உங்க கம்பெனியில் இப்படி நடக்குமா???

இது ஒரு வீடியோ பதிவு, இதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தேன் நான். நல்ல வேலை எங்க கம்பெனியில் இப்படியெல்லாம் நடக்கலைன்னு பெருமை பட்டுக்க வேண்டியதுதான்.

12 comments:

selventhiran said...

அடேங்கப்பா போடுற மாலை மரியாதையெல்லாம் பார்த்தா இன்னும் கொஞ்ச நேரத்துல ஆத்தா வரம் கொடுத்துட்டான்னு போட்டுறாவாய்ங்க போல இருக்கே

Unknown said...

குத்து விளக்கு,பூசணிக்காய் உடைப்பு,பார்ப்பனர்களின் பூசை,மாலை ஆரத்தி என்று ஒரே பார்ப்பனீயமயமாக (இந்து சனாதன தர்ம மதம் ??) இருக்கிறதே ...சேர்பவர்கள் என்ன சாதி/மதம் என்று கேட்கப்படுமா?

இந்திய IT HR அபத்தங்களின் உச்சகட்டம். :-(((

டிஸ்கி:
சிலர் இதை புதுமை என்று சொல்லலாம். புதியதாக செய்யப்படுவை எல்லாம் புதுமை என்று என்னால் அழைக்கமுடியாது.அப்படிப் பார்த்தால் ஜேப்படித் திருடனும் தினமும் ஒரு புதிய வழியில் கொள்ளை அடிக்க முயற்சிக்கிறான். அவனது புதிய முயற்சிகளை "புதுமை" என்று என்னால் சிலாகிக்க முடியாது.

பூனைக்குட்டி said...

கல்வெட்டு, நானும் இதைப் பார்த்ததும் அதைப் பற்றித் தான் யோசித்தேன்.

சரியான பக்வாஸ் ஐடியா, எந்த HR கொடுத்தான்னு தெரியலை.

Unknown said...

என்னாங்கடா இது.பலி கொடுக்கற ஆட்டுக்கு மாலை போடற மாதிரி.உள்ள கூட்டிட்டுப்போயி கழுத்தறுப்பாய்ங்களோ?

Unknown said...

இது எல்லாம் வெறும் கண் துடைப்பு!! புதிய வரவுகளை இப்படி எல்லாம் வரவேற்றால் அவர்கள் வேறு கம்பெனிக்கு வேலைக்கு போகமாட்டார்கள் என்று நினைகிறார்கள் போலும். இப்படி எல்லாம் செய்வதை விட நல்ல சம்பலம் கொடு நன்கு கவனி நல்ல ஆட்கள் தானாக வந்து சேர்வார்கள். வேலை ஆட்களும் (Employees) வாடிக்கையாளர்களும் (Customers) ஒரு கம்பெனியின் இரு கண்களைப் போல ‍ இதை பெரும்பாலான கம்பெனிகள் புரிந்து கொள்வது இல்லை. வேலை ஆட்களை குறைந்த சம்பலத்தில் அதிக வேலை பார்க்கச் சொல்வது (Under - Employment) இக்காலத்தில் பெருகிவிட்டது. சில ஆட்கள் குடும்ப சுமை காரணமாக சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டுள்ளதால் கூறுகிறேன்.

Anonymous said...

NO, I differ from senthilagu's statement. Even if any company take more care about employee, One will definetely move to another company if the other one give more salary.

These kind of events cost less than a "Drink" party. I think.

You must have seen how foreign countries are decorating and celebrating during christmas etc.
Its damn hell...

-Augustin.

ilavanji said...

:))))

எனக்கு இங்க காலைல ஜாயின் செய்து சாயந்தரமா பேப்பர் போடனும்னு ஆசையா இருக்கு!

Boston Bala said...

---பலி கொடுக்கற ஆட்டுக்கு மாலை போடற மாதிரி.உள்ள கூட்டிட்டுப்போயி கழுத்தறுப்பாய்ங்களோ?---

இதான் தோணிச்சு!

என்னவா இருந்தாலும் பெண்கள் நேரத்துக்கு முதலிலேயே வந்துசேர்ந்து விடுகிறார்கள் :))

Anonymous said...

சரியான லூசு பசங்க. செம காமெடி.

யாதும் ஊரே said...

