ஜெவிடம், நான் ரெடி, நீங்க ரெடியா? சிதம்பரம் கேள்வி

ஜெயலலிதாவின் நகைகள்: ப.சிதம்பரம் கேள்வி

சுனாமி நிதி முறைகேடுகள் குறித்து பொது மேடையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் விவாதிக்க நான் தயார், அவர் ரெடியா என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சவால் விட்டுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், தமிழகத்தில் நிதியமைச்சர் என்று ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை. அவர் அலுவலகத்திற்குப் போயே ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.

சுனாமி நிவாரண நிதி குறித்து முதல்வர் கூறும் தகவல்கள் எல்லாம் பொய்யானவை, தவறானவை. இதுகுறித்து நான் பொது மேடையில் ¬தல்வருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன், அவரும் தயாரா என்பதைச் சொல்லட்டும்.

சுனாமி நிதி குறித்து முதல்வருக்கு தரப்படும் தகவல்கள் சரியா, தவறா என்பதைக் கூட அவர் பகுத்துப் பார்க்காமல் பேசி வருகிறார். அவருக்கு இதுதொடர்பாக புள்ளி விவரங்களை எழுதிக் கொடுக்கும் அதிகாரிகள் யார் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

வேட்பு மனு தாக்கல் செய்தபோது ஜெயலலிதா கொடுத்த சொத்துக் கணக்கு ஆவணத்தில், வழக்கு இருப்பதால் நகைகளின் மதிப்பு தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

சொத்துக் கணக்கை காட்டும்போது நகைகளின் மதிப்பும் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். தெரியாது என்று சொல்வதை ஏற்க முடியாது என்று கூறினார் சிதம்பரம்.

0 comments: