மைலாப்பூரில் சு.சுவாமி பொதுக்கூட்டத்தில் ஜனக்கூட்டம்

ஆளே இல்லாவிட்டாலும் சு.சுவாமி பிரச்சாரம்!நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து சுப்பிரமணியம் சுவாமி பிரச்சாரம் செய்தார். அவர் கூறியதாவது:

வருடத்துக்கு ரூ. 6,000 கோடி அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நகரம் திருப்பூர். ஆனால், நகராட்சிக்கு ரூ. 40 கோடி மட்டுமே வரி கிடைக்கிறது. இந்தப் பணத்தை வைத்து திருப்பூருக்கு வேண்டிய பணிகளை செய்ய முடிவதில்லை.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இல்லாமல் திருப்பூர் மிக மோசமாக காட்சியளிக்கிறது. பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்தால் இதை மாற்றிக் காட்டுவோம். இந்த நகருக்குத் தேவையானது வரும்.

உலக வர்த்தக அமைப்புகளோடு இணைந்து திருப்பூரை வளமாக்கிக் காட்டுவோம்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் குட்டிச் சுவராக்கியவர் ஜெயலலிதா. நான் நினைத்தால் ஒரு அரசை உருவாக்கவும், கவிழ்க்கவும் முடியும்.

ஜெயேந்திரரைக் கைது செய்ய ஜெயலலிதாவை மன்னிக்கவே கூடாது. இந்தத் தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

கூட்டமே இல்லாவிட்டாலும்..

முன்னதாக நேற்று சென்னை மைலாப்பூரில் ஜனதா கட்சி வேட்பாளர் சந்திரலேகாவை ஆதரித்து சுப்பிரமணியம் சுவாமி பிரச்சாரம் செய்தார்.

சுவாமிக்கு பாதுகாப்புக்கு வந்த 10 போலீசார், ரோட்டோரம் கிட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 சிறுவர்கள், ரோட்டில் நின்று கொண்டிருந்த சுமார் 10 பேர் என மொத்தமே சுமார் 20 பேர் தவிர சுவாமியைத் திரும்பிப் பார்க்க ஆளே இல்லை.

கேட்க ஆளே இல்லாவிட்டாலும் விடாமல் பிரச்சாரம் செய்தார் சுவாமி.

5 comments:

ஜயராமன் said...

இது உண்மையல்ல.

நான் மயிலையில் தான் வசிக்கிறேன். எங்கள் தெரு கோயில் (கபாலி அல்ல) இருக்கும் தெரு. சு. சுவாமி வரும்போது இரவு 8 ஆகிவிட்டது. அதற்கு முன் ஒரு மணிநேரம் உதிரி பேச்சாளர்கள் கூவிக்கொண்டிருந்தார்கள். சு.சுவாமி வந்தபோது நல்ல கூட்டம் கூடியது. ஏரியா முழுக்க. ஆனால், அவர் இரண்டு நிமிடம் கூட பேசவில்லை. போய்விட்டார்

நன்றி

மாயவரத்தான்... said...

மோகன் தாஸ்.. மோசம் போயிட்டீங்களே மோகன் தாஸ். எங்கயிருந்து சுட்டீங்க அந்த மேட்டர்?

மோகன்தாஸ் said...

எனக்கு ஒரு விஷயம் புரியலை, அந்த போட்டோ உண்மையா பொய்யா, உண்மையா இருந்தா ஆளு யாருக்கு பிரச்சாரம் பண்ணுராறு.

ஒருவேளை, குட்டோரோச்சி மற்றும் இன்னபிறர்கள் மறைந்திருந்து பார்க்கிறார்களோ.

raviraj said...

«¼Å¢Îí¸ ¾¡‰ º¡Á¢ þÐÄ¡ÅÐ ºó§¾¡º ÀðθðÎõ
«Ð ºÃ¢ ±í¸ ÍðËí¸ þó¾ À¼ò¾ ¦Ã¡õÀ ¿øÄ¡ þÕìÌ «ÐºÃ¢
¡ÃÐ º¡Á¢ Àì¸òÐÄ?

மோகன்தாஸ் said...

//அடவிடுங்க தாஷ் சாமி இதுலயாவது சந்தோச பட்டுகட்டும்
அது சரி எங்க சுட்டீங்க இந்த படத்த ரொம்ப நல்லா இருக்கு அதுசரி
யாரது சாமி பக்கத்துல?//

That is from thatstamil.com, she is chandraleka, do you remember the acid issue???