கோவில்கள் கடவுள்களுக்கு உகந்ததா?

என் மீது எப்பவுமே ஒரு விமர்சனம் உண்டு, விஜய் டீவியே நான் பார்ப்பதில்லை என்று, இது ஒருவாறு உண்மைதான் நான் சன் டீவி, கே டிவி, POGO தவிர்த்து மீதி பார்ப்பதற்கான நேரம் பெரும்பாலும் இல்லாமல் போகும் காரணத்தால் மற்ற விஜய் டீவி, ஜெயா டீவியெல்லாம் பார்ப்பதில்லை. பின் ஏன் ஒருவாறு உண்மையென்று சொல்லணும் உண்மைன்னு சொல்லிடலாமேன்னு கேட்கலாம். ஆனால் நான் டீவி பார்க்கும் நேரத்தை மொத்தமாகக் கணக்கிட்டு அதில் நான் விஜய் டீவி பார்க்கும் நேரத்தைக் கணக்கிட்டால் அது 40% அளவிற்கு இருக்கும் என்று நினைக்கிறேன். யாரும் தப்பா நினைச்சிறாதீங்க, பார்மேட் நியூமராலஜியின் தந்தை மஹாதன் ஷேகர் ராஜா, சித்தர் வழி வழி வந்த வொயிட் அண்ட் ஒயிட் நீல்கண்ட் சிவா, நியூமராலாஜி நிபுணர் டாக்டர் ராஜராஜன் இவர்களது நிகழ்ச்சிகளை நாள் தவறாது தினமும் 12.00 AM மணிக்கு மேல் பார்த்து வருகிறேன்.

இதில் அனைவரது ஃபோன் நம்பர்கள் உட்பட நிகழ்ச்சி நிரல் அனைத்துமே கூட நான் தலையில் தட்டினால் கடகடவென்று சொல்லும் அளவிற்கு இந்த நிகழ்ச்சிகளின் தீவிர ரசிகன் என்றே கூட சொல்லலாம். சில சமயம் 'ராஜ வைத்தியம்' என்றொரு ஐட்டம் வேறு வரும், முன்பெல்லாம் ஜெயாடீவியில் வந்து கொண்டிருந்தது நன்றாகத் தெரியும் இப்பொழுதெல்லாம் விஜய்டீவியில் வருகிறது. ஜெயாவிலும் வருமாயிருக்கும் சரியான statistics இல்லை.

சில சமயங்களில் ஏண்டா வாழ்க்கையில் இத்தனை கஷ்டப்பட்டுக்கொண்டு, Mohandoss என்ற பெயறை Mohaandooss என்றோ Mohan I Doss என்றோ மாற்றிக்கொண்டு எளிதாய் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டு போய்விடலாம் என்று நினைப்பேன். ஆனால் ம்ம்ம் என்ன செய்ய நமக்கு விதிச்சது அவ்வளவு தான் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மக்களே இன்னும் சிறிது நாளில் நாலைந்து பெயரியல் நிபுணர்களைக் கலந்தாலோசித்து பெயரை மாற்றி விரைவில் வெற்றிபெரும் வகையில் ஒரு பெயரை சஜஸ்ட் செய்யச் சொல்ல இருக்கிறேன். எனக்கு சக்ஸஸ்புல்லா ஆன பிறகு உங்களுக்கும் சொல்கிறேன்.

இதில் வரும் எல்லாரையும் விட எனக்கு அந்த வொயிட் அண்ட் வொயிட் நீல்கண்ட் சிவா தான் மிகவும் பிடித்த நபர், அவர் பேசுவதே ஹிப்னடைஸ்ட் செய்யும் விதத்தில் இருக்கும், ஒருவேளை டீவி மூலமாகவே இது சாத்தியமா தெரியவில்லை. ஆனால் அவர் ப்ரொக்கிராம் வந்துவிட்டால் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் மாற்றாமல் பார்த்துக் கொண்டேயிருப்பேன், பாவம் அக்கா தான் காண்டாகி உன்னையத் திருத்தவேமுடியாது என்று புலம்பிவிட்டு தூங்கப் போய்விடுவார்கள். நானும் எவ்வளவோ முறை சொல்லிவிட்டேன் இவர்களைச் சாதாரணமாய் நினைக்க வேண்டாம் எல்லாம் science படி பூர்வ் செய்ய விஷயங்கள் என்று ம்ம்ம் என்ன செய்ய எல்லாம் புரியும் பொழுது புரியும்.

