ஹாலிவுட்டில் ஒரு MCP
வேறுயாருமில்லை ஜென்டில்மேன் எல்லாம் நம்ம டாம் க்ரூஸ் தான், அவரை விட கேத்தி ஹோம்ஸ் உயரமானவர் என்பதால் இருவரும் ஒன்றாய் நடந்து வரும் சந்தர்ப்பங்களை டாம் பெரும்பாலும் தவிர்த்துவிடுவார் என்பது. அவர்களை இரண்டு வருடங்களாய் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கும்.

சாதாரணமாகவே கேத்தி ஹோம்ஸ் உயரமான ஹை ஹீல்ஸ் போடும் பழக்கம் உடையவர் என்பது, அவரை டாம் க்ரூஸின் மனைவி என்பதை விடவும் ஒரு நடிகையாக அறிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இப்பொழுது அப்படிப்பட்ட கேத்தி ஹோம்ஸை சாதாரணமான ஹீல்(அப்படி சொல்லமுடியாதுன்னாலும்) போட்டு அழைத்து வரும் டாம் க்ரூஸை என்னவென்று சொல்வது.

அப்படி ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கும் சமயத்திலும் கால்களைக் குறுக்கி டாம் உயரமானவர் என்று நிரூபிக்க நிறைய பிரஸ்தாபப்படுவார். Okay jokes apart கேத்தி ஹோம்ஸ் மீண்டும் முழுகாமல் இருக்கிறார் என்று ஏஜென்ஸி செய்திகள் சொல்கின்றன.போன தடவையே சூரி க்ரூஸை மையமாக வைத்து ஏகப்பட்ட வதந்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் குழந்தை அட்டகாசமாக வளர்ந்து வருகிறது.
இந்தப் படத்தில் டாம், கேத்தி ஹோம்ஸ் தவிர இருப்பது நம்ம "ரோபாட்" விக்டோரியா பெக்கம் தான். டாடி என்று அணிந்திருப்பது ப்ரூக்ளின் என்று நினைக்கிறேன்.

0 comments: