அழுமூஞ்சி இந்திய கிரிக்கெட் அணியும் ஆப்படிக்கும் ஆஸ்திரேலிய அணியும்

இந்தத் தலைப்பில் ஒரு பதிவெழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் இந்த 20-20 மேட்சுக்கு முன்பேயே. என்ன காலக் கொடுமையோ எழுத முடியாமல் போய்விட்டது. கடைசியில் இப்படி ஒரு நேரத்தில் எழுதும் படி ஆகிவிட்டது.

தொடர்ச்சியாய் விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டேயிருக்க கம்பெனி தோழர்கள் வருத்தமும் வேதனையுமாய் இருக்கும் சமயத்தில் சொன்னேன் - மேட்ச் முடிஞ்சதும் சொல்லிக்கலாம். அம்பயர் சரியில்லை, பிட்ச் ஒழுங்காயில்லை, கூட விளையாடுற அடித்த டீம் ப்ளேயர் என்னைவிட நல்லா விளையாடுறான் என்று. இல்லாவிட்டால் இருக்கவேயிருக்கிறது பெரியண்ணன் BCCI அடுத்த மாட்சில் எங்களை ஆஸ்திரேலிய அணி ஜெயிக்க விடாவிட்டால் நாங்கள் டூரை கேன்சல் செய்து கொண்டு வந்துவிடுவோம் என்ற மிரட்டல்.

நாமல்லாம் என்னிக்கு பிட்சில் விளையாடியிருக்கிறோம் பிட்சிற்கு வெளியில் விளையாடுவதுதானே நமக்கு நன்றாய்த் தெரிந்தது என்று சொல்ல அவர்கள் கோபப்படுகிறார்கள் என்ன சொல்ல?!

28/4 India.

Go Aussie Go!!!

30 comments:

மோகன்தாஸ் said...

என்ன கொடுமைங்க இது சரவணன்.

33/5 India. Rohit Sharma gone...

மோகன்தாஸ் said...

63/8 India as Harpajan goes...

மோகன்தாஸ் said...

74 all out India.

ஹரன்பிரசன்னா said...

இந்த மேட்சில் இந்தியா வென்று, தலைப்பு அப்படியே உங்களுக்குப் பொருந்திவர - அழுமூஞ்சி அண்ணாச்சியும் ஆப்படித்த இந்தியாவும் - இறைவனை உளமாற வேண்டுகிறேன். :))

மோகன்தாஸ் said...

பிரசன்னா,

நேத்து ஜெயஸ்ரீ பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிங்களே அதை காப்பி - பேஸ்ட் செய்ய தயாராயிருங்க.

:)

47/0 - Go Aussie Go!!!

மோகன்தாஸ் said...

ஆகமொத்தம் கடவுள் இல்லைங்கிறது இன்னொரு தடவை எனக்கு நிரூபிக்கப்பட்டாச்சு :)

Jokes apart ஆஸ்திரேலியா ஜெயிச்சாச்சு.

Anonymous said...

அர்ஜூண ரணதுங்கவையும் இதுல சேர்க்கோணும். இல்லாட்டி அவர் கோவிப்பார். அந்த மனுசன் மினக்கெட்டு இந்திய அணியோட சேர்ந்து தானும் தொடரில இருந்து விலத்துவன் எண்டு வெருட்டினது.

சச்சினுக்கு எல்லாம் முதலே விளங்கினபடியா நைசா நழுவிட்டார்.

நந்தா said...

//மேட்ச் முடிஞ்சதும் சொல்லிக்கலாம். அம்பயர் சரியில்லை, பிட்ச் ஒழுங்காயில்லை, கூட விளையாடுற அடித்த டீம் ப்ளேயர் என்னைவிட நல்லா விளையாடுறான் என்று. இல்லாவிட்டால் இருக்கவேயிருக்கிறது பெரியண்ணன் BCCI அடுத்த மாட்சில் எங்களை ஆஸ்திரேலிய அணி ஜெயிக்க விடாவிட்டால் நாங்கள் டூரை கேன்சல் செய்து கொண்டு வந்துவிடுவோம் என்ற மிரட்டல்.//

இப்போ உங்க கை ஓங்கி இருக்கு. அதனால என்ன வேணா பேசலாம். மொக்கைசாமி தோனி இந்த மேட்சை பிராகடீஸ் மேட்சா கன்ஸிடர் பண்ணுவோம்னு சொல்லும் போதே நினைத்தேன். இருந்தாலும் ஆசை யாரை விடுது?

