எம்.ஜி.ஆர். - சிவாஜியை இழிவுபடுத்தினாரா ஜெயமோகன்?

''ஜெயமோகன் ப்ளாக் எழுதுறாரே... படிச்சீங்களா?''

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பூ தான் இலக்கிய வட்டாரத்தின் சமீபத்திய பரபரப்பு. சர்ச்சைக்கும் ஜெயமோகனுக்கும் அப்படி ஒரு பந்தம். 'கருணாநிதி இலக்கிய வாதியே இல்லை!' என்பது தொடங்கி, 'பெரியார், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாதவர்!' என்பது வரை ஜெயமோகனின் தடாலடி ஸ்டேட்மென்ட்கள் பிரபலமானவை. 'இனிமேல் எழுதுவதில்லை' என அறிவித்துவிட்டுக் கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்த ஜெயமோகன், வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்ததும் வெடிக்கத் தொடங்கிவிட்டது சர்ச்சை சரவெடி!

கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற சக இலக்கிய வாதிகள் தொடங்கி பெரியார், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பிரபலங்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை ஜெயமோகன்.

'என் தலைமுறையின் நோக்கில் அவர் (பெரியார்) சமூக இயக்கத்தின் உட்சிக்கல்களையும், மனித மனத்தின் ஆழத்தையும், அதில் மரபு ஆற்றும் பங்கையும் உணராத பாமரர்தான். இன்றும் ஈ.வே.ரா. பற்றி எனக்குச் சாதாரணமான ஒரு மரியாதை மட்டுமே உள்ளது...', 'அவருக்குச் சமூகச் சீர்திருத்த நோக்கம் இருந்தது என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், அவரை நான் ஒரு சிந்தனையாளராகவோ, அறிஞராகவோ, எண்ணவில்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாத அவரை தமிழ்ப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் தீர்மானிக்கும் 'நபி' போல சித்திரிக்கும் இன்றைய போக்குகள் மிக ஆபத்தானவை' என்றெல்லாம் பெரியார் பற்றி போகிற போக்கில் இவர் உதிர்க்கும் விமர்சனங்கள் வலைப்பூ முழுக்க விரவிக்கிடக்கின்றன.

எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் தனித் தனிப் பதிவுகள். எம்.ஜி.ஆருக்குத் 'தொப்பி', சிவாஜிக்குத் 'திலகம்' என்ற தலைப்புகளுடன். 'அப்படி இவருக்கு அந்த இரண்டு சகாப் தங்களின் மீது என்னதான் பகை?' என்று படிப்பவர்கள் குமுறிக் கொந்தளிக்கும் அள வுக்கு வயது, உடல் நலப் பாதிப்பு ஆகியவற்றைக்கூட விடாப் பிடியாகக் கிண்டலடிக்கிறது ஜெயமோகனின் எழுத்துக்கள். அதிலிருந்து சில பகுதிகள் மட்டும் நாம் எடைபோட...

'தொப்பி'

'எங்களூரில் காந்தாராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்கு நடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள்; ஒன்றில் மலையாளப் படம் என்பதால், எம்.ஜி.ஆர். வேறு வழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப் பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின் மீது பச்சைப் பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்க ளூரில் பரவலாக நம்பப்பட்டது. ஆகவே, பச்சைப் பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்தில்இருந்தது.

அவர் இரு லேகியங்களைத் தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று, தங்க பஸ்பம்; நிறம் மங்காமல்இருப்பதற்காக. இன்னொன்று, சிட்டுக்குருவி லேகியம்; வீரியத்துக்காக! ஆண் சிட்டுக் குருவிகள் எந் நேரமும் பெண் புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண் சிட்டுக் குருவிகளைக்கொண்டு செய்யப்படும் சிட்டுக் குருவி லேகியம் சாப்பிடுவதால், எம்.ஜி.ஆர். வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக் குருவிகளை விரட்ட தலைக்கு மேல் வலையைக் கட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.

லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். காதல் காட்சிகளில் மூன்று வகை நடிப்புகளை வெளிப் படுத்துவார். நெளிந்து நின்று கீழு தட்டைக் கடித்து அரைப் புன்னகை யுடன் மேலும் கீழும் பார்ப்பது... கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒரு பக்கமாக விலக்கி கேமராவைப் பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்துச் செல்லும் (ஷாட் முடிந்த பின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணெய் போட்டு சுளுக்கு எடுப்பார்களாமே!) கதா நாயகிக்குப் பின்னால் துள்ளி ஓடுவது... இதைத் தவிரவும் பல சிட்டுக் குருவித்தனங்கள்!



எம்.ஜி.ஆர். தமிழ்ப் பண்பாடு தவறுவதில்லை. (இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளை) பாட்டில் கதாநாயகியைப் புல் தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து, மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்றால் மழையில் நனையவைத்து, கேமரா பக்கவாட்டில் இருக்கிற தென்றால் முந்தானையைப் பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடை பிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பது போல வளைத்து, அவளைப் பூச்செடி களுக்குப் பின்னால் இட்டுச் சென்று, இரு பூக்களை ஒன்றோ டொன்று உரசவைத்து, பாறை மேல் படுக்கவைத்து, மேலேறிப் படுத்து நாஸ்தி செய்தாலும், பாட்டு இல்லாதபோது பண்பாக 'அதெல்லாம் கையானத்துக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ!' என்றுதானே அவர் சொல்கிறார்.

எம்.ஜி.ஆர். படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. 'ஆண்ட வன் உலகத்தின் முதலாளி... அவனுக்கு நானொரு தொழி லாளி!' அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போ தைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. 'தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று...' காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுப் புத்தகத்தில் பொதுவாகப் பிழைகள் அதிகம். ஆகவே, உள்ளூர் தமிழறிஞரான நான் அதைக் 'கஞ்சியிலே' என்று திருத்தினேன். அப்படியானால் 'படித்தேன்' தவறுதானே? குடித்தேன் என்று ஆக்கியபோது, சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர், ''அது செரிதேண்டே மக்கா..! கஞ்சித் தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்கு அமிருதம்லா கஞ்சி? பதார்த்தகுண சிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க...'' என்றார்.

எம்.ஜி.யாரின் பேச்சு வேறு எங்களுக்குப் புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர். சொன்னாராம்... 'உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு. பம்பு இல்லை.' ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துப்போய், பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது, 'படிப்பு இருக்கிறது, பண்பு இல்லை' என்று. அதேபோல காதல் வசனங்கள்... ''கமலா, நீ என்னைத் தப்பா புழிஞ்சுக்கிட்டே (அடிப்பாவி) என்னைக் கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்.'' பொன்மொழிகளும் சிக்க லானவை... 'தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு!' தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சு மேல் ஏறினால் போதுமா? 'அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா! தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க. உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்ய மாட்டான்.' எங்களூரில் அப்பி என் றால், சின்னப்பிள்ளை கொல்லைக் குப் போவது என்றொரு பொருள் உண்டு.

ஆனால், ஒரு ஆச்சர்யம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக் குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ்ப் படத்தைக்கூடப் பத்து நிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். படங்களை பெரும்பாலும் கடைசி வரை பார்க்க முடிகிறது, அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன்! திரைக்கதை பற்றிக் கற்ற பின், இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி எண்ணத் தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த வணிகத் திரைக்கதை 'எங்க வீட்டுப் பிள்ளை' தான்!'

'திலகம்'

'...சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்துப் பிறருக்குப் பிடிக்காது. வேறு யாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். பொதுவாக முக்கியக் கட்டங்களில் பாடித் தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். தங்கை கல்யாணமாகிப் போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீறிட அவர் பாடுவார். நெஞ்சடைக்கப் பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதே கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிவாஜி படங்களின் நகைச் சுவையின் உச்சம் சண்டைக் காட்சிகள்தான். 'அவன்தான் மனிதன்' என்ற படத்தில் அவர் சண்டைக் காட்சியில் நடித்த போது, நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டிப் பின்னால் இழுப்பார். 'வைக்கோலு பிடுங்கு கான்' என்று அப்பி தாமோதரன் சொல்ல, அது சிவாஜி பட சண்டைக்கான சொல் ஆகியது. 'சுண்டன் படம் எப்பிடி மச்சினா? நாலு வைக்கோலு இருக்குலே... அதுகொள்ளாம், சிரிக்கவகையுண்டு! பின்ன கடசீ ஸீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கினயும் மனசு தெறந்து சிரிக்கிலாம். ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?'...

உச்சம் 'திரிசூலம்'. அதில் மூன்று நடிப்பு. இரு கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை. கிழ சிவாஜிக்குப் பக்கவாட்டில் பார்த்தால் தலைகீழ் தேங்காய்மூடி போலத் தெரியும் தாடி. அவர் கே.ஆர்.விஜயாவை பிரிந்திருப்பார். பிரிவுத் துயர் தாங்காமல் தினம் இரண்டு லார்ஜ் ஏற்றிக்கொண்டு (சிவாஜி காங்கிரஸ்காரர் ஆதலினால் படத்தில் இக்காட்சியைக் காட்ட மாட்டார்கள். ஊகம்தான்!) சாட்டையால் தன்னைத்தானே பளார் பளார் என அடிப்பார். அப்போது எதிர் பார்க்கப்படுவது போலவே உதடுகள் துடிக்கும், கன்னம் அதிரும்...

உச்சகட்ட நடிப்பு... 'பகைவர் களே ஓடுங்கள், புலிகள் இரண்டு வருகின்றன...' என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. 'தென்னாட்டு மார்லன் பிராண்டோ' என்று சிவாஜியை இதன் பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.'

நம் குறிப்பு: தமிழ் வலைப் பூக்களில் இரண்டு பக்கங்கள் உள்ளன. நல்ல கதை, கவிதைகள், ஆரோக்கியமான விவாதங்கள் ஒரு பக்கம்; பெயரை மறைத்துக்கொண்டு எழுதும் வசதி, கட்டற்ற சுதந்திரம், சென்ஸார் இல்லாதது போன்றவற்றால் எதை வேண்டுமானாலும் மனம் போன போக்கில் எழுதலாம் என்ற பொறுப்பின்மை இன்னொரு பக்கம். இந்த இரண்டாம் பக்கத்தில் ஒரு பொறுப்பான எழுத்தாளர் தன் அடையாளங்களைச் சொல்லி... அதே சமயம் தன் ஆவேசத்தை நியாயப்படுத்தக் காரணங்களும் சொல்லாமல் இப்படி சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருப்பதை என்னவென்று சொல்வது?


