தமிழக அரசியல், விழாக்கள் நிறைந்த அரசியல்!
அரசியலில் விழாமல் இருப்பதற்கு விழாக்களைப் பயன்-படுத்து-வது அரசியல் யுக்திகளில் ஒன்று.
தமிழக அரசிய-லையே அடியோடு புரட்டிப்போட்ட தலைவரான அண்ணாவின் நூற்றாண்டு விழா இன்னும் இரண்டு ஆண்டுகளில் வருகிறது. ஆனால், அண்ணா உருவாக்கிய கட்சி, அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சி இரண்டுக்குமே இன்று அண்ணாவின் பெயரைக் கொண்டா டுவதற்கான தகுதி இல்லை. ஏனெனில், ஜனநாயகத்தில் பெரும் நம்பிக்கை வைத்திருந்-தவர் அண்ணா.
பெரியார், தன் தலைமையைக் கேள்வி கேட்காமல் ஏற்பவர்களை மட்டுமே கொண்டு இயக்கம் நடத்த விரும்பு-வதாக அறிவித்தவர். அவரிடமிருந்து பிரிந்து வந்த அண்ணா, உட்கட்சி ஜனநாயக அமைப்புடைய கட்சியை உருவாக்கியவர். அவர் பெயரைப் பயன்படுத்தும் இரு கட்சிகளுமே ஒரு நபர் இயக்கத்தில் இயங்குபவை-யாக மாறிவிட்டன.
கருணாநிதிக்கு எதிராக அ.தி.மு.க&வை எம்.ஜி.ஆர். தொடங் கிய ஆரம்பத்திலிருந்தே, அது ஒரு நபர் ஆதிக்க அமைப் பாகத்தான் இருந்து வந்தது. அதே ‘கலாசாரம்’ இன்றும் தொடர்கிறது.
வகுப்புவாரி இட ஒதுக்கீடு என்ற ஒன்றைத் தவிர, ஆண் & பெண் சமத்துவம், நாத்திகம், ஆடம்பரமற்ற எளிமையான வாழ்க்கை முறை போன்ற பெரியார் கொள்கைகள் எதுவும் அரசியலிலும் சரி, சமூகத்-திலும் சரி... இன்னமும் வேரூன் றவே இல்லை. அரசியல் ரீதியாகப் பார்த்தால், பெரியார் தோற்றார்; ஜெயித்தவர் அண்ணாதான்! 1917&ல் காங்கி ரஸில் இணைந்தது முதல், 1949&ல் திராவிடர் கழகத்தை நடத்தியது வரை வெகு ஜன இயக்கத் தலைவராக இருந் தவர் பெரியார். 1949&லிருந்து அந்த இடத்தைத் தனதாக்கிக் கொண்டவர் அண்ணா.
அண்ணாவை ஜெயிக்க வைத்த ஆயுதமான அன்-றைய தி.மு.க&வின் அடிப்படை பலங்கள் என்ன? முதல் பலம் & பொதுமக்களிடம் தங்கள் கருத்தை எடுத்துச் சொல்லத் தேவையான பேச்சாற்றலும் எழுத்தாற்-றலும் மிகுந்த ஏராளமான மூத்த, இளம் தலைவர்கள் இருந்தார்கள். இரண்டா-வது பலம், தன் இடத்-துக்கு அவர்களால் ஆபத்து வந்துவிடுமோ என்று அண்ணா பயப்படவும் இல்லை; அவர்களைச் சாமர்த்தியமாக ஓரங்-கட்டவும் இல்லை.