இரு ஓய் எங்களுக்கும் ஒரு காலம் வரும்.

”நாங்களும்தான் வோர்ல்ட் கப்பு ஜெயிச்சிருக்கோம். இப்படி செலிபரேட் பண்ணலை. இதெல்லாம் ரொம்ப ஓவருன்னு.” வேணும்னா அப்பவும் இதே ரேஞ்சுல ஓவர் வயித்தெரிச்சல்ல சைமண்ட்ஸ்க்கு பக்கத்து வீட்டுக்காரர் ரேஞ்சுல ஒரு போஸ்ட்டை போட்டுக்கோங்க. (உங்களுக்கு குத்திக் காட்ட விஷயம் இருக்கும் போது எங்களுக்கு ஒரு விஷயம் இல்லாமயா போகும்). :)

என் மனசாட்சி: ஏலே மக்கா, இன்னுமாடா நீ திருந்தலை??? இன்னுமாடா இவனுங்களை நம்பிட்டிருக்கிற.

வந்தியத்தேவன் said...

இதையும் கொஞ்சம் பாருங்கள்
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post.html

Fast Bowler said...

நண்பரே,

சிட்னியில் நடந்த (ஸ்லெட்ஜிங், lbw முடிவுகளை தவிர்த்துவிட்டே பாருங்கள்) நடுவர்கள் கூத்து உங்களுக்கே சரியானதாக பட்டதா?

முதல் போட்டி தவிர மற்ற போட்டிகளில், ஆஸ்திரேலியாவை விட இந்தியா நன்றாக ஆடியதை நீங்கள் மறுக்கிறீர்களா?

நான் திரைமறைவில் பின்பு நடந்த பெரியண்ணன் சின்ன அண்ணன் விளையாட்டை பற்றி பேச வரவில்லை. என்னுடைய இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் விடைதந்தால் முடிந்த தொடரை பற்றிய தங்களின் கருத்தை எனக்கு அறிய இயலும்.

Anonymous said...

//மேட்ச் முடிஞ்சதும் சொல்லிக்கலாம். அம்பயர் சரியில்லை, பிட்ச் ஒழுங்காயில்லை, கூட விளையாடுற அடித்த டீம் ப்ளேயர் என்னைவிட நல்லா விளையாடுறான் என்று. இல்லாவிட்டால் இருக்கவேயிருக்கிறது பெரியண்ணன் BCCI அடுத்த மாட்சில் எங்களை ஆஸ்திரேலிய அணி ஜெயிக்க விடாவிட்டால் நாங்கள் டூரை கேன்சல் செய்து கொண்டு வந்துவிடுவோம் என்ற மிரட்டல்.//

Excellent...

Anonymous said...

///முத்தரப்பு போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் முட்டையை வீசியுள்ளனர்.///

பொறுக்கித்தனம் செய்யும் பொறுக்கிகளின் அணிக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்காக நான் பிரார்த்திக்கத்தான் முடியும். பாவம் சீக்கிரம் குணமாகட்டும் பவானிக்கு என்று.

சாத்தான்குளத்தான்

TBCD said...

ஆதரவு தெரிவியுங்கள் அதற்காக இப்படி ஜிங்க் ஜாக் தேவை இல்லாதது. நடந்து என்னவென்று ஸ்டெம்ப் கேமிரா, மைக் மொதக்கொண்டு, உலகமே பார்த்தாச்சு.. ஆசி பத்திக்கைகள் மாதிரி நீங்களும் பேசுவது வேடிக்கை வினோதம்..

ஆசியின் வீரர்கள் ஒழுக்க சீலர்கள் போல் அவர்கள் ரிக்கார்ட் வேண்டுமானால் இருக்கலாம். சிட்னியில் அவர்கள் முகத்திரை கிழிந்தது. ஆசி வீரர் மேல் உள்ள குற்றச்சாட்டை நீக்க வைத்தது ஆசியின் குயயுக்தி.