நன்றி ஆனந்தவிகடன்.

இதற்கு ஆனந்தவிகடன் அவதூறு என்று ஜெயமோகன் எழுதியது. கீழே

---------------------------------

ஆனந்தவிகடனின் அவதூறு February 14, 2008 – 5:16 pm

ஆனந்த விகடன்இந்தவார இதழில் அட்டைப்பட முக்கியத்துவமளித்து என் இணையதளம் பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது.’ எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் ஆகியோரை ஜெயமோகன் இழிவுபடுத்துகிறாரா?’ என்ற தலைப்புடன். ஊரெங்கும் சுவரொட்டிகள் வேறு.

இந்த இணையதளத்தைப் படிப்பவர்களுக்கு தெரியும் இதன் நகைச்சுவைப்பகுதியில் அப்படி இழிவுபடுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்று. என் சாதி ,மதம் ,தெய்வங்கள், என் குடும்பம், சிற்றிதழ்கள், மதிப்பிற்குரிய இலக்கிய மூதாதையர் , என் வணக்கத்திற்குரிய இலக்கிய ஆசிரியர்கள் ஆகிய அனைத்தையுமே வேடிக்கையாக அணுகும் பகுதி இது. இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம்.

இதில் சில பகுதிகளை மட்டும் பெயர்த்தெடுத்து உள்நோக்கம் கற்பித்து நுண்ணுணர்வோ நகைச்சுவையுணர்வோ இல்லாத கும்பலை வன்முறை நோக்கி தூண்டி விடும்படியாக ஆனந்த விகடன்வெளியிட்டுள்ள இந்த கட்டுரை சற்று எதிர்பாராத ஒன்று. விகடன் பொதுவாக இம்மாதிரி சிண்டுமுடியும் வேலைகளைச் செய்வதில்லை. இதன் பின்னால் வன்மம் கொண்ட நோக்கம் உள்ளது

ஆனால் எதிர்பார்க்கத்தக்க விஷயம், கருத்துச் சுதந்திரம், புனித பிம்பங்களை கட்டுடைத்தல், அங்கதம் என்றெல்லாம் பேசி வரும் தமிழ் சிற்றிதழாளர்களிடமிருந்து சிறு எதிர்ப்போ கண்டனமோகூட இம்மாதிரி ஒரு வெளிப்படையான தூண்டிவிடுதலுக்கு எதிராக கிளம்பாது என்பது. வன்முறை நிகழ்ந்தால்கூட அதைக் கொண்டாடவே செய்வார்கள்

முற்றிலும் எதிர்பார்க்க முடியாத விஷயம் விகடன் என் மறுப்பை பிரசுரிக்கும் என்பது. பிரசுரித்தால்கூட ஒருசில சம்பந்தமில்லாத வரிகளை படத்துடன் அச்சிட்டு வைப்பார்கள்

ஆகவே விகடனுக்கு நான் அனுப்பிய கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.

மதிப்பிற்குரிய ஆனந்த விகடன்ஆசிரியருக்கு

விகடன் பெப் 14-21 இதழில் என் இணையதளம் பற்றி வெளியாகியிருக்கும் கட்டுரை படித்தேன்.

என் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட நகைச்சுவைக் கட்டுரைகளில் நமது பண்பாட்டுக்கூறுகள் அனைத்தையுமே அங்கதமாக விமரிசனம் செய்திருக்கிறேன். என் இலக்கிய ஆசிரியர்கள், தீவிர இலக்கியம், இலக்கிய முன்னோடிகள், சக படைபபளிகள், என் சாதி, மதம், குடும்பம் என எதுவுமே அதிலிருந்து தப்பவில்லை– அப்படித்தான் திரைப்படமும். இது இன்றைய எழுத்தின் ஒரு இயல்பாகும். இன்று இந்த அம்சம் திரைபபடங்கள் வரை வந்துள்ளது– இந்திப்படமான ‘ஓம் சாந்தி ஓம்’ ஓர் உதாரணம். அது அங்கே ஒரு மாபெரும் வெற்றிபப்டம்.

இதை எதையுமே பொருட்படுத்தாமல் சில பகுதிகளை பிய்த்துப்போட்டு உள்நோக்கம் கற்பித்து எழுதபப்ட்டுள்ள தங்கள் கட்டுரை. வன்முறையை தூண்டும் உள்நோக்கம் கொண்டது. ஆபத்தானது.

கருத்து சுதந்திரத்துக்காக சிறைசென்ற வரலாறுள்ள ஆசியரைக் கொண்டிருந்த ஓர் இதழ் இதைச்ச்செய்திருப்பதை எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை

அன்புடன்

ஜெயமோகன்

--------------------------------------------------------

நன்றி ஜெமோ

52 comments:

Anonymous said...

ரஜினி, சாருநிவேதிதா, ரஜினி ரசிகர்கள், மெயில் மிரட்டல் என்னவெல்லாமோ ஞாபகத்துக்கு வருகிறது. :-)

Anonymous said...

ஆனந்த விகடன் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட, சுஜாதா ‘தொகுத்த' இலக்கிய மலரை
விற்பனை உரிமை பெற்று விற்றது.
அதற்கான போஸ்டர்களில் இலக்கிய
ஜாம்பவான்கள் என்று வைரமுத்து,
நா.முத்துக்குமார் பெயர்களைப் போட்டது. ஜெயமோகன் பெயர் அதில் இல்லை.அதைக் கண்டித்து
ஜெயமோகன் தன் தளத்தில் எழுதினார்.அதற்கு ஆ.விகடன்
இப்படி ‘பதில்' சொல்லியிருக்கிறதோ
என்னமோ ?

Mohandoss said...

தமிழில் அங்கத எழுத்துக்கள் மிகவும் குறைவு என்பதை நோக்கும் வகையிலும். ஏறக்குறைய ஜெமோ சொன்ன அத்தனை கருத்துக்களையும் பிறர் சொல்லியும் கேட்டிருக்கிறேன் என்பதாலும். ஆனந்தவிகடன் செய்தது தான் தவறு, இது ஜெயமோகன் சொல்லியிருப்பது போல் இரு உன்னை மாட்டிவிடுறேன் என்று எடுத்துப் போட்டிருக்கிறது.

தமிழ்நாட்டு ரௌடி ரசிகர்கள் பற்றி தெரியாததா? ராஜ் தாக்கு'டே' க்களின் சிஷ்யப்பிள்ளைகளுக்குக் சற்றும் குறையாதவர்கள் அவர்கள்.

அருண்மொழி said...

விளம்பரம் தேடும் ஆசாமியான ஜெயமோகனுக்கு இதனால் வேண்டிய அளவு விளம்பரம் கிடைத்துவிடும்.

Anonymous said...

நாம்தான் ஊடகங்களைப் பயன்படுத்திக்
கொள்ள முடியும் என்று ஜெயமோகன் இது வரை நினைத்திருக்கிறார். ச
ஆ.வி அப்போது சங்கச் சித்திரங்கள்
வெளியிட்டது, அது அவருக்கு பிடித்தது, இப்போது அவர் எழுதியதை
எடுத்துப் போட்டு, விமர்சிக்கிறது, அது பிடிக்கவில்லை.அவர் எதிர்பாராதவிதத்தில்,
அவர் எழுத்தின் மீது விமர்சனமும்
வைத்துள்ளது.எனவே விகடன் மீதுதான் குறை என்று சொல்ல
முடியாது. இணையத்தில்
அதுவும் தமது தளத்தில்
எழுதுபவர்கள், அவை
இப்படி எடுத்து இடப்படும்
சாத்தியக்கூற்றினை புரிந்து
கொண்டு எழுத வேண்டும்.
ஜெயமோகன் எழுதியதும் சரி,
அதை ஆ.விகடன் இப்படி
விமர்சிப்பதும் சரி.இரண்டுமே கருத்துரிமையின் வெளிப்பாடுகள். ஜெயமோகன் இதற்கு ஒரு அழுகுணி போல் எதிர்வினையாற்றிருக்க வேண்டியதில்லை. ஒரு பிரதியை
பல்வேறு விதமாக வாசிக்க, விமர்சிக்க வாசகர்களுக்கு உரிமை உண்டு என்பதை ஜெயமோகமன்
புரிந்து கொள்வாரா.

Boston Bala said...

---அதற்கு ஆ.விகடன் இப்படி ‘பதில்' சொல்லியிருக்கிறதோ என்னமோ ?---

அடடே... இப்படி ஒரு சோழியன் குடுமி பாயின்டு இருக்கா!!

Mohandoss said...

//விளம்பரம் தேடும் ஆசாமியான ஜெயமோகனுக்கு இதனால் வேண்டிய அளவு விளம்பரம் கிடைத்துவிடும்.//

இதைப் பற்றி நிறைய பேசவேண்டியிருக்கிறது. போகிற போக்கில் போட்டுட்டுப் போக முடியாது!

வவ்வால் said...

மோஹன்,

பாய்ஸ் படத்தில் ஒரு காட்சி வரும் ரோட்டில் செல்லும் பெண்ணின் கவனத்தை ஈர்க்க பேண்ட் ஜிப் போடாமல் ஒரு பையன் செல்வான், அந்தப்பெண் அவனிடம் பேசியதும் ... யெஸ் தெரிஞ்சே தான் அப்படி செஞ்சேன் உங்க கூடப்பேச என்று சொல்வான்.

இப்படிப்பட்ட அல்ப உத்தித்தான் ஜெயமோகனின் புகழ்ப்பெற்றவர்கள் மீதான சொல்லாடல்கள். நாளு பேரை திரும்பி பார்க்க வைக்கணும் thats all, அதுக்காக அவரே விரைவில் அம்மணமாக ஓடினாலும் ஆச்சர்யம் இல்லை :-))

அவர் என்னமோ பிரமாதமாக எழுதுகிறார் என்று தான் நினைத்துக்கொள்வார் அவை எல்லாம் அப்பட்டமான மளையாள காப்பிகள் என்பதை ஊர் அறியும். அதைக்கேட்டா என் மேல பொறாமைனு சொல்வார், இப்போ இவர் இப்படி சொல்வதும் அவர்கள் மீதான பொறாமை என்று எடுத்துக்கொள்ளலாமா?

