ஜெயாவின் கொள்ளையும், ஸ்டாலின் தாராள மனதும் !

கேபிள் இணைப்புடன் டிவி தருவோம்: ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் வெறும் கலர் டிவியை மட்டும் தர மாட்டோம், கூடவே கேபிள் இணைப்பும் கொடுப்போம் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் ¬ஸ்டாலின் கூறியுள்ளார்.

உடுமலைப்பேட்டையில் நடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன் என்று ஜெயலிதா கூறினார். ஆனால் எதில் எல்லாம் தமிழகம் இப்போது முதலிடத்தில் உள்ளது தெரியுமா? நீதிமன்றக் கண்டனத்தைப் பெறுவதில் முதலிடம், டாஸ்மாக் மது விற்பனையில் முதலிடம், ஊழலில் முதலிடம், அரசு இடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதலிடம் என ஏகப்பட்ட முக்கியமான விஷயங்களில் தமிழகத்தை முதலிடத்திற்குக் கொண்டு வந்துள்ளார் ஜெயலலிதா.

2 ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவச கலர் டிவி, 2 ஏக்கர் நிலம், கூட்டுறவு கடன் தள்ளுபடி ஆகிய அறிவிப்புகளை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

வெறும் டிவி மட்டும்தானா கேபிள் இணைப்பு கிடையாதா என்று கேட்கிறார்கள். டிவி மட்டும் தர மாட்டோம், கேபிள் இணைப்பும் சேர்த்தே கொடுப்போம். இதெல்லாம் சாத்தியமா என்று ஏகடியம் பேசுகிறார்கள்.

ஜெயலலிதா, சசிகலா கும்பல் அடித்து வரும் கொள்ளையைத் தடுத்து நிறுத்தினால் எல்லாமே சாத்தியம்தான் என்றார் ஸ்டாலின்.

ரூ.100 கோடி சைக்கிள் ஊழல்:

முன்னதாக பொள்ளாச்சிபல்லடம் சாலையில் நடந்த திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,

இது சர்வாதிகாரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் இடையிலான போர். கடந்த ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டார்கள்.

அரசு ஊழியர்கள், சலுகைகளை கேட்டார்கள், கிடைத்தது என்னவோ எஸ்மா, டெஸ்மா வழக்குகள்தான்.

ஒரே கையெழுத்தில் ஒன்றே முக்கால் லட்சம் அரசு ஊழியர்களை நீக்கினார் ஜெயலலிதா, 10,000க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். 72 சாலைப் பணியாளர்கள் வறுமையால் தற்கொலை செய்துகொண்டனர்.

ஒரு தீவிரவாதியைப் பிடிப்பது போல திமுக தலைவர் கருணாநிதியை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து இழுத்துச் சென்றனர்.

அதிமுக அரசின் இலவச சைக்கிள் திட்டம் நல்ல திட்டம்தான். அதற்கு பணம் தந்தது மத்திய அரசு.

ஆனால் அந்தத் திட்டத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்துள்ளார்கள் அதிமுக ஆட்சியினர் என்றார் ஸ்டாலின்.

0 comments: