அட அட அட அசத்துது "ஸ்டைல்"

உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் வசூல் மழையாக உள்ளதாம். உலக அளவில் இந்திப் படங்களுக்குத்தான் பெரிய அளவில் மார்க்கெட் உள்ளது என்பது பொதுவான கருத்து. ஆனால் அந்தக் கருத்தை சிவாஜி தகர்த்தெறிந்து விட்டது. சிவாஜி மூலம் தமிழ் சினிமாவுக்கே புதிய உலக மார்க்கெட் உருவாகியுள்ளது.

உலக அளவில் ஒரே நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ரிலீஸ் ஆன ஒரே பிராந்திய மொழிப் படம் சிவாஜிதான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகியுள்ள சிவாஜி, விரைவில் மலாய், சீன, ஜப்பானீஸ், கொரியன் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது.

உலக அளவில் அய்ங்கரன் உள்ளிட்ட ஐந்து விநியோக நிறுவனங்கள் சிவாஜியை திரையிட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 340 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

வெளிநாடுளில் இந்தியப் படம் ஒன்று இத்தனை பிரிண்டுகளுடன் திரையிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். தமிழிலும் இதுவே முதல் முறை.

90களில் வெளியாகி இந்தியாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய ஷாருக்கானின் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்திற்குக் கூட வெளிநாடுகளில் 60 பிரிண்டுகள்தான் அனுப்பப்பட்டன. அந்த வகையில் சிவாஜி படைத்துள்ள சாதனை இமாலய சாதனையாகும்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் சந்திரமுகி வெளியானபோது, வெளிநாடுகளில் 90 பிரிண்டுகள் அனுப்பப்பட்டன. அப்போது அதுதான் பெரிய தமிழ்ப் பட சாதனையாக இருந்தது. இப்போது சிவாஜி வந்து அதை முறியடித்து விட்டது.

இனி உலக அளவில் சிவாஜி செய்து கொண்டுள்ள சாதனைகளைப் பார்ப்போம்.

இங்கிலாந்து: இங்கிலாந்து சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டின் டாப் 10 பட பட்டியலில் சிவாஜியை சேர்த்துள்ளனராம். படத்திற்கு இன்னும் ரேட்டிங் கிடைக்கவில்லை. ஆனால் டாப் 10 பட்டியலில் இந்தியப் படம் ஒன்று இடம் பெற்றிருப்பதே பெரிய சாதனையாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் (ஸ்காட்லாந்து உள்பட) மொத்தம் 15க்கும் மேற்பட்ட சென்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளாம். லண்டனில் மட்டும் 5 தியேட்டர்களில் சிவாஜி போடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கு மட்டும் படத்தை திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்தைப் பார்த்த பின்னர் ஐந்து தியேட்டர்களிலும் வருகிற 28ம் தேதி வரைக்கும் சிவாஜியையே ஓட்ட முடிவெடுத்துள்ளனராம்.

ஸ்காட்லாந்தில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் சிவாஜிதானாம். அங்குள்ள கிளாஸ்கோ நகரில் படம் திரையிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா: அமெரிக்காவில் தமிழ் சிவாஜி 46 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளதாம். அமெரிக்காவில் வழக்கமாக வார இறுதியில்தான் தமிழ்ப் படங்கள் திரையிடப்படும். ஆனால் சிவாஜி விஷயத்தில் இது தலைகீழாக மாறியுள்ளதாம்.

ரெகுலர் காட்சிகளாகவே சிவாஜி அங்கு ஓடிக் கொண்டுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கேற்ப சில தியேட்டர்களில் மேலும் சில நாட்கள் சிவாஜியை திரையிட தீர்மானித்துள்ளனராம்.

தலைநகர் வாஷிங்டனில், முதல் முறையாக ஒரு தமிழ்ப் படம் திரையிடப்பட்டுள்ளது (தெலுங்கிலும் இதுவே முதல் முறையாம்) என்ற பெருமை சிவாஜிக்குக் கிடைத்துள்ளது.

பே ஏரியா பகுதியில், சிவாஜி 2 தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. இதில் தமிழ் சிவாஜிக்கு மட்டும் 5000 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளதாம்.

தமிழர்கள் மட்டுமல்லாமல், பிற மொழி பேசும் இந்தியர்களும், அமெரிக்க வெள்ளையர்களும் கூட சிவாஜியைப் பார்க்க முட்டி மோதிக் கொண்டுள்ளனராம்.

கொலம்பஸ் நகரில் முதல் நாள் முதல் காட்சியன்று உட்கார இடம் கிடைக்காமல் ரசிகர்கள் பலர் நின்று கொண்டே படம் பார்த்தார்களாம்.