தன்னுடைய அணி வீரர் மேல் உள்ள நம்பிக்கையால் அவர்கள் அதைச் சொல்லவில்லை. ஐசிசியின் நடத்தை மேல் உள்ள நம்பிககை. ஆசிய விளையாட்டு வீரர்களை பழி வாங்கியது வரலாறு.

பிசிசிஐ, பலம் மிக்கது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தன் பலத்தை இதில் பிரோகிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன். ரேசிஸ்ட் சார்ஜ் இல்லை என்று நிருபனமாகியிருக்கிறது. பொறுக்கி சிமென்ட்ஸுக்கு, பக் என்றால் சாதரணம் என்றால், ஹர்பஜ்ஜிக்கு “தேரி மா கி” சாதரணம்.

என் கவலை எல்லாம், சிமெண்ட்ஸ், மேல் ஆதரப்பூர்வமாக பக் சொன்னதற்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதே.

மோகன்தாஸ் said...

fast bowler,

சில விஷயங்கள் out of the fieldல் நடைபெறுபவை. அதாவது கேட்ச் பிடித்ததாகச் சொன்னால் அம்பயரிடம் செல்லாமல் பீல்டர் சொல்வதை வைத்து வெளியேறுவது என்பவை போன்றவை.

கில்கிறிஸ்ட் நிறைய தடவை இதுபோல் அம்பயர் சொல்லாமல் பீல்டரில் கேட்டுவிட்டு சென்ற ஆட்டங்கள் உண்டு ஆஸ்திரேலிய ஆட்டங்களைத் தொடர்ச்சியாய் கவனிப்பவர்கள் அதை உணரமுடியும்.

இந்திய - ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்டைப் போலில்லாமல் போர் போல் மோதும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா Ashes ஆட்டங்களில் கூட இம்மாதிரி நடந்திருக்கிறது.

வேண்டுமென்றால் இதைப் போன்ற ஒரு உடன்பாட்டிற்கு வரவில்லை என்று சொல்லியிருக்கலாம்.

மற்றபடிக்கு நன்றாய் விளையாடும் அணி வென்றது அவ்வளவுதான். ஆஸ்திரேலியாவை விட இந்தியா நன்றாய் விளையாடியது போல் தெரிவது எல்லாம் எனக்குத் தெரியலை.

என்னைப் பொறுத்தவரை இதில் பெரியண்ணன் விளையாட்டு தான் மிகவும் முக்கியமானது. உடன் விளையாடும் அணி தன்னுடைய 'விளம்பர பலத்தால்' அம்பயர்களையே மாற்றும் திறமை வாய்ந்தது என்றால் மற்ற அணியின் 'Moral' எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

மோகன்தாஸ் said...

ஆசிப்,

ஆஸ்திரேலிய ரசிகர்கள் செய்யும் எதற்கும் யாரும் பொறுப்பாகமுடியாது அவர்களைத் தவிர.

நம்மால் இந்திய ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியுமா? கொல்கத்தாவில் நடந்தது உலகமறிந்தது இல்லையா? இன்றைக்கு 'மங்கி' என்று சொல்வது வரை.

நான் முட்டை வீச்சிற்கு சப்பைக்கட்டு கட்டவில்லை. ஆனால் இதற்காகயெல்லாம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை 'கண்மூடித்தனமாக' சப்போர்ட் செய்யக்கூடாது என்றெல்லாம் நான் முடிவிற்கு வரமுடியாது.

ஆஸ்திரேலிய ரசிகர்கள் செய்தது அருவறுக்கத்தக்கது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆனால் ஏன் கண்டிக்க வில்லை என்று கேட்காதீர்கள் உலகத்தில் நடக்கும் எல்லா விஷயத்திற்கும் கண்டனம் தெரிவிக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

மோகன்தாஸ் said...

