பெண்கள் விரும்பினால் ஹெல்மட் அணியலாம் : அரசின் பக்வாஸ் அறிவிப்பு

"சென்னை: இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஹெல்மட் அணிவதை அவர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜூன் 1ம் தேதி முதல் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளிலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்தது.

இந்த உத்தரவிலிருந்து பெண்கள், குழந்தைகளுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசைக் கோரியிருந்தார். ஆனால் விதி விலக்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கட்டாய ஹெல்மட் உத்தரவால் ஆறு மாநகரங்களிலும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவோர், அமர்ந்து செல்வோர் கடும் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக 1ம் தேதியன்று ஹெல்மட் அணியாமல் சென்றவர்களைப் பிடித்து போலீஸார் அபராதம் விதித்த முறை, கோர்ட்டுக்கு கூட்டிச் சென்ற விதம் மக்களை, குறிப்பாக பெண்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

இதையடுத்து ஹெல்மட் அணியும் உத்தரவை மிகக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டாம் என முதல்வர் கருணாநிதி காவல்துறையை அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ஹெல்மட் அணியாதவர்களிடம் போலீஸார் கெடுபிடி எதையும் காட்டவில்லை.

இந்தச் சூழ்நிலையில் இன்று தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில், இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் ஹெல்மட் அணிவதை அவர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகளுக்கு ஹெல்மட் அணியும் கட்டாயத்திலிருந்து விடுதலை கிடைத்துள்ளது. "

இப்படி ஒரு அறிவிப்பை அரசு வெளியிட்டிருப்பதற்காக தட்ஸ்தமிழில் படித்தேன். ஏன் பொண்ணுங்களுக்கு மட்டும் இந்த விலக்கு. தெரியவில்லை, ஏற்கனவே டபுள் மைண்டட்-ஆ வண்டி ஓட்டுபவர்கள் ஹெல்மட் போட்ட பிறகு வேறு சில உளவியல் பிரச்சனைகள் சந்திக்கிறார்களா தெரியவில்லை.

இந்த ஹெல்மெட் அறிவிப்பு போட்ட பொழுதே சொன்னது தான்; பெங்களூர் வந்து பாருங்கள் அழகாக இம்பிளிமெண்ட் செய்திருக்கிறார்கள். பொண்ணுங்களுக்கு, குழந்தைகளுக்கு என்று சமாதானம் செய்து கொண்டால் கடைசியில் இந்த ஹெல்மெட் விஷயத்தை இம்ப்ளிமெண்ட் செய்ய முடியாது அவ்வளவுதான்.

அவர்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது; ஹெல்மெட் உட்காரமாட்டேன் என்று சொல்வதற்கு. ஒரு பக்வாஸ் அறிவிப்பு.

14 comments:

Anonymous said...

பெண்கள் சீக்கிரமா போய் சேர்ந்தா தொல்லையில்லைன்னு அரசு நினைச்சிருக்கலாம். வாழ்க தமிழக அரசு :-)

சாத்தான்குளத்தான்

கவிதா | Kavitha said...

// ஏற்கனவே டபுள் மைண்டட்-ஆ வண்டி ஓட்டுபவர்கள் //

இதை கொஞ்சம் விளக்க முடியுமா?.. பெண்களுக்கு சாலையில் ஓட்ட பயமாக இருக்குமே அன்றி.. டபுள்/டிரிப்புள் மைண்ட் கண்டிப்பா கிடையாது.. எப்போதும் ஒருவித பயத்தோடு ஓட்டுவார்கள்.


//ஹெல்மட் போட்ட பிறகு வேறு சில உளவியல் பிரச்சனைகள் சந்திக்கிறார்களா தெரியவில்லை.//

எனக்கு நிறைய பிரச்சனை இருந்தது. .இன்னமும் இருக்கு.. காது சரியா கேட்கல, காற்றில் நகரும் உடையை சரிசெய்ய முடியவில்லை, சட்டென்று திரும்பி (இடது ,வலது) பார்க்கமுடியவில்லை, எல்லாவற்றிக்கும் மேல் தலையில் மிக பலுவாக இருக்கிறது. இது ஆண்களுக்கும் பொருந்தும், (உடையை தவிர), அபப்டி இருக்க உளவியில் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் எப்படி?

//அவர்களுக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது; //

ஹா..ஹா... :)) எதுக்கு உங்களுக்கு இப்படி சந்தேகம்.

பொன்ஸ்~~Poorna said...

