'நிமிட்ஸ்' வீரர்கள் ஜாலிக்கு துணை நடிகைகள், மாடல் அழகிகள் ஏற்பாடு!!!

சென்னை: சென்னை வந்துள்ள அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸில் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகள், ஊழியர்கள் நேற்று ஆட்டோக்களில் ஏறி சென்னை நகரை வலம் வந்து சுற்றிப் பார்த்தனர்.

அவர்கள் சென்னையில் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து மாடல் அழகிகள், துணை நடிகைகளுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம்.

அமெரிக்காவின் பிரமாண்ட அணு சக்தி போர்க் கப்பல் நிமிட்ஸ் சென்னைக்கு வந்துள்ளது. நேற்று காலை சென்னை வந்த நிமிட்ஸ், துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் நிமிட்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து குட்டி கப்பல்கள் மூலம் நிமிட்ஸ் வீரர், வீராங்கனைகள், ஊழியர்கள் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.

அவர்களை சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் சென்னை நகரம் குறித்து அமெரிக்க வீரர்களிடையே காவல்துறை சார்பில் சிற்றுரை நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் சென்னை நகரை சுற்றிப் பார்க்க ரெடியா என்று காவல்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அமெரிக்கர்கள், சிறு குழந்தைகள் போல எஸ் போட்டனர்.

எப்படிப் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது பெரும்பாலானவர்கள் ஆட்டோவில் சவாரி செய்ய விரும்புவதாக கூறினர். இதையடுத்து ஆட்டோக்கள் வரவழைக்கப்பட்டன. வரிசையாக நிறுத்தப்பட்ட ஆட்டோக்களில் இரண்டு பேராக, மூன்று பேராக, நான்கு பேராக அமெரிக்க வீரர், வீராங்கனைகள் ஏறிக் கொண்டனர்.

பெரும்பாலான ஆட்டோக்களில் ஜோடி ஜோடியாக வீரர், வீராங்கனைகளைப் பார்க்க முடிந்தது. ஆட்டோக்களில் பயணம் செய்பவர்கள் யார், அந்த ஆட்டோவின் எண், டிரைவர் பெயர் ஆகியவற்றை முன்கூட்டியே போலீஸார் குறித்து வைத்துக் கொண்டனர். பின்னர் ஆட்டோக்கள் கிளம்பின.

சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆட்டோக்கள் சென்றன. சென்னை சென்டிரல் ரயில் நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட பல இடடங்களுக்குச் சென்று அமெரிக்க வீரர், வீராங்கனைகள் சுற்றிப் பார்த்தனர்.

சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை மின்சார ரயிலிலும் பயணம் செய்து சந்தோஷப்பட்டனர். அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவுக்குள்ளும் புகுந்தனர். கைக்குக் கிடைத்த பொருட்களை பர்ச்சேஸ் செய்து மகிழ்ந்தனர்.

அமெரிக்க வீரர், வீராங்கனைகளுக்காக சென்னை நகரில் உள்ள 18க்கும் மேற்பட்ட ஸ்டார் ஹோட்டல்களில் அறைகள் போடப்பட்டுள்ளன. இங்குதான் அவர்கள் தங்கியிருக்கப் போகிறார்கள்.

கடலிலேயே பல மாதங்களாக இருந்து வந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் பல வகையான ஏற்பாடுகளை அமெரிக்க தூதரகம் தடபுடலாக செய்து வைத்துள்ளது.

வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான மாடல் அழகிகளை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனராம். இது தவிர கோலிவுட் துணை நடிகைகள் பலரும் கூட 'ஏற்பாடு' செய்யப்பட்டுள்ளனராம்.

வீரர்கள் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல்களில் மது விருந்து, டான்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்துகளில் மாடல் அழகிகளும், துணை நடிகைகளும் கலந்து கொண்டு அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்தவுள்ளனர்.

வெளிநாட்டு மாடல் அழகிகளை கலாச்சாரக் கோஷ்டி என்ற பெயரில் கூட்டி வந்து தங்க வைத்துள்ளனர். அமெரிக்க வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும், நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதைத் தவிர வேறு வேலையே அவர்களுக்குக் கிடையாதாம்.

அமெரிக்க வீரர்கள் ஜாலி செய்யும் ஹோட்டல்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சென்னை தவிர மாமல்லபுரத்தில் உள்ள ஜி.ஆர்.டி டெம்பிள் பே, ஸ்டெர்லிங், பார்ச்சூன், ஐடியல் பீச் ஆகிய இடங்களிலும் அமெரிக்க வீரர்களில் ஒரு பிரிவினர் தங்குகின்றனர்.

