I'm not a plastic bag!!!



நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து
எனை உடுத்து
நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும்
உன்பேர் மெல்ல நான் சொன்னதும்
என்வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஒருநாள் உன்னைக் காணாவிடில்
எங்கே என் அன்பென்று கேட்கின்றன
நீவந்தால் மறுகணம் விடியுமென் வானமே
மழையில் நீ நனைகையில்
எனக்கு காய்ச்சல் வரும்
வெய்யிலில் நீ நடக்கையில்
எனக்கு வேர்வை வரும்
உடல்கள் தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று

இளையவளின் இடை ஒரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒருமுறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்ட கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீதொட்டால் நிலவினின் கரைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
உனக்கு நீ எனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது





















கவிதை வரிகள் - காதலர் தினம் படத்தின் ரோஜா ரோஜா பாடல் வரிகள்.

7 comments:

வெங்கட்ராமன் said...

இப்ப என்ன சொல்ல வற்றீய அண்ணாச்சி ஒன்னுமே புரியலயே... . .

நாமக்கல் சிபி said...

//கவிதை வரிகள் - காதலர் தினம் படத்தின் ரோஜா ரோஜா பாடல் வரிகள்.
//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

நீங்க ஏதோ கவுஜை எழுதிட்டீங்களோன்னு கும்மியடிக்க ஆசையா ஓடியாந்தேன்!

பூனைக்குட்டி said...

வெங்கட்ராமன் இது மெஸேஜ் சொல்லும் பதிவில்லை என்றாலும் ப்ளாஸ்டிக் உபயோகிக்காதீர்கள் என்பதை தான் இந்தப் பதிவு சொல்கிறது. ஒரு தேசிய நலனைப்பற்றிய பதிவு இது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பூனைக்குட்டி said...

ப்ளாஸ்டிக்கை வெறுக்கும் அன்பே ஜெஸ்ஸிகா
நீயிருக்க தேவையா தனியா என் போதைக்கு ஊறுகா!

அப்படின்னு எழுதி ஒரு கவிதை வைத்திருந்தேன்.

ஆனால் என்னமோ இன்று அடுத்தவரிகளை நோக்கி நகரவேயில்லை.

ALIF AHAMED said...

மோகன்தாஸ் said...
வெங்கட்ராமன் இது மெஸேஜ் சொல்லும் பதிவில்லை என்றாலும் ப்ளாஸ்டிக் உபயோகிக்காதீர்கள் என்பதை தான் இந்தப் பதிவு சொல்கிறது. ஒரு தேசிய நலனைப்பற்றிய பதிவு இது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
///

என்னை பிளாஸ்டிக் மாதிரி உபயோகிக்காதீர்கள் என ஜெஸ்ஸிகா கூறுவதாக நான் எடுத்து கொள்கிறேன்... :)

பூனைக்குட்டி said...

மின்னலுங்க இது ரொம்ப ஓவருங்க

பூனைக்குட்டி said...

இல்லைங்க மின்னல் இருந்துட்டு போகட்டும் போன பின்னூட்டத்தில் ஒரு ஸ்மைலி மிஸ் ஆய்டுச்சு. ;)