கிழக்காப்பிரிக்காவிலிருந்து ஆசிப்மீரான்

அமீரகத்திலிருந்து வந்த முக்கியச் செய்தி, அழகிய தமிழ்மகன் படம் பார்க்கப் போயிருந்த ஆசிப்மீரான் காண்டாகி அமீரகத்திலிருந்து நேராய் கிழக்காப்பிரிக்காவிற்கு சென்றுவிட்டதாகவும் அங்கிருந்து அவர் டிஜிட்டல் இமேஜிங் தொழில்நுட்ப உதவியுடன் "கிழக்காப்பிரிக்காவிலிருந்து ராஜு" என்ற எம்.ஜி.ஆர் சொல்லி எடுக்காமல் விட்ட படத்தை அவரை வைத்து எடுத்துவிட்டுத்தான் வருவார் என்று சொல்கிறது.

இந்தச் செய்தி கேட்டதும் அவரை வரவேற்க கிழக்காப்பிரிக்காவின் அரசாங்கம் விக்டோரியாவின் சீக்ரெட் அழகிகளை நேரே விமானநிலையத்திற்கு அனுப்பியதாகவும் உளவுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப்பற்றிய வெள்ளை அறிக்கையை ஆசிப் விரைவில் வெளிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் விஜய் நடித்த அத்தனை படத்தின் டிவிடிகளும் அவருக்கு அனுப்பட்டு அவர் படம் பார்க்க வற்புறுத்தப்படுவார் என்று அறிவுறுத்தப்படுகிறார்.9 comments:

Anonymous said...

நல்ல காலம். girls gone wild வீடியோ ப்ளேனை போடாம வுட்டீங்க ராசா. தழல் வெட்டில்லாம் கண்ணாலம் கட்டிக்கிறாங்க. நீங்களும் பண்ணிக்குங்களேன் ராசா. சனி இடம் மாறினாலும் மாறலாம் ..... நமக்கு

:)

மோகன்தாஸ் said...

girls gone wildக்கு ஒரு ஹிஹி

நீங்க கல்யாணம் ஆனவர் தானே அனானி, உங்களுக்கெல்லாம் பொறாமை வேறென்ன சொல்ல

கிழக்காபிரிக்காவில் கிழட்டுச்சிங்கம் said...

உர்ர்ர்ர்ர்ர்

மோகன்தாஸ் said...

கிழட்டுச் சிங்கத்துக்குப் பெயருண்டா பெயரில்லையா?

Anonymous said...

பெயரில்லாமலே பெயருண்டோ?

மோகன்தாஸ் said...

//பெயரில்லாமலே பெயருண்டோ?//

அனானிமஸ் பெயரில்லாமல் ஒரு பெயருண்டே உங்களுக்குத் தெரியாததா?

ஆசிப் மீரான் said...

எல்லாம் சரிதாம்ல மக்கா!!
இந்தப் புள்ளைங்க எல்லாம் கிழக்காப்பிரிக்காவில் அண்ணாச்சி படத்துல நடிப்பாகளான்னு கேட்டு சொல்லு
ஆனாலும் தமிழ்மணத்தை மொக்கைக் கூடாரமா ஆக்கிட்டுத்தான் அடங்குவீங்க போல. (இத நீரு சொல்லலாமான்னு மட்டும் கேக்காத. ஏன்னா எனக்கு அதுமட்டும்தான் தெரியும்)


சாத்தான்குளத்தான்

Anonymous said...

தெரியாதே :(

koothanalluran said...

இதற்காக ஆசிப் கிழக்கு ஆப்ரிக்கா போக வேண்டிய அவசியமில்லை அவர் இருக்கும் வீட்டைச் சுற்றி கிழக்காப்ரிக்கா அழகிகள் அதிகம் அனைத்தும் ஷகீலா சைசில்