கவித கவித

என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
உந்தன் அழகைக் கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன்வீணை உன்மேனி
மீட்டட்டும் என்மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல்மட்டும் இங்கே கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர்கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகிற்கில்லை ஈடு

உயிரே உனையே நினைத்து
விழிநீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண்விட்டுப் போயாச்சு
காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆகாத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உன்னை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
உன்புகழ் வையமும் சொல்ல
சித்தன்ன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன்னை நானும் சேரும் நாள்தான்.

காதலர் தினம் வரிகள் - வாலி எழுதியவை.

என் வாழ்க்கையில் கணக்குகள் போடாமல் காதலித்த பருவத்தில் வந்த படம் மற்றும் பாடல்கள். இன்றைக்கும் கேட்டால் காற்றில் மிதப்பதைப் போன்ற ஒரு உணர்வு வரும். ஒருவேளை காதலிப்பதே காற்றில் மிதப்பது மாதிரியானதுதானோ.

இருந்துவிட்டு போகட்டும், வரப்போகும் மனைவியை காதலித்துக் கொள்ளலாம். ;-)

PS: இது Weekend ஜொள்ளு கிடையாது. அது தனிப்பதிவு தனியா வருது நேயர் விருப்பமா.

0 comments: