எதற்காக இங்க இந்தியன் என்ற டெர்ம் வருதுன்னா, தமிழன் என்ற டெர்மை போட முடியாத காரணத்தினால் தான். சுலபமா இந்தியனாவோ இல்லை தமிழனாவோ இல்லாமல் மனுஷனா இருந்துறேன் அப்படிங்கிற பதில் சொல்லிவிடமுடியும். ஆனால் உங்களைச் சில விஷயங்கள் முன்நிறுத்துகின்றன என்றால் அதில் மிகமுக்கியமானது உங்களின் மொழி. அப்படியிருக்க மொழி இல்லாமல் போய்விட்ட, நியூட்ரலாகிவிட்ட மனிதர்கள் இல்லவேயில்லை என்று சொல்லாவிட்டாலும் % குறைவாகயிருப்பது உண்மை.
சிலசமயம் என்னிடம் இந்தக் கேள்வி வைக்கப்பட்டிருக்கிறது, அலெஜாண்ட்ரோ கன்சாலஸ் இன்னாரித்தோ, பெரோ அல்மோடோவர் படம் பார்க்கும் உன்னால் எப்படி சிவாஜி நல்ல படமென்று சொல்ல முடிகிறது என்று. ஒன்று நான் அந்தப் படங்களை ரசித்துப் பார்ப்பது பொய்யாகயிருக்க வேண்டும் இல்லை சிவாஜி பற்றி சொல்வது பொய்யாகயிருக்க முடியும். ஆனால் என்னைப் பொறுத்தவரை சிவாஜியை நோக்கி நான் நகர்த்தப் படுகிறேன் என்று தான் சொல்வேன். காந்த சக்தி ரஜினியிடம் இருக்கிறதா என்றால் இல்லை, சமுதாயம் நம்மை அப்படிச் செய்யச் சொல்லி நகர்த்துகிறது.
பெயரிலி சொல்லியிருப்பார் "not a weblog, but an optimized ego-engine" என்று உண்மைதான் பதிவுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்த பொழுது செய்திராத சில விஷயங்களை நான் தமிழ்நாட்டிற்கு வெளியில் செய்ய தள்ளப்பட்டிருக்கிறேன்.
முங்காருமலையையும் சிவாஜியையும் இங்கே கன்னடர்கள் ஒப்பிடும் பொழுது நீங்கள் அவர்களுக்கு முகத்துக்கெதிரில் சொல்லிவிடுவீர்களா வித்தியாசத்தை என்றால் உங்கள் மனம் இந்த Ego Engine போல் வருத்தப்படாது. ஆனால் அவர்கள் மனம் நோக வைக்கக்கூடாது என்று ஒரு எண்ணம் எப்பொழுதுமே ஓடிக் கொண்டிருப்பதால் அப்படி சொல்லமுடியவில்லை, பெரும்பாலும் வாய் மூடிக்கொண்டோ இல்லை வெட்டி சமாதானங்கள் சொல்லிக் கொண்டோயிருக்கும் பொழுது. எங்காவது ஒரு இடத்தில் இதை -பச்சையாக- சொல்ல முடியாவிட்டாலும், உள்ளுறை உவமையாக சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் சிவாஜி போஸ்டரை டெக்ஸ்டாப்பில் போடுவது, எப்பொழுதும் சிவாஜி பாட்டையே கேட்டுக் கொண்டிருப்பது போன்ற செயல்கள் என்று நினைக்கிறேன் நான்.
ஏன் இப்ப இந்தப் புலம்பல் என்று கேட்டால் இதுவரை KA ரெஜிஸ்ட்ரேஷன் வண்டெயொன்றைத்தான் ஓட்டிக்கொண்டிருந்தேன். எந்த ஒரு சமயத்திலும் அந்த வண்டியை ஓட்டும் பொழுது தமிழ் பேசுவதில்லை; முடிந்தால் என்னுடைய ஆங்கில அக்சண்டில் இருந்தோ தவறான இந்தியில் இருந்தோ கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்றுதான். சிலசமயம் பக்வாஸான பிரச்சனை வரும் எப்படியென்றால் நான் ரொம்பத் தீவிரமாய் இந்தியில் பேசிக்கொணிடிருக்க அக்கா அந்த இடத்தில் தமிழில் பேசி என்னை தர்மசங்கடத்தில் மாட்டிவிடுவதுண்டு.