எனக்கென்னவோ அண்ணாச்சி சொல்வது மாதிரி, பொண்ணுங்க சீக்கிரமா போய்ச் சேர்ந்தாத் தான் நாளடைவில், உளவியல் ரீதியா பலவீனப்பட்டு, வண்டி ஓட்டுவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா விலகி ஒழுங்கு மரியாதையா வீட்டில் உட்கார்ந்து நம்ம சொன்னத்த கேட்பாங்க என்னும் ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாத்தான் இந்த அறிவிப்பு தெரியுது.. (பெரிய்ய்ய்ய்ய வாக்கியம் ஹி ஹி, தாஸுக்கு எழுதுறோம்னதும் நானும் கொஞ்சம் புரியாத மொழியாப் பழகிப் பார்க்குறேன்.. )

எப்படியும் ஐதராபாத்தில் நாயுடுகாரு தலைக்கவசத்தைக் கட்டாயமாக்கிய காலத்துலேர்ந்து, போட்டுப் பழகிட்டதுனால இந்த அறிவிப்புகள், மறுப்புகள், பரிந்துரைகள் எதுவும் என்னைப் பாதிக்கலை.. அது பாட்டுக்கு அது..

பூனைக்குட்டி said...

கவிதா, வண்டி ஓட்டும் பொழுது வண்டி ஓட்டுவதை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்.

இரண்டாவது விஷயம் பயந்து கொண்டே வண்டி ஓட்டக் கூடாது. எனக்கு தெரிந்து பெரும்பான்மையான(பர்சன்ட்டேஜ்) பெண்கள் இதைச் செய்வதில்லை.

இங்கே ப்ரொக்கிராம் எழுதும் பொழுதே, குடும்பத்தை, கணவன் எந்தப் பெண்ணிடம் வழிந்து கொண்டிருக்கிறார், குழந்தை ஒழுங்காக இருக்குமா, கேஸ்-ஐ ஆஃப் செய்தோமா என்று ஆயிரம் யோசனைகள். இவைகள் எல்லாம் வண்டி ஓட்டும் பொழுது இருப்பதை தான் டபுள்-மைண்டட் என்று சொல்கிறேன்.

அதுமட்டுமில்லாமல் டிரைவ் செய்வதை என்ஜாய் செய்ய வேண்டும். என் பல ஆண் நண்பர்கள்(பர்சன்ட்டேஜ்) டிரைவ் செய்வதை ஆசையாக செய்து பார்த்திருக்கிறேன்.

//அபப்டி இருக்க உளவியில் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் எப்படி?//

உளவியல் காரணங்கள் இருக்கிறதா என கேட்டிருந்தேன் நான் சொல்லவில்லை என்றாலும் சில உதாரணங்களை மட்டும் கொடுக்கிறேன்(யாரோ ஒருவர் ஏற்கனவே சிலவற்றைக் கொடுத்திருந்தார். நான் சொல்வதும் கூட ஜல்லிக் காரணங்கள் தான்)

1) சேலை வண்டி ஓட்டும் பொழுது நழுவுகிறதா? அப்படி நழுவும் பொழுது பார்ப்பதற்காகவே வரும் MCB கள் எங்கே அதைப் பார்க்கிறார்களோ என்பதான பிரச்சனை ஆண்களுக்கு இருக்க முடியாது.

2) நாம் அழகழகாக பராமரிக்கும் தலைமுடி ஹெல்மட் அணிவதால் பாதிக்கப்படுமா?(இதைப் பற்றி கவலைப் படும் ஆணகளே இருக்கிறார்கள் எனும் பொழுது(நான் தான்) பெண்கள் இருக்கமாட்டார்கள் என்றில்லை. ஆனால் % வித்தியாசம் இருக்கும். ஹிஹி)

பூனைக்குட்டி said...

//பொண்ணுங்க சீக்கிரமா போய்ச் சேர்ந்தாத் தான் நாளடைவில், உளவியல் ரீதியா பலவீனப்பட்டு, வண்டி ஓட்டுவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா விலகி ஒழுங்கு மரியாதையா வீட்டில் உட்கார்ந்து நம்ம சொன்னத்த கேட்பாங்க என்னும் ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடாத்தான் இந்த அறிவிப்பு தெரியுது.//

பொன்ஸ் இதைத் தான் சொல்ல இருந்தேன். அப்படி ஹெல்மெட் போட்டுக்கொண்டு வண்டி ஓட்ட முடியுமென்றால் ஓட்டட்டும் இல்லையென்றால் வீட்டிலே உட்கார்ந்து அடுப்பூதட்டும் என்று.