ஆதரவு - ஜிங்க் சா எல்லாம் ஒன்றும் வித்தியாசம் அல்ல அதுவும் நான் செய்வதை நீங்கள் நிச்சயமாக சுற்றி வளைக்காமல் ஜால்ரா அடிக்கிறேன் என்று சொல்லலாம் தவறேயில்லை :).

சரி விஷயத்திற்கு,

//பிசிசிஐ, பலம் மிக்கது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தன் பலத்தை இதில் பிரோகிக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.//

அம்பயரை போட்டியின்(சீரியஸின்) நடுவில் ஆட்டத்தை விட்டு வெளியேற்றுவது என்பது வேறு எந்த கிரிக்கெட் அணியாலும் சாத்தியமே ஆகாதது.

அது சாதாரணமான விஷயம் கிடையாது!

லொடுக்கு said...

//மற்றபடிக்கு நன்றாய் விளையாடும் அணி வென்றது அவ்வளவுதான். ஆஸ்திரேலியாவை விட இந்தியா நன்றாய் விளையாடியது போல் தெரிவது எல்லாம் எனக்குத் தெரியலை.
//

இதற்கு மேல் நான் சொல்ல இங்கு ஒன்றுமில்லை. :(

மோகன்தாஸ் said...

லொடுக்கு,

அதை ஏங்க அவ்வளவு வருத்தமா சொல்றீங்க, எல்லா விஷயத்தையும் எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்ல முடியாதுப்பா.

எனக்கு இன்னும் புரியலைன்னு வைச்சுக்கோங்களேன் கடவுள் மாதிரி. :)

வவ்வால் said...

மோஹன்,
//அம்பயரை போட்டியின்(சீரியஸின்) நடுவில் ஆட்டத்தை விட்டு வெளியேற்றுவது என்பது வேறு எந்த கிரிக்கெட் அணியாலும் சாத்தியமே ஆகாதது.

அது சாதாரணமான விஷயம் கிடையாது!//

ஓவல் டெஸ்ட் மேட்ச்சில் இங்கிலாந்திற்கு எதிராக வெர்றிப்பெறும் நிலையில் இருந்த பாக்கிஸ்தான் அணியை ஆட்டத்தை விட்டே வெளியேற்றினார் ஒரு அம்பையர், அவர் தற்செயலாக!!?? ஆஸ்திரேலியராக அமைந்து விட்டார் , அண்ணாரின் திரு நாமம் டேரல் ஹேர் :-))

பந்து செயற்கையாக சேதம் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி 5 ரன்கள் எதிர் அணிக்கு அளித்தார், அப்படி அளிக்கும் முன்னர் எதிர் அணியின் தலைவரைக்கூப்பிட்டு அவர்கள் மீதான குற்றத்தை சொல்ல வேண்டாமா, மேலும் புதிய பந்து மாற்ற வைத்தார், அதனை எதிரணியை விட்டு தேர்வு செய்ய வைத்தார்!

இப்படிலாம் எந்த அம்பையரும் செய்தது கிடையாது.எதிரணி தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாததால் கடைசியில் இங்கிலாந்து வென்றதாக அறிவித்து விட்டார்!

இப்படிலாம் ஒரு அம்பையர் செய்வதும் சாதாரணம் கிடையாது.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் மட்டும் அல்ல அம்பையர்களும் மண்டைக்கனம் கொண்டவர்கள், அடுத்தவர்களை துச்சமாக நினைப்பவர்கள் என்று சொல்லத்தான்.

ஆனால் நீங்கள் என்னடாவென்றால் அவர்களுக்கு புனிதர் பட்டம் தரிங்க!

மோகன்தாஸ் said...

வவ்வால்,

டேரக் ஹேரை பலருக்கு பல காரணங்களால் பிடிக்காது, ஆனால் நான் அந்த பாய்ண்டுக்கு வரவில்லை.

இது போன்ற அம்பயர்களாலோ அல்லது தீவிர வெறி பிடித்த ரசிகர்களாலோ நான் ஏன் ஆஸ்திரேலிய அணியை சப்போர்ட் செய்யக்கூடாது என்று கூறுகிறீர்கள். அது கண்மூடித்தனமாக இருக்கும் போதிலும்!