நீங்களே நன்றாக எழுதுகிறீர்கள், மேலும் கொஞ்சம் படித்து, எழுதியதை பல முறை செப்பனிட்டு என மெனக்கெட்டால் ஜெயமோஹனை எல்லாம் தாண்டிக்கூட எழுத முடியும், ஆனால் முயற்சிக்க மாட்டிங்க,,(இது எல்லாருக்குமே பொருந்தும்)மேலும் எழுதியதை தெரிந்த பத்திரிக்கை நண்பர்கள் மூலம் அச்சில் வர வைக்கனும் அதை எல்லாம் செய்தால் ஆறு மாதத்தில் நீங்க பெரிய எழுத்தாளர் ஆகிவிடலாம்.அப்புறம் மீண்டும் தொடர்ந்து மக்கள் கவனத்தை தன் மீது வைத்திருக்க இப்படிலாம் சைட்ல எழுதித்தள்ளனும் என்பது தெரியாதா என்ன? :-))

Mohandoss said...

//இப்படிப்பட்ட அல்ப உத்தித்தான் ஜெயமோகனின் புகழ்ப்பெற்றவர்கள் மீதான சொல்லாடல்கள். நாளு பேரை திரும்பி பார்க்க வைக்கணும் thats all, அதுக்காக அவரே விரைவில் அம்மணமாக ஓடினாலும் ஆச்சர்யம் இல்லை :-))
//

இது சரியில்லை.

விளம்பரம் செய்து கொள்வதைப் பற்றி நிறைய பேசியாகிவிட்டது. இன்னமும் நிறைய பேசலாம்.

தமிழ் இலக்கிய சூழல் இருக்கும் நிலை ரொம்பவும் மோசமானது. அதுமட்டுமல்லாமல் இது விளம்பர காலம்.

ஆனால் -புனித பிம்ப-ப் படுத்துதல் தான் எம்.ஜி.ஆர் பற்றியும் சிவாஜி பற்றியும் இரண்டு வார்த்தை கூட எழுத விடாமல் செய்கிறது.

எம்.ஜி.ஆரை இமிடேட் செய்து வரும் நபர்களை அப்படியே போட்டுக்கொள்கின்றன தொலைக்காட்சிகள். அதில் அவர்கள் ஜாடையாகச் செய்வதைத்தான் ஜெமோ எழுத்தில் வைத்தார்.

சுஜாதாவிடம், பாலகுமாரனிடம் கற்றதைப் போல் ஜெயமோகனிடமும் கற்றுக்கொள்ள எனக்கு நிறைய இருக்கிறது. அதைக் கற்றுக்கொள்ளவும் செய்வேன்.

அவருடைய எழுத்துக்களை படித்தவன் என்ற முறையில் அவர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாதவர். மிக நிச்சயமாக!

வவ்வால் said...

மோஹன்,
//ஆனால் -புனித பிம்ப-ப் படுத்துதல் தான் எம்.ஜி.ஆர் பற்றியும் சிவாஜி பற்றியும் இரண்டு வார்த்தை கூட எழுத விடாமல் செய்கிறது.//

புனித பிம்பப்படுத்துதல் , விமர்சனம் வைக்க கூடாது என்பதல்ல, தாரளமாக வைக்கலாம், அதனை ஒரு அடிப்படையுடன் வைக்கணும், எம்ஜிஆர் படங்களில் அப்படிப்பேசி நடிக்கிறார் என்கிறார், காவல்காரனுக்கு முந்தைய படங்களில் அப்படியா பேசி நடித்தார்?

மக்களின் அபிமானத்தால் அவரை அக்குறையோடும் ஏற்றுக்கொண்டார்கள். அதனை விமர்சனம் என்று பேசுவது சரி அல்ல, ஒழுங்க நடிக்க தெரியாது என்று சொல்லலாம்,ஒரே மாதிரி பாத்திரங்கள் எனலாம்.

ஏன் இந்தக்கால நடிகர்கள் கூட தான் பேஸ் மாட்டேன் , ஏய் லக்ஸ்மி என்றெல்லாம் பேசுகிறார்கள், நடனங்களில் ஆபாச அங்க அசைவுகள் வைக்கிறார்கள் , அதைப்பேசலாமே, அப்படிப்பேசினால் அடுத்த படம் வாய்ப்பு எதுவும் வராது இவருக்கு, செத்துப்போனவங்க பத்தி பேசினா இவரது திரைப்பட பொழப்பை கெடுக்காது :-))

ஜெயமோகனுக்கு கண்ணாடி போடாமல் படிக்க வராது அவர் ஒரு குருடர் என்றோ , அவருக்கு போலியோ பாதிப்பு உண்டு, எனவே அவரால் வேகமாக ஓட முடியாது என்றோ விமர்சனம் வைத்தால் என்ன சொல்வீர்கள், அவரது உடல் குறைப்பாடுகளை சொல்லாதீர்கள், எழுத்தை விமர்சனம் செய்யுங்கள் என்பீர்கள்.

இவர் மனுஷ்யபுத்திரனை அவரது உடல் குறைப்பாட்டினை வைத்து கேவலமாக உருவகப்படுத்தி எல்லாம் எழுதியவர் தான்.

எனவே இவருக்கு இப்படி எழுதுவது என்பது பிடித்தமான விஷயம்.

வர்மா said...

சில காலமாக ஆனந்தவிகடனின் தரம் மிகவும் தாழ்ந்து வருகின்றது. ஜெயமோகன் பற்றிச் சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை. இந்தவார விகடனில் திரிஷா குத்தியள்ள டாட்டு பற்றி ஒரு பக்கம் எழுதி வேஸ்டாக்கியிருக்கிறார்கள். நம்ம வலைப்பூ பதிவர்கள் சேர்ந்து விகடனை விட பல மடங்கு தரமான இதழ் வெளியிடலாம். சினிமாவைத் தவிர தற்போது விகடனில் காத்திரமான ஆக்கம் எதுவும் இல்லை. ஞானியின் ஓ பக்கங்கள் சில சர்ச்சைகளை உருவாக்கினாலும் நன்றாக இருந்தது. மதன் பதில்களில் மதனின் சில பதில்கள் கத்துக்குட்டிப் பதில்கள். என்று சோழர்களுக்கு வரலாறு எழுதுமளவுக்கு ஒன்றும் இல்லையென்று அவரும் தன் கொண்டையைக் காட்டிவிட்டார். உலக சினிமாவும் ஓரிரு ஆக்கங்களையும் தவிர விகடன் குப்பைதான். இதற்ற்கு விகடனில் பல வாசகர்கள் நேரடியாகவே பின்னூட்டம் இடுகிறார்கள். ஆனாலும் விகடன் திருந்தியபாடில்லை.

கல்வெட்டு said...

மோகன்தாஸ்,
யார் ஜெயமோகன் , என்ன செய்துள்ளார் என்று எல்லாம் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை.

மொக்கை,உடுக்கை,இம்சை,(கல்வெட்டு),கச்சடா,கஞ்சா கருப்பு,வெட்டி ,சட்டி,.... என்ற பெயர்களுக்குப் பின்னால் இருந்து யார் எழுதுகிறார்கள் என்று நான் தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்தது இல்லை.ஆர்வமும் வந்தது இல்லை.

ஏதோ ஒரு மனிதர் எழுதுகிறார் (அல்லது தானியங்கி சமாச்சாரங்கள்கூட இருக்கலாம்) நமக்கு பொழுது போகிறது. புதிய விசயங்கள் அறிமுகமாகிறது , அவ்வளலவுதான் ...

அது போலத்தான் , ஜெயமோகன் என்ற பெயரிலும் உள்ள பதிவை சிலமுறை படித்துள்ளேன்(http://jeyamohan.in). இவரின் அங்கதத்தைவிட மூத்த பதிவர் (compare to jeyamohan blog days) லக்கிலூக் அங்கதத்தை நன்றாகவே எழுதுகிறார் என்பதே என்பது தனிப்பட்ட எண்ணம்.

***

முன்,பின்,பக்கவாட்டு,இலக்கியவியாதிகள் ஆசிரியர் இறந்து விட்டார் (the author is dead -- that texts mean in relation to other texts, not in relation to the lives of the author) என்று சொல்வார்களே தவிர , தான் எழுதியபின் தனக்கும் அந்த எழுத்து சொந்தமில்லை என்று விலகி நிற்கும் பக்குவம் ,சுய புரிதல்கூட இல்லாதவர்கள்.

Author is dead -என்று வாசகனுக்குச் (வாசிப்பவன் அப்படித்தான் எழுத்தைப் பார்க்க வேண்டுமாம்) சொல்லும் இந்த எழுத்துவியாதிகள், எழுதிய பின் எதற்கு ஆசிரியர் நாந்தான் என்று போட்டோ போட்டு பெயர் போடவேண்டும்? அனானியாகவே வெளியிட வேண்டியதுதானே?

Author dead ஆன text ஐ யார் எப்படி விமர்சித்தால் என்ன? dead ஆன Author ஏன் கோபப்படவேண்டும்?

// கருத்து சுதந்திரத்துக்காக சிறைசென்ற வரலாறுள்ள ஆசியரைக் கொண்டிருந்த ஓர் இதழ் இதைச்ச்செய்திருப்பதை எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை//

இவர் ஒருபரின் நடிப்பின்மீது விமர்சனம் செய்வாராம் (அங்கத உணர்ச்சி) ஆனால் அந்த எழுத்தின் மீது (Author is dead என்பதை நினைவில் கொள்க) ஒரு "சினிமா நடிகை அட்டைப்பட பத்திரிக்கை" விமர்சனம் (கோப உணர்ச்சி ??) செய்தால் அது கருத்துச் சுதந்திரம் இல்லையாம்.

