ஏமாற்றும் பெண்களுக்கு இதுவொரு பாடமாக இருக்கவேண்டும் - பிரசாந்த் பேட்டி

இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக... என்று டி.வி.சேனல்களில் போடப்படும் புதுப்படங்களுக்கு விளம்பரம் கொடுப்பார்கள். அதுபோல நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மனைவியிடம் இரண்டு கணவர்கள் ஒரே நேரத்தில் விவாகரத்துக் கேட்டு வழக்குப் போட்டிருக்கிறார்கள். நடிகர் பிரசாந்தின் மனைவி கிரகலட்சுமியிடம் அவருடைய முதல் கணவர் வேணுபிரசாத்தும் இரண்டாவது கணவரான நடிகர் பிரசாந்தும் விவாகரத்துக் கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் பிரசாந்த் மீது பல்வேறு புகார்களைக் கூறிவந்த கிரகலட்சுமி, முதல் திருமணம் செய்து கொண்ட விவகாரம் வெளியானதிலிருந்து கப்சிப் ஆகிவிட்டார். பிரசாந்தோ, இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சுடன் வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், நாம் பிரசாந்தை சந்தித்துப் பேசினோம்.

மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கக் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று வந்திருக்கிறீர்களே?

‘‘எனக்குக் கல்யாணம் நடக்கும் வரை திருமணத்துக்குப்பின் இத்தனை சிக்கல்களும் சங்கடங்களும் இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. கிரகலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டு அவர் என்மீது சொன்ன பொய்யான குற்றச்சாட்டுகளையும் அதன்மூலம் ஏற்பட்ட அசிங்கங்களையும் தாங்கிக்கொண்டு நான் பட்ட அவஸ்தைகள் எனக்கு மட்டுமே தெரியும். அது மட்டுமின்றி வரதட்சனைக் கொடுமை என்ற சட்டத்தைப் பெண்கள் எப்படி எப்படியெல்லாம் தவறாகவும் தங்களுக்குச் சாதகமாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை என்னால் அனுபவப்பூர்வமாகத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இதுபோல் மனைவிகளால் பாதிக்கப்பட்டோர் சுமார் மூவாயிரம் பேர் சேர்ந்து ஒரு சங்கத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தார்கள். நானும் அதில் கலந்துகொண்டு வரதட்சணைக்கொடுமை சட்டத்தால் நான் எப்படிப் பாதிக்கப்பட்டேன் என்பதை அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.’’

உங்களை மனைவி கிரகலட்சுமியிடம் அவரது முதல் கணவர் வேணு பிரசாத்தும், நீங்களும் ஒரே நேரத்தில் விவாகரத்துக் கேட்டு வழக்குப் போட்டிருக்கிறீர்களே?

‘‘இது மிகவும் அசிங்கமான சூழ்நிலை. இந்த அசிங்கம் என் வாழ்க்கையில் நடந்திருப்பதை நினைத்தால் மிகவும் சங்கடமாக இருக்கிறது.’’

கிரகலட்சுமியின் முதல் கணவர் வேணுபிரசாத் பற்றி?

‘‘அவரைப் பற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் கல்யாணமாகி சில மாதங்கள் மட்டுமே கிரகலட்சுமியுடன் குடும்பம் நடத்திய நான், அவரால்பட்ட கஷ்டங்களை நினைக்கும்போது... கிரகலட்சுமியுடன் மூன்று ஆண்டுகள் தொடர்பில் இருந்ததாக வேணுபிரசாத் கூறியுள்ளார். அந்த நாட்களில் வேணுபிரசாத் எவ்வளவு அவஸ்தைப்பட்டார் என்று அவருக்குத்தான் தெரியும்.’’

கிரகலட்சுமியும் தானும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதில்லை என்று வேணுபிரசாத் கூறியுள்ளாரே?

‘‘ஆரம்பத்தில் கிரகலட்சுமி தனக்கு வேணுபிரசாத்துடன் திருமணமே நடக்கவில்லை. இந்த ஆவணங்கள் எல்லாமே பொய் என்று கூறினார். அதன் பிறகு நீதிமன்றத்துக்குப் போய் முன் ஜாமீன் வாங்கியிருக்கிறார். இப்போது அவருடைய முதல் கணவர் ‘கல்யாணம் நடந்தது உண்மைதான். ஆனால் தாம்பத்திய உறவுதான் இல்லை’ என்று கூறியிருக்கிறார். இந்தப் பொய்களுக்கும் அசிங்கத்திற்கும் நான் விளக்கம் கூற விரும்பவில்லை’’.