அமெரிக்காவில் சிவாஜியைத் திரையிடும் விநியோக உரிமையைப் பெற்றுள்ள வாணி மோகன் கூறுகையில், படம் திரையிடப்பட்ட அனைத்து சென்டர்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ். பல தியேட்டர்களில் பெரும் திரளான வெள்ளையர்களையும் காண முடிந்தது. ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து அவர்களும் ஆடிப் பாடி படத்தை ரசித்தனர்.

சிவாஜி படம் மூலம் எனக்கு 200 சதவீத லாபம் கிடைத்துள்ளது. ரஜினி சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, டிரெண்ட் செட்டரும் கூட என்றார்.

கனடாவில் டொரண்டோ நகரில் 6 தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது. வான்கூவர், ஓண்டாரியோ நகரங்களில் தலா 2 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது.

எட்மாண்டன் உள்ளிட்ட நகரங்களில் கனடா தமிழ்ச் சங்கம் சார்பில் விசேஷ காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கனடாவைச் சேர்ந்த ஒரு திரைப்பட இணைய தளத்தில், இந்த வாரத்தின் நம்பர் ஒன் படமாக சிவாஜியை சிறப்பித்துள்ளனராம். சிவாஜிக்கு 10க்கு 9.7 மார்க் கிடைத்துள்ளதாம்.

மலேசியா, சிங்கப்பூரில் சிவாஜி பெரும் சாதனை படைத்துள்ளது. மலேசியாவில் மட்டும் 40 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளதாம். ஆனால் கூட்டம் பெரும் திரளாக மாறிப் போனதால் கூடுதலாக 20 தியேட்டர்களில் படத்தை திரையிட்டுள்ளனர். 60 தியேட்டர்களிலும் சிவாஜி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம்.

ஜெர்மனியில் தமிழ்ப் படங்கள் ரிலீஸ் ஆவது வெகு அரிதானதாம். ஆனால் சிவாஜி அதையும் தாண்டி, 25 செண்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. மூனிச் நகரில் நடந்த 25வது வருடாந்திர திரைப்பட பொருட்காட்சியில், 2 நாட்களுக்கு சிவாஜியை திரையிட்டுள்ளனர். அதிரடி பாட்டுக்கு பல ஜெர்மானியர்கள் ஆட்டம் போட்டு ரசித்துததான் இதில் ரொம்ப விசேஷமானது.

அயர்லாந்திலும் சிவாஜி புகுந்து விட்டது. அங்கு டப்ளின் நகரில் 2 தியேட்டர்களில் 6 காட்சிகளாக சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது. சிவாஜிதான் ஜெர்மனியில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாம்.

ஐரோப்பிய நாடுகளில் ஸ்விட்சர்லாந்தில் (5 செண்டர்களில் 20 காட்சிகள்), பிரான்ஸில் (எஸ்பேஸ் சினிமா பாரீஸில் 4 காட்சிகள்), நார்வேயில் (ஓஸ்லோவில் ஒரு காட்சி), போலந்தில் (வார்சாவில் 2 காட்சிகள்), நெதர்லாந்தில் (8 செண்டர்கள்), டென்மார்க்கில் (10 செண்டர்கள்), இத்தாலியில், (இரு நகரங்களில்) என சிவாஜி கலக்கி வருகிறது.

தமிழர்கள் அதிகம் உள்ள ஆஸ்திரேலியாவில் சாதனை அளவாக 25 பிரிண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் 9 பிரிண்டுகளுடன் சிவாஜி ஓடிக் கொண்டுள்ளது.

மத்திய கிழக்கிலும் சிவாஜிக்கு அமோக வரவேற்பாம். துபாய், அபுதாபி, ஷார்ஜா, கத்தார், பஹ்ரைன் என பல நாடுகளில் சிவாஜி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளதாம். ஆகஸ்ட் வரை இங்கு சிவாஜியை ஓட்ட முடிவு செய்துள்ளனராம்.

இலங்கையில் 14 பிரிண்டுகளுடன் 9 மையங்களில் சிவாஜி திரையிடப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே இங்கும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு டிக்கெட்டுகள் புக் ஆகி விட்டதாம்.

கை வலிக்க வலிக்க அடிச்சாலும் சிவாஜி கதை நீண்டு கொண்டே போகுதப்பா!

நன்றி - தட்ஸ்தமிழ்.

12 comments:

Anonymous said...

vellaikaarangalum ithai paarkiraanga enbathu ROMBA TOOO MUCHngov....

உங்கள் நண்பன்(சரா) said...

யோவ் மோகந்தாஸு எங்கேயா இம்புட்டு நியூஸையும் புடிச்ச?.