நான் எழுதும் எழுத்து எனக்கு அங்கதமாக இருக்கலாம். ஆனால் அது அனைவருக்கும் அதே உணர்ச்சியத்தான் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

jeyamohan சார் அப்படி அங்கதம் என்று எழுதி , ஆ.வி க்கு அது அங்கதமாகப் போய்ச்சேரவில்லை என்றால் அது என்ன புண்ணாக்கு எழுத்து? here ...Author is dead and so the text?


***

என்னதான் சொன்னாலும் ராஜ் தக்கரே வகையறா போல சிவாஜி/எம்.ஜி ஆர் புனித பிம்ப வழிபாட்டு இயக்கங்கள் இவரை நோண்டி நொங்கெடுக்காமல் இருப்பார்களா என்று சந்தேகம்தான். நாளை சிவாஜி புரடக்சனில் வசனம் எழுதச் சொன்னால் எழுதாமலே போய்விடுவார் இவர்.

***

Author is dead என்று ஆவியிடம் சொல்லிவிட்டு நடையக்கட்ட (நடிகையைக் கட்ட அல்ல) வேண்டியதுதான் இவர்.

------------

// அவருடைய எழுத்துக்களை படித்தவன் என்ற முறையில் அவர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாதவர். மிக நிச்சயமாக! //

மோகன்தாஸ்,
இலக்கணம் முதலில் வந்ததா?
இலக்கியம் முதலில் வந்ததா? அச்சடிக்கப்பட்ட வார்த்தைகள் மட்டும் இலக்கியமா?
வாய்வழிக் கதைகள் அது அச்சடிக்கப்படாத ஒரு காரணத்தினால் இலக்கிய அந்தஸ்து கிடையாதா?
எது இலக்கிய ISI தரச் சான்றிதழ்? .....

இலக்கியம் என்றால் என்ன என்று ஒரு பதிவு போட்டால் , என்னைப் போன்ற இலக்கியநாட்டுகள் புரிந்து கொள்ள வசதியாய் இருக்கும். :-)

//ஆனால் -புனித பிம்ப-ப் படுத்துதல் தான் எம்.ஜி.ஆர் பற்றியும் சிவாஜி பற்றியும் இரண்டு வார்த்தை கூட எழுத விடாமல் செய்கிறது.//

இதே புனித பிம்பப்படுத்தல் ஜெயமோகனை(அல்லது உங்களுக்கு பிடித்த சிலரை) மற்றவர்கள் விமர்சிப்பதை ஏற்கவும் தடுக்கலாம்.

Mohandoss said...

//மக்களின் அபிமானத்தால் அவரை அக்குறையோடும் ஏற்றுக்கொண்டார்கள். அதனை விமர்சனம் என்று பேசுவது சரி அல்ல, ஒழுங்க நடிக்க தெரியாது என்று சொல்லலாம்,ஒரே மாதிரி பாத்திரங்கள் எனலாம்.//

வவ்வால், எதை விமர்சனம் செய்வது எதை விடுவது என்பது ஆளுக்கு ஆள் மாறுபடக்கூடியது.

என் கேள்வி, இன்றைக்கும் எம்ஜிஆரை மிமிக்ரி செய்பவர்கள். காவல்காரனுக்கு முந்தைய படங்களில் வந்த எம்ஜிஆரின் குரலையா மிமிக் செய்கிறார்கள். சொல்லுங்கள்.

நகைச்சுவை விஷயத்தில் நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

Mohandoss said...

//இவரின் அங்கதத்தைவிட மூத்த பதிவர் (compare to jeyamohan blog days) லக்கிலூக் அங்கதத்தை நன்றாகவே எழுதுகிறார் என்பதே என்பது தனிப்பட்ட எண்ணம். //

கல்வெட்டு ஒப்பினியன் டிஃபர்ஸ்; அப்படியே விட்டுடுறேன் இந்த விஷயத்தை.

-----

பின்நவீனத்துவம் author dead வகையறாவிற்கெல்லாம் நம் தமிழ் சமுதாயம் இன்னும் தயாராகவில்லை. எந்தக் கருத்தை நீங்க எங்க சொல்றீங்கன்னு இருக்கு இல்லையா? முழுநேர எழுத்தாளனா உலகின் பிற மொழிகளில்/இடங்களில் வாழ்வதற்கும் தமிழ்நாட்டில் வாழ்வதற்கு உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரிஞ்சிதானிருக்கும் என்று நினைக்கிறேன்.

//நாளை சிவாஜி புரடக்சனில் வசனம் எழுதச் சொன்னால் எழுதாமலே போய்விடுவார் இவர். //

ஏன் செய்யக் கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்க.

//இலக்கியம் என்றால் என்ன என்று ஒரு பதிவு போட்டால் , என்னைப் போன்ற இலக்கியநாட்டுகள் புரிந்து கொள்ள வசதியாய் இருக்கும். :-)//

//யார் ஜெயமோகன் , என்ன செய்துள்ளார் என்று எல்லாம் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை.//

சொல்ல எதுவுமில்லை, எதையும் படிச்சிட்டு தூக்கியெறியறதைப் பற்றி கேள்வியில்லை. படிக்காமலேயே தூக்கியெறிவது என்பது எந்த வகையறா என்று தெரியலை.

ஜெயமோகனின் அத்தனை நாவல்களிலும்(நான் படித்தவை) எனக்கு ஒவ்வாத விஷயங்கள் உண்டு தான். பாலகுமாரன் கடவுள் பற்றிய நாவல்கள் எழுதும் பொழுது பெரும்பாலும் படித்திருக்கிறேன் அந்த எழுத்து நடைக்காக(அப்படிப் பிடித்திருந்தது ஒரு காலம்). இப்பொழுதும் அப்படியே அவருடைய சில திணிக்கும் முயற்சிகளை நிராகரித்து பிரதி என்கிற வகையில் படித்துக் கொண்டிருக்கிறேன்.

//இதே புனித பிம்பப்படுத்தல் ஜெயமோகனை(அல்லது உங்களுக்கு பிடித்த சிலரை) மற்றவர்கள் விமர்சிப்பதை ஏற்கவும் தடுக்கலாம்.//

அப்படியில்லை என்றே நினைக்கிறேன். இது ஜெயமோகனுக்கான சப்போர்ட் இல்லை. தமிழில் அங்கத எழுத்துக்கள்(ளும்) வரவேண்டிய தேவை கருதியே!

----------

இலக்கியம் பத்தி நான் ஒன்னும் எழுதப்போறது இல்லை, அவங்களோட ஒப்பினீயன் அவங்களுக்கு உங்களோட ஒப்பினியனை நான் மதிக்கிறேன். அப்படியே வைஸ் வர்ஸா!

அருண்மொழி said...

யாரும் எம்.ஜி.ஆரை, சிவாஜியை அங்கதம் செய்ய கூடாது என்று fatwa விதிக்கவில்லை. ஜெயமோகனுக்கு யாரையாவது விமர்சித்து எழுதி/பேசி கொண்டே இருக்கவேண்டும். கருணாநிதி முதல் கனிமொழி வரை. இவர்களாவது அரசியல்வாதிகள். விட்டுதள்ளுங்கள். தன் சக எழுத்தாளார்களை பற்றி இவர் என்ன எழுதி/பேசி உள்ளார் என்று கவனியுங்கள். இது அகம்பாவமா (அ) விளம்பரம் தேடும் யுக்தியா?

கல்வெட்டு said...

மோகன்தாஸ்
// எந்தக் கருத்தை நீங்க எங்க சொல்றீங்கன்னு இருக்கு இல்லையா? //

//முழுநேர எழுத்தாளனா உலகின் பிற மொழிகளில்/இடங்களில் வாழ்வதற்கும் தமிழ்நாட்டில் வாழ்வதற்கு உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரிஞ்சிதானிருக்கும் என்று நினைக்கிறேன்.//

:-))

இதுதான் யதார்ததம் என்பது.
எந்தக் கருத்தை எங்கே சொல்லவேண்டும் என்று ஜெயமோகனுக்கு தெரிந்து இருந்தால் சரி.

தெரிந்து செய்ததை அவர் ஏன் கருத்து சுதந்திரம் என்று கல்லா கட்டவேண்டும்?
அவரின் அங்கத உணர்ச்சி , ஆ.விக்கு இல்லை என்று நீங்கள் ஏன் வருந்த வேண்டும்?

இது தமிழ்நாடு. இப்படித்தான் இருக்கும் என்ற யதார்த்தம் புரிய வேண்டும். அதையும்தாண்டி கல்லடி பட தைரியம் உள்ளவர்கள்தான் (ex: பெரியார்) கலகம் செய்யமுடியும்.

கதையிலும்,புனைவிலும் கலகம் செய்துவிட்டு மல்லாக்க படுத்துக் கொண்டு பெரியார் என்ன டவுசரா? என்றெல்லாம் சொன்னால் , அது விளம்பரம்தான்.

Author dead ஆன text ஐ யார் எப்படி விமர்சித்தால் என்ன? dead ஆன Author ஏன் கோபப்படவேண்டும்? பல விசயங்கள் அறிந்த ஜெயமோகனுக்கு இது ஏன் தெரியவில்லை?

****

//சொல்ல எதுவுமில்லை, எதையும் படிச்சிட்டு தூக்கியெறியறதைப் பற்றி கேள்வியில்லை. படிக்காமலேயே தூக்கியெறிவது என்பது எந்த வகையறா என்று தெரியலை.//

:-))
அலமாரியில் உள்ள புத்தகங்களைப் பார்த்து யாரையும் வியப்பது இல்லை. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாத அல்லது அப்படி ஒரு நோக்குடன் (பெரியார்) இல்லாத எழுத்து/செயல் எல்லாமே ஒரு பொழுது போக்குச் சமாச்சாரம் என்பதைத்தாண்டி ஒன்றும் இல்லை.

கற்றுக் கொள்ள எல்லாரிடமும் ஒன்று இருக்கிறது. ஜெயமோகனிடமும் அப்படி ஒன்று இருக்கலாம் பிச்சைக்காரனிடமும் கூட இருக்கலாம் குழந்தையிடமும் இருக்கலாம். ஒத்துக் கொள்கிறேன். தேவை என்றால் கற்றுக் கொள்ளலாம்.பொழுது போவதற்காக இலக்கியவாதிகளின் பின்னால் செல்வது இல்லை. வேறு நல்ல பொழுது போக்கு சமாச்சாரங்கள் இருப்பதால்.

