கிரீடம் பெண்ணீய விமர்சனம்

ஒரு படத்தை இரண்டு தடவைப் பார்த்தாத்தான் இரண்டு தடவை விமர்சனம் எழுதலாம்னா எனக்கு அந்தத் தகுதியும் உண்டு. முன்னையே சொல்லியிருந்தது போல் ஞாயிற்றுக் கிழமைக்கு புக் செய்திருந்த டிக்கெட்களை வேஸ்ட் ஆக்க வேண்டாம் என்று நினைத்து இன்னொருமுறை சகோதரியுடன் சென்றிருந்தேன். சரி இனி க்விக்கா விமர்சனத்திற்கு

* முதலில் சரண்யாவிற்கு நான்கு குழந்தைகள் - இரண்டு குழந்தைகளே அதிகம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நான்கு குழந்தைகள் எல்லாம் ரொம்ப அதிகம். ராஜ்கிரண் ரொம்பவும் கெட்ட அப்பா.

* பிள்ளையார் இருக்கும் கோணிப்பையை நடுவில் வைத்து அரை சுத்து சுத்தினால்; அஜித்குமார் கேட் இருக்கும் பக்கம் போய்விடுவார் என்ற காமென் நாலேட்ஜ் கூட இல்லாத பெண்ணாக த்ரிஷாவின் அறிமுகம் கடுப்பேற்றுகிறது.

* வழமையான எல்லா படங்களையும் போல த்ரிஷாவும் படிப்பை நம்பாமல் பிள்ளையாரை நம்பும் பேதையாய். மூட நம்பிக்கைகள் இருக்கலாங்க அதுக்காக இப்படியா பிள்ளையாரை பார்க்காமப் போனா பெயிலாய்டுவேன்னு புலம்புறாங்க.

* த்ரிஷா பரீட்சை எழுதும் பொழுது அவர் டேபிளில் ஜாமெட்ரி பாக்ஸ் இருக்கிறதோ இல்லையோ பிள்ளையார் சிலையிருக்கிறது. இதனாலெல்லாம் என்ன சொல்லவருகிறார் இயக்குநர் பெண்கள் படித்து பாஸாவதில்லை; பிள்ளையாரை காக்கா பிடித்து பாஸாகிறார்கள் என்றா? வன்மையாகக் கண்டிக்கிறேன்.

* த்ரிஷாவின்அஜித்தின் தங்கை(அதுதான் அந்த ஜொள்ளு பத்தி எழுதினேனே அந்த பிகர் சாரி பொண்ணு) தான் வாங்கும் அப்ளிகேஷன் பாரம் எண்ணைக் கூட்டினால் நான்கு வருவதாகவும் மூன்றுதான் தன் அதிர்ஷ்ட எண் என்றும் கூறி இன்னொரு ஃபார்ம் வாங்கணும் என்று சொல்வதை வைத்து என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் பெண்கள் மூளைக்குள் இருக்கும் நியூரான்களை விடவும் நியூமராலஜியை(நேமாலஜி, நம்பராலஜி - வாட் எவர்) நம்புவதாகவா?

* த்ரிஷா அஜித்துடன் மொட்டை மாடி டாங்கில் உட்கார்ந்து ஒட்டுமொத்த குடும்பத்தைப் பற்றி புரளி பேசுகிறார். யோவ் என்னத்தான்யா சொல்றாரு உங்க இயக்குநர் பொண்ணுங்க மட்டும் தான் புரளி பேசுவாங்கன்னா; அதுவும் எவ்வளவு பெரிய சீனை வேஸ்ட் செய்திருக்கிறார் இதற்காக.

* விவேக்கின் மனைவி கதாப்பாத்திரம் தான் ஆரம்பத்தில் இருந்தே பெண்ணியத்திற்கு பேசுவதாய் இருக்கிறது என்று சந்தோஷப்பட்டு வந்தால் அதிலும் விழுந்தது இடி; விவேக் சும்மா பில்டப் கொடுக்கவே தன் புருஷனை பெரிய ரௌடி என்று நினைத்துக் கொள்வதை பார்க்கச் சகிக்கவில்லை.

* த்ரிஷாவின் அம்மா தனக்கு மருமகனாய் வரப்போகிறவனைப் பற்றி தொலைபேசியில் கேட்டே முடிவெடுப்பதாயும்; அவன் எவ்வளவு நல்லவன் கெட்டவன் என்று தீர்மானிக்காமலே(ஏனென்றால் அஜித் நல்லவரல்லவா :() தன் பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கணவனை வற்புறுத்துகிறார். ஏன் பெண்களுக்கு யோசிக்கவே தெரியாது என்ற முடிவிற்கே வந்துவிட்டீர்களா?

--------------------

இன்னும் நிறைய யோசித்து வைத்திருந்தேன்; ச்ச பாலாய்ப்போன த்ரிஷா மாமியை சைட் அடிக்கவே நேரம் போதவில்லையாதலால் என்ன செய்ய நினைவில் வந்ததை எழுதியிருக்கிறேன்.

வர்ட்டா...

7 comments:

அய்யனார் said...

அது எல்லாம் இருக்கட்டும்..,
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?

Pavals said...

//த்ரிஷா பரீட்சை எழுதும் பொழுது அவர் டேபிளில் ஜாமெட்ரி பாக்ஸ// அதுவும் பிஏ.(வரலாறு) படிக்கிற பொண்ணு..

//த்ரிஷாவின் தங்கை// யோவ். ரொம்ப ஜொள்ளு விட்டு பார்த்தா இப்படித்தான்.. அது அஜித்தோட தங்கை

பூனைக்குட்டி said...

-----//த்ரிஷாவின் தங்கை// யோவ். ரொம்ப ஜொள்ளு விட்டு பார்த்தா இப்படித்தான்.. அது அஜித்தோட தங்கை----

அட ஆமாம். ஹிஹி(துடைச்சிக்கிட்டேன்) மாத்திடுறேன்.

லக்ஷ்மி said...

//அந்த பிகர் சாரி பொண்ணு// நல்ல இம்ப்ரூவ்மென்ட். keep it up.

Anonymous said...

படம் உங்களுக்கு ஏன் ரொம்ப பிடிச்சுப்போச்சுன்னு நானும் ரொம்ப யோசிச்சுட்டிருந்தேன். இப்போதான் புரியுது.

ILA (a) இளா said...

////த்ரிஷா பரீட்சை எழுதும் பொழுது அவர் டேபிளில் ஜாமெட்ரி பாக்ஸ// அதுவும் பிஏ.(வரலாறு) படிக்கிற பொண்ணு..
//
ஆஹா, இதைத்தான் டைரக்டோரியல் "டச்" அப்படிங்கிறதா?

Anonymous said...

//அது எல்லாம் இருக்கட்டும்..,
எங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா\\
யோவ்,மொதல்ல அவுங்க தலைக்கு வாழ்த்து
சொல்லித்தொலைங்கய்யா.எங்க போனாலும்
பெரிய இம்சையா இருக்கு.