அப்புறம்

"மாட்டை அடக்கி வசக்கி தொழுவத்தில் மாட்டும் வழக்கத்தை கொண்டு வந்தே; வீட்டிலும் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டி விட்டோம் என்று கும்மியடி" சொன்ன(வரிகளில் தவறிருக்கலாம்) மீசைக்காரன் சாட்டையோட வந்துட்டான்னா என்ன செய்வேன் சொல்லுங்க.

ஆனா நான் பொண்ணா இருக்கிறதால ஹெல்மெட் போடமாட்டேன்னு சொல்ற பொண்ணுங்களுக்காக சப்போர்ட் பண்ணி பாரதி வரமாட்டான் என்ற நம்பிக்கையில் இதை "பதிவு" செய்கிறேன். ஹிஹி.

பொன்ஸ்~~Poorna said...

MCB => MCP?

பூனைக்குட்டி said...

ஆமாம் பொன்ஸ் அது MCP தான். பாருங்க எனக்கு அதைக் கூட சரியாச் சொல்ல வரமாட்டேங்குது. ஆனா என்னையே ஒரு MCP ன்னு சொல்றாங்க :(.

Anonymous said...

ஆமாண்டா மோக்னா,

MCB க்கும் MCP க்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவிங்களை MCP ன்னு சொல்லுற் அளவுக்குத்தான் பொம்பளைங்க இருக்காங்க. அதனாலதான் அரசே அவங்களுக்கு 'அரோகரா' போடுது போல. வாழ்க தமிழக அரசு :-)

சாத்தான்குளத்தான்

வெட்டிப்பயல் said...

Male Chauvanist Pigனு சொல்லறதுக்கு அசிங்கப்பட்டு Male Chauvanist Buffaloனு சொல்றீங்களோனு நினைச்சேன் :-))

கவிதா | Kavitha said...

//இங்கே ப்ரொக்கிராம் எழுதும் பொழுதே, குடும்பத்தை, கணவன் எந்தப் பெண்ணிடம் வழிந்து கொண்டிருக்கிறார், குழந்தை ஒழுங்காக இருக்குமா, கேஸ்-ஐ ஆஃப் செய்தோமா என்று ஆயிரம் யோசனைகள்.//

நீங்க டபுள் மைண்ட போட்ட அப்பவே நினைத்தேன்..நீங்க இதை நினைத்து தான் சொல்லியிருப்பீர்கள் என்று- சரிதான்.. உண்மை.. உங்களுக்கு பிற கவலைகள் இல்லை.. ஏன்னா அந்த கவலைகள் எல்லாமே பெண்கள் பார்த்துக்கொள்வதால்.. ஆனால் கண்டிப்பாக வண்டி ஓட்டும் போது இதை எல்லாம் பெண்கள் நினைத்து கொண்டு ஓட்டுவதில்லை. இது அலுவலகத்தில் மட்டுமே :)

//இரண்டாவது விஷயம் பயந்து கொண்டே வண்டி ஓட்டக் கூடாது. எனக்கு தெரிந்து பெரும்பான்மையான(பர்சன்ட்டேஜ்) பெண்கள் இதைச் செய்வதில்லை.//

பெண்களுக்கு என்றாலே அவர்களுக்கு என்று சில இயற்கை குணங்கள் உண்டு. அதில் பயமும் ஒன்று. வீட்டில் கரப்பான்பூச்சி க்கு பயப்படும் பெண்கள் எத்தனை பேர் என்னையும் சேர்த்து. :). ஆண்களை போன்று அத்தனை எளிதாக அவர்கள் வண்டிகளை ஓட்டுவதில்லை தான். அதற்கு நல்ல பழகவேண்டும், அதுவும், ஆண்கள் பழக்கி கொடுக்க வேண்டும். அப்போது தான் அந்த பயம் போகும்.

எத்தனை வீட்டில் அப்பாக்கள் தன் மகளை சுதந்திரமாக விடுகிறார்கள். ஒருமுறை எங்கேயாவது முட்டிவிட்டால் கூட வண்டி ஓட்டக்கூடாது என்று உள்ளே தூக்கி வைத்துவிடுகிறார்கள். பயம் என்பது வீட்டிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.