***

ஒப்பினியன் டிஃபர்ஸ் - அதனால் அது ஒப்பினியன் :-) இல்லை என்றால் "ரிசல்ட்" ஆக அல்லவா இருக்கும். எனது பார்வயே தவிர , மற்றவரையும் சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற விவாத நோக்கில் சொல்லவில்லை.

Mohandoss said...

//:-))

இதுதான் யதார்ததம் என்பது.
எந்தக் கருத்தை எங்கே சொல்லவேண்டும் என்று ஜெயமோகனுக்கு தெரிந்து இருந்தால் சரி.
//

அங்கத எழுத்துக்களை எப்படி ஆதரிக்கிறேனோ அதே போல் பின்நவீனத்துவ கருத்தாக்கமான author is dead ஐயும் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டில் இந்த பின்நவீனத்துப் போக்கு எடுபடாது என்பதை சந்தோஷத்துடன் சொல்லவில்லை; அதைப் போலத்தான் இப்படிச் சிண்டு முடிவதையும்.

கொடுமைக்குன்னு உங்களுக்கு இன்று ஆவியை சப்போர்ட் செய்யும் நிலைமை :)

//தெரிந்து செய்ததை அவர் ஏன் கருத்து சுதந்திரம் என்று கல்லா கட்டவேண்டும்?
அவரின் அங்கத உணர்ச்சி , ஆ.விக்கு இல்லை என்று நீங்கள் ஏன் வருந்த வேண்டும்? //

ஜெயமோகன் செய்ததும் ஆவி செய்ததும் ஒன்று இல்லை. சர்வ நிச்சயமாய்.

கல்வெட்டு said...

மோகன்தாஸ்
//கொடுமைக்குன்னு உங்களுக்கு இன்று ஆவியை சப்போர்ட் செய்யும் நிலைமை :)//

ஆ.வி யை சப்போர்ட் செய்யவில்லை மோகன்தாஸ். பின் நவீனம் என்றால் என்ன என்று விளக்கும் ஜெயமோகன் (அவரது பதிவில்தான்) ஆ.வி யுடன் ஏன் அவரின் text ஐ முன்னிறுத்தி மல்லுக்கு நிற்கிறார்?

கொடுமை என்னவென்றால் , இவரை ஆதரித்து வந்த இரண்டு கடிதங்களையும் போடுகிறார். கடந்து செல்ல முடியவில்லை இவரால். Author is still alive and with extra weapons and support என்று நிற்கிறார் :-)).

ஜெயமோகனை,அவரின் பதிவுகளில் இருந்து நான் அறிந்த அளவில் விமர்சனம் செய்தேன். இவரை விமர்சனம் செய்வதால் ஆ.வீ யை ஆதரித்ததாக முடியாது. அது நல்ல பொழுது போக்கு பத்திரிக்கை. :-)

// ஜெயமோகன் செய்ததும் ஆவி செய்ததும் ஒன்று இல்லை. சர்வ நிச்சயமாய்.//

பல உள்ளடி அரசியல் இருக்கலாம். நாளையே வீடு -வாடகைக்காரர் (ஞாநி பாணியில்) என்று இவரும் அங்கேயே எழுதலாம்.

சரி விடுங்க .. இவர்களுக்காக நாம மோதினது போதும். :-))

TBCD said...

:)

///

Author is still alive and with extra weapons and support என்று நிற்கிறார் :-)).

///

ஜோ/Joe said...

ஓகோ! இது அங்கதமா ..வாயில நல்லா வருது!

சில அரைகுறைகளுக்கு வெகுஜன மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை குறை சொல்லி "இதோ பார் ..நான் வித்தியாசமாக சிந்திக்கிறேன்" என்று காட்டி அறிவிஜீவி வேடம் போடுவது ஒன்றும் புதிதல்ல .

இவர் இலக்கியத்துல பெரிய பருப்பா இருக்கலாம் ..நடிகர் திலகத்தின் சில படங்களை பொறுக்கியெடுத்து வேண்டுமென்றே சேறு வாரி இறைத்தீரூக்கிறார் இந்த மனிதன் .. நடிகர் திலகத்தை விட இவர் பெரிய சாதனையாளரா ? வெங்காயம்..

வவ்வால் said...

மோஹன்,
//என் கேள்வி, இன்றைக்கும் எம்ஜிஆரை மிமிக்ரி செய்பவர்கள். காவல்காரனுக்கு முந்தைய படங்களில் வந்த எம்ஜிஆரின் குரலையா மிமிக் செய்கிறார்கள். சொல்லுங்கள்.//

இப்போ புரிந்துவிட்டது ஜெயமோகனை நீங்கள் எந்த இடத்தில் வைத்து "அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள இருக்கிறது " என்று சொன்னீர்கள் என்பது :-))

லக்கிலுக் said...

மோகன்!

இப்படி ஒரு நிலைமை வரும்னு போனவாரம் வரைக்கும் நெனைச்சுப் பார்த்திருப்பீங்களா? :-))))))

ஆ.வி/ஜெமோ ரெண்டு பேருமே இந்த விஷயத்தை வைத்து மொக்கை போடுகிறார்கள் என்பது என் கருத்து. மொக்கை போடுவது வலைப்பதிவர்களின் உரிமை. இந்த உரிமையை பறிக்கும் ஆவி/ஜெமோ கும்பலை கண்டிக்கிறேன்.

கோவை சிபி said...

ஆ.வி அடுத்த ஆளை அடையாளம் காட்டியிருக்கிறது.இன்னும் இரண்டு மாதங்களுக்குள் ஜெ.மோ தொடர் எழுதுவார் ஆ.வி யில்.

உண்மைத்தமிழன் said...

தம்பீ..

நகைச்சுவை உணர்வோ, அங்கதம் என்று ஜெயமோகன் நோக்கில் சொல்லப்படும் கருத்துரிமையோ இங்கு யாருக்கும் இல்லாமல் இல்லை.

ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்த பின்பும் அவருக்கான இலக்கிய பீடத்தைப் பார்த்து நீ உச்சிமகிழ்ந்து போயிருப்பதாக எழுதியிருப்பது எனக்கு வருத்தம் தருகிறது.

ஜெயமோகன் எழுதிய நகைச்சுவைக் கருத்துக்களை கொஞ்சம் படித்துப் பார். அனைத்துமே தனி மனித அத்துமீறலான விமர்சனங்கள்.

திரைப்படம் என்பது ஒருவரின் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் அதைக் காண்பதுதான்.. எம்.ஜி.ஆர். அப்படி பேசினால் என்றால் அதற்கு அவரா காரணம்? எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டபோது அவருடைய தொண்டையில் குண்டு பாய்ந்து அந்தக் காயத்தால் ஏற்பட்டது. அது ஒருவகையில் ஊனமுற்ற செயல் போலத்தான்..

600 பக்கத்துக்கு இலக்கியம் என்று எழுதத் தெரிந்த ஜெயமோகனுக்குத் தெரியாதா ஊனத்தை கிண்டல் செய்வது நாகரிகமில்லாத செயல் என்று..?

யாராவது கால் இல்லாதவன் நொண்டி கொண்டே வந்தால் "அவன்கிட்ட கொடு.. பத்து நிமிஷத்துல வீட்ல கொண்டு போய் கொடுத்திருவான்.." என்று கிண்டல் செய்தால் அவன் மனது எப்படி இருக்கும்..?

எம்.ஜி.ஆர் என்ற நடிகரை மறந்துவிடு. அவர் புகழ் பெற்றவர் என்பதையும் மறந்துவிடு. ஒரு பேச்சுக் கலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதரை அவருடைய இயலாமையை கிண்டல் செய்துவிட்டு பின்பு உங்களுக்கு நகைச்சுவை அறிவு குறைவு என்று சொல்கின்ற அந்த மனிதரை நீ எந்தவிதத்தில் இலக்கியவாதி என்கிறாய்..? அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது என்கிறாய்.. இருக்கிறது.. ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றிய தற்பெருமை எவ்வளவுக்கு இருக்கக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரண புருஷன் இந்த ஜெயமோகன்தான்..

ஒரே ஒரு முறை.. ஒரு அரைமணி நேரம் அவர் அருகில் நின்று அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த அரை மணி நேரத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் அவரைத் தவிர வேறு யாருமே எழுத்தாளர்கள் இல்லை என்ற ரீதியிலேயே இருந்தது. அந்த நிமிடத்திலேயே அந்த மனிதரைப் பற்றிய கணிப்பு எனக்குள் தெரிந்துவிட்டது.. நமக்கு பேச்சே போதும்பா..

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் நம் முதல் தலைமுறை சொந்தக்காரர்களை அவர்களுடைய வாழ்க்கையில் பல மணி நேரங்கள் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஓய்வு எடுக்க வைத்திருக்கிறார்கள். நிம்மதியாக இருக்க வைத்திருக்கிறார்கள். யோசித்துப் பார்..

சிறு வயதில் எத்தனை பேர் உன்னைத் தூக்கி வைத்துக் கொஞ்சியிருப்பார்கள். ஏன் உனக்கு உணவு கூட ஊட்டியிருப்பார்கள். அவர்கள் அனைவரிடமும் உனக்குப் பிடிக்காத சில விஷயங்கள் இருக்கும். அதற்காக அவர்களை மனிதப் பிறவியிலிருந்து விலக்கிவிடும் வேலையை என்றாவது நீ செய்ய முனைந்ததுண்டா..

நடிகர் திலகம் நடிக்கவில்லை.. மக்கள் திலகம் நடிக்கவில்லைலஎன்றால் அவர்களுக்கென்று இருந்த ரசிகர்கள் கூட்டத்தை என்னவென்று சொல்வாய்..? ஆட்டு, மாட்டு மந்தைகள் என்றா..?

அப்படியெனில் நீ போன தலைமுறையில் பிறந்து தொலைந்திருந்தால் அந்த ஆடு, இந்த மாட்டு மந்தைகளில் ஒன்றாய்த்தானே இருந்திருப்பாய்..

நீ இப்போது பிறந்து விட்டதனால் பிழைத்துக் கொண்டாய்.. இப்போது அவர்களைக் கிண்டல் செய்யப்படுவதைக் கூட நியாயம் என்கிறாய்.. கண்டிக்க மறுக்கிறாய்..

