அதிமுகவின் அதிரடி மூவ் - தயாநிதி போற்றி

சென்னை ஜெமினி பாலத்தின் கீழே, Ôஇருநூறு ஆண்டுகளாக சென்னையில் நடந்துவந்த குதிரைப் பந்தயத்துக்குத் தடை விதித்தபோது நிறுவியதுÕ என்ற அடிச்சொற்களுடன் ஒரு திமிறும் குதிரையின் லகானை பற்றி நிற்கும் வீரன் சிலை இருக்கிறது. கிட்டத்தட்ட அந்தக் குதிரையை அடக்கும் வீரனாகத்தான் இப்போது மு.க.அழகிரியைப் பார்க்கிறார்கள் தி.மு.கவினர். அப்ப குதிரை..? தி.மு.க வேதான்!

ராமநாதபுரம் எம்.பி&யும் அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பவானி ராஜேந்திரன் மகள் திருமணம் ஜூன் 11&ம் நாள் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ், முன்னிலை அஞ்சா நெஞ்சர் அழகிரி என்றது. மதுரை மேற்கு இடைத்தேர்தல் பிஸி காரணமாக அழகிரி வரவில்லையே தவிர, அவரது மனைவி காந்திமதி அழகிரி கம்பீரமாக வந்து மணவிழாவில் கலந்து கொண்டார். ஏதோ மதுரையில் நடக்கும் ஒரு விழா போலத்தான், முக்காலே மூணு வீசம் அழகிரியின் ஆதரவாளர்களால் நிரம்பி வழிந்தது அரங்கம். திரும்பிய பக்கமெல்லாம் கலகலவென தென் மாவட்ட தமிழ் விசாரிப்புகள்தான்!

மதுரை இடைத்தேர்தல் முடிந்த பிறகு அடுத்தடுத்துக் கட்சிக்காரர்கள் வீட்டுத் திருமண நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சி என்று தொடர்ந்து கட்சி சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அழகிரி மேடையேறக் கூடுமாம்.

இதற்கிடையில், "மிக விரைவில் சென்னைக்கே குடி பெயர்ந்து வரப்போகிறார் அழகிரி. இடைத்தேர்தல் முடிவதற்காகத்தான் காத்திருக்கிறார்" என்று பலமாகப் பேச்சு கிளம்பியிருக்கிறது.

சுவாரஸ்யமான உப தகவல்... பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குதிரை வீரன் சிலையை வெள்ளிப் பளபளப்போடு பெயின்ட் பூச்சு நடத்திப் புதுப்பிக்கும் வேலை கடந்த வாரம்தான் நடந்தது!

"தொண்டனுக்காக..!"

கடந்த இதழ் ஜூ.வி. கவர் ஸ்டோரியில் "தொண்டனின் காயங்கள்" என்ற தலைப்பில் வந்த செய்தி, பணத்துக்காக எதிர்க்கட்சிக்காரர்களின் வேலைகளை முடித்துக்கொடுக்கும் தி.மு.க. நிர்வாகிகள் பலர், சொந்தக் கட்சித் தொண்டனை கண்டுகொள்ளாமல் விடுவது பற்றி சொல்லியிருந்தது. இதனால், தொண்டனுக்கு எழுந்த மனக்காயம், அடுத்து வரும் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதையும் சுட்டிக் காட்டியது. ஜூ.வி. வெளியான மறுநாளே, "முரசொலியில"் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதல் பக்கக் கடிதம் இந்த சப்ஜெக்ட்டைதான் "டீல்" செய்தது. .....நாமும் நாணயம் தவறி நாலு காசு சம்பாதிப்போமே என்று தொடங்கி, அது நாலு கோடி & நாற்பது கோடி & நானூறு கோடி என்று குவித்துக் கொள்ளுகிற துணிவு ஏற்பட்டு, அது அவர்களையும் அவர்கள் நடத்துகிற அரசாங்கத்தையும் அழுக்குப்படுத்தி, ஊழலை அரிப்பெடுக்கச் செய்து, சொரி பிடித்த மேனியர்களாக திரிந்திடவும் வைத்துவிடும்..." என்று கடுமை காட்டி, "அந்த நிலையைக் காண்பதற்காகவா இந்த இயக்கத்தை வளர்த்தோம். இந்த அரசை அமைத்தோம் என்று நினைத்து நினைத்து உருகினால்தான் நெஞ்சில் வஞ்சகம் பதித்து நெருங்குவோரை நம் கொள்கை நெருப்புக் கொண்டு அஞ்சி ஓடிட, விரட்டிட முடியும்Õ என்று அறிவுரை சொல்லி, "பரிந்துரை என்றும் பதவி மாற்றம் என்றும் பற்பல வேலைகள்& பொதுநலப் பணிகள் என்று வேடம் பூண்டு வரும்போதெல்லாம் விழிப்போடிருந்து, களைகள் நம் கழனியில் சேராமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டுm" என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கை செய்திருக்கிறார் கருணாநிதி.

உளவுத்துறையின் அடுத்த ரிப்போர்ட்!

