தயாநிதி மீது ஜெயா டிவியில் சோ பாய்ச்சல்.
தொழிலதிபர் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிநதி மாறன் மிரட்டியதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் 'சோ' ராமசாமி ஜெயா டிவியில் தெரிவித்துள்ள கருத்து:
டாடாவையே தயாநிதி மாறன் மிரட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. நாட்டில் யாருமே தொழில் நடத்தக் கூடாது, தங்களைத் தவிர வேறு யாருமே இருக்கக் கூடாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வாறு மிரட்டிப் பணிய வைக்க முனைகிறார்கள்.
தயாநிதி மாறன் அமைச்சராக இருந்து கொண்டு பதவியைத் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று ஏற்கனவே துக்ளக்கில் நான் எழுதியிருந்தேன். இதுதொடர்பாக ஏற்கனவே சில தொழிலதிபர்கள் புகார்கள் கூறியவண்ணம் இருந்தனர். ஆனால் அவர்கள் பகிரங்கமாக வெளியில் சொல்லப் பயப்பட்டார்கள். ஆனால் டாடா இதற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்.
நாட்டிலேயே கண்ணியமான, மிகவும் நேர்மையான, மிகப் பெரிய வர்த்தகத்தை நடத்தி வருகிறவர்கள் டாடா குழுமத்தினர். அவர்கள் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு எதையும் செய்தார்கள் என்று புகார் கூட வந்ததில்லை.
அப்படிப்பட்ட நிறுவனத்தையே மிரட்டத் தொடங்கியுள்ளார்கள் என்றால் மத்தியில் ஆட்சியில் பங்கு வகிக்கின்ற திமுக எவ்வளவு தூரம் அந்த வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்து வருகிறது என்பது நிரூபணமாகிறது.
டாடா நிறுவனத்தின் டிடிஎச் திட்டத்தில் 33 சதவீத பங்குகளை அதாவது மூன்றில் ஒரு பங்கை, அதுவும் அடிமாட்டு விலைக்கு தர வேண்டும், நிர்வாக அதிகாரம் தர வேண்டும், முக்கிய முடிவுகளை எடுக்கிற அதிகாரங்களும் தர வேண்டும் என்று தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் கேட்டுள்ளனர். ஆனால் இதை ஏற்க டாடா நிறுவனம் மறுத்து விட்டது.
இதையடுத்து தயாநிதி மாறன், டாடாவை அழைத்து உங்களது பிசினஸையே தொலைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அப்புறமும், அவர் மசியவில்லை. இதனால் டாடா நிறுவனத்தின் பங்குதாரரான முர்டோச்சை அழைத்து பேசியுள்ளார் தயாநிதி மாறன். ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மறுத்து விட்டார்.
முர்டோச் உலகின் முன்னோடி தொழிலதிபர்களில் ஒருவர், டிவி, பத்திரிக்கை என பல்வேறு தொழில்களை நடத்துபவர். எத்தனையோ நாட்டு அமைச்சர்களை பார்த்தவர். ஆனால் அந்த உலக அமைச்சர்களுக்கெல்லாம் பெரிய அமைச்சராக நடந்து கொண்டுள்ளார் தயாநிதி மாறன்.
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கலைஞர் குடும்பத்தினர் வேறு என்னதான் செய்ய மாட்டார்கள்?. இங்கே ஆட்சிப் பொறுப்பு இல்லை என்பதுதான் அவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக உள்ளது. வேறு யாரும் பிசினஸ் செய்யக் கூடாது, எதைச் செய்தாலும் அதில் 50 சதவீதம் ஷேர் கொடு என்று மிரட்டலாம்.
இப்படித்தான் கேபிள் டிவிக்காரர்களை மிரட்டியே சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை பெரிதாக்கினார்கள். பின்னர் ராஜ் டிவி மீதும் புகார் வந்தது.