உனக்கு இன்னுமொரு அட்வைஸ்.. தயவு செய்து இந்த இலக்கிய வியாதிகளின் சண்டையை உண்மை என்று எண்ணிவிடாதே..

அரசியல்வாதிகளுக்குள் நடக்கும் மோதலையாவது எதனால் என்று உன்னால் சொல்லி விட முடியும். எப்போது அவர்கள் இன்னொரு முறை ஒன்று சேர்வார்கள் என்பதையும் நம்மால் யூகிக்க முடியும்.

ஆனால் இலக்கிய வியாதியாளர்களை கணிக்கவே முடியாது. நீ வேண்டுமானால் பார்த்துக் கொண்டே இரு.. விரைவில் அதே பத்திரிகையில் ஜெயமோகனின் எழுத்து நிச்சயம் இடம் பெறும்.

அப்போது இந்தக் குற்றவுணர்ச்சி இரு தரப்பாரிடமும் இருக்கவே இருக்காது.. வீணாக நீயும், நானும் சண்டை போட்டது, போடுவதுதான் மிச்சமாகும்.

இதே ஜெயமோகன், சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், சுந்தரராமசாமி இவர்களைப் பற்றியெல்லாம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பத்திரிகையிலும் எழுதிய விதத்தையும்..

இப்போது இவர்கள் மூவரைப் பற்றியும் அவர் பேசி வரும் பேச்சுக்களையும் பார்த்தால் அரசியல்வாதிகளே பரவாயில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இதே போல் ஜெயமோகனின் தாயையோ, தந்தையையோ யாராவது உடல் ரீதியாக கிண்டல் செய்து சும்மா ஜோக்குதான் என்று சொன்னால் ஜெயமோகன் என்ன செய்வார்..?

அங்கதத்தை அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்வாரா..?

Anonymous said...

உ.தமிழன் என்ன சொல்லவருகிறார் என்பதை யாராவது மொழிபெயர்த்து சொல்லமுடியுமா?

Anonymous said...

ஜெயமோகனுக்கு பைப்பு இருக்கு பம்பு இல்லை

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

பின்னூட்டங்களில் death of the author என்பது எவ்வளவு முறை வருகிறது.! ஏதாவது சவக் கிடங்கிற்கு வந்து விட்டோமோ என்று கூடச் சந்தேகம் :)

ஏன் புகைப் படத்தைப் போட்டுக் கொண்டார் என ஒரு கேள்வி, இன்னொரு கேள்வி, ஆசிரியன் தான் இறந்து விட்டானே, பிறகு பிரதியை முன் வைத்து ஏன் சண்டை போடுகிறார் என. விட்டால் ஆசிரியன் இறந்து விட்டான், எனவே ராயல்டி கிடையாது எனச் சொன்னாலும் சொல்லி விடுவார்கள் :) பாவம் தமிழ் எழுத்தாளன். !

இது குறித்து நம் வலைப் பதிவுகளில் வளர்மதி எழுதியிருக்கும் குறிப்புகளைக் கீழே தருகிறேன். படித்துப் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

/ஆசிரியன் இறந்து விட்டான் என்பது குறித்து: முதலில் ரொலான்ட் பார்த்தின் இந்த மேற்கோளைத் தருகிறேன் (இதுவும் "கண்ணன் என் காதலன்" என்ற கட்டுரைக்கு epigraph - ஆகத் தந்தது.

இனி ஆசிரியன் பிரதிக்குள், அவனுடைய பிரதிக்குள் 'திரும்ப வரமாட்டான்' என்பதல்ல. மாறாக, அப்படி வரும்போது அவன் ஒரு 'விருந்தாளியாக' மட்டுமே இருப்பான் என்பதே. ஒரு நாவலாசிரியனாக அவன் இருந்தால், நாவலில் வரும் பல கதாபாத்திரங்களில் ஒன்றாக, விரித்த கம்பளத்தின் ஏதோவொரு மூலையில் ஒரு உருவமாக பதிந்திருப்பான். (பார்த்)

கவனிக்க: ஆசிரியன் இறந்து விட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து பார்த் எழுதியிருப்பது இது. அதாவது, ஆசிரியன் இறந்துவிட்ட பிறகு, வாசகன் தன் இஷ்டத்திற்கு படைப்பிற்கு அர்த்தம் தந்துகொண்டிருக்க முடியாது என்பதற்கான குறிப்பு இது.

பிரதியின் மீதான ஆசிரியனின் சர்வாதிகாரத்தை 'ஆசிரியனின் மரணம்' என்ற கருதுகோள் கேள்விக்குட்படுத்துகிறதேயல்லாமல், அதற்கு மாற்றாக வாசகனின் சர்வாதிகாரத்தை முன்வைக்கவில்லை. இருவருக்குமிடையிலான ஒரு ஜனநாயகப்பூர்வமான வெளியைத் திறக்க கோருவதே இந்தப் பிரகடனத்தின் 'ஆன்மத் துடிப்பு'.

அதோடு மட்டுமல்லாமல், பார்த் பேசியது, வெள்ளையின - ஐரோப்பிய - ஆண் எழுத்தாளர்களின் மரணத்தையே. இது திறந்துவிடும் இன்னொரு வெளி மற்ற கலாச்சாரப் பின்னணியிலிருந்து வரும் - அதாவது, வெள்ளையினப் பெண் எழுத்தாளர்கள், கருப்பின எழுத்தாளர்கள், மூன்றாம் உலக எழுத்தாளர்களின் சுதந்திரத்திற்கான பிரகடனம். இந்தப் புரிதல் இல்லையென்றால், ஒரே நேரத்தில் 'ஆசிரியனின் மரணத்தை'ப் பற்றியும், தலித் எழுத்தாளர்களின் வருகையைப் பற்றியும் பேசுவது கேலிக்கூத்தாகிவிடும். (இதுதான் இதன் அரசியல் ஆபத்து.)

"விரித்த கம்பளத்தின் ஏதோவொரு மூலையில் ஒரு உருவமாக பதிந்திருப்பான்," என்பதற்கு ஒரு inter - textual reference இருக்கிறது. அது Henry James - ன் அதே தலைப்பிலான (The Figure in the Carpet) ஒரு நாவல் பற்றிய குறிப்பு. இக்குறிப்பால் பார்த் உணர்த்த விரும்புவது, தான் இக்கருத்தமைவை இந்நாவலிலிருந்து பெற்றதையே.

பார்த்தின் இந்தக் கட்டுரையோடு இணைத்து வாசிக்க வேண்டியது ஃபூக்கோவின் What is an Author என்ற கட்டுரை. அதில் ஆசிரியன் என்ற கருத்தாக்கமே ஐரோப்பியக் கலாச்சாரத்தில் எப்போது தோன்றியது என்பதை அலசும் ஃபூக்கோ, அதன் பயன்பாடுகள் என்னவாக இருந்தன என்பதையும் விளக்குவார்./ (http://vinaiaanathogai.blogspot.com)

Anonymous said...

ஜெயமோகன், ஆவி இவர்களின் தராதரம், மோதல் இவற்றை முன்வைத்து இங்கே நடக்கும் விவாதம் ஒரு புறம் இருக்க, சிவாஜி எம்ஜிஆர் பற்றி மட்டும் எடுத்துக் கொண்டால் சிவாஜி ரசிகன் எம்ஜிஆர் பற்றியும், எம்ஜிஆர் ரசிகன் சிவாஜி பற்றியும் கூறுவதை எந்த மிகையும் இல்லாமல் தான் ஜெயமோகன் வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டு பேரும் சொன்னதை இவர் ஒருவரே சொன்னதில் தான் பிரச்சினை போலிருக்கிறது.

சாதாரண திரைப்பட ரசிகன் இப்படித்தான் பேசிக் கொள்ளுவான் என்பதில் உங்களில் யாருக்காவது சந்தேகமிருக்கிறதா என்ன? அதை ஜெயமோகன் சொன்னதில் என்ன பிரச்சினை? அது ஆவிக்கு பிரச்சினையாக இருக்கலாம்...அல்லது அதை முன்வைத்து ஒரு பரபரப்பை உருவாக்கும் நோக்கமே கூட இருக்கலாம். அதை ஜெயமோகன் எதிர் கொண்ட விதமும் கூட அம்மாதிரி உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கலாம்.

அவரது மற்ற சில கட்டுரைகள் குறித்து, தனிப்பட்ட அத்து மீறிய விமர்சனங்களாக சில சமயங்களில் இருப்பது உண்மைதான். ஆனாலும் அவரை எதிர்ப்பவர்களே புறக்கணிக்க முடியாதவராக இருப்பது அவரது பலம்தான். அவரது எழுத்து நடையில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கவே செய்கிறது. மோகன்தாஸ் கூறியபடி தவிர்க்க முடியாதவர் என்று சொல்லலாம்.

அதே சமயம் அவர் மற்றவரகளை அங்கதமாக? எழுதுவது போல அவரை யாராவது பிரபலம் எழுதினால் அதே அங்கத உணர்வோடு ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை. ஓரு புறம் தனது எதிர்மறை விஷயங்களையும் தானே வெளிப்படுத்தி யுமிருக்கிறார் ;)

கல்வெட்டு said...

ஜ்யோவ்ராம் சுந்தர் ,
ஆசிரியரின் இறப்பு என்பதை வளர்மதி அல்லது நீங்கள் அல்லது நான் அல்லது யாரோ ஒருவரின் கோனார் தமிழ் உரையின் துணைகொண்டுதான் மற்றவர் அணுக வேண்டும் என்பது இல்லை.

ஆசிரியரின் இறப்பு என்ற ஒன்று தமிழ் மண்ணிற்கு தொடர்பில்லாத ஒன்று. அல்லது இறக்குமதிச் சிந்தனை. (தமிழ் இலக்கியவியாதிகளில் இருந்து ஏதாவது புதிய சிந்தனைகள் தோன்றியுள்ளதா என்ன ? )
இந்த தமிழ்ச் சூழலில் இருந்து பார்க்கும் அனைவரும் (நானும் தான்) குருடர்கள் யானையைத் தடவிய கதையாகத்தான் இருக்கும்.

