ராணிமுகர்ஜியும் இந்தி தெரியாத தமிழ்நாட்டு மக்களும்

இந்தி நடிகை ராணி முகர்ஜி கோவையில் பாஜக வேட்பாளர்களைஆதரித்துப் பிரசாரம் செய்யவுள்ளார்.

அதிமுக மற்றும் திமுக சார்பில் ஏராளமான நடிகர், நடிகைகள் பிரசாரக் களத்தை கலக்கி வருகின்றனர். இப்போது பாஜகவும் கலையுலகினரை பிரசாரத்தில் இறக்கி விட்டுள்ளது.

இந்தியிலிருந்து நடிகை ராணி முகர்ஜி தமிழக பிரசாரத்திற்கு வரவுள்ளார்.

நாளை கோவை வரும் ராணி முகர்ஜி தொண்டா¬த்தூரில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர் சின்னராஜுவை ஆதரித்துப் பிரசாரம் செய்கிறார்.

அக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் மே 1ம் தேதி இதே தொகுதியில் பிரசாரம் செய்கிறார். தொண்டா¬த்தூர் தொகுதியில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராணி முகர்ஜி தமிழகத்தின் வேறு பகுதிகளுக்குப் போவாரா என்பது குறித்துத் தெரியவில்லை.


இதைப் பார்த்ததும் திருவிளையாடலில் பாலையா சொல்வார்,

என்னாடா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை என்று அது தான் நினைவில் வந்தது.



நடிகைகளின் பிரசாரம்: தா.பாண்டியன் வேதனை

வள்ளுவர் வாழ்ந்த தமிழகத்தில், ராஜாஜி போன்ற தலைவர்கள் ஏறிய மேடைகளில் இன்று நடிகைகள் பிரசாரம் செய்யும் அளவுக்கு தமிழக அரசியல் தரம் தாழ்ந்து விட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் வருத்தத்துடன் கூறினார்.

விளாத்திகுளம் திமுக வேட்பாளர் ராஜாரமை ஆதரித்து தா.பாண்டியன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,

சிந்தித்து ஓட்டுப் போடுங்கள். இன்னும் 12 நாள்தான் உள்ளது, உங்களது தலையெழுத்தை தீர்மானிக்க.

வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் இது. ராஜாஜி போன்ற தலைவர்கள் ஏறிய மேடைகளில் இன்று கவர்ச்சி சொட்டசொட்ட நடிகைகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள். இவற்றைப் பார்க்கும்போது வேலைக்கே போகாமல் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலத் தெரிகிறது.

அந்த அளவுக்கு அள்ளி வீசுகிறார்கள் என்றார் தா.பாண்டியன்.

ஜெ. ஒரு பயங்கர சர்வாதிகாரி:

இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி.பர்தான் திருவாரூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில்,

கிட்டத்தட்ட 1 லட்சத்து 75,000 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. இப்படி ஒரு சம்பவம் இந்திய வரலாற்றில் நடந்ததே இல்லை.

என்ன முதல்வர் இவர்? எனது 60 ஆண்டு கால தொழிற்சங்க வாழ்வில் இப்படி ஒரு கொடூரமான நிகழ்வை, சர்வாதிகார முதல்வரை நான் பார்த்ததே இல்லை.

முகம்மது பின் துக்ளக், முகம்மது பாதுஷா போன்றவர்கள் போல நடந்து கொள்கிறார் ஜெயலலிதா.

இப்படி ஒரு முதல்வர் தமிழகத்திற்கு மீண்டும் வரக் கூடாது. எனவே தமிழக மக்கள்வ விழிப்போடு இருந்து திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் பர்தான்.

1 comments:

- யெஸ்.பாலபாரதி said...

வங்கம் தந்த சிங்கம் ராணிமுகர்ஜி-க்கு எதிராக திரண்டிருக்கும் பாரதநாட்டின் எதிரிகளை வண்மையாக கண்டிக்கிறோம்...- அப்படின்னு அறிக்கை வுட்டுட போறாய்ங்கப்பா!
:)