இந்த மேற்கண்ட "கோவில்கள் கடவுள்களுக்கு உகந்ததா?" என்ற கேள்வி என் மனதில் ஆழமாய் ஊடுறுவிய நிகழ்ச்சியை நினைத்துக் கொள்கிறேன். திரு டாக்டர் மஹாதன் ஷேகர் ராஜா அவர்கள் (சாரி மறந்திட்டனே ஃபார்மேட் நியூமராலஜியின் தந்தை என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) யாராவது கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியும் அவருடைய ப்ரொக்கிராமில் வரும். அப்படி கேட்கப்பட்ட கேள்வியான "கடவுள்களின் பெயர்களை வைத்துக் கொள்ளலாமா?" என்ற கேள்விக்கு, கூடாது என்றும் நேரடியாய் முருகன் என்று வைத்துக் கொள்ளாமல் "செந்தில்" என்று வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

மேட்டர் என்னான்னா இப்ப நீங்க முருகன் கோவிலுக்கு போறீங்க மனசு விட்டு உங்கள் குறைகளைச் சொல்லி அழுகிறீர்கள் என்றால் கடவுள் அந்தக் குறைகளை உங்களிடம் இருந்து எடுத்துவிடுவார் இல்லையா ஆனால் பாவம் அவரிடம் Recycle Bin இல்லாத காரணத்தால் அந்தக் குறைகள் கஷ்டங்கள் கோவிலைச் சுற்றி வலம் வந்தபடியிருக்குமாம். நீங்கள் முருகன் என்ற பெயரை வைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றீர்கள் என்றால் உங்களிடம் அந்தக் குறைகள் distribute ஆகிவிடுமாம்.

எனக்கும் உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது, ஐயய்யோ எந்த சாமிக்காவது "மோகன்தாஸ்" என்று பெயரிருக்கிறதா என திருச்சிக்கும் அம்மாவிற்கு இரவு 12.30 க்கு தொலைபேச, அம்மா வந்த கோபத்தில் "டேய் இப்ப நீ போனை வைக்கிறீயா இல்லை தனி ஃப்ளைட் வைச்சிக்கிட்டு வந்து உன்னைய உதைக்கவா?" என்று கத்த. என் பயம் இன்னும் அதிகமாகிவிட்டது நண்பர்களே உங்களுக்குத் தெரிந்து எந்த கடவுளுக்காவது "மோகன்தாஸ்" என்ற பெயரிருந்தால், என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. எனது நண்பர் ஃபார்மேட் நியூமராலஜி புகழ் டாக்டர் திரு மஹாதன் ஷேகர் ராஜாவிடம் வந்து கலந்தாலோசித்து அவரை பெயரை மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள். ப்ளீஸ்.

PS: நான் யாருக்கும் அடிவருட 'முருகன்' என்ற பெயரை இழுக்கவில்லை, தமிழ்க்கடவுள், இந்திக் கடவுள் என்ற பிரச்சனைகளைக் கிளப்பாதீர் - டாக்டர் திரு ஃபார்மேட் நியூமராலஜியின் தந்தை மஹாதன் ஷேகர் ராஜா உபயோகித்த அதே கடவுளை நானும் உபயோக்கிறேன் அஷ்டே.

PS1: இதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தம் என்று வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன்.

PS2: இந்தக் கருத்துக்களில் எதுவும் சந்தேகம் என்றால் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் - மகாதன் ஷேகர் ராஜா - ஃபார்மேட் நியூமராலஜியின் தந்தை - 99404 23555, 99404 63555

சரியாப்போச்சு! சென்னைன்னாலே ரஜினி தானா!?



ஆனாலும் நல்லாயிருக்கு!!!