இப்படி நீங்கள் சொல்வது போல் நான் ஏன் கண்மூடித்தனமாக ஆஸ்திரேலியாவை சப்போர்ட் செய்கிறேன் என்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லமுடியும். தமிழனுக்கு காரணம் சொல்வதா பெரிய விஷயம் :).

Consistency என்ற ஒரு விஷயம் போதும் நான் அவர்களை சப்போர்ட் செய்வதற்கு, அதற்கான உழைப்பு அவர்களிடம் இருக்கிறது. நிச்சயமாய்.

வெறும் பேச்சு கிடையாது மூன்று முறை தொடர்ச்சியாய் உலகக்கோப்பை வெல்வதென்பது. அதுவும் கடைசி இரண்டு ஒரு போட்டியும் தோற்காமல்.

இந்தியாவில் எத்தனையோ நபர்கள், ஆர்ஸனல் சப்போர்ட்டர்களாகவும், லிவர்பூல் சப்போர்ட்டர்களாகவும் லீவு எடுத்துக் கொண்டு இந்தப் போட்டிகளைப் பார்ப்பவர்களையும் தெரியும். ஆனால் இவர்களுக்கு ஒரு அட்வான்ட்டேஜ் இந்தியாவில் எந்த கால்பந்து க்ளப்பும் இல்லை இருந்தாலும் அந்த லெவலுக்கு இல்லை என்பது.

என்னுடைய patriotism த்தை கிரிக்கெட்டில் பார்க்காதீர்கள். (இது இளவஞ்சி சொன்னது :) தனிப்பட்ட முறையில்) அது என்வரை பொறுத்தமாகயிருக்கிறது. :)

அதேபோல் யாரையும் புனிதர் ஆக்கும் எண்ணம் எனக்கு இல்லை, கில்கிறிஸ்ட் பற்றிச் சொன்னது உதாரணத்திற்காக மட்டுமே!

வவ்வால் said...

மோஹன்,

நீங்கள் ஆஸி அணியை ஆதரிப்பதிலோ, உங்கள் தேசப்பற்று குறித்தோ கேள்விக்கேட்கவில்லை, அம்பையரை மாற்றியது bcci இன் அதிகாரப்பலம் என்பது போல சொன்னதை மட்டும் குறிப்பிட வந்தேன். எனவே அம்பையர்கள் தவறே செய்வதில்லை , செய்தாலும் எதுவும் கேட்கப்பட கூடாது என்று சொல்வது சரியா, எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம் வேண்டும் அல்லவா, பூனைக்கு மணிக்கட்டியது இப்போ bcci என்று வைத்துக்கொள்ளலாம்.

மேலும் பாக்கிஸ்தான் , இங்கிலாந்து மோதிய சர்ச்சைக்குரிய ஓவல் டெஸ்ட் போட்டியின் போதும் ஆட்ட நடுவராக இருந்தது இதே மைக் பிராக்டர் தான், அப்போது அவர் என்ன செய்தார்.

ஒரு அம்பையர் விதிகளின் படி தண்டனை அளிக்கும் போது குறைந்த பட்சம் எதிரணி கேப்டனைக்கூப்பிட்டு கூட சொல்லமாட்டேன் என்றால் எப்படி.

மேலும் அப்போது பாகிஸ்தான் அணி ஆட மறுத்த போது அதை தண்டிக்கவும் இல்லை, அதே போல அவர்கள் பலத்தைக்காட்டினார்கள் என்றும் சொல்லவில்லையே.

திறமையாக ஆடுகிறார்கள், அவர்கள் அணியைப்பாராட்டலாம், ஆனால் நடந்த தவறை சுட்டி நியாயம் கேட்பதை அழுகுணி ஆட்டம் என்பது தான் சரியல்ல என்கிறேன்.

மேலும் ஆஸி ஹர்பஜன் இன வெறியுடன் திட்டினார் என்று புலம்பியதும் அதிகப்படித்தானே.