வேணுபிரசாத் உங்களை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

‘‘அந்த அருவருப்பான சூழ்நிலைக்கு ஆட்பட நான் தயாராக இல்லை. இரண்டு பேர் காதலிக்கும் போது தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று கூறினால் கூடப் பரவாயில்லை. திருமணமாகி ஒரு வருடம் தொடர்பில் இருந்ததாக அவரே கூறிவிட்டு, தங்களுக்குள் தாம்பத்ய உறவு இல்லை என்று கூறிவருது அபத்தமானது. நானும் கிரகலட்சுமியும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறேன். இனி அதற்கான வழியே இல்லை. கிரகலட்சுமி Êஏற்கெனவே திருமணமானவர் என்ற ஆதாரங்களைக் கொடுத்துத்தான் நான் விவாகரத்தே கேட்டிருக்கிறேன். அது மட்டுமின்றி வேணுபிரசாத் ஏற்கெனவே குமுதம் ரிப்போர்ட்டருக்குக் கொடுத்திருந்த பேட்டியில், எனக்கும் கிரகலட்சுமிக்கும் ஆரம்பத்தில் பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றம் வரை போன போது, இந்தப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்து நானும் கிரகலட்சுமியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகக் கூறியிருந்தார். பிரச்னை பெரிதாகி தனக்கும், கிரகலட்சுமிக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்று தான் பயந்ததாகவும் கூறியிருந்தார். இந்தக் குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லாமல், நான்தான் ஏதோ பெரிய தவறைச் செய்துவிட்டு அதை மறைத்து கிரகலட்சுமியைத் திருமணம் செய்து கொண்டதைப்போல் என்னை அசிங்கப்படுத்திச் சீரழிக்க நினைத்தார் கிரகலட்சுமி. ஆனால் நான் வணங்கும் தெய்வம் என்னைக் காப்பாற்றி விட்டது.’’

கிரகலட்சுமி விவகாரத்தில் நீங்கள் மிரட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

‘‘திருமணமானதிலிருந்தே நல்லபடியாகக் குடும்பம் நடத்த வேண்டும்; சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற எண்ணமே கிரகலட்சுமிக்கு வந்ததில்லை. தன் இஷ்டத்துக்கு ஊர் சுற்றவேண்டும். நள்ளிரவுவரை கிளப்புகளில் கூத்தடிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். அத்துடன் எந்த நேரமும் என் பணத்தின்மீதே குறியாக இருந்தார். அவருடைய குடும்பத்துக்குப் பல்வேறு மட்டத்தில் தொடர்பிருப்பதால் அந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி என்னிடமிருந்து கோடிகளில் பணம் பறித்துவிட வேண்டும் என்பது அவர்களின் கணக்கு. அதற்காக மறைமுகமாக மிரட்டிப் பார்க்கிறார்கள். நான் நீதியின் மேல் நம்பிக்கையுள்ளவன். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன். சட்டப்படி நீதிமன்றத்தில் விவாகரத்து வாங்குவேன்!’’

கிரகலட்சுமியிடம் விவாகரத்து வாங்கிய பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா?

‘‘கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு முதலில் இந்தத் தலைவலிகளிலிருந்து வெளியில் வர வேண்டும் என்பதுதான் எனது இப்போதைய எண்ணம். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் முழு கவனம் செலுத்துவேன். மறுபடியும் திருமணம் பற்றியெல்லாம் நினைக்கும் நிலையில் நான் இப்போது இல்லை!’’

‘‘ஏமாற்றும் பெண்களுக்கு இதுவொரு பாடமாக இருக்கவேண்டும்!’’