தி.மு.க. எழுத்தாளர்-களும் ஏடுகளும் தமிழின் தொன்மை, வளமை பற்றிப் பேசுவதோடு மட்டும் நிறுத்திக்கொள்ள-வில்லை. உலக அறிஞர்-களின் சிந்தனை-களை-யெல்லாம் தமிழில் வெளிப்-படுத்தி-னார்கள். தெருக்கள்-தோறும் தி.மு.க&வினர் நடத்திய படிப்பகங்கள், படிக்கும் ருசியை ஏற்படுத் தின. கம்யூனிஸ்ட்டு-களுக்கு நிகராக நாங்களும் படிக்கக் -கூடியவர்கள் என்ற பெரு மைக்கு தி.மு.க. தொண் டர்கள் அன்று ஆசைப் பட்டார்கள். தமிழ்ச் சமூகத்தின் மேடு பள்ளங்-களை நிரவிச் சமன் செய்துவிட வேண்டுமென்ற லட்சியத் துடிப்பில் இருந்த அவர்கள், அதற்-கான ஆற்றலும் தெளிவும், தலைவர் அண்ணா கை காட்டும் ஏடு-களையும் நூல்களையும் படித்தால் தங்களுக்கும் வந்துவிடும் என்று நம்பினார்கள்.
முதலமைச்சராகி இரு வருடங்-கள் முடிவதற்கு முன்பே, திடீரென அண்ணா மறைந்தபோது, தி.மு.க&வில் எல்லாமே தலைகீழாக மாறின. 60&ஐ எட்டிப் பிடிக்கும்போதே புற்று-நோய்க்கு இரையான அண்ணா, இன்னும் 20 வருடங்கள் இருந்திருப்பாரானால், தமிழக அரசியலின்- தன்மையே வேறு விதமாக இருந்திருக்கும்.
அண்ணாவின் உண்மையான அரசியல் வாரிசுகள் என்று படிப்பறி-வாலும் அரசியல் அனுபவத்தாலும் குறிக்கத்தக்கவர்களாக அன்றைக்கு இருந்த இரண்டு பேர் & நாவலர் நெடுஞ் செழியன், பேராசிரியர் அன்பழகன். இருவருமே திரையுலகம் சாராதவர்கள்; அறி-வுலகம் சார்ந்தவர்கள். அண்ணா வுக்கு இரு உலக ஈடுபாடும் ஈர்ப்பும் இருந்தது. ஆனால், அவர் மனச் சாய்வு அதிக-மாக அறிவுலகம் பக்கமே இருந்தது. சினிமாவைவிட நாடகத்தில் அண்ணா சாதித்ததே அதிகம். அதுவும் அவருக்குக் கொள்கைப் பரப்புக் கருவிதான். வாழ்க்-கைப் பிழைப்புக்-கான சாதனமல்ல!
தி.மு.க&வுக்குள் அண்ணா மறைவுக்-குப் பின், திரை-யுலகம் சார்ந்த சக்திகளின் கை ஓங்கியது. நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சராக முடியாமல் தடுத்தது திரையுலக சகாக்களான கருணாநிதி & எம்.ஜி.ஆர். கூட்டுதான். இந்தச் சக்திகளின் செல்வாக்கு கட்சி நெடுகப் பரவிய நிலையில், நாவலர், பேராசிரியர் போன்றோர் மனச் சலிப்புடன் ஒதுங்கி யிருந்து, வாழ்க்கை முழுக்க அதிகார மற்ற இரண்டாம் இடத்தில் இருந்து ஓய்வு பெறும் மனநிலைக்குத் தள்ளப் பட்டனர். பணமும் மரியாதையும் மட்டுமே ஆறுதல்-களாயின!
அண்ணாவுக்குப் பின் அறிவுத் தேடல் மிகுந்த கட்சியாக இருந்த தி.மு.க&வும் அதைத் தொடர்ந்து வந்த அ.தி.மு.க&வும் அதிகாரம், கான்ட்ராக்ட், தரகு லாபங்கள் தேடும் கட்சியாக மாறின. சாக்ரடீஸ், இங்கர்சால், டிக்கன்ஸ், ஷேக்ஸ்பியர் என்றெல்லாம் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தேடிப் பிடித்துப் படித்த சூழல் நியாய-மாக இப்போது சார்த்தர், லெவி ஸ்ட்ராஸ், ரேமண்ட் வில்லியம்ஸ், சாம்ஸ்கி, மார்க்கோஸ் என்றெல்லாம் காலத்துக்கேற்ப வளரத் தொடங்கி-யிருக்க வேண்டும். அது நிகழவில்லை. தமிழ் என்பது அறிவு வளர்க்கும் கருவி என்ற நிலையிலிருந்து நீக்கப்-பட்டு, உணர்ச்சியைத் தூண்டும் போதை மருந்தாக ஆக்கப்பட்டது. முத்தமிழ் அறிஞரின் குடும்பத்தில் ஒருவர்கூட கல்லூரியில் தமிழ் இலக்-கியம் படிக்க அனுப்பப்படவில்லை என்பது வரலாறு.