இதையொட்டி மாமல்லபுரம் மற்றும் கோவளம் ஆகிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மிதக்கும் நகரம் - நிமிட்ஸ்:

நிமிட்ஸ் கப்பலை ஒரு மிதக்கும் நகரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு நகரில் உள்ள அத்தனை வசதிகளும் இந்தக் கப்பலில் உள்ளன.

நாலரை ஏக்கர் பரப்பளவில் இந்த ராட்சத கப்பல் உள்ளது. மொத்தம் 23 அடுக்குகளை (மாடிகள்) கொண்டதாக நிமிட்ஸ் கப்பல் உள்ளது. ஆனால் கடல் மட்டத்துக்கு மேலே 5 மாடிகள் மட்டுமே உள்ளன. மற்றவை தண்ணீருக்குக் கீழே உள்ளன.

சென்னை வந்துள்ள நிமிட்ஸ் கப்பலில் 6 வகையான 62 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்களும் உள்ளன. கடலில் நின்றாலும் கூட சற்றும் அசைவில்லாமல் 'கன்' மாதிரி நிற்கிறது நிமிட்ஸ்.

நிமிட்ஸ் கப்பலின் மேல் தளத்திற்குச் செல்ல 4 ராட்சத லிப்ட்டுகள் வைத்துள்ளனர். ஒரே நேரத்தில் 100 பேர் வரை இந்த லிப்ட்டில் பயணிக்க முடியும். இதுதவிர மேல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்களில் ஏதாவது பழுது ஏற்பட்டால் லிப்ட்டுகள் மூலம் கீழ் தளத்திற்குக் கொண்டு வருகிறார்கள். அந்த இடம் மிகப் பெரும் தொழிற்சாலை போல காணப்படுகிறது.

கப்பலின் மேல் தளத்தில் கார்களும் உள்ளன. கப்பலின் 'இந்தாண்டை'யிலிருந்து 'அந்தாண்டை' செல்வதற்கு இந்தக் கார்களைப் பயன்படுத்துகிறார்கள்.

கப்பலில் 5,000 பேருக்கு தினசரி 20 ஆயிரம் சாப்பாடு தயார் செய்யப்படுகிறது. வீரர், வீராங்கனைகள் பயன்படுத்தும் துணிமணிகளை சலவை செய்ய ராட்சத வாஷிங் மெஷின் உள்ளது. முடிவெட்டிக் கொள்வற்காகவே 2 சலூன்களையும் கப்பலில் வைத்துள்ளனர். வாரத்திற்கு 1,500 பேர் வரை முடி வெட்டிக் கொள்வார்களாம்.

ஒரு தையல்காரரும் கடையில் ... அதாவது கப்பலில் உள்ளார். இதுதவிர நவீன மருத்துவமனை ஒன்று உள்ளது. 53 படுக்கைகளைக் கொண்டது இந்த மருத்துவமனை. அதில் அவரச சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன. பல் டாக்டர்கள், இதயநோய் மருத்துவர், மன நல மருத்துவர் உள்பட பல்வேறு பிரிவு டாக்டர்களும் உள்ளனர்.

இதெல்லாம் போக ஒரு சிறிய சர்ச்சும் உள்ளது. அங்கு 3 பாதிரியார்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கும் போர்க் கலைகள் தெரியுமாம். எதிரிகள் தாக்க வந்தால் 'அட்டாக்' பண்ணக் கூடிய பாதிரியார்களாம் இவர்கள்.

அப்புறம் ஒரு தபால் அலுவலகம் இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு 10 லட்சம் தபால்கள் வீரர், வீராங்கனைகளுக்கு வருகிறதாம். கூடைப்பந்து, ரக்பி போன்றவை விளையாட மைதானமும் உள்ளன. ரக்பிக்காக தனித் தனி அணிகளும் உள்ளன. போரின்போது எதிரிகளுடன் விளையாடும் வீரர், வீராங்கனைகள், போர் இல்லாதபோது அவர்களுக்குள் விளையாடிக் கொள்வார்களாம்.

அமெரிக்க வீரர், வீராங்கனைகளைப் பார்க்கும்போது படு க்யூட்டாக இருக்கிறார்கள். ஆண்கள் பெரும்பாலும் 25 வயதுக்குள்தான் இருப்பார்கள் போலத் தெரிகிறது. பெண்களும் குறைந்த வயதினர்தான் அதிகம். பெண்களுக்கு அமெரிக்க கடற்படையில் நல்ல முக்கியத்துவம் தரப்படுமாம். நிமிட்ஸ் கப்பலில் கூட ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது.