//சேலை வண்டி ஓட்டும் பொழுது நழுவுகிறதா? அப்படி நழுவும் பொழுது பார்ப்பதற்காகவே வரும் MCB கள் எங்கே அதைப் பார்க்கிறார்களோ என்பதான பிரச்சனை ஆண்களுக்கு இருக்க முடியாது.//

உண்மை எனக்கே இருக்கிறது. அதாவது மிகவும் கவனமாக உடை உடுத்தி சென்றாலுமே காற்றில் நழுவி விட்டால் அது அடுத்தவரின் கவனத்தை சிதற செய்யக்கூடாது என்ற எண்ணம்.

சில ஆண்கள் குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் சிலர், கேலியும் கிண்டலும் செய்து டீஸ் செய்து என்னுடைய கவனத்தை சிதற செய்வார்கள். இது விபத்துக்கு வழி வகுக்கும். இது எனக்கு மட்டும் அல்ல, பலருக்கு இப்படி நடந்து நான் பார்த்து இருக்கிறேன். அதனால் உடை கவனம் தேவை என்று நான் நினைப்பதுண்டு.

மற்றபடி நீங்கள் சொல்லியபடி உளவியல் ரீதியாக எந்த பெண்ணும் வண்டி ஓட்டும் போது பாதிக்கபடுவதில்லை.

அலுவலக வேலையையும், வண்டி ஓட்டுவதையும் குழப்பி கொள்ளாதீர்கள். :)

Anonymous said...

அய்யா, உங்க காமெடிக்கு ஒரு எல்லையே இல்லையா?
சரி, அரசோட உத்தரவு என்ன?
//அதில், இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகள் ஹெல்மட் அணிவதை அவர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.//
அதாவது பெண்களும் வண்டி ஒட்டும்போது போட வேண்டாம்னு சொல்லலை. அவங்க பின்னாடி உக்காந்து போகும் போதுதான் போடத்தேவையில்லைன்னு அறிவிப்பு சொல்லுது. இதை தெளிவா பின்னால் உக்காந்து போறவங்க போடத்தேவையில்லைன்னு சொல்லியிருந்தா பிரச்சனையே இல்லை. ஆனாக்க பெரும்பாலும் பின்னால் உட்கார்ந்து போறதுல அதிகம் பர்சன்டேஜ் பெண்களும் குழந்தைகளுமாய் இருப்பதால், அந்த வார்த்தை அங்க வந்திருக்கு. அவ்ளோதான். இதுல எங்கேர்ந்து வந்தது பொண்ணுங்களுக்கு டபுள் மைன்ட், ட்ரிபிள் மைன்ட் கான்செப்ட் எல்லாம்???? உங்க கலர் கண்ணாடிய கழட்டிட்டு உலகத்தை பாருங்க சார். இல்லைன்னா எல்லாமே கலர் கலராத்தான் தெரியும்.

Anonymous said...

ஒரு சின்ன திருத்தம்.
//உங்க கலர் கண்ணாடிய கழட்டிட்டு உலகத்தை பாருங்க சார். இல்லைன்னா எல்லாமே கலர் கலராத்தான் தெரியும்.//
இல்லைன்னா எல்லாமே ஒரே கலராத்தான் தெரியும்னு இருந்திருக்கணும்.

Jazeela said...

அரசாங்கத்திற்கு அழகு முகங்கள் பார்க்க வேண்டும் ஹெல்மெட் அதை தடைப் பண்ணும் பாருங்க, அதற்காகத்தான் அந்த சலுகை ;-)

ஒருவேளை நீங்க சொன்னா மாதிரி கொம்பு இருப்பதால் ஹெல்மட் மாட்டுவது சிரமம் தானே அதான் ;-)

மா சிவகுமார் said...

//ஆண்களை போன்று அத்தனை எளிதாக அவர்கள் வண்டிகளை ஓட்டுவதில்லை தான். அதற்கு நல்ல பழகவேண்டும், அதுவும், ஆண்கள் பழக்கி கொடுக்க வேண்டும். அப்போது தான் அந்த பயம் போகும்.//

வண்டிகளை வடிவமைப்பதில், பெண்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்ற அமைப்புகள் ஒரு பிற்சேர்க்கையாகவே இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

பெண்களுக்கென்று பெண்களால் உருவாக்கப்படும் வண்டிகள் இப்போதைய வடிவில் பெரிதும் மாறுபட்டு இருக்கலாம். அத்தகைய வண்டிகளை இன்னும் பெரு எண்ணிக்கையிலான பெண்கள் எளிதாக, நம்பிக்கையுடன் ஓட்ட முடியலாம்.

அன்புடன்,

மா சிவகுமார்