இதை ஏற்பாடு செய்த "HR Manager" இறந்து ( ஒரு பேச்சுக்குத்தான்) மேலுலகம் சென்றாராம்.
"தங்கள் வரவு நல்வரவாகுக" என்று வரவேற்ற சித்திரகுப்தன், " பாருங்கள் இதுவரை இங்கே மனித வள மேளாளர் எவரும் வந்ததில்லை. அதனால் உங்களை எங்கே அனுப்புவது என்று தெரியவில்லை" என்றார்.
மனித வள மேளாளரோ " என்னை சொர்க்கத்ற்குள் விடுங்கள். நான் அங்கேயே காலத்தை கழிக்க விரும்புகிறேன்" என்றார்.
" இல்லை !! எருமை பார்ட்டியிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருக்கவேண்டும். அதன் பின், மீதி நாட்களை எங்கே கழிக்கவேண்டுமென்று உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் " என்றார்.
ஆனால் மனித வள மேளாளரோ " எனக்கு நரகம் போக விருப்பமில்லை, நான் சொர்க்கத்திலேயே இருக்கிறேன்" என்றார்.
" மன்னிக்கவும்!! சட்டம் என்றால் சட்டம்தான். உங்க ஊர் ஹெல்மட் சட்டம் அல்ல. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருக்கவே இருக்கவேண்டும் " என்று கூறி மனித வள மேளாளரை மின் தூக்கி உள்ளே அனுப்பினார்.
மின் தூக்கி கீழே கீழே கிழே நரகத்திற்குச் சென்றது.
மின் தூக்கி கதவு திறக்கப்பட்டது. அங்கே அவர் கண்டது கண்கொள்ளா காட்சி. எங்கு பார்த்தாலும் பசுமை, அழகான பூங்கா, தூரத்தில் அவர் அடிக்கடி செல்லும் மனமகிழ் மன்றம். வெளியே அவருடன் வேலை பார்க்கும் நண்பர்கள் கையில் மாலையுடன் வரவேற்கிறார்கள். படத்தில் உள்ளது போல் எல்லோரும் கை கொடுத்து கை தட்டி உற்சாகபடுத்துகிறார்கள். யானையும் வந்து அவருக்கு மாலை போட்டது. அதன் பிறகு ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். நண்பர்களுடன் பழைய கதைகள் பேசி பேசி பொழுது போனதே தெரியவில்லை.
மனித வள மேளாளருக்கு பிடித்த "வயதான பிச்சு (old monk)" ரம் & வறுத்த கோழியுடன் இரவில் மிக அருமையான விருந்து. விருந்தில் சாத்தானை சந்தித்தார். சாத்தான் மிக அழகாக இருந்தார் அடிக்கடி "A' ரக ஜோக் சொல்லி குஷிபடுத்தினார். சாத்தானுடன் நடனமாடினார்.
" ஆகா! இவ்வளவு இன்பமானதா நரகம் " என்று நினைக்கும்போதே அவர் விடைபெறும் வேளை வந்தது. அவர் நண்பர்களும் சாத்தானும் கை குலுக்கி மின் தூக்கி வரை வந்து வழி அனுப்பினார்கள்.
மின் தூக்கி மேலே மேலே சென்றது. சித்திரகுப்தன் கதவை திறந்து " அடுத்த ஒரு நாள் சொர்க்கத்தில்" என்று கூறி அவரை சொர்க்கத்திற்கு அனுப்பினார்.
ஒரு நாள் முழுவதும் தேவதைகளுடன் மேக கூட்டதிற்குள் உய்யலாலா பாடி திரிந்தார். ரம்பை, ஊர்வசி, மேனகா நடனங்களை கண்டு ரசித்தார். ஒரு நாள் முடிந்தது. சித்ரகுப்தன் மீண்டும் வந்தார்.
"சரி. நீங்கள் ஒரு நாள் சொர்க்கத்திலும், ஒரு நாள் நரகத்திலும் இருந்தீர்கள். இப்பொழுது மீதி நாட்களை எங்கே கழிக்கவேண்டுமென்று உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் " என்றார்.
மனித வள மேளாளர் சிறிது நேரம் யோசித்து " நல்லது. நான் இதை சொல்வேன் என்று நானே எதிர் பார்க்கவில்லை. சொர்க்கம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் அதைவிட நரகத்தில்தான் நன்றாக பொழுது போனது"
உடனே சித்ரகுப்தன் அவரை மின் தூக்கிக்கு அழைத்துச் சென்று நரகத்திற்கு வழிஅனுப்பிவைத்தார்.
மின் தூக்கி கீழே கீழே கிழே நரகத்திற்குச் சென்றது.
மின் தூக்கி கதவு திறக்கப்பட்டது. நரகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் மேளாளர் . கண்ணுக்கு எட்டியவரை எங்கு பார்த்தாலும் பாலை நிலம். ஒரு மரம் கூட தென்படவில்லை. எங்கு பார்த்தாலும் மனித மலம். ஒரே துற்நாற்றம்.
மேளாளரின் நண்பர்கள் கிழிந்த உடையுடன் குப்பை அள்ளிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இரண்டு தடியர்கள் எண்ணெய் சட்டிக்கு தீ மூட்டிக் கொண்டிருந்தார்கள்.
மேளாளர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அப்பொழுது சாத்தான் அவர் அருகில் வந்து தோளில் கை போட்டு புன்னகை செய்தார்.
மேளாளர் நடுக்கமுடன் " எனக்கு ஒன்றும் புரியவில்லை, நேற்று நான் இங்கு இருந்தேன். நண்பர்களுடன் ஆடினேன் பாடினேன், ஆனால் இப்போ .... " வார்த்தை வராமல் தடுமாறினார்.

சாத்தான் மேளாளரைப் பார்த்து புன்னகைத்து

"Yesterday we were recruiting you, today you're an Employee"

மணியன் said...

ஸ்ரீனிவாசனின் பின்னூட்டக் கதை அட்டகாசம்.

சதங்கா (Sathanga) said...

ஸ்ரீனிவாசன்,

இந்தக் கதை சில ஆண்டுகள் முன்பு (அப்போ ப்லாக் எல்லாம் இவ்வளவு பிரசித்தம் இல்லை) microsoft மென்பொருள்களைக் கிண்டல் செய்து உலகம் முழுதும் பரவியது.

அந்தக் கதை இப்படி முடியும் ...

"That was a demo."

எனினும், சரியான இடத்தில் அந்தக் கதையைக் கூறி அசத்தி விட்டீர்கள்.

மோகன்தாஸ்,

வித்தியாசமான பதிவு. பின்னூட்டமிடுபவர்களும் அசத்துகிறார்கள்.