உன் புள்ளிவிவரக் கணக்கைப் பாத்தா நீ கேப்டன் கட்சி ஆள் மாதிரில்ல தெரியுது!:))அன்புடன்....
சரவணன்.

பொன்ஸ்~~Poorna said...

//ஒரே பிராந்திய மொழிப் படம்//
என்னங்க சந்தடி சாக்குல தமிழைப் ஒரு பிராந்திய மொழிங்கிறீங்க! சிவாஜிக்கு வெளிநாட்டில் ஆதரவு கொடுத்தது பெருமளவில் ஈழத்தமிழர்கள் தானாமே!

மோகன்தாஸ் said...

அனானிமஸ், இங்க ஒரு மராத்திகாரன் சிவாஜி ரிலீஸ் ஆனதுலேர்ந்து "பேரைக் கேட்டாலே அதுருதுல்ல"வை ப்ராக்டிஸ் பண்ணி இப்ப சொல்லிக்கிட்டிருக்கான்.

இது ஒருவகையில் க்யூரியாசிட்டின்னு சொல்லலாம்.

மோகன்தாஸ் said...

சரவணன், எழுதியது நான் இல்லை. காப்பிபேஸ்ட் தட்ஸ்தமிழ்.

மோகன்தாஸ் said...

ஈழத்தையும் பிராந்தியத்தில சேர்த்திட்டாங்க்யலோ என்னவோ!

;)

Anonymous said...

http://www.ukfilmcouncil.org.uk/cinemagoing/boxoffice/?p=D4A157780f2371E93DpSw3A12BFB&skip=

சுவாமி said...

மோகன்தாஸ்,

நான் படிச்சது: மும்பை, தில்லி மாதிரி பெரிய ஊர் தவிர, Sholapur, Miraj, மாதிரி ஊர்களிலும், அதுவும்
subtitle இல்லாம release பண்ணி நல்லா ஒடிகிட்டு இருக்கு. அமெரிக்காவில் நான் இருக்கும் ஊரில் தமிழ் படம் வருவது மிக குறைவு. ஆனால் Sivaji, sold-out. தியேட்டருக்கு படம் பார்க்க வந்த மாதிரி தெரியல. ஒரு திருவிழாவிற்கு வந்த மாதிரிதான் இருந்தது. விசில், டான்ஸ், ஆர்பாட்டமாயிருந்துச்சு.

ரஜினி இதுக்கு மேலே எந்த உயரத்தை தொட போறார்னு தெரியலை. ஒரு வேளை, அடுத்த படத்துக்கு Chief Ministers எல்லாம் ஒரங்கட்டிட்டு, Manmohan Singh, Bush, Blair இவங்களுக்கு எல்லாம் preview show காமிக்கப் போறாரோ என்னவோ?!

ரஜினி ரசிகர்கள் இதுக்கு மேலெ பண்ணக்கூடியது ஒன்னுதான். HRHK, ரஜினிஷ் ஆஸ்ரம் மாதிரி, விசில்
சத்தம் எல்லாம் விட்டுட்டு ஒரு ஆன்மீக மயக்கத்தில் இடதும் வலதுமா ஆட வேண்டியதுதான்!

சுவாமி

சீனு said...

அட!!! தலைவர் உண்மையிலேயே கலக்கிக் கொண்டுதான் இருக்கார்.

படம் டெக்னிகலா நல்லா இருக்கு. ரஜினி என்னும் மாஸ் பின்னால் ஷங்கர் காணாமல் தான் போய்விட்டார். ஆனால், சிவாஜியின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஷங்கரின் உழைப்பு தெரிகிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் ரசித்து பார்த்தேன். இன்னும் சில தடவைகள் பார்க்க வேண்டியிருக்கு.

நல்லா தொகுத்திருக்கீங்க. எல்லோரும் சிவாஜியை (சும்மாங்காட்டியும்) திட்டிக் கொண்டிருக்க, இங்கே அதன் +ஆ? குட். கீப் இட் அப்.

Anonymous said...

இந்த கழிசடைப் படத்தை இண்டெர்நெட்டில் ஓசியா போட்டாகூட எவனும் பார்க்க மாட்டானு இதுவரைக்கும் போடல, என்ன சரியா?!

சீனு said...

//இதுவரைக்கும் போடல, என்ன சரியா?!//

Poottaachchu...Poottaachchu...

Anonymous said...

//சீனு said...

//இதுவரைக்கும் போடல, என்ன சரியா?!//

Poottaachchu...Poottaachchu... //


சும்மா சொல்லாதீரும்.. லின்க் குடுத்தா தான் நம்புவோம்