தன்னை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆரின் செல்வாக்கைக் குறைக்க, அவருக்குத் திரையுலகப் போட்டி-யாக தன் மகன் முத்துவைக் கொண்டு- வந்தார் கருணாநிதி. அதன் விளை-வாக தி.மு.க. பிளவுபட்டு, பலவீனப்-படுத்தப்-பட்டது. அடுத்த 15 ஆண்டு-களுக்கு, எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடைய செல்வாக்கைக் கருணாநிதியால் குறைக்கவே முடியவில்லை.
அண்ணா காலத்திய திமு.க&வில் அறிவிலும் ஆற்றலிலும் அண்ணா-வுக்குச் சில அங்குலங்கள் மட்டுமே அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்று சொல்லத்தக்க தலைவர்கள் குறைந்தது பத்து பேராவது உண்டு. ஆனால், கருணாநிதியின் தி.மு.க&வில், அவருக்கு அடுத்த நிலையில் ஒருவர்-கூட இல்லை. அடுத்தவர் ஸ்டாலின் தான் என்று சொல்லியாக வேண்டிய நிலை. எனவே, வைகோ போன்றவர்கள் வெளியேற வேண்டியதாயிற்று.
தி.மு.க. முற்றிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தும் கட்சி என்ற நிலையில்தான் கடந்த 25 ஆண்டு-களுக்கும் மேலாக இருந்து வருகிறது. கட்சி ஏடு என்று சொல்லப்பட்ட ÔமுரசொலிÕகூட குடும்பச் சொத்தாகத்-தான் பல வருடங்கள் இருந்தது. பத்திரிகையைக் கட்சியின் அறக்-கட்டளைக்கு சில வருடங்கள் முன்பு கொடுத்தபோதும்கூட பத்திரிகை அலுவலகக் கட்டடம் குடும்பச் சொத்-தாகவே இருந்து வருகிறது.
அண்ணா காலத்தில் சுமார் 50 பத்திரிகைகள் கழகத்தவரால் நடத்தப்-பட்டன. பிறகு, அத்தகைய படிப்புச் சூழலே கட்சியில் இல்லை. கட்சி சார்-பான டெலிவிஷன் என்று கருதப்பட்ட சன் டி.வி. குடும்பச் சொத்துதான். (இப்போதுகூட கட்சிக்-காக ஆரம்பிக்-கப்படுவதாகச் சொல்லப்-படும் கலைஞர் டி.வி., கட்சியுடையது அல்ல; தனியாரு-டையது!)
தி.மு.க. இப்படித் தன் 33&ம் வயதிலிருந்து குடும்ப ஆதிக்கம் என்ற நரம்புத்-தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு கோமாவை நோக்கிச் செல்வது வெளிப் படையாகத் தெரிய வந்தபோது கட்சிக்கு வயது 52.
அப்போது, கட்சியிலேயே இருந்தி-ராத பேரன் தயாநிதி மாறனை எம்.பி&யாக்கி மத்திய அமைச்சராகவும் கருணாநிதி ஆக்கியபோதும் சரி, இப்போது மகள் கனிமொழியை திடீரென எம்.பி. ஆக்கும்-போதும் சரி, எந்தச் சலசலப்-பும் இல்லை. தயாநிதி, கனிமொழி இருவருக்கும் நிகரான ஆற்றலும் அறிவும் உள்ளவர்கள் அந்த வயதினரில் கட்சிக்குள் வேறு எவரும் கிடையாதா என்ற கேள்வியை ஏன் கட்சிக்குள் யாரும் எழுப்பவில்லை?