இப்ப பிரச்சனை என்னான்னா நான் TN போர்ட் வண்டி ஒன்றை தமிழ்நாட்டில் இருந்து வரவழைத்திருந்தேன் எவ்வளவு நாள் தான் நானும் Scooty Pep ஓட்டுவேன் சொல்லுங்க ;-). அது வந்ததில் இருந்துதான் பிரச்சனையே; பழைய ஞாபகத்தில் வண்டி ஓட்டும் வழி கேட்கவோ இல்லை டிராபிக் போலிஸிடம் பேசவோ நான் இந்தியை உபயோகிக்க, என்னுடைய TN போர்ட் வண்டி அழகாய் அடையாளம் காட்டிவிடும் நான் தமிழனென்று அப்புறம் கேட்கவும் வேண்டுமா கர்நாடகாவில் பிரச்சனையை. சும்மாயிருந்தாலே பிரச்சனை நான் வேற பெரிய டுபுக்கு மாதிரி இந்தியில் பேச இரண்டு பங்காகிக் கொண்டிருந்தது பிரச்சனை.
இந்த விஷயத்தில் சைக்காலஜி கொஞ்சம் போல் எல்லோரிடமும் மாறுபடுகிறது; நான் TNபோர்ட் வண்டி ஓட்டினாலும் தமிழில் பேசாமல் இந்தியில் வழிகேட்டால் சிலர் ஒத்துக்கொள்கிறார்கள் ஆனால் சிலருக்கு நான் அவர்களை ஏமாற்றப் பார்க்கிறேன் என்று கோபம் வருகிறது :(.
சமீபத்திலேயே இரண்டு மூன்று இன்ஸிடெண்ட்ஸ், எப்படியென்றால் என்னிடம் தப்பில்லாவிட்டாலும் நான் TN வண்டி ஓட்டுவதாலேயே என்னைத் திட்டிவிட்டுப் போனவர்கள்; நின்று சண்டை போடப் பார்த்தார்கள் என்று. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் நான் விட்டுக்கொடுத்துத் தான் வந்து கொண்டிருக்கிறேன். பயந்தாங்கொள்ளித்தனம் என்றால் சரிதான் மறுக்கவில்லை என்ன கோபப்பட்டால் என்னவாகும் என்றுத் தெரிந்திருப்பதால் வேறொன்றும் செய்யமுடியவில்லை, ப்ளாக் எழுதுவதைத் தவிர.
புனேவில் இருக்கும் பொழுதே எழுதியிருக்கிறேன், பெங்களூரில் இருக்கும் பொழுது செக்யூர்ட்டா இருப்பதைப் போன்ற ஃபீலிங் எனக்கு வரவே வராது. இங்கே தமிழனாக இருப்பதைவிடவும் 'இந்தி'யனாக இருப்பதால் பிரச்சனை வராது என்றால் நான் அதைத்தான் நிச்சயமாய்த் தேர்ந்தெடுப்பேன்.
--------------------------
செப்புப்பட்டயம் உதைக்குது - புதுப்பதிவை ஒத்துக்க மாட்டேங்குது.
பெங்களூரில் இந்தியனாய் இருத்தல்
Friday, July 27, 2007
|
Labels:
இந்தி,
சொந்தக்கதை
|
This entry was posted on Friday, July 27, 2007
and is filed under
இந்தி
,
சொந்தக்கதை
.
You can follow any responses to this entry through
the RSS 2.0 feed.
You can leave a response,
or trackback from your own site.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
பெங்களூரில் தமிழர்கள் ஏறத்தால இரண்டாம் தரக் குடிமக்களாகத் தான் நடத்தப்படுகிறார்கள். எப்படி இருந்தாலும் நம்ம ஊர்லயும் நமக்கு அரசியல் செல்வாக்கு, இல்ல Polish செல்வாக்கு இல்லைனா நாம் மூன்றாம் தரக் குடிமகனாக தான் பெரும்பாலான இடங்களில் நடத்தப்படுகிறோம். அதனால் எனக்கு பெங்களூரே பரவாயில்லை போல சிலமுறை தோண்றியதுண்டு. I feel more secured in US than in Bangalore/India.
