நிபந்தனையில்லாமல் 10 கிலோ அரிசி - Really Funny

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி ¬ற்றிலும் இலவசமாக வழங்கப்படும். 20 கிலோ அரிசி வாங்கினால்தான் பத்து கிலோ அரிசி இலவசம் என்று நிபந்தனை ஏதும் இல்லை. கண்டிப்பாக ¬பத்து கிலோ அரிசி இலவசமாகவே வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.



திமுக ரூ. 2க்கு அரிசி தருவதை பொருளாதார விளக்கத்துடன் எதிர்த்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலையில் கருத்துக் கணிப்புகள் வெளியான பின் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ இலவசம் என்று அறிவித்தார். இந் நிலையில் 10 கிலோ வாங்காவிட்டாலும் கட 10 கிலோ அரிசி இலவசமாகத் தரப்படும் என்று அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்த்தி கணேசனை ஆதரித்து அல்லிநகரத்தில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

அவர் பேசுகையில், நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. கிலோ ரூ. 3.50 என்ற விலையில் இந்த அரிசி வினியோகிக்கப்படுகிறது.

உங்கள் ஆதரவோடு இந்த அரசு அமையுமானால், 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். அடுத்த பத்து கிலோ அரிசி கிலோ ஒன்றுக்கு ரூ. 3.50 என்ற விலையில் விற்கப்படும்.

நான் வெளியிட்ட இந்த அறிவிப்பைப் பிடிக்காத சில தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் வேண்டுமென்றே இந்த நல்ல செய்தியைக் கூட திரித்துக் கூறி வெளியிட்டுள்ளன.

நான் சொன்ன அறிவிப்பையே மாற்றி, 20 கிலோ அரிசியையும் வாங்கினால்தான் பத்து கிலோ அரிசி இலவசம் என்று செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

அதாவது கிலோ அரிசி 3.50க்கு வாங்கினால்தான் இலவசமாக பத்து கிலோ அரிசியை தருவோம் என்று அவர்கள் இட்டுக் கட்டி எழுதியும், செய்திகளில் சொல்லியும் வருகிறார்கள்.

ஆனால் என்னுடைய அறிவிப்பு அப்படி அல்ல. தற்போது வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் முதல் பத்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி மட்டும்தான் இருக்கிறார்கள் என்றால், எங்களுக்கு பத்து கிலோ அரிசி போதும் என்று நனைத்தால் இலவசமாக வழங்கப்படும் பத்து கிலோ அரிசியுடன் சென்று விடலாம். அதற்குப் பணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

அதற்கு மேல் பத்து கிலோ அரிசி வேண்டும் என்றால்தான் கிலோவுக்கு ரூ. 3.50 பணம் கொடுத்து வாங்க வேண்டும்.

இப்போது உங்கள் அனைவருக்கும் தெளிவாக புரிய வைத்து விட்டேன் என்று நம்புகிறேன்.

20 கிலோ அரிசியில் 10 கிலோ அரிசி இலவசம் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. அந்த இலவச அரிசியைப் பெற எந்த நிபந்தனையும் இல்லை.

10 கிலோ அரிசி போதும் என்றால் இலவசமாக வழங்கப்படும் அரிசியுடன் சென்று விடலாம், கூடுதலாக 10 கிலோ தேவை என்றால் மட்டும் கிலோவுக்கு ரூ.3.50 கொடுத்து பெற்றுச் செல்லலாம்.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்த 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரள அரசு செவிமடுக்கவில்லை. மாறாக சட்டத் திருத்தம் கொண்டு வந்து விட்டது.

ஆனால் உண்மையான அளவான 152 அடி உயரத்திற்கு முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க தமிழக அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளும். தமிழக விவசாயிகளின் நலனை விட்டுக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த ஓசி அரிசி அறிவிப்பு திமுகவை அலற வைத்துள்ளது.

Credits - Thatstamil.com

1 comments:

Unknown said...

ஒரே நாளில் அதிக பதிவுகள் போட்டு ஏதும் சாதனை செய்ய திட்டமா என்ன?:-)))))