Australia almost screwed Sri Lanka

ஸ்ரீலங்கா நிச்சயமாய் 250 ஆவது அடிப்பார்கள் என்று நினைத்தேன். ம்ஹூம் இடையில் கொஞ்சம் நன்றாய் விளையாடுவது போலிருந்தது, ஆனால் ஆஸ்திரேலியாவின் திறமையான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்ரீலங்கா 226 ரன்களுக்கு சுருண்டது.

இந்த பந்துவீச்சின் சூப்பர்ஸ்டார், நாதன் ப்ராக்கன் தான் மனுஷன் என்னா அற்புதமா லைன் அண்ட் லெங்த் பௌலிங் போடுறான். நான் கிரிக்கெட் விளையாடும் பொழுது பேஸ் பவுலிங் போடுவேன், அதற்கென்றே தனிமதிப்புண்டு எனக்கு. அதைப்பற்றி விரைவில் எழுதுகிறேன். சில சமயம் கப்டானாக விளையாடும் பொழுதுமட்டும் கிரீஸிலிருந்தே பவுல் பண்ணுவேன். ஓரளவு வேகம் வருமென்றாலும் அந்த இம்ப்ரஷன் வராது, ஆனால் கிரீஸிலிருந்து போடும் பொழுது இதன் காரணமாக லைன் அண்ட் லெங்த் ரொம்ப முக்கியம்.

பாட்ஸ்மேனுக்கு ஒன்றரை அடிக்கு முன்னால் பிட்ச் குத்தி(குட் லெங்த்தில்) செஸ்த்ட்க்கு ஏற்றுவேன். ஆனால் லைன் அண்ட் லெங்த்தில் போடுவது ரொம்பவும் கஷ்டம். அதனால் சொல்கிறேன் பிரமாதமாகப் போடுகிறார். மற்றொருவர் பிராட் ஹாக் இவருடைய கூக்லியை இன்னமும் மக்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. இந்தியா ஆட வந்திருந்தால் ஒருவேளை விளையாடியிருப்பார்கள்.

பவுலிங் பிட்ச் என்று சொல்கிறார்கள் இந்த ஆடுகளத்தை ஆனால் அவர்கள் தேவையான அளவிற்கு ரன்கள் எடுக்கவில்லை. கட்டுப்படுத்த பௌலர்களும் இல்லை, ஆஸ்திரேலியா 40 ஓவர்களுக்கு முன்னால் அடித்துவிடும் என்று நினைக்கிறேன்.



10 comments:

நாமக்கல் சிபி said...

ரெண்டாவது படத்துல இருப்பது யாருங்க மோகன்தாஸ்?

(அப்போ முதல் படத்துல இருக்குற ஆளைத் தெரியுமான்னு கேக்கப் பிடாது சொல்லிட்டேன்)

VSK said...

டிசில்வா- ஜெயவர்த்தனே காட்டினது சும்மா ட்ரெய்லர்தாம்மா!

மெயின் பிக்சர் ஃபைனல்ஸுல வரும்!

:)))

ஆனால், ஆஸ்திரேலியர்கள் இந்த வித்தையெல்லாம் நன்கு தெரிந்தவர்கள்!!!.

இன்றிருக்கும் நிலையில் அவர்களை வெல்ல இப்போதிருப்பவரில் யாருமில்லை எனவே நினைக்கிறென்.

பூனைக்குட்டி said...

சிபி தவறில்லை, முதல் படத்திலிருப்பவர் நாதன் ப்ராக்கன். இரண்டாவஹ்டு படத்தில் இருப்பவர் ப்ராட் ஹாக்.

கேக்கலை அண்ணாச்சி அதான் தப்பில்லைன்னு சொல்லிட்டேனே. ;)

பூனைக்குட்டி said...

வாங்க VSK, என் பேச்சே இலங்கை பைனல்ஸ் வராதென்பது தான். அதனால டிரெய்லரோட போய்ட வேண்டியது தான்.

Anonymous said...

இங்கிலாந்திற்கு நிகழ்ந்ததே இலங்கைக்கும் நிகழ்ந்தது :-).
...
/பிராட் ஹாக் இவருடைய கூக்லியை இன்னமும் மக்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. /
என்றாலும் என்னுடைய விருப்பத் தேர்வு Shane Warne ...என்றைக்கும்.

பூனைக்குட்டி said...

//இங்கிலாந்திற்கு நிகழ்ந்ததே இலங்கைக்கும் நிகழ்ந்தது //

ஆமாம் ஆனால் இலங்கை வேண்டுமென்றே செய்தது போலிருந்தது.

ஆனால் நான் கிரேக் செப்பல் சொன்னது போல், இலங்கையை ஐசிசி கேள்வி கேட்கவேண்டுமென்று எல்லாம் சொல்ல மாட்டேன்.

-------------

டிசே நான் ஷேனியை கம்பேர் செய்யவேயில்லை ஆனால் வித்தியாசமான ஆர்ம் ஆக்ஷன் உடன் ஒண்டே இண்டர்நேஷ்னல்ஸில் பின்னுகிறார்.

நாமக்கல் சிபி said...

//கேக்கலை அண்ணாச்சி அதான் தப்பில்லைன்னு சொல்லிட்டேனே//

இல்ல! இன்னொரு முக்கியமான பவுலரைப் பத்தியும் எழுதியிருந்தீங்க!

இவரோட (இரண்டாவது ஆள்)டிஷர்ட் வேற கலர்ல இருந்துச்சா! அவரோட படமோன்னு நினைச்சேன்!

நமக்கு இந்திய பிளேயர்ஸைத் தவிர மத்தவங்களை அவ்வளவா தெரியாது!

VSK said...

தனது முக்கிய பந்துவீச்சாளர்களின் திறமை தெரியாமல் இருக்குமென நினைத்து,முரளி வாஸ் மலிங்காவை ஒளித்தது, இவர்களுக்கு எதிர்வினையாகும் அபாயமும் இருக்கிறது!

எந்த மாதிரி இவர்களுக்குப் பந்து வீசலாம் எனத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது!

76/0 !!!!!!!!!!!

பூனைக்குட்டி said...

VSK, தற்சமயம் 93/2 ஹைடன் கில்கிறிஸ்ட் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியாகிவிட்டது.

முத்தையா, வாஸ், இருந்திருந்தால் நல்ல காம்படிஷன் இருந்திருக்கும். ம்ம்ம் என்ன செய்வது எல்லாம் நமக்கு வாய்த்தது அவ்வலவுதான்.

பூனைக்குட்டி said...

//இல்ல! இன்னொரு முக்கியமான பவுலரைப் பத்தியும் எழுதியிருந்தீங்க!

இவரோட (இரண்டாவது ஆள்)டிஷர்ட் வேற கலர்ல இருந்துச்சா! அவரோட படமோன்னு நினைச்சேன்!//

நக்கலடிக்கிறீங்கன்னு தெரியுது. ம்ம்ம் படம் காட்டுங்க...