சுஜாதா குப்பைகள் ஜல்லி இன்னபிற

தெரியாத்தனமாக என் இ-மெயில் முகவரியை இந்தப் பகுதியில் கொடுத்ததில், எனக்கு அனுப்பப்படும் குப்பைகள் ஏராளமாகிவிட்டன. உலகில் உள்ள உதவாத விஷயங்கள் அத்தனையையும் இணைத்து அனுப்பி, ‘‘இதைக் ‘கற்றதும்... பெற்றதும்...’ பகுதியில், என் பெயர் போட்டு எழுதவும். இல்லையேல் திட்டுவேன்’’ என்று ஆணையிடுகிறார்கள். இதைப் பற்றி என் மகனிடம் வருத்தப்பட்டுக்கொண்டு இருந்தபோது, ‘‘இன்டர்நெட்டில் நல்ல விஷயங்களை நாம்தான் நாடிப்போக வேண்டும். மற்றவற்றைப் படிக்காமல் ஒதுக்கிவிட வேண்டும். தெரிந்தவர்களிடமிருந்து இ-மெயில் வந்தால் மட்டும் திறக்க வேண்டும். இல்லையேல், சளைக்காமல் பயன்படுத்த இருக்கவே இருக்கின்றன ‘டெலிட்’, ‘ஜங்க்’ ஆணைகள்!’’ என்றவன், ‘‘இதை மட்டும் பார்!’’ என்று மூன்று அருமையான வலைமனைகளின் முகவரி தந்தான்.

அவற்றைப் பார்த்து யான் பெற்ற பரவசம் க-பெ வாசகர்களுக்கும் கிடைக்க வேண் டும் என்கிற உண்மையான நோக்கத்தில், அந்த மூன்று முகவரிகளையும் தருகிறேன். www.ted.com இதில் உலகின் சிறந்த அறிவுஜீவிகளின் சுருக்கமான, கருத்தாழமான ஆடியோ, வீடியோ சொற் பொழிவுகள் உள்ளன. கலை, இலக்கியம், இசை, அறிவியல், கடவுள் போன்ற பல விஷயங்களைப் பற்றிய உண்மையான அறிவுஜீவிகளின் அவைக்கு அளிக்கப்பட்ட கலகலப்பான சொற் பொழிவுகள்.

அவற்றில் நான் சமீபத்தில் அனுபவித்தவை இவை... ரிச்சர்ட் டாக்கின்ஸின் ‘நான் ஒரு நாத்திகன்’ சொற்பொழிவு, லின் என்னும் சீன அமெரிக்கச் சிறுமியின் அட்டகாச மான பியானோ வாசிப்பு, ‘உலகெங்கிலும் ஏழ்மையின் வடிவங்கள்’ பற்றி ஆல்சன் என்ற ஐரோப்பிய பொதுநல ஆரோக்கிய நிபுணர் தந்த புள்ளிவிவரங்கள், ஐரோப்பா உபகிரகத்தில் மனிதன் இறங்கச் செய்து கொண்டு இருக்கும் ஏற்பாடுகள் பற்றி ஒரு வீடியோ (‘ஐஸ் பாளங்களை உருக்க சிறிய நியூக்ளியர் கப்பலை முதலில் அனுப்புவோம்!’)... இப்படி பிரமிப்பூட்டும் விஷய வீச்சு! அதே போல் www.edge.comwww.edge.org என்பதில் அறிவியலும் மனித மனமும் பற்றிய சிறந்த கட்டுரைகள் உள்ளன. www.aldaily.com என்பதில் கலை, இலக்கியம் பற்றிய செய்திகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறந்த கட்டுரையாளர்களின் பத்திகள் அத்தனையும் கிடைக்கின்றன.

மூன்றுமே எனக்கு மூன்று வருஷத்துக்குப் போதும். எனவே, கேட்காமல் எதையும் தயைகூர்ந்து அனுப்பாதீர்கள். மீறி அனுப்ப ஆர்வம் பீறிட்டால், இந்த மூன்று வலைமனைகளையும் ஒரு ‘கிளான்ஸ்’ பார்த்துவிடுங்கள். அவை களை மிஞ்ச முடியுமா, பாருங்கள்!

TED போல, தமிழில் சிறந்த சொற்பொழிவுகளை ஏதாவது ஒரு வலைமனையில் யாராவது வீடியோ எடுத்து வைக்க முன்வந்தால் நல்லது. சரியாக இருபது நிமிஷத்துக்கு மேல் போகக் கூடாது. ஒவ்வொரு துறையிலும் சிறந்த சொற்பொழிவாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆடியன்ஸ் முன்னிலையில் சிரிப்பும் கரகோஷமும் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். அருகே பேச்சாளரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு தர வேண்டும்.