அப்படி யாரும் இல்லை என்பதே பதி-லாக இருக்குமானால், அத்தகைய இளைஞர் களைக் கட்சி இத்தனை வருடங்களில் உருவாக்கத் தவறியது ஏன் என்பதே அடுத்த கேள்வி.
கட்சியின் அமைப்பு கடந்த 25 ஆண்டுகளில் உள்ளுக்-குள்ளேயே மாறி வந்திருக்கிறது என்பதுதான் காரணம். கட்சியின் சட்ட திட்டங்கள் விதிகள் எல்லாம் எப்படி இருந்தாலும், நடைமுறையில் 1969&ல் கருணாநிதி முதலமைச்சரானது முதல்... பல அமைச்சர்கள், மாவட்டச் செய-லாளர்-கள், இதர கீழ் மட்டக் கட்சி நிர்வாகிகள் வரை பலரும் தத்தம் சக்திக்கு உட்பட்ட வகையில் தங்கள் வாரிசுகளைக் கட்சிக்குள்ளும் ஆட்சிக்-குள்ளும் கொண்டுவந்திருக்-கிறார் கள்.
எனவே, இப்போது இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல; திரு.மு.க. பப்ளிக் லிமிடெட் கம்பெனி. இதன் ஷேர்ஹோல்-டர்-களாக உள்ள பல குடும்பங்களின் இளைய தலைமுறையினர் ஆங்காங்கே பிராஞ்ச் மேனேஜர்களாகவும் கம்பெனி-யின் ப்ராஜெக்ட் எக்ஸிக்யூட்டிவ்-களாகவும் இருக்கிறார்கள் என்பதால், யாரும் கம்பெனியின் சேர்மன் தன் விருப்பப் படி டைரக்டர்கள் போர்டை மாற்றி அமைப்பதை ஜெனரல் பாடி மீட்டிங் கில் கேள்வி கேட்பதில்லை. அதிலும் நேற்று வரை எம்.டி&யாக இருந்து வெளியேறியிருக்-கும் மாறன் பிரதர்ஸின் தொழில் போட்டியைச் சமாளிக்க வேண்டிய நெருக்-கடியான சூழலில் கம்பெனி இருப்பதால், தலைவர் எனப்-படும் சேர்மன் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.
இன்று தி.மு.க&வுக்குள் நிலவும் உட்கட்சி ஜன-நாயகச் சூழல் எந்த அளவுக்குச் சீரழிந்துவிட்டதென்றால். குடும்ப ஆதிக்கம் பற்றி விமர்சனம் எழாதது மட்டுமல்ல; தி.மு.க&வின் பாரம்-பரியமான சித்தாந்தத்திலிருந்து சறுக்குவது பற்றிகூட விவாதங்கள் இல்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு கருணாநிதியின் அரசு அமைத்த தமிழக கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியத்துக்கு உறுப்பினர்களாக முதலமைச்சர் நியமித்த முக்கியமான இருவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களான வேதாந்தம், ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆகியோர்.
கிராமக் கோயில்களின் மரபான தமிழ் வழிபாட்டு முறைகளை நீக்கி-விட்டு, அவற்றையும் சம்ஸ்கிருதமய-மாக்கி வைதிக மரபுக்குக் கொண்டு செல்லும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வரு-கிறது என்ற குற்றச்-சாட்டை பெரியார் அமைப்புகளும் இடதுசாரிகளும் சொல்லி வருகின்றன. இதற்கு முன்பு பி.ஜே.பி&யுடன் கூட்டணி இருந்த காலத்திலும், இவர்களை அரசு வாரியத்தில் நியமித்தார் கருணாநிதி. இப்போது பி.ஜே.பி&க்கு எதிரான காங்கிரஸ§டன் கூட்டணி இருக்கும்-போதும் நியமிக்கிறார். இது ஏன் என்று கேட்க தி.மு.க&வுக்குள் யாரும் இல்லை.