நானும் ரெண்டு வருசம் TN ரெஜிஸ்ட்ரேசன் வண்டி ஓட்டிட்டு இருந்தேன், சமீபகாலம் வரைக்கும். எனக்கு உள்ளூர பயம் இருந்தாலும் ஒரு தடவை கூட எந்த அசம்பாவிதமும் நடக்கலை.. சின்ன அளவுல கூட.. ராஜ்குமார் இறந்தப்போ நம்ம வேலையிடத்து செக்யூரிட்டி பைக் எடுக்க வேண்டாம்'ன்னு குடுத்த அறிவுரை தவிற..
ஒரு வேளை முகராசியோ இருக்குமோ :)
அனானிமஸ் நான் அமெரிக்கா போகாததால அதைப்பத்தி எதுவும் சொல்லமுடியாது.
எனக்கு புனேவும் சரி டெல்லியும் சரி பெங்களூரை விடவும் செக்யூர்டா இருந்ததை வேண்டுமானால் ஒப்புக் கொள்கிறேன்.
/ஒரு வேளை முகராசியோ இருக்குமோ :)//
இருக்கலாம்க, ஒருவேளை என்னைப் பார்த்தா அடிச்சா வாங்கிப்பான்னு நினைச்சிருக்கலாம்.
ஹிஹி
அன்னானி எதுக்கு அனாவசியமா போலிசு மக்களை இழுக்குறீங்க. அவுங்களே நேட்டோவில நாங்க இரண்டணா குடிமக்களா வாட்கா குடிமக்களான்னு வார்சாவுல வாரும் சாவுமா இருக்காங்க. விட்ருங்க. பாவங்க
//அன்னானி எதுக்கு அனாவசியமா போலிசு மக்களை இழுக்குறீங்க. அவுங்களே நேட்டோவில நாங்க இரண்டணா குடிமக்களா வாட்கா குடிமக்களான்னு வார்சாவுல வாரும் சாவுமா இருக்காங்க. விட்ருங்க. பாவங்க//
யாருங்க இது, சுத்திச் சுத்தி எழுதுறதப் பாத்தா கொஞ்சம் போல விளங்குது; ஆனாலும் உங்களுக்கு இருக்கும் நக்கல்.
பெங்களூரை விடுங்க;தமிழ்நாட்டிலேயே க்ரீமிலேயர் திராவிட கும்பலைத் தவிர மற்றவர்கள் இரண்டாம்தர மக்களாகத்தான் கருதப்படுகிறார்கள்.
கே.ஏ. ரெஜிஸ்ட்ரேஷன் வண்டி வைத்திருப்பதால் எனக்கு பிரச்சினை எதுவும் வரவில்லை இதுவரை. மேலும் எனக்கு கன்னடமும் தெரியும்..எப்படி கன்னடம் தெரியும்னு கேக்குறீங்களா. என்னுடைய தாத்தா பாட்டி ரெண்டு பேரும் கன்னடம். அப்பாவை பெத்த தாத்தா பாட்டியும் கன்னடம், அம்மாவை பெத்த தாத்தா பாட்டியும் கன்னடம். ஆமாம் நான் கன்னடம் தான். சிக்மகளூர்ல இருந்து தான் இந்த பின்னூட்டமே போடுறேன். எல்லி ஓகித்தினி நீவு, சென்னாகிதா.
/*ஒரு தடவை கூட எந்த அசம்பாவிதமும் நடக்கலை.. */
வேன்டாம்..!! யாருக்கும் அந்த கொடுமை...வேன்டாம்..!!
அடி தமிழன
ஆம். மும்பை/டில்லியை ஒப்பிட்டு பார்க்கையில் ஐரோப்பாவில் பாதுகாப்பாக உணர்கிறேன்.
அனானி முன்னா
/*Anonymous said...
சிக்மகளூர்ல இருந்து தான் இந்த பின்னூட்டமே போடுறேன். எல்லி ஓகித்தினி நீவு, சென்னாகிதா.*/
இப்படி பேசினா கன்டிப்பா உனக்கு தர்ம அடி தான்...தமிழன் மட்டும் இல்ல... ஏன்டா எங்க மொழிய தப்பு தப்பா பேசுற அப்படின்னு..
நான்கு வருடங்களாக பெங்களுரில் இருக்கிறேன்..ஒரு நாளும் நான் பாதுகாப்பில்லாத உணர்வினை பெறவில்லை..
மெஜஸ்டி பகுதியில் சில சமயம் தனியே செல்லும் போது இந்த உணர்வு ஏற்ப்பட்டுள்ளது.