//பிரதியின் மீதான ஆசிரியனின் சர்வாதிகாரத்தை 'ஆசிரியனின் மரணம்' என்ற கருதுகோள் கேள்விக்குட்படுத்துகிறதேயல்லாமல், அதற்கு மாற்றாக வாசகனின் சர்வாதிகாரத்தை முன்வைக்கவில்லை. இருவருக்குமிடையிலான ஒரு ஜனநாயகப்பூர்வமான வெளியைத் திறக்க கோருவதே இந்தப் பிரகடனத்தின் 'ஆன்மத் துடிப்பு'. //

குழந்தையை பிரசவித்த தாய்க்கே அந்த குழந்தையின் மீது என்ன உரிமை உள்ளது. "குழந்தை உலகிற்கு வருவதற்கு அவளைப் பயன்படுத்தியது" - என்ற நோக்கில் பார்த்தால் மேலும் சில விசயங்கள் புரியலாம். அது போலத்தான் மற்ற படைப்புகளும். பிரசவித்தவன் விலகி நின்று தானும் ஒரு பார்வையாளனாகிவிட வேண்டும்.

text ஐ பிரசவித்த ஆசிரியரின் இறப்பு என்பதுதான் எனது புரிதல். வாசகன் இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று படைப்புடன் How to read this என்று readme.txt கொடுப்பதும் சொல்வது படைப்பாளியின் சர்வாதிகாரம்.

படைப்பாளி தனது படைப்பை தானும் ஒரு பார்வையாளனாக இருந்து பார்ப்பதற்கும் ஜெயமோகனின் கம்பு சுற்றலுக்கும் வேறுபாடு உள்ளது.

தென்றல் said...

ஏதோ யாருக்கும் தெரியாத ஒரு விசயத்தையா ஜெயமோகன் சொல்லி விட்டார்?

இவர் யார் இதையெல்லாம் சொல்ல என்பது பிரச்சனையா அல்லது ஒரு சராசரி எம்.ஜி.ஆர், சிவாஜி இரசிகர்களுக்கு தெரிந்ததை இவர் சொன்னதால் பிரச்சனையா?

எஸ்ரா, கோணங்கி இப்படி எல்லாரையைப் பற்றியும்தான் நக்கல் செய்துள்ளார். திரும்ப அவர்களும் 'அப்படியே' ஜெமோவை பற்றி எழுதியுள்ளார்கள்.

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத விகடன், 'திலகம்', 'தொப்பி' யைப் மட்டும் அதுவும் முழுவதும் போடாமல்.. பிச்சி பிச்சி போட்டு அதை மேற்கோளாகக் சில பத்திகளை மட்டும் காட்டி... அதுவும் முதல் பக்கத்திலேயே... என்ன (கேவலமான)அரசியலோ?

முழுவதும் படிக்காதவர்களுக்கு ;)

திலகம்

தொப்பி

இவர்களை இழிவுப்படுத்தினாரா... அல்லது இது நகைச்சுவையா தான் எடுத்து கொள்ள வேண்டுமா என்று தெரியவில்லை...

ஏன் விகடன் அவருடைய உலக இலக்கியம், அறிவியல் புனைக்கதைகள், பின் நவீனத்துவம் பற்றிய பதிவுகளை பொது வாசகர்களிடையே கொண்டு செல்லவேண்டியதுதானே... அப்படி இல்லாமல்... விகடன் தேடிக் கொண்டது ஒரு 'Cheap Publicity' .. கேவலமான செயல்....

ஆனால், இப்பொழுதுலாம் ஜெ.மோ சாருநிவேதிபோல ...


"நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்."


என்று பேச ஆரம்பித்து விட்டார்.

கடைசியாக...
//ஓரு தரமான இலக்கியச் சூழலில் அதற்கான ஒருசில வாசகர் நடுவே இலக்கிய நோக்குடன் மட்டுமே வாசிக்கபப்ட்ட இக்கட்டுரைகளை இலக்கியம் பற்றி அறியாத வாசகர்கள் நடுவே கொண்டுசென்று வேறுவகையாக வாசிக்கச்செய்தது வழியாக எம்ஜி.ஆர், சிவாஜி இருவரையும் இழிவுடுத்தியது விகடன்தான். மிக துரதிருஷ்டவசமானது இது. //

ஜெ.மோ.தான் விளக்கனும்..??

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கல்வெட்டு,

பார்த்தின் ஆசிரியன் இறந்து விட்டானைப் பற்றிப் பேசியதால் என் எதிர்வினை அது. மற்றபடி கோனார் நோட்ஸ் எழுதும் எண்ணம் எதுவுமில்லை :) ஜெமோவின் gimmicks ஐ ஆதரிக்கவும் இல்லை - இன்னும் சொல்லப் போனால் அவரது எழுத்து முற்றிலும் நிராகரிக்கப் படவேண்டியது என்பது என் எண்ணம்.

இறக்குமதி சிந்தனை குறித்த உங்கள் பார்வையுடன் எனக்கு உடன்பாடில்லை. போலவே காட்டடியாக இலக்கிய வியாதிகள் எனப் புறந்தள்ளுவதும்.

/text ஐ பிரசவித்த ஆசிரியரின் இறப்பு என்பதுதான் எனது புரிதல். வாசகன் இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று படைப்புடன் How to read this என்று readme.txt கொடுப்பதும் சொல்வது படைப்பாளியின் சர்வாதிகாரம்/

அதே. அதற்காக வந்தது தான் அந்தக் கோட்பாடே. ஆனால் அதை இன்னொரு கோடிக்கு இழுத்துச் சென்று ஆசிரியனுக்கும் பிரதிக்கும் உறவே இல்லை எனச் சொல்ல முடியுமா என்பதே என் கேள்வி.

Anonymous said...

உங்களுக்கெல்லாம் ஜெயமோகன் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்.
அதாவது ரசிகனாக, என் வாசகனாக
மட்டும் இரு. இன்னை விமர்சிக்க,
என்னுடம் உரையாடக் கூட ஒரு தகுதி
வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்
அந்த ‘வரலாற்று ஆளுமை'. ‘தங்களையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள்'- இதுதான் அது அவர் தன்னை விமர்சிப்பவர்களைப் பற்றி எழுதியிருப்பது.
-----------------------------------

உங்களைப்பற்றிய விமரிசனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? அவை உங்களை பாதிக்கின்றனவா? அவற்றை வாசித்துப் பார்ப்பீர்களா? அல்லது just ignore செய்வீர்கள

allwantspace

அன்புள்ள நண்பருக்கு,

நான் எப்போதுமே இத்தகைய விமரிசனங்களையும் விவாதங்களையும் சற்றும்பொருட்படுத்தியதில்லை. பொருட்படுத்தியிருந்தால் இத்தனை எழுதியிருக்க முடியாது. ஒரு காலத்தில் வாசித்திருந்தேன், பதினைந்துவருடம் முன்பு. இவற்றில் பெரும்பகுதி நல்லெண்ணம் அற்ற மனக்கசப்புகள். அவர்களில் கணிசமானவர்கள் ஓர் எழுத்தாளனாக என்னை அறிந்திருக்கவே மாட்டார்கள் என்று கண்டேன். அன்றுமுதல் நான் இவற்றை வாசிப்பதேயில்லை. நான் பொருட்படுத்தலாமென என் நம்பிக்கைக்குரிய வாசகர்கள் சொன்னால் மட்டுமே அவற்றை வாசிக்கிறேன்- அவை மிகமிக அபூர்வம். நான் மட்டுமல்ல பொதுவாகவே தீவிரமாக எழுதும் எழுத்தாளர்கள் அனைவருமே செய்வது இதுதான்.இல்லையேல் எந்த வேலையும் செய்ய முடியாது.

இங்கே எனக்கு வாசிக்க நூல்கள் வந்து குவிகின்றன. அவற்றை நேரம் உருவாக்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். தினம் ஒரு நூல். அவற்றைப்பற்றி எழுதுகிறேன். என் இணைய தளத்திலேயே காணலாம். ஆதிமூலம் பற்றிய அஞ்சலிநூல் மூன்றுதினம் முன் வெளியிடப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் நூல் வெளிவந்து சிலதினங்களே ஆகின்றன. வாசகர்களின் தொடர்ந்த உரையாடல் எப்போதும் உள்ளது. பொதுவான வாசகர்முன் வைக்கலாமென்று படுவதை பிரசுரிக்கிறோம்.

என் கவனத்தை இந்தச் சில்லறை விவாதங்கள் சிறு அளவுக்குமேல் எடுத்துக்கொள்ள நான் அனுமதிப்பதில்லை. என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள்.

யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.

கல்வெட்டு said...

ஜ்யோவ்ராம் சுந்தர் ,

// இறக்குமதி சிந்தனை குறித்த உங்கள் பார்வையுடன் எனக்கு உடன்பாடில்லை. போலவே காட்டடியாக இலக்கிய வியாதிகள் எனப் புறந்தள்ளுவதும்.//

இருக்கலாம்.
எல்லாரும் உடன்பட்டுவிட்டால் அப்புறம் என்னாவது? சுவராசியம் கெட்டுப்போகும் :-))

//அதே. அதற்காக வந்தது தான் அந்தக் கோட்பாடே. ஆனால் அதை இன்னொரு கோடிக்கு இழுத்துச் சென்று ஆசிரியனுக்கும் பிரதிக்கும் உறவே இல்லை எனச் சொல்ல முடியுமா என்பதே என் கேள்வி.//

ஆசிரியனுக்கும் பிரதிக்கும் உறவே இல்லை எனச் சொல்ல முடியாது.உண்மைதான்.

நான், ஆசிரியனுக்கும் பிரதிக்கும் உறவே இல்லை என்று சொல்லவில்லை. தொப்புள் கொடி உறவு போல , அது இருக்க வேண்டும். பிரசவத்திற்குப்பின் அறுக்கப்படவேண்டும். "விலகி நின்று பார்க்க" கற்க வேண்டும்.

வளர்ந்துவிட்ட மங்கையின் தந்தை/தாய் என்பதற்காக அவளை மற்றவர்கள் இப்படித்தான் இரசிக்க வேண்டும் என்று அளவுகோலைத் தூக்கிக்கொண்டு அலைய முடியாது.