அரசியல்வாதிகள், பதவிக்கு வந்த பின்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்வார்கள். ஆனால் தங்களுக்காக மட்டுமல்லாது, மற்றவர்கள் வாழக் கூடாது, நாங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். பிசினஸ் என்றால் அது எங்களது குடும்பம் மட்டும்தான் என்று தயாநிதி மாறன் புறப்பட்டிருக்கிறார். இது மிகவும் விபரீதமான ஒரு விஷயம்.
பொருளாதார தாராளமயமாக்கல் என்கிறோம், தனியார் முதலீடுகளுக்காக மெனக்கெடுகிறது மத்திய அரசு. இதுகுறித்து மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் தினம் தினம் ஏதாவது பேசி வருகிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் தொலைத்து விடுவேன் என்று தயாநிதி மாறன் போய்க் கொண்டிருக்கிறார்.
இவர்கள் தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் விபரீதத்திற்குத் தடையே இல்லாமல் போய் விடும்.
வருகிற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டால், மத்தியில் இவர்களது செல்வாக்கு மங்கி விடும். தயாநிதி மாறன் டாடாவை மிரட்டும் அளவுக்கு வர முடியாது. சோனியா காந்திக்கு, தமிழக முதல்வர் மீது உள்ள கோபத்தின் காரணமாகவே, திமுகவுக்கு பெரிய செல்வாக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய செல்வாக்கு பெயரளவில்தான், ஓட்டளவில் இல்லை, தேர்தலில் மக்கள் ஆதரவு கிட்டவில்லை என்று மக்கள் காட்டி விட்டால், மத்தியிலும் இவர்களது செல்வாக்கு தானாகவே மங்கி விடும். அது நாட்டுக்கு நல்லது, இல்லையென்றால் யாரையும் வளர விட மாட்டார்கள், தமிழகத்தையும் மிரட்டுவார்கள் என்றார் சோ.
இதுவும் சோத்தனமான பேத்தனமா???
Wednesday, April 26, 2006
|
|
This entry was posted on Wednesday, April 26, 2006
You can follow any responses to this entry through
the RSS 2.0 feed.
You can leave a response,
or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
எங்க ஊர்ல கேப்பையில நெய் வடியுதே !
ங்கேயும் போன மாதிரி தெரியலையே...
எந்தப் பெரிய பெத்திரிகையிலும் பெரிய செய்தியாகக் காணோம்...
தினபூமி தவிர, தினமலரில் டூட இது முக்கிய செதியாக இல்லை
ஒரு வேளை தயாநிதி அவற்றையும் ஏற்கனவே விலைக்கு வாங்கிட்டாரோ :)
செய்தி மீடியாக்களின் பார்வையில் இது பெரிய செய்திதான்.
குற்றசாட்டு அளவிலேயே இருக்கிறது. ஆனாலும், செய்திதான்.
பி.ஜே.பி மற்றும் சில பேர் தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
மாறன் இண்டியன் எக்ஸ்பிரஸ் மேல் வழக்கு போடுவேன் என்று சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கும்பொது, தினமலர் ஒரு இஞ்ச் கூட இதைப்பற்றி எழுதாதது ஏன்?
தினமலர் நடுநாயகமான பத்திரிக்கை இல்லை என்று தெளிவாக தெரிகிறது.
ஆனால், அம்மா பக்கம் என்றுதான் நினைத்தேன். ஏன் இதை போடவில்லை. இது புரியவில்லை.
நன்றி
பிரதீப்,
நாம் தமிழ் மணத்தில் ஒரு சிறிய கல்லை கண் அருகாமையில் வைத்துக்கோண்டு பார்க்கிறோம், ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. "This too will pass" பாஸ்-சென்றுவிடும். அது போல் இந்த நிகழ்விர்க்கும் ஒரு தீர்ப்பு வரும் (வந்தால்) ஆனால் அதை நாம் இங்கு விவாதிக்க மாட்டோம்.
ஸ்ரீதர்
Post a Comment