வார்னே, மெக்ராத் போல எல்லாம் இந்தியாவில் பந்துவீச்சாளர்கள் இல்லை, அவர்கள் அளவுக்கு நம் ஆட்கள் வருவது கடினம் என்றே சொல்வேன். கும்ப்ளே எல்லாம் வார்ன் உடன் ஒப்பிடுகையில் ரொம்பவும் பின் தங்கியே உள்ளார், விக்கெட் எண்ணிக்கையில் சொல்லவில்லை, திறமை, வெரைட்டியாக பந்து வீசுவது என்று.அதே சமயம் கும்ப்ளே தனது எல்லைகளை உணர்ந்து ஆடுவது,கடின உழைப்பு, பொறுமை ஆகியவற்றின் மூலமே சாதித்தார் என்பதையும் மறுக்க கூடாது அல்லவா?

அபுல் said...

///கில்கிறிஸ்ட் நிறைய தடவை இதுபோல் அம்பயர் சொல்லாமல் பீல்டரில் கேட்டுவிட்டு சென்ற ஆட்டங்கள் உண்டு ஆஸ்திரேலிய ஆட்டங்களைத் தொடர்ச்சியாய் கவனிப்பவர்கள் அதை உணரமுடியும்./////

பந்து பேட்டில் பட்டது என்று உறுதியாகத் தெரியும் நிலையில் கில்கிரிஸ்ட் அம்பயர் தீர்ப்புக்கு காத்திராமல் வெளியேறுவார்... நீங்க சொன்ன மாதிரி பீல்டரிடமெல்லாம் கேட்க மாட்டார்...

He is the one and only great breatman in the world in this case.

ஆனா பாண்டிங்கும், க்ளார்க்கும் 2 ஆவ‌து ஸ்லிப்ல‌ கேட்ச் கொடுத்தாலும் அம்ப‌ய‌ர் அவுட் கொடுக்க‌ணும்னு காத்திருந்துதான் போவாங்க‌ :-))

-அபுல்

மோகன்தாஸ் said...

//நீங்க சொன்ன மாதிரி பீல்டரிடமெல்லாம் கேட்க மாட்டார்...//

ஆஷஸ் மேட்ச் இங்கிலாந்தில் நடந்த ஒன்று எந்த மாட்ச் என்பது நினைவில் இல்லை தேடிப் பார்க்கலாம் வேண்டுமானால், ஒரு பாய்ண்ட் கேட்ச், பீட்டர்ஸன் என்று நினைக்கிறேன் பிடித்தது(நினைவில் இல்லை) அம்பயருக்கு அந்தக் காட்ச் பிடிக்கப்பட்டதா இல்லை தரையில் பிட்ச் ஆனதா என்ற சந்தேகம் ஆனால் பீட்டர்ஸனிடம் கில்கிறிஸ்ட் கேட்ட பொழுது அவர் பிடித்ததாகச் சொல்ல கில்கிறிஸ்ட் வெளியேறியிருந்தார்.

இதைப் போல் நியூஸிலாந்த் சீரியஸிலும் நடந்திருக்கிறது.

சொல்லப்போனால் அந்த குறிப்பிட்ட மாட்சிற்கு முன் ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் ஒப்பந்தம் செய்து கொண்டது கூட இது போல் தான். பந்தை பிடித்தார்களா இல்லையா என்ற சந்தேகம் வரும் பொழுது அம்பயர்/தேர்ட் அம்பயரிடம் செல்வதை விட்டு பீல்டரிடம் கேட்டு அவர் பிடித்ததாகச் சொன்னால் வெளியேறுவது.

புரிஞ்சிக்கோங்க!

அபுல் said...

மகாத்மா மோகன்தாஸ்
நீங்கதான் புரிஞ்சுக்கவேயில்ல...
கில்கிரிஸ்டை உங்க‌ளைவிட எனக்கு அதிகமாவே பிடிக்கும்.. அதைத்தான் நான் சொல்லியிருக்கேன்...
ம‌த்த‌ ம‌க்க‌ளெல்லப்ப‌த்தி நீங்க ஒண்ணுமே சொல்ல‌வேயில்லையே :‍))

-அபுல்

மோகன்தாஸ் said...

