ஒரு ஜொள்ளுப் பதிவுஅழகே ஜெஸ்ஸிகா!!!
உன்கையில் இருப்பதென்ன "Trash"ஆ
ஆகிப்போனனே "Nash"ஆ

குப்பைக்கும்
அளித்தாயே முக்கியத்துவம்
இதைவிடவா
பெரிது
பின்நவீனத்துவம்

இருத்தலியத்தை
இல்லாமல் ஆக்குகிறாயே பெண்ணே
மூக்குக்கு மேல
உனக்கு இருக்குறது தான் "கண்ணே"

"பிங்க்" நிற ஆடையணியும் நிலா
நீ! முட்களே இல்லாமல் பழுத்த பலா
அடிச்சு ஆட நடந்து வர்ற அம்சமா
அப்படி இப்படி நீ கிளியோபாட்ரா வம்சமா?

"கோஹினூர்" கீரிடம் வச்ச ராணி
உன் பக்கத்துல நிக்கவச்சா ஆவாளா போணி
உனக்கு நிகர் யாருமில்லை போ நீ
அட போம்மா நீ
ஜொள்ளுவிட்டா யாருபுடுங்குவா ஆணி
அட நம்ம ஆணி

கவுஜை கலைஞன், கவிமடத் தலைவன், கவிதைப் பகைவன் அண்ணன் "தென்னகத்தின் தெரிதா" ஆசீப் அண்ணாச்சிக்கு சமர்ப்பணம்.(ஓய்! நீங்க தான் என் கவிதைத் தொகுப்புக்கு உரையெழுதணும். தயாராய்க்கோங்க.)

PS: ஒரு முக்கியமான விஷயம் டெஸ்டிங் காரணமா ஒரு மறுபதிப்பு.
PS2: தொடர்புடைய பதிவு - நன்றி நண்பர்களே மிக்க நன்றி அல்லது ஆப்பரேஷன் சக்ஸஸ் - பேஷண்டும் சாகலை

12 comments:

வெட்டிப்பயல் said...

//
குப்பைக்கும்
அளித்தாயே முக்கியத்துவம்
இதைவிடவா
பெரிது
பின்நவீனத்துவம்//

சூப்பர் :-)

Anonymous said...

படமெல்லாம் சூப்பர், ஆமா யார் இந்த ஆண்ட்டி.

மோகன்தாஸ் said...

வெட்டி நன்றி. ;)

என்னது ஆன்ட்டியா?

யோவ் கண்ணாடிய துடைச்சிட்டுப் பாருய்யா. அப்புறம் என்னது யாருன்னா கேட்டீங்க; என்னடா இது Jessica Biel க்கு வந்த சோதனை ;-)

செல்வேந்திரன் said...

குப்பைக்கும்
அளித்தாயே முக்கியத்துவம்
இதைவிடவா
பெரிது
பின்நவீனத்துவம்

குசும்புக்கு அளவில்லை நண்பா
ஓயாமல் பாடாதே வெண்பா
இழுக்கபாத்தியே பெரிய வம்பா
எவனாவது வந்து நிக்கபோறான் கம்பா
ஏய் டண்டனக்கா.. டனக்கு நக்கா..

enRenRum-anbudan.BALA said...

Mohan Das,

"Simbly" Superb :)))))

PKS said...

நீங்க சீரியஸா (இலக்கியத்தனமா என்று மாற்றிக் கொள்ளவும் :-) )எழுதறதை விட இது மேலா, நல்லா இருக்கு. - பி.கே. சிவகுமார்

அய்யனார் said...

:) அண்ணாசியை வளைச்சாச்சா..மனுசன் இந்த மாதிரி கவுஜ எழுதினா சொத்தையே எழுதி கொடுப்பார் சொத்தையாவா எழுதிக் கொடுக்கமாட்டார் :))

தம்பி said...

லொள்ளுசபா மனோகர் கைய ஆட்டி ஆட்டி இந்த கவிதைய பேசினார்னா டாப்பா இருக்கும்.

மங்களூர் சிவா said...

டெஸ்ட் சக்ஸஸ்.

மங்களூர் சிவா said...

Jessica Biel சூப்பர்
:))))

கவிதையா அது எங்க இருக்கு!?!?!?!?

:)))))))

மோகன்தாஸ் said...

செல்வேந்திரன், பிகேஎஸ், அய்யனார், தம்பி - நன்றிகள்.

தம்பி உங்களுக்குப் பொறாமை :) ஹாஹா

Anonymous said...

ஜெஸிக்காத்தா உதட்டுக்கடி அட்டகாசம்.