ராமர் பாலமே கிடையாது - டி.ஆர்.பாலு

ராமர் பாலம் என்பதே முழுக்க முழுக்க கட்டுக்கதை தான். மன்னார் வளைகுடா மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதுமில்லை என மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்ட பணிகளை நேரில் பார்வையிட்ட அவர் பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்,

இத் திட்டத்தில் இதுவரை 13.1 மில்லியன் கன அடி அகழ்வுப் பணி முடிந்துள்ளது. ஆதாம் பகுதியில் இப்போது அகழ்வுப் பணி நடந்து வருகிறது.

இந்த பகுதியில் சுற்று சூழல் பாதிக்கப்படுமா என 2,424 முறை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். கடலுக்கு அடியிலும் 2,003 மீட்டர் ஆழத்திற்கு பல இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

ராமர் பாலம் என்பதே இது முழுக்க முழுக்க கட்டுக்கதை தான். இந்தப் பகுதியில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதுமில்லை என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துவிட்டன.

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடப்பதால் அரசியல் நோக்கத்தில், ஓட்டு வாங்குவதற்காக இந்த பிரச்சனையை பாஜக இப்போது கிளப்புகிறது.

பாஜக ஆட்சியின் போது வகுத்த திட்டத்தின்படிதான் இந்த சேது சமுத்திர திட்ட பணிகள் நடந்து வருகிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறன்.

ஆதாம் பாலம் (ராமர் பாலம்) கடல்-நில மாற்றங்களால் ஏற்பட்டது என மன்னார் வளைகுடா பராமர் பாலம் ஆய்வுகள் தெரவித்துவிட்டன.

இந்தப் பணி திட்டமிட்டபடி 2008ம் வருடத்திற்குள் முடிக்கப்படும் என்றார் பாலு.

5 comments:

Anonymous said...

//உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடப்பதால் அரசியல் நோக்கத்தில், ஓட்டு வாங்குவதற்காக இந்த பிரச்சனையை பாஜக இப்போது கிளப்புகிறது//

அதானே தேர்தல் வரும்போது தானே ராமர் நினைவுக்கு வருவார்

Anonymous said...

இராமர் பாலம் கட்ட இல்லை எண்டா, அணிலுக்கு முதுகில் 3 வரி எப்படி வந்த்திடுச்சு?

புள்ளிராஜா

Anonymous said...

Read this also
http://nermai.wordpress.com/2007/04/13/ramarpoi/

Thamizhan said...

ராமன் எத்தனை ராமனடா?
ராமாவதாரமே பல காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்ட தண்டனைதான்.அதுவும் அறுபதினாயிரத்துமூன்று மனைவிகள் இருந்தும் ஒரு குழந்தைகூடப் பெற்றுக் கொள்ள முடியாத தசரத சக்ரவர்த்தியின் அசுவமேத யாகத்திலே யாருக்கோ பிறந்த பிள்ளை.
வால்மீஹியின் ராமன் மிகவும் அசிங்கமான கதை என்பதால் கம்பர் அதைத்தமிழ் படுத்தி ஒரு ராமனை உண்டாக்கினார்.
உடம்பெல்லாம் மூளை உள்ள அறிஞர் பெருமக்கள் ஹார்வேர்டில் படித்தவர்கள் எந்த ராமனைச் சொல்கிறார்கள்?
அணில் கூட்டம் வேரே உச்ச அநீதி மன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் வழக்கு வருவதற்கு முன்னேயே சீல் போட்ட கவரிலே ராமர் பாலம் முக்காலும் உண்மை என்ற தீர்ப்பு எழுதப்பட்டு சேது சமுத்திரத்திட்டத்திற்கு ஸ்டே ஆர்டரும் முன் ஜாமீன்போல் ரெடியாகி உள்ளதாகப் பொய்மல்ர் செய்தி.
சோமாறி கார்ட்டூன் தயாராகி உள்ளது,அதில் எந்த ராமனைப் போடுவது என்பதிலே தலைக்கு வெளியிலேயும் ஒன்றுமில்லாமல் உள்ளேயும் ஒன்றுமில்லாத புத்திசாணி தடுமாறிக் கொண்டிருக்கிறாராம்.
பாவம் பாலு என்ன செய்யப் போராரோ!

Unknown said...

சுப்பிரமணிய சாமி ஆரம்பிக்கும் இயக்கம் எல்லாம் இப்படி கோமாளித்தனமான இயக்கமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. சரி,நமக்கும் நன்றாக பொழுதுபோக வேண்டாமா? சாமியின் அதிரடி அறிக்கைகளை படித்து ஜாலியாக சிரிக்கலாம்:-)