சுய மரியாதை இயக்கம் நீதிக் கட்சியில் இணைந்ததும், நீதிக் கட்சி, திராவிடர் கழகமாகப் பெயர் மாறியதும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதும் காலத்தின் கட்டாயங்-கள். அவற்றால் தமிழ் சமூகம் அடைந்த லாபங்கள் கணிசமானவை. இந்த சங்கிலித் தொடரில், ‘தி.மு.க. பப்ளிக் லிமிடெட்’டின் உதயம் என்பது பரிணாம வளர்ச்சி அல்ல!
இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகம் அண்ணாவின் நூற்றாண்டைக் கொண்டாட இருக்கும் சூழலில், இன்னொரு திராவிட இயக்க வருகைக்-காகத் தமிழகம் காத்திருக்கிறது. குடும்பத்தைக் கட்சியாகக் கருதாமல், கட்சியைக் குடும்பமாகக் கருதிய அண்ணாவைப் போன்ற தலைவர்கள் புதிய தலைமுறையிலிருந்து வந்தால்-தான் அத்தகைய இயக்கத்தை சாத்தி-யப்படுத்த முடியும்!
நன்றி - ஆனந்த விகடன்
வேண்டும் இன்னொரு அண்ணா! - ஞாநி
Friday, June 08, 2007
|
Labels:
செய்திகள்
|
This entry was posted on Friday, June 08, 2007
and is filed under
செய்திகள்
.
You can follow any responses to this entry through
the RSS 2.0 feed.
You can leave a response,
or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நாயமான எண்ணம்!! ஆனால் நடக்க எள்ளளவும் சாத்தியமற்றது.
I feel Gnani has written / echoed the true internal feelings of Anbalagan. Anbalagan has been feeling this for quite sometime and also expressed some such views in public. Even in recent internal meeting, he mentioned - not to consider the successor name when MK is there now (he was not great enthusiast about MKS becoming CM). that is why all this talk about moving him out of the picture in TN to NewDelhi as VicePresident.
வழக்கம் போல அருமையாக எழுதியிருக்கிறார். என்னைப் போன்ற, பாரம்பரியமாக திமுக குடும்பத்தினரின் மனதில் உள்ளதை அப்படியே எழுதி விட்டார்.
இதை விட சோகம் கீழ்மட்டத்தில் சரிவு. கழகம் நாளுக்கு நாள் உண்மையான ஆதரவாளர்களை சாதிக் கட்சிகளுக்கு இழந்து வருகிறது.
புதிதாக, கட்சியில் உள்ளவர்களின் குடும்பத்தைத் தவிர, யாரும் செருவதும் இல்லை. ரவுடிகளையும், அடியாட்களையும், தவிர.
கட்சி நாளுக்கு நாள், சிறுத்தும், சிறுமைப்பட்டும், தனியார் நிறுவனமாக மாறுவதயும் பார்க்கும் போது, மனதுக்கு வருத்தமாகத் தான் இருக்கிறது.
கஞ்சனின் ஆடம்பரத்தை சொத்து சேர்க்கும் வெறியில் காணலாம். ஈவேராவின் ஆடம்பரம் இத்தகையது.
சாதாரண மனிதர்கள் குல நம்பிக்கைகளும், சுற்றமும், நட்பும் மகிழ விழாக்காளில் செலவு செய்வார்கள்.
அதிகாரபலமுள்ளோர் அவர்களின் பலத்தைக் காட்டுவதற்காக பணத்தை செலவழித்து விழா நடத்துவர். எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதா வகையறாக்களிடம் இதனைக் காணலாம்.
எதேச்சதிகார அமைப்புக்களின் ஆடம்பரம் பணத்தைச் செலவழிக்காமலேயே பலத்தைக் காட்டும். கம்யூனிஸ்ட்டுகள், காந்தியவாதிகள், இந்துத்துவா அமைப்புக்கள், இஸ்லாமியர்கள், கிருத்துவர்களிடம் இதைக்காணலாம்.
Post a Comment