கட்சி பற்றி ஏற்கெனவே எடுத்த ஒரு சர்வே போக, அடுத்ததாகவும் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க&வினரிடம் ஒரு சர்வே எடுத்திருக்கிறதாம் உளவுத்துறை. கே.கே.எஸ்.எஸ்.ஆர்., சுப.தங்கவேலன், கீதா ஜீவன் போன்ற அமைச்சர்கள் இந்த விஷயத்தில் கட்சியின் அடிமட்டம் வரை உள்ளவர்களுக்குப் பயனுள்ள வகையில் செயலாற்றி இருக்கிறார்கள் என்கிறதாம் ரிப்போர்ட். பூங்கோதை மீதுதான் மிகவும் நெகட்டிவ் ரிப்போர்ட்டாம். சமீபத்தில் கட்சிக்கு வந்து சேர்ந்த முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் இந்திரகுமாரியின் கையைத் துறைக்குள் ஓங்கவிட்டு விட்டாராம் பூங்கோதை. மொத்தத்தில், துறைக்கு அமைச்சர்போல இந்திரகுமாரியை செயல்பட அனுமதித்து விட்டார் பூங்கோதை என்பதைத்தான் அந்த ரிப்போட்டில் குற்றச் சாட்டா கவே சொல்லி இருக் கிறார்களாம். அதோடு, அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவருக்கு உறவினரான ஜெயப்பிரகாஷ் என்பவர், தி.மு.க. தரப்போடு திடீர் நெருக்கம் காட்டி, அரசு தரப்பிலான பல்வேறு காரியங்களையும் விறுவிறுவென முடித்துக் கொடுக்கிறாராம். அவரது கரங்கள் அனைத்துத் துறையிலும் நீண்டிருப்பதாகவும் உளவுத் துறை தகவல் சொல்லியிருக்கிறதாம். விரைவில் தி.மு.க. மேலிடம் அவரைத் தள்ளிவைக்கும் என்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஜூன் 10&ம் தேதி நடந்த காபினெட் கூட்டத்தின்போது, இரண்டாவது தடவையாக அமைச்சர்களிடம் உளவுத்துறை கொடுத் திருக்கும் ரிப்போர்ட் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி, கடுமையாக சில கருத்துக் களைப் பகிர்ந்துகொண்டாராம் முதல்வர்.

"அவ்வப்போது மன வருத்தங்களை பகிர்ந்து கொண்டு, அதோடு மறந்துவிடுவேன் என்று மட்டும் நினைக்காதீர்கள். திருத்திக் கொள்ளாவிட்டால் நடவடிக்கை தீவிரமாக இருக்கும்" என்றும் எச்சரித்தாராம்.

"எம்.ஜி.ஆர்." தந்திரம்!

அ.தி.மு.க - வின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர்.நாளிதழில் திடீரென்று ஒரு ஆச்சர்யக் கட்டுரை. மயக்கமும் தயக்கமும் வேண்டாம் என்ற தலைப்பில் இதை எழுதியிருப்பவர் பெ.சீனிவாசன் (ஒரு மாணவராக தி.மு.க. சார்பில் விருதுநகரில் போட்டியிட்டுப் பெருந்தலைவர் காமராஜரை சட்டமன்றத் தேர்தலில் வென்ற அதே சீனிவாசன்தான். இப்போது இவர் அ.தி.மு.க&வில்!).

மாறனுடைய பிள்ளைகள் தங்கள் வயதுக்கு மீறி சிந்தித்துச் செயல்பட வேண்டிய நிலையில், தயங்கித் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி உடனடியாக நெருக்கடித் தாக்குதலைத் தொடுத்துவிட்டபோதும், எதிர்த்தாக்குதல் நடத்த கலாநிதியும் தயாநிதியும் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தயக்கமும் மயக்கமும் தேவையில்லை. கருணாநிதியால் இதற்கு மேல் எதுவும் செய்துவிட முடியாது. அழகிரி & ஸ்டாலின் மோதல் எளிதில் முடிவடையப் போவதில்லை. மாறனுடைய பிள்ளைகள் துணிவுடன் தனித்து இயங்க வேண்டும். நல்லவர்கள் ஆதரவு அவர்களுக்கு உறுதியாகத் துணை நிற்கும் என்று ரொம்பவே பரிவோடு மாறன் வாரிசுகளுக்கு அறிவுரை சொல்கிறது & அந்த நமது எம்.ஜி.ஆர் கட்டுரை!



கொம்பு சீவிவிட்டு, மோதலை உக்கிரப்படுத்தப் பார்க்கிறார்களா? அல்லது, மாறன் வாரிசுகளுக்கும் அ.தி.மு.க&வுக்கும் ரகசிய நட்பு மலர்ந்துவிட்டது என்பதுபோன்ற சந்தேகத்தை தி.மு.க&வில் விதைக்கப் பார்க்கிறார்களா? என்பதுதான் இந்தக் கட்டுரை பற்றி தற்போது எழுந்திருக்கும் கேள்வி.

நன்றி - ஜூவி.

1 comments:

Anonymous said...

//கொம்பு சீவிவிட்டு, மோதலை உக்கிரப்படுத்தப் பார்க்கிறார்களா//

குதிரைக்கு கொம்பு சீவி உடறாங்களா?அடேங்கப்பா.