சிவாஜி சிறுகுறிப்பு - சுஜாதா

மிகுந்த எதிர்பார்ப்பு-களுடன் ‘சிவாஜி’ படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இதன் உருவாக்கத்தில் பங்குகொண்டவன் என்கிற தகுதியில், இந்தப் படத்தைப் பற்றி ஒரு FAQ.

1. ‘சிவாஜி’ ரஜினி படமா, ஷங்கர் படமா?

ரஜினி நடிக்கும் ஷங்கர் படம்.



2. ரஜினி ரசிகர்களின் எதிர்-பார்ப்புகள் அனைத்தும் நிறை-வேறுமா?

நிறைவேறும், அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குப் பங்கம் வராமல்! அதே சமயம்...

3. அதே சமயம்..?

ஒரு ஷங்கர் படத்தின் கதைத் திருப்பங்களுக்கும் சுவாரஸ்யமான முரண்பாடுகளுக்கும் பிரமாண்டத்-துக்கும் குறைவிருக்காது.

4. ரஜினி என்றால், பன்ச் டயலாக் இருக்குமா?

இருக்கிறது. விவேக் மூலம் சொல்ல வைத்துவிட்டோம். பன்ச்சுக்கு பன்ச்; டிக்னிட்டிக்கு டிக்னிட்டி!

5. ஏன் இத்தனை தாமதம்?

நல்ல கேள்வி! படத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களும் இந்தியாவின் சிறந்த கலைஞர்கள். ரஜினி, ஷங்கர், ஏவி.எம். படம் என்பதால் தனிப்பட்ட சிரத்தையுடன் பார்த்துப் பார்த்துச் செய்ததால் தாமதம். லேட்டாக வந்தாலும் நீட்டாக வந்திருக்கிறது.

6. படத்தின் Tagline என்ன?

‘சிவாஜி’ அமெரிக்காவிலிருந்து வந்து, முதல் பாதியில் விழுகிறார்; இரண்டாம் பாதியில் எழுகிறார்!

7. கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்..?

சொல்கிறேனே... அடுத்த வாரம்!

2 comments:

Anonymous said...

இப்பத்தாய்யா மகேந்திரன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.சிவாஜின்னு பேர் வைக்க
யார் யார்கிட்ட அனுமதி வாங்கனுமுன்னு.போயிப்பாருங்கப்பு

Anonymous said...

‘சிவாஜி’ அமெரிக்காவிலிருந்து வந்து, முதல் பாதியில் விழுகிறார்; இரண்டாம் பாதியில் எழுகிறார்!

---

இதான் ரஜினி படம். இதிலென்ன புதுமை :)