ஆண்கள் அனைவரும் படு கச்சிதமாக இருக்கிறார்கள். அத்தனை பேரும் கட்டுமஸ்தாக, நல்ல உயரமாக, கம்பீரமாக இருக்கிறார்கள். தொப்பையை ஒருவரிடம் கூட பார்க்க முடியவில்லை. நம்ம ஊர் போலீஸ்காரர்கள் எல்லாம் இவர்களைப் பார்த்து தொப்பையில்லாமல் வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ளளாம்.

மொத்தத்தில் நிமிட்ஸ் ஒரு கப்பலே இல்லை, மிதக்கும் நகரம் என்று கூறலாம். இப்படிப்பட்ட மிதக்கும் நகரங்கள் அமெரிக்காவிடம் 11 இருக்கிறதாம்.

நன்றி தட்ஸ்தமிழ்

10 comments:

Unknown said...

ச்ச நான் அமேரிக்க குடிமகனாக இல்லையே அப்படி இருந்திருந்தால் நிச்சயமாக இந்த கப்பலில் தான் வேலைக்குச் சேருவேன் :‍)

நாந்தானுங்க.. said...

நமக்கெல்லாம் பாக்கவாவது குடுத்து வச்சிருக்கா...?

said...

ஈராக்கின் இரத்த சகதியோடு எழுந்து வந்திருக்கும் வீரர்களுக்கு(?) இரத்தின கம்பள வரவேற்பு, நட்சத்திர விடுதி, உல்லாசமாய் இருக்க நடிகைகள், அதற்கு ஏற்பாடு செய்ய ஒரு தூதரகம், விளக்கு பிடிக்க காவல்துறை ஆனுறை வாங்கிதர அரசாங்கம் எவ்வளவு அருவெறுப்பு, வீட்டுக்கு ஒருவன் நாட்டை காக்க புறப்படுக என்ற காலம் போய் வீட்டுக்கு ஒரு பெண்ணை அமெரிக்க நாய்களுக்கு விருந்தாக கூட அனுப்பிவைக்கும் இந்த அரசு.. என் தேசம் என்ன விபச்சார விடுதியா, த்த்த்தூதூ...

selventhiran said...

மேற்படி தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில்.... அரசாங்கமே சாராய வியாபாரம் செய்து வருவது போல தற்போது விபச்சாரத்தையும் தொடங்கி இருக்கிறது எனப் பெருமை படலாம்.த்த்த்தூதூதூ..... பேயரசு செய்தால்.........

Anonymous said...

மேலே சொல்லப்பட்டது எல்லாம் ஆச்சரியத்துக்குரியவை அல்ல. அக்கப்பலின் தேவை கருதி ஏற்படுத்தியவையே. அதாவது அவ்வாறான பெரிய கப்பலுக்கு சேவை செய்ய தேவையானவையே!
இக்கப்பல் ஒன்றில் ஏறிப்பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நீங்கள் ஆரம்பத்தில் பிரமிப்பு அடைந்தால் அப்பிரமிப்பே உங்களை ஆட்சி செய்யும். சில சிக்கலான கேள்விகளைக் கேட்டீர்களாயின் அவர்கள் (கப்பலை சுற்றிக் காண்பிப்போர்) சிலவேளைகளில் நேரடியாக பதிலும் பலவேளைகளில் தமக்குத்தெரியாது எனவும் கூறுவார்கள். மேலும் இக்கப்பல் வாழ்க்கை ஆடம்பரமானது என்பது "சுத்தப்புழுகு" அவ்வாறு 'சொகுசான' வாழ்க்கை வாழ்வோர் மிகமுக்கிய அதிகாரிகள் மட்டுமே. அவர்களின் அறைகள் மற்றைய (கீழ்மட்ட) அதிகாரிகள், வீரர்களுக்கு தடை செய்யப்பட்டது. ஒவ்வொரு மட்டத்தின் வாசலிலும் அவ்வாறான அறிவிப்புப்பலகை பார்த்திருக்கிறேன். இது பாரபட்சம் காட்டுவதற்கு வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்பது உண்மைதான். ஆனால் 'ஜாலி' வாழ்க்க்கை இல்லை என்பது உண்மை. துறைமுகத்துக்கு வரும்போது எல்லோரும் 'கியூட்'(:(!?)ஆகத்தான் இருப்பார்கள் (பெண்கள்தான்) ஆனால் கீழ்தளத்தில் வேலை செய்வோர் முகத்தில் கரியுடன் தென்பட்டதை அவதானித்திருக்கிறேன். துறைமுகத்தில் இந்நிலை என்றால் நடுக்கடலிலும் போர்முனையிலும் எப்படி என சிந்தித்துப்பாருங்கள்.
நான் சென்ற நாள் போர்வீரர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் மூன்று தலைமுறையாக அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றுபவர். மிகப்பெருமையுடன் பேசினார் ஆனாலும் அமெரிக்க ராணுவத்தின் குறைபாடுகளையும், கப்பலில் உள்ள அசெளகரியங்களையும் எனக்கு வெளிப்படையாக கூறவும் தவறவில்லை!!!!