பெரும்பாலும் என் மனைவியுடன் வெளியே செல்லும் நாண் பாதுக்காப்பாக உணர்கிறேன்..வேறொன்றுமில்லை..என் மனைவி நன்றாக கன்னடம் பேசுவாங்க
அன்புடன்
அரவிந்தன்
மோகன்தாஸ்
பெங்கலுரில் பூனையாக (இல்லாமல் போன சோகங்கள்)இருந்ததாலே தப்பிச்சிங்க
தமிழ்நாட்டு அரசியல் பெருச்எலிகள் உங்களை கோதரி இருக்கும்
முதல்ல, தமிழர்களுக்கு தம்மீது மரியாதை வரவோணும். அமெரிக்காவுல ஒருத்தர் secured ஆ பீல் பன்றதா எலுதி இருக்கார். இங்கே (அமெரிக்காவுலே) காசு இருந்தா போதும் மாமு. என்னைப் பொருத்த வரை, தமிழர்கள் அடிமை வாழ்வையே விரும்புகிறார்கள் னு சொல்லுவேன்! எதுக்கு, பெங்களூர்லயும், மலேசியாவிலும், சிங்கபூர்லேயும், அமெரிக்காவிலேயும் போய் அடி உதை வாங்கனும்? வாங்க.. தமிழ்நாட்டிலேயே வசதியான வாழ்க்கையை உருவாக்குவோம்.
நானும் பெங்களூரில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக Tண்௪5 தான் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். வழிக் கேட்க முதலில் கன்னடத்தில் ... கேக கோக்து என்று எடுத்து விடுவேன்... சில சமயங்களில் ஆளைப் பார்த்தாலும் தெரிந்து விடும் தமிழ் என்று. அவர்களிடமெல்லாம் தமிழிலேயே பேசி விடுவேன்.
இதெல்லாம் சரியென்றால் நம்ப ட்ந்45, பதிவெண்ணைப் பார்த்து விட்டு ஒரு மாருதி கார் துரத்தி வந்து நின்றது... பயந்து போய் பார்த்தால் அவரும் திருச்சி என்கிறார்... :) அத சொல்லத் தான் அப்படி துரத்தியிருக்கிறார்...
மற்றபடி இரண்டாம் தர குடிமகனாய் உணர்ந்தாலும், இதுவரை அரசு அலுவலகங்களுக்கு எந்த ஒரு வேலைக்காக செல்லவில்லை என்பதால் பாதிப்பு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
மற்றபடி, எனக்கும் இது வரை எந்த துருதிருஷ்டமான சம்பவமும் நடக்கவில்லை. :)
இது மிகவும் வியப்பாக இருக்கிறது. நான் கடந்த 20 வருடங்களாக பெங்களூரு போய் வருகிறேன். உறவினர்களும் அங்கும் குடகிலும் உண்டு. தமிழ் பேசியதால், தமிழன் என்பதால் யாருக்குமோ, எனக்கோ எந்த பிரச்சனையும் வந்ததாக உணரவும் இல்லை. அறியவும் இல்லை.
நீங்கள் தமிழில் பேசுவதே நல்லது. இல்லை ஆங்கிலம். டிராபிக் போலிஸுக்கு தெரிவதெல்லாம், தமிழ்நாடு வண்டி என்றால் பணம் தான். நீங்கள் கன்னடமாக இருந்தாலும். ஓரு தடவை அலட்சியமாக நடத்திப் பாருங்கள். கேட்டால் பேப்பரையோ பணத்தையோ அலட்சியமாக கொடுங்கள். தன்னால் வழிக்கு வருவார்கள், நீங்கள் தமிழில் பேசினாலும்.
தமிழர்களை விட கன்னடத்து ஆட்களை நேரடியாக டீல் செய்வது எளிது. இல்லவிட்டால், அரண்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லாம் பேய்தான்
நண்பர் மோகன்தாஸ்,
அது அலெஜாண்ட்ரோ (கன்சாலஸ்) இல்லை, அலெஹாண்ட்ரோ. Alejandro-வில் உள்ள Ja, Ha என்று உச்சரிக்கப்பட வேண்டும்.
அன்புடன்,
KC
தமிழ் நாட்டில வாழறதுக்கு நான் எப்பவுமே தயார். ஆனா பெங்களூர்ல இருக்குற software companeyங்க அங்க இல்லையே? நம்ம அரசியல்வாதியங்க காலனா பிரயோஜனமில்ல ...
Post a Comment