//நீங்க சொன்ன மாதிரி பீல்டரிடமெல்லாம் கேட்க மாட்டார்...//

இதற்கு பதிலாய் சொன்னது தான் புரிஞ்சிக்கோங்க என்பது!

யாருக்கு அதிகம் பிடிக்கும் என்பது ஒப்புமை நோக்கு எனும் பொழுது மற்ற பக்கம் தெரியாமல் பேசமுடியாது!

அபுல் said...

ஸாரி மோகன்தாஸ்
நீங்க பீல்டரிடம்னு சொன்னதை கீப்பரிடம் னு நினைச்சிட்டு பதில் சொல்லிட்டேன்...

ச‌ரி அப்புறம் Consistency
பத்தி பேசலாம்...

பாண்டிங் தொடர்ந்து 3ஆவது மேட்சில 10 ரன்னுக்குள்ளே அவுட்டாயிட்டாரே? அதைப்பத்தி என்ன சொல்றீங்க??
யுவராஜ் மட்டும் ஒழுங்கான்னு கேட்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்..

-அபுல்

மோகன்தாஸ் said...

கன்ஸிஸ்டன்ஸி பத்தி ஒரு பதிவு வரும், ஆனால் இப்ப எழுதினால் நான் அப்படி நினைத்து எழுதலைன்னாலும் என்னவோ இந்தியா கூட ஒப்பிட்டு பேசுவதைப் போல் ஆய்டும். அந்தத் தவறை செய்யவே கூடாதுங்கிறதுக்காக எழுதலை.

ஒரு சீரியஸ் முழுதும் மொக்கை போட்டால், மார்க் ஆகட்டும் ஸ்டீவ் ஆகட்டும் அவர்கள் சர்நேம் வாஹ்வாக இருந்தாலுமே கூட தூக்கப்படுவார்கள் என்று கூட இருந்து பார்த்த பான்டிங்கிற்குத் தெரியும். நான் தனிமனிதர்களை சப்போர்ட் செய்யலை அபுல் ஆஸ்திரேலிய அணியை செய்யறேன்.

பான்டிங், கில்லி, ஹெடன், சைமண்ட்ஸ் இல்லாவிட்டாலும் தொடர்வேன். :)

அபுல் said...

உங்க மன உறுதியைப் பாராட்டுகிறேன்..
கூடிய‌ விரைவில் ஆஸி அணியை முத‌லிட‌த்தினை இழ‌ந்து எல்லா அணிக‌ளிட‌மும் மோச‌மான‌ தோல்வியைத் த‌ழுவும்போது நீங்க‌ ஒருவராவது ஆறுத‌ல‌ளிக்க‌ இருப்பீர்க‌ள் :-)

-அபுல்

Anonymous said...

மோகன் மனசத் தேத்திக்கங்க..

இன்னைக்கு முதல் ஃபைனல்ல ஆப்பு வச்சாச்சு.. அடுத்த ஆப்பு செவ்வய்க்கிழமை காத்திருக்கு...
-அபுல்

பாண்ட்டிங் ரிக்கி - said...

ஆப்பு வச்சுட்டாங்களே வச்சுட்டாங்களே... இப்ப என்ன செய்யறது மோகனு.

" வாழைப் பழத்தை தின்று " ஹர்பஜன் குரங்கு போல சேட்டை செய்தார்னு சிட்னி ஹெரால்டுல போட சொல்லிடலாமா ? அதை ஆஸிக்கு எதிரா மட்டும் தடை விதிக்கச் சொல்லலாமா?

அட .. விரும்பத்தகாதக் களைன்னு சொல்லி கத்துச்சே ஹே "டான்" அதை வச்சு வேற ஏதாவது சொல்ல சொல்லிட்டா வெற்றி மக்கள் மனசுல மறைஞ்சு இதப் பத்தியே பேசிட்டு இருப்பாங்க. அதுவும் இல்லைன்னா ஐடியா குடுங்கப்பா? யாரு கண்ணு பட்டது இத்தனை தடவை இந்த சீரிஸ் ல தோத்தாச்சு

பாண்டிங் ரிக்கி
ஆஸ்திரேலியா மட்டையடி அணி
மாஸ்டெர் இன் ஸ்லெட்ஜிங்