இதெல்லாம் இருந்தும் இராக்கில் வாங்கிக்கட்டுகிறார்களே!!!
இதில் இருந்து தெரிய வேண்டியது என்னவெனில் கப்பல், படை, துவக்கு எல்லாம் இருந்தாலும் திடமான நம்பிக்கையுடன் போரிடும் எதிரிக்கு முன்னால் எல்லாம் எடுபடாது என்பது தான்.

Thamizhan said...

அருமை நண்பரே!
அந்தப் போர் வீரர்களும்,வீராங்கனைகளும் சென்னை பள்ளிகள்,மற்ற இடங்களுக்கும் சென்று தூசி,ஒட்டடை தட்டி,கரும் பலகைக்கு கலர் தீட்டி மற்றச் சமுதாய் சேவைகளும் செய்துள்ளன்ர்.பள்ளிக் குழந்தைகளை உற்சாகப் படுத்தியுள்ளனர்.

Anonymous said...

கப்பலின் 'இந்தாண்டை'யிலிருந்து 'அந்தாண்டை' செல்வதற்கு இந்தக் கார்களைப் பயன்படுத்துகிறார்கள்.
:))) ???

Anonymous said...

தமிழன்,

நீங்கள் சொல்வது போல இங்கே அமெரிக்கவிலும் பாடசாலைகளுக்கும், முதியோர் இல்லம் மற்றும் வைத்தியசாலைகள், பொதுப்பூங்காக்களில் சேவை செய்கின்றனர். அது மட்டுமல்ல 'மெமோரியல்' தினத்தில் எல்லா மாநிலங்களுக்கும் முப்படையினரும் சென்று தமது ராணுவ தளபடங்களை காட்சிக்கு வைப்பார்கள். இதில் குழந்தைகளை முக்கியமாக முகத்துக்கு மறைப்பு வண்ணம் தீட்டுவதிலும் , எந்த ஆயுதத்தை எடுத்துப் பார்க்கவும் , அவற்றுடன் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அனுமதிப்பது மட்டுமல்லாது நேரடியாக ஊக்குவிப்பதையும் கண்டிருக்கிறேன்.

கண்மூடித்தனமான எதிர்ப்பு தேவையற்றதுதான் ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக எமது பழைய சரித்திரத்தை மறத்தலாகாது.
இங்கு ஒரு தென் ஆபிரிக்க பழமொழியை ஞாபகப்படுத்துகிறேன்...
"வரும்போது அவர்கள் கையில் பைபிளும் எமது கையில் நாடும் இருந்தன பின்னர் எமது கையில் பைபிளும் அவர்கள் கையில் நாடும் சென்றுவிட்டன" !!!!
இவ்வாறு நடந்து விடக்கூடாது.

Sivakumar said...

இப்ப இந்த கப்பல் எதுக்கு வந்திருக்குன்னே தெரியல. ஸ்டாலின் சொன்ன மாதிரி அவங்க ஊர் ஊரா போ பொன்னுங்கள பாக்கிறாங்களோ. (இந்த வரியை இதை விட கேவலமா சொல்ல தான் வந்தேன். வலையின் நாகரீகம் கருதி வார்த்தைகளை மாற்றி போட்டு விட்டேன்)

Anonymous said...

ஊர் ஊரா அலைஞ்சு பொண்ணுகளுடன் ஜாலியா இருக்கிறாங்க. நம்மால நம்மால முடியல. ஏங்கத்தான் முடியுது. நம்மை எல்லாம் மறந்து நேத்து வந்த வெள்ளைப் பயலுகளுக்கு பின்னால் போறவங்க கடி, சொறி வாங்கிட்டு வரும்போது நம்ம அருமை புரியும்.

புள்ளிராஜா