திமுக 41% அதிமுக 36% - புதுசு கண்ணா புதுசு

திமுக 41% அதிமுக 36%: புதிய கருத்துக் கணிப்பு

தமிழக சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து குட்வில் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.

இது குறித்து கருத்துக் கணிப்பை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் ஜோ அருண், ஜெகத் காஸ்பர் ராஜா ஆகியோர் கூறியதாவது:

160 தொகுதிகளில் நாங்கள் கருத்துக் கணிப்பை நடத்தினோம். தொகுதிக்கு 100 பேர் வீதம் மொத்தம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 3 தொகுதிகளில் நடத்தப்பட்ட கணிப்பில் தவறுகள் இருப்பது தெரியவந்தது.

இதனால் அதை நீக்கிவிட்டு 157 தொகுதிகளில் மட்டும் எடுத்த சர்வேயை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம்.

இதில் 56 சதவீதத்தினர் கிராமப் பகுதியினர் மற்றும் பெண்கள். மேலும் 15 சதவீதம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்கள்.

இந்தக் கருத்துக் கணிப்பு ஏப்ரல் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடந்தது.

எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள், யார் முதல்வராக வேண்டும் போன்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டன.

அவர்கள் அளித்த பதிலை வைத்து திமுக கூட்டணிக்கு 41.09 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 36.07 சதவீதமும் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு 49 சதவீதத்தினர் கருணாநிதியையும் 39 சதவீதம் பேர் ஜெயலலிதாவையும் தேர்வு செய்துள்ளனர்.

திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 2 ரூபாய்க்கு அரிசி என்ற திட்டத்தை 65 சதவீதம் பேர் வரவேற்றனர். இலவச கலர் டிவி அறிவிப்புக்கு 57 சதவீத ஆதரவு கிடைத்தது.

சர்வே நடந்த 157 தொகுதிகளில் 102ல் திமுக கூட்டணிக்கும், 53 தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கும் மேலும் 2ல் பிற கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது தெரியவந்தது.

இதை மாதிரியாக வைத்துக் கொண்டால் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 149 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 83லும் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

தமிழகததில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என 54 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வைகோவால் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு 65 சதவீதம் பேர் இல்லை என்றே பதிலளித்துள்ளனர்.

இவ்வாறு அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

6 comments:

Pot"tea" kadai said...

மோகன்தாஸ், செப்பு பட்டயத்த கொஞ்ச நாளாய் காணோமே???
தேர்தல் வரை விடுமுறையோ?
மேட்டர் "இட்லி வடை" யை விட வேகமா இருக்கே???
நன்று! :-))

ப்ளாக்திருடன் said...

from Idlyvadai's blog :கலைஞர் பேட்டி

Answered by M.K.

கே:- கருத்து கணிப்புகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப:- கருத்து கணிப்பு முடிவை முழுயைமாக நம்பி தேர்தல் பணியாற்றுபவன் அல்ல நான். கருத்து கணிப்புகள் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் நான் ஒரே நிலையில் தான் இருப்பேன். கருத்து கணிப்பும் உண்டு. கணிப்பு கருத்துகளும் உண்டு.

லக்கிலுக் said...

திமுக கூட்டணி மிகச் சுலபமாக 50 சதத்திற்கு மேல் ஓட்டு வாங்கும் வாய்ப்பு இருக்கிறது...

2001 தேர்தலில் ஜாதி சங்கங்களை அரசியல் கட்சிகளாக அங்கீகரித்து திமுக தவறு செய்தது...

இந்தத் தேர்தலில் அதிமுக நடிகர்களை பெரிய அரசியல் தலைவர்களாக அங்கீகரித்து இருப்பது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும்....

பிரதீப் said...

உடனே தினமலர்ல நேத்திக்கு கருத்துக் கணிப்புகள் எல்லாம் டுபாக்கூரு அப்படின்னு ஒரு "சிறப்பு நிருபர்" பெரிய வெளக்கம் எல்லாம் குடுத்தாரு.

எல்லாம் மாயை!

மாயவரத்தான் said...

ஐம்பது சதவிகிதத்துக்கு மேல தி.மு.க. ஓட்டு வாங்குமா? ஹையைய்யோ..செம்ம ஜோக் மச்சி! மொத்தம் எத்தனை சதவிகிதம் ஓட்டுப் பதிவு விழும்னு நெனைக்கிறீங்க?

வாசகன் said...

கடேசில பாருங்க, யாருக்குமே வாக்களிக்காதவங்க தான் ஜெயிப்பாங்க - அதாவது 42%க்கும்மேலே