீவுத் திட்டுகளை உடைக்கும் பணி தொடங்கியது. ஆனால் எதிர்பாராதவிதமாக பாலத்தை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவி சேதமடைந்தது.

தோண்டும் கருவியில் இருந்த 50 டன் எடை கொண்ட பகுதி அப்படியே துண்டித்து கடலுக்குள் போய் விட்டது. இதனால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. அந்தக் கருவியை கண்டுபிடித்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கிரேனுடன் கூடிய பெரிய கப்பல் ஒன்று சென்னையிலிருந்து விரைந்துள்ளது. இக்கப்பலுடன் 40க்கும் மேற்பட்ட நிபுணர்களும் வந்துள்ளனர். இவர்கள் கடலில் மூழ்கிய பகுதியை கண்டுபிடித்து எடுத்து சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ரிப்பேரை செய்ய ரூ. 2 கோடி செலவாகுமாம். சரி செய்யும் பணி விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியில் ராமர் எங்கக் கோபப்பட்டார் எனக்கேட்பவர்களுக்குப் பதில் என்னிடம் இல்லை.

1 comments:

அருண்மொழி said...

//திரேதாயுதகத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது ராமர் பாலம். //

அப்படின்னா எம்புட்டு வருசமுங்கோ?