பழி வாங்கும் படலம் முதல் அத்யாயம்

ஆஸ்திரேலியா சொல்லிச் சொல்லி அடிக்கிறார்கள் நியூஸிலாந்தை. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளை நியூஸிலாந்திடம் தோற்ற பொழுது ஏகக்கடுப்பு தான் வந்தது எனக்கு. இன்னும் நன்றாக நினைவில் உள்ளது, ஒரு முறை நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியா வந்து அவர்கள் சொந்த மண்ணில் ODIல் புரட்டியெடுத்துவிட்டு போனதும் தான். மார்க் வாஹ் அணியில் இருந்து தூக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஸ்டீவின் காப்டன்ஸி பறிக்கப்பட்டு பான்டிங்கிடம் கொடுக்கப்பட்டது. பான்டிங்கிடம் கொடுக்கப்பட்ட காப்டென்ஸியைப் பற்றி பேசவில்லை.

ஆனால் ஸ்டீவ் நிச்சயமாக கடந்த(2003) வேர்ல்ட் கப்பிற்கு இருந்திருக்க வேண்டும். He deserves to be in the team. ஆனால் அப்படி நடக்கவில்லை, மார்க் வாஹ் வை அணியில் இருந்து தூக்கிய பொழுது அவர்தான் ஆஸ்திரேலியாவிற்காக அதிக ODI ரன்கள் அடித்திருந்தது. அதனால் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது அந்தத் தொடர். அதைப் போலவே சமீபத்தில் நடந்த தொடரும்.

அதற்கு பழி வாங்கவாவது பிரம்மாதமாக ஜெயிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். ம்ம்ம் அதுதான் நடந்திருக்கிறது. இருநூறு ரன் வித்தியாசத்தில் வெற்றி, என்பது சிறப்பான விஷயம். இன்னும் பக்கத்தில் கூட நெருங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்டேன். இன்று மிகவும் சந்தோஷமாகயிருக்கிறேன்.

இன்னும் இரண்டாம் அத்யாயம் பாக்கியிருக்கிறது, பைனல்ஸில்.

0 comments: