காதலர் தின ஸ்பெஷல் ஜொள்ளுசொந்த ஜொள்ளு

விக்டோரியாவின் சீக்ரெட்டுகளே
சீக்கு வந்த கோழியாய்
ஆகிப் போனது ஹார்ட்டுகளே
அழகாத்தான் பறந்து வரீங்க நீங்க
அட அம்சமாவும் கொடுக்குறீங்க போஸ
அத்தன பேரையும் கட்டிக்கத்தான் ஆச
மாவு இருந்தாத்தான் சுட்டுருப்பேனே
தோசை அட நம்ம தோசை

கீழ விழுந்த ஆப்பிள பாத்த நியூட்டனா
மாத்திப்புட்டீங்க என்ன நீங்க மொத்தமா
பறக்கவிட்ட முத்தமெத்தனை தெரியலை
மறஞ்சு போன மாயமென்ன புரியலை
அத்தன வெயிட் ஆப்பிளுமே விழுகுது
அசறடிக்கும் முத்தமெங்கே போவது
பூமிக்கும் கிறக்கமாத்தான் இருக்குதோ
உங்க முத்தம் பட்டதும் பூமியுமே சுத்துது
தன்னத்தானே சுத்துதுவாடகை ஜொள்ளு - வைரமுத்து விட்டதுஅன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே (அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி (அன்பே)

கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்

மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் (அன்பே)

5 comments:

ரொம்ப முக்கியம் said...

/பூமிக்கும் கிறக்கமாத்தான் இருக்குதோ
உங்க முத்தம் பட்டதும் பூமியுமே சுத்துது
தன்னத்தானே சுத்துது/

கருத்துச் செறிவுள்ள வார்த்தைகள்

மோகன்தாஸ் said...

கண்டுபிடிச்சி சொன்னதுக்கு நன்னி

ச்சின்னப் பையன் said...

எல்லா படங்களும்...எல்லா... படங்களும்.. படங்களும்... ரொம்ப... நல்லா...
(மன்னிச்சிருங்க... எனக்கு வார்த்தையே வரமாட்டேங்குது)...:-)

மோகன்தாஸ் said...

ச்சின்னப்புள்ளங்க எல்லாம் இப்படிப்பட்ட படம் பார்த்தா இப்படித்தான் ஆய்டும்.

பெரிய புள்ளை ஆனதுக்கு அப்புறம் வந்து பார்த்துக்கோங்க :)

மங்களூர் சிவா said...

ஜூப்பர்!!