பிரசாந்த் _ கிரகலட்சுமி விவகார வழக்குப் பற்றி பிரசாந்தின் வழக்கறிஞர் ஆனந்தனிடம் கேட்டோம். ‘‘கிரகலட்சுமியிடமிருந்து பிரசாந்த் விவாகரத்து வாங்க, கிரகலட்சுமி ஏற்கெனவே திருமணமானவர் என்ற ஆதாரங்களே போதுமானது. அதில் எந்தச் சிக்கலுமில்லை. ஆனால் எங்களின் நோக்கம் அதுமட்டுமல்ல. ஏற்கெனவே திருமணமானதை மறைத்து ஒரு பிரபல நடிகரின் வாழ்க்கையையே சீரழித்துள்ளார் கிரகலட்சுமி. இது கிரிமினல் குற்றம். இதனடிப்படையில் கிரகலட்சுமி மீது கிரிமினல் வழக்குப் போட்டு அவருக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். அதுதான் கிரகலட்சுமியால் பிரசாந்த் பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரம். கணவர்களை ஏமாற்றும் மற்ற பெண்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும். எனவே, கிரகலட்சுமிக்கு சிறைத்தண்டனை கிடைக்கும்வரை நாங்கள் ஓயப் போவதில்லை!’’ என்றார்.

நன்றி - குமுதம் ரிப்போர்ட்டர்

சாரி - அதைச் சொன்னது பிரசாந்தின் வக்கீல் Grrr. கொஞ்சம் குழப்பமாய்டுச்சு.

2 comments:

Anonymous said...

பிரசாந்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. பாவம், நல்ல மனிதர். போயும் போயும் இந்த திமிர் பிடித்த அகங்காரப் பெண் கிரகலட்சுமிதானா கிடைத்தாள் அவருக்கு?

கிரகலட்சுமி சொல்வதெல்லாம் அபாண்டமான பச்சைப் பொய்கள். அவள் முதல் கல்யாணம் செய்து கொண்டதைப் பற்றி செய்தி வெளியானதும் கப்சிப் ஆகிவிட்டவர்... வக்கீல்கள் வீட்டுக்குள் வைத்து படித்துப் படித்து சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளையாய் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்பித்திருக்கிறார்.

கிரகலட்சுமிக்கு எதுவுமே தெரியாதாம்... யாரோ ஒரு பெண்ணை வைத்து அவளது கையெழுத்தைப் போட்டு பதிவுத் திருமணம் செய்து விட்டார்களாம். நான் பார்த்த வரையில் பதிவுத் திருமணம் செய்யும்போது கைவிரல் ரேகையும் பதியச் சொல்கிறார்களே? ஒருவேளை அதுவும் இருந்திருந்தால்... இந்த கிரகலட்சுமி, நான் போதையில் இருந்தபோது என் கட்டைவிரல் ரேகையை பதிந்து விட்டார்கள் என்று சொல்வாளோ? ஒண்ணுமே தெரியாத பாப்பா பாருங்கள்... வாயில் விரலை வைத்தால் கூட கடிக்கத் தெரியாது, பாவம்!!

இவளை மாதிரி பணத் திமிர் பிடித்த பெண்களையெல்லாம் முச்சந்தியில் நிற்க வைத்து கல்லெறிய வேண்டும். இவளை சொல்லி குற்றமில்லை...

இவளது அப்பாவாமே, ஏதோ சென்னை தி.நகரில் "பிரபல" தொழிலதிபர் என்று பத்திரிகையில் எழுதுகிறார்களே?!!

ஒரு வேளை குமரன் சில்க்ஸ், தங்க மாளிகை அல்லது சரவணா ஸ்டோர்ஸ் வீட்டு பெண்ணாக இருப்பாளோ? ஏழைகளை ஏமாற்றி கோடிக் கணக்கில் கொழிக்கும் அந்த தொழிலதிபர்கள் வீட்டுப் பெண்கள் இது மாதிரி ஊர்தான் மேயும்!! வேறு எப்படி இருக்கும்?

அந்தக் கடையின் பெயர் மட்டும் வெளியில் தெரிந்தால்... பிரசாந்த் ரசிகர்கள் பொங்கி எழுந்து, கடையை சூறையாடி விடுவார்களே!!

Anonymous said...

How about prashanth who
CHEATED many girls to make his favourite sneka act in his bloody movie? Didnt he cheat others to make sneka laugh like pig?