ரூ. 100 கோடிக்கு ரஜினி ஆதரவைப் பெற பேரம்

ரூ. 100 கோடிக்கு பிரபல நடிகரிடம் பேரம் பேசிய அதிமுக: கருணாநிதி பரபரப்பு தகவல்!


தூத்துக்குடி:

பிரபல திரைப்பட நடிகரை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறும், இதற்காக ரூ. 100 கோடி வரை கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும் திமுக தலைவர் கருணாநிதி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.



தூத்துக்குடியிலிருந்து இன்று மாலை தென் மாவட்ட பிரசாரத்தை தொடங்கினார் கருணாநிதி. முன்னதாக ரயில் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்த கருணாநதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி,

ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் இலவச அரிசி, அது, இது என்று போட்டா போட்டி வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்.

அதிமுகவுக்கு பெரும் தோல்வி கிடைக்கப் போகிறது என்பதை உணர்ந்து விட்ட ஜெயலலிதா, தமிழகத்தின் பிரபல நடிகர் ஒருவரை அதி¬கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறு வலை வீசிப் பார்த்துள்ளார். இதற்காக ரூ. 100 கோடி வரை தருவதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நடிகர் வர மறுத்து விட்டார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படாது. அப்படியே கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாது என்றால் அதை திமுக எதிர்க்காது. இப்போதைய நிலையில் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் கருணாநிதி.

இன்று மணிக்கு தூத்துக்குடியிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கும் கருணாநிதி. அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து காயல்பட்டனம், திருச்செந்தூர், பாளையங்கோட்டை, நெல்லை ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கருணாநிதி குறிப்பிடும் அந்த நடிகர் யார் என்று தெரியவில்லை.

நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற அதிமுக முன்பு பிரம்மப்பிரயத்தனம் செய்ததும், அவர் ஒப்புக் கொள்ள மறுத்ததால் அவரது ரசிகர் மன்றத்தை உடைத்து ஆட்களை இழுக்க முயன்றதும் நினைவுகூறத்தக்கது. ஆனால், பெருவாரியான ரசிகர்களை ரஜினி அடக்கிவிட்டார்.

ஆங்காங்கே ஒரு சில மன்றத்தினரே பாமக தவிர்த்து ஏதாவது ஒரு கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 comments:

Bharaniru_balraj said...

100 கோடி கொடுத்து கூப்பிட ரஜினிக்கு அவ்வளவு வாய்ஸ் இல்லை என்று நினைக்கிறேன். ரசிகர்களை கறிவேப்பிலை போல் பயன்படுத்தும் இவரால் ரசிகனுக்கு "ரஜினி ரசிகன்" என்கிற அங்கிகாரம் தொலைந்து போய் வெகு நாட்களாகி விட்டது. உன்மையில் ரசிகன் மேல் அன்பிருந்தால் தன் மகளின் திருமணத்திற்கு ஒரு ரசிகனையாவது கூப்பிட்டுருப்பார். ரசிகர்களுக்கும் அவருக்கும் ஒரு சிலரால் இடைவெளி அதிகமாகிக்கொன்டே போகிறது.

சமீபத்தில் ஒரு ரசிகர் அடித்த நோட்டீஸ்

"தலைவா முடிவெடு அல்லது ஆளை விடு"

இவருக்கு 100 கோடி கொடுத்தால் அட்டர் வேஸ்ட்.

(ரஜினியை ஒரு காலத்தில் ரசித்தவன் . இப்பொழுது ஆதங்கத்தில் சொல்கிறேன்)

Radha N said...

ரஜினியின் காலம், காலாவதியாகி ரொம்ப நாளாச்சு, இனிமே, அவரு அவரோட குடும்பத்தினை மட்டும் நிர்வாகம் செய்தால் போதும், தமிழ்நாட்டினைப்பற்றியெல்லாம் கவலைகொண்டு அரசியலுக்கு வரவேண்டாம்.

siva gnanamji(#18100882083107547329) said...

idhu enna niyayam?
than rasigargalai arasiyal sahadhiyil thalladha rajaniyai enn
ippadi varukkinreergal?
rasigarai rasigaraga vaippdhu thappa? aattu mandhai aakka venduma?