Victoria Beckham hates bloggers

முதலில் விக்டோரியா பெக்கம் யாரு, அவருக்கு ப்ளாக்கர்ஸ் பிடிக்காதது ஏன்னு நான் ஏன் தெரிஞ்சிக்கணும். அப்படிங்கிற கேள்வி நம்மில் பலருக்கு எழ வாய்புண்டு. விக்டோரியா பெக்கம் என்பது டேவிட் பெக்கமின் மனைவி, முன்னால் ஸ்பைஸ் கேர்ள்ஸில் ஒருவர். (டேவிட் பெக்கம் யார்னு தெரியாதவங்க எல்லாம் வரிசையில் நில்லுங்க...)



இந்தம்மா பத்தி ஹாலிவுட்(இந்தம்மா இங்கிலாந்து) ப்ளாக்கர்கள் எழுதிவரும் விஷயங்களால் மனதுடைந்து இப்போது இப்படி புலம்பியிருக்கிறார் அம்மணி.

"I think these people are pretty spineless, the way they hide behind pseudo-names," says Victoria Beckham to Neil Sean of Sky News.

"They don't really know what's going on in anybody's lives. They're just sad people that sit behind their computers."

இந்தம்மா பத்தி வரும் செய்திகளைப் படித்தால் வேடிக்கையாகயிருந்தாலும், அந்தம்மாவின் மனநிலையில் நின்று பார்த்தால் கஷ்டமாகவும் இருக்கும். என்ன செய்வது பொதுவாழ்க்கை என்பது இத்தகைய சிக்கல்கள் உள்ளடக்கியது தானே.

1 comments:

Anonymous said...

மக்கா,

பெக்காம் யார் கூடயோ படுத்துட்டாரு, இவங்க ரெண்டு பேரும் பிரியப் போறாங்கன்னு வெள்ளைக்காரனுவ பத்திரிகைல ஓலம் போட்டு இப்பத்தன் ஓஞ்சு போயிருக்கானுவ.

இந்தம்மாவுக்கு தொப்பை அதிகமாயிடுச்சு, ரொம்ப ஒல்லிப்பிச்சானா இருக்குன்னு திரும்ப தொடங்குனானுங்க.போதாக்குறைக்கு நீரு வேறயாக்கும். நல்லா இருடே!!

சாத்தான்குளத்தான்