எனக்கு உடனே தோன்றும் முதல் பட்டியல் இது. தென்கச்சி சுவாமிநாதன் (தகவல் தருவது எப்படி?), பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் (பட்டிமண்டப அனுபவங்கள்), பேராசிரியர் மா.நன்னன் (பழமொழிகள் தேவையா?), சாலமன் பாப்பையா (சங்க இலக்கியம் & ஓர் அறிமுகம்), வேளுக்குடி கிருஷ்ணன் (பிரம்ம சூத்ரம் புரியுமா?), சுனந்தா பார்த்தசாரதி (18&ம் அத்தியாயம்), பால் தினகரன் (இயேசுநாதர் இன்று), சஞ்சய் சுப்ரமண்யன் (கர்னாடக இசையும் மேற்கத்திய இசையும்).

ஒவ்வொருவருக்கும் இப்படித் தலைப்பு தருவதில் குழப்பம் இருக்காது என எண்ணுகிறேன். அந்த வரிசையில் என்னைக் கேட்டால், நான் கொடுக்க விரும்புவது... ‘பிரபஞ்சத்தின் முடிவும் ஆரம்பமும்!’

நன்றி - கற்றதும் பெற்றதும் சுஜாதா ஆனந்த விகடன்
------------------------------------

இதில் ஜல்லியடிக்க உகந்தவை

அதெல்லாம் சரி அவரது மகன் சொல்வதற்கு முன்னர் மெயில் பாக்ஸில் இருக்கும் டெலிட் பட்டனும் ஜங்க் பட்டனும் தெரியாத முட்டாளா சுஜாதா.

தன்னுடைய மகனையும் தமிழ் இலக்கிய வட்டத்தில் இறக்கிவிடும் முயற்சியாக இதைப் பார்க்கிறேன்.

10 comments:

-/பெயரிலி. said...

மோகன்தாஸ்
சுஜாதாதான் கன்ப்யூஸ்ட் ஆகி குப்பைக்கு கனெக்ஷன் கொடுக்கிறாரு.
அது http://www.edge.org , தம்பி.

இந்தாளு அரையும் குறையுமா ஜல்லியடிக்கிறத வெச்சே நீரு வீட்ட கட்டிருற முடிவிலதான் இருக்கீரு போல :-)

-/பெயரிலி. said...

/அவை களை மிஞ்ச முடியுமா, பாருங்கள்!/

என்ன சொல்றாரு வாத்தியாரு?
தமிழ் தக்கிட தக்கதிமி ஆச்சுதாமா?
:-)

பூனைக்குட்டி said...

வூடு கட்டுறதா அண்ணாச்சி இங்க 10 டாலருக்கே வழியில்லை. வீடெங்கே கட்டுவேன் சொல்லுங்க இந்த விதத்தில் தமிழ்ப் பதிவெழுதுவதில் லாபம் கிடையாது.

எல்லாம் ஒரு பொது சேவை நோக்கம் தான் காணுங்.

------------------

சுஜாதா ஐய்யா போட்டிருக்கிறது .காம் த்தான் என்றாலும் நம்ம வாசகர்களுக்காக .ஆர்க் ஆ மாத்திடுறேன். உங்க அனுமதியின் பேரில்.

-/பெயரிலி. said...

/உங்க அனுமதியின் பேரில்./
நான் தெருப்பிள்ளையாருக்கு வழித்தேங்காய் அடிப்பதற்கு அனுமதி தரமறுக்கிறேன் :-)

இதுக்கெல்லாம் நானென்ன லிங்க் கொடுப்பது? விரும்பின விஷ(ய)த்திலே நீங்களே கூகுல் பண்ணினால் கிடைத்துவிட்டுப்போகிறது.

(பத்து லாடரையாச்சும் காட்டுங்க. அத கண்டே பத்து வருமாச்சு :-))

ரவி said...

இதன் பெயர் தான் ஜல்லியை வைத்தே ஜல்லி என்கிறேன் நான்...

பாரதிய நவீன இளவரசன் said...

மூன்றுமே பயன் தரக்கூடிய இணைப்புகள்.. ஒரு மேலோட்டமான விசிட் அடித்தேன், அவ்வளவுதான்.

J S Gnanasekar said...

மூன்றுமே நல்ல தளங்கள். அறிமுகத்திற்கு நன்றி.

-ஞானசேகர்

வவ்வால் said...

சுஜாதாவிற்கு தானே உலகின் முதல் அறிவாளி என்றும் தனது மகனே அடுத்த அறிவாளி என்றும் மனப்பிரமை போலும் , விட்டு தள்ளுங்கள் மோகன்.

Anonymous said...

// சுஜாதாவிற்கு தானே உலகின் முதல் அறிவாளி என்றும் தனது மகனே அடுத்த அறிவாளி என்றும் மனப்பிரமை போலும் , விட்டு தள்ளுங்கள் மோகன். //

வவ்வாலுக்கு இந்த ஜல்லி / உள்குத்து புரியவில்லையென்று நினைக்கிறேன். :)

அனானி முன்னா

Anonymous said...

nalla mokkai