படைப்பு எப்படி மற்றவர்களிடம் சலனத்தை/கோபத்தை/அங்கதத்தை....ஏற்படுத்துகிறது என்பதை விலகி நின்று இரசிக்கத்தெரியாதவர்களை என்ன செய்வது?

***

தென்றலின் பின்னூட்டட்த்தில் இருந்து... ஜெயமோகன் சொன்னதாக....
.
// "நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்." //

அனானியின் பின்னூட்டத்தில் இருந்து... ஜெயமோகன் சொன்னதாக....

//தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள். //

:-)))

நான் நினைத்தேன் இவர் நிச்சயம் ஒரு 300 -500 புத்தகங்களைப் படித்த ஞானக்குழந்தையாக இருக்க வேண்டும் என்று . இதோ சொல்லிவிட்டார் அவரைப்பற்றிப் பேசுபவர்களைப் பற்றி.

கடவுள் என்ற உருவத்துக்கு மனிதன் புனித பிம்ப மிரட்சியில் தலைக்குப்ப்பின்னே ஒளி வட்டம் போடுகிறான் பக்தன்.

தமிழ் இலக்கியவியாதிகள் தனக்குத்தானே ஒளிவட்டம் வரைந்து கொள்கிறார்கள். எல்லாம் இரத்தம் சூடாக இருக்கும் வரைதான்.

சந்தோசமாக அவர் இருப்பதற்கு எல்லா உரிமையும் இவருக்கு உண்டு. ஒளி வட்டம் வரைந்து கொள்வது உட்பட.

இவரின் புத்தகங்களில் யார் யார் வாங்க வேண்டும்? வாசிக்க வேண்டும் என்ற குறிப்புகளைப் போடுவாரா?

ம்..ம்..ம்.பதிவில் இவர் எழுதும்போதே வாசகனுக்கான மினிமம் குவாலிபிகேசனை பதிவில் போட்டுவிடுவது நல்லது.

ஏதாவது "தமிழ் இலக்கியவியாதி வாசக பட்டய சான்றிதழ்" வகுப்பு நடத்தலாம். அதில் தகுதி பெற்ற வாசக-வியாதிகள் மட்டும் இவரிடம் அல்லது இவரைப் பற்றி பிற இடங்களில் பேசலாம் . :-))))

வவ்வால் said...

//// "நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்." //

அனானியின் பின்னூட்டத்தில் இருந்து... ஜெயமோகன் சொன்னதாக....

//தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள். //
//

இப்படிலாம் படிக்க, அதை விமர்சிக்க தகுதி வேண்டும் என்று சொல்பவர் எழுத தகுதி வேண்டும் என்று மக்கள் கேட்டா ஜெயமோகன் என்ன செய்வார்? ஏன் எனில் காசுக்கொடுத்து வாங்குபவனுக்கு எதிர்ப்பார்க்கவும் உரிமை இருக்கு, அல்லது ஜெயமோஹன் இலவசமாக எழுதி விநியோக்கணும் :-))

பித்தம் தலைக்கு ஏறிப்பேசுவதாக இருக்கு இவரின் பிதற்றல்கள் :-))

Mohandoss said...

//இப்படிலாம் படிக்க, அதை விமர்சிக்க தகுதி வேண்டும் என்று சொல்பவர் எழுத தகுதி வேண்டும் என்று மக்கள் கேட்டா ஜெயமோகன் என்ன செய்வார்? ஏன் எனில் காசுக்கொடுத்து வாங்குபவனுக்கு எதிர்ப்பார்க்கவும் உரிமை இருக்கு, அல்லது ஜெயமோஹன் இலவசமாக எழுதி விநியோக்கணும் :-))

பித்தம் தலைக்கு ஏறிப்பேசுவதாக இருக்கு இவரின் பிதற்றல்கள் :-))//

எனக்கு இதைப் பற்றி ஒன்னும் சொல்லத் தோணலை. :)

வலைபதிவர்கள் உடன் ஆடுதாண்டி காவிரி பார்க்கச் சென்றிருந்த பொழுது இதே போன்ற ஒரு விவாதம் வந்தது. சாருநிவேதிதாவைப் பற்றி, அவர் சுயவிளம்பரம் செய்துகொள்வதைப் பற்றியும். மேலே ஜெமோ சொன்னதைப் போல் சொன்னாரென்று சொல்லியும். அப்பொழுது சாருநிவேதிதாவை ஆதரித்து(ஒட்டுமொத்தமாக இல்லையென்றாலும்) பேசியவன் என்கிற முறையில் ஜெயமோகன் சொல்லவருவது எனக்குப் புரிகிறது.

இதைப் பற்றி என்னால் எழுதி என் பக்கத்தை வைக்க முடியாது வேண்டுமானால் எப்பொழுதாவது தனிமையில் பார்த்தால் இதைப் பற்றிப் பேசுவோம். நிச்சயமாய்!

வவ்வால் said...

மோஹன்,

//இதைப் பற்றி என்னால் எழுதி என் பக்கத்தை வைக்க முடியாது வேண்டுமானால் எப்பொழுதாவது தனிமையில் பார்த்தால் இதைப் பற்றிப் பேசுவோம். நிச்சயமாய்!//

வம்பு தானே :-))

ஜெயமோஹன் போன்றவர்கள் எழுதும் புத்தகம் எல்லாம் ஒரு பதிப்பு 500 காபி என்று போட்டு அதில் 490 ஐ எல்லாருக்கும் இலவசமாக கொடுத்து கருத்து சொல்லுங்கள் என்பார்? இப்படியே அதிகம் போனால் 1000 காப்பிகளுக்கு மேல போட மாட்டார், அதில் விலைக்கு விற்றது என்றுப்பார்த்தால் 100 புத்தகம் கூட தேறாது,இதில் என்னமோ உலக இலக்கியம் ரேஞ்சுக்கு பேசிக்கொள்வது தான் சிரிப்பை வரவைக்கிறது.

ஏற்கனவே சொன்னது தான் நீங்களே கொஞ்சம் தீவிரமாக எழுத முனைந்தால் ஜெயமோகனை தாண்டி எழுதலாம், இது உங்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொருந்தும், எழுதுவது எல்லாம் ஏதோ ஞானப்பால் குடித்து வரும் சமாச்சாரமல்ல , தேவை உழைப்பும்,முயற்சியுமே!

ஆனால் அதுக்குள்ள என்னமோ ஆகாயத்தில் இருந்து குதித்தவர் போல பேச கிளம்பிட்டார் ஜெயமோஹன்.

Mohandoss said...

//இதில் என்னமோ உலக இலக்கியம் ரேஞ்சுக்கு பேசிக்கொள்வது தான் சிரிப்பை வரவைக்கிறது.//

வவ்வால், உலக இலக்கியம் எது, எதுயில்லை என்பதை நம்மை, ஜெமோவை விட காலம் தீர்மானிக்கும் அதை அங்கே விட்டுடலாம்.

//ஏற்கனவே சொன்னது தான் நீங்களே கொஞ்சம் தீவிரமாக எழுத முனைந்தால் ஜெயமோகனை தாண்டி எழுதலாம், இது உங்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொருந்தும், எழுதுவது எல்லாம் ஏதோ ஞானப்பால் குடித்து வரும் சமாச்சாரமல்ல , தேவை உழைப்பும்,முயற்சியுமே!//

வவ்வால், வசமா மாட்டினீங்க.

நீங்கள் சொன்னதை மறுக்கலை, சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் தான். ஆனால் எல்லோரும் சித்திரம் வரைவதில்லையே. ஜெமோவிடம் நிச்சயம் உழைப்பும் முயற்சியும் இருக்கிறது என்கிற அளவில் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

வவ்வால் said...

மோஹன் ,

இதில் மாட்ட என்ன இருக்கு, கண்டிப்பாக உழைப்பு இருக்கும், இல்லாமல் எப்படி, அதை மறுத்தா சொன்னாங்க, ஆனால் அதன் தரம்? சரோஜா தேவிக்கதைகளை எழுதவும் உழைப்பும் முயற்சியும் தேவை அல்லவா :-))

அதை விடஓரு சூப்பர் பவர் போல ,ஒரு demi god like, என்னைப்பற்றி பேச , என்கூட பேசக்கூட ஒரு தகுதி வேண்டும் என்பதெல்லாம், பிற்போக்கான பேச்சல்லவா? உயர்ஜாதி அடக்குமுறையின் அகங்காரமாக ஒடுக்கப்பட்ட ஒருவரைப்பார்த்து என் முன்னால எப்படி செருப்பு போட்டு நடக்கலாம் என்று கேட்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

நான் எழுதுவது தான் சிறந்த இலக்கியம், நீ படிக்கலாம் ஆனால் அதைப்பற்றிலாம் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்பவரை வெகுவிரைவில் மக்கள் புறக்கணிப்பார்கள்!

உலக இலக்கியமா என்பதை காலம் தான் சொல்லும், இல்லை கறையான் தின்னும் :-))

Anonymous said...

லே பவானி

போ போய் வெவ்சாயத்தைக் கவனி
ஜெமோ அங்கதம்ன்னு அங்கதம் பண்ணிக்கிட்டு திரியாதே.

சாத்தான்குளத்தான்

Mohandoss said...

//இதில் மாட்ட என்ன இருக்கு, கண்டிப்பாக உழைப்பு இருக்கும், இல்லாமல் எப்படி, அதை மறுத்தா சொன்னாங்க, ஆனால் அதன் தரம்? சரோஜா தேவிக்கதைகளை எழுதவும் உழைப்பும் முயற்சியும் தேவை அல்லவா :-))//

இது மிகவும் மோசமான ஒப்பீடு :) ஏறக்குறைய எழுதுபவர்கள் அனைவரையும் ஒரே சட்டியில் அடைத்துவிட முடியும் 'தர'த்தைப் பற்றிப் பேசி. இலக்கியத்திற்கு ISI போல் ஏதாவது கொண்டு வரும் உத்தேசம் இருக்கிறதா உங்களுக்கு :)

//உயர்ஜாதி அடக்குமுறையின் அகங்காரமாக ஒடுக்கப்பட்ட ஒருவரைப்பார்த்து என் முன்னால எப்படி செருப்பு போட்டு நடக்கலாம் என்று கேட்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?//

மிக நிச்சயமாய் ஒரு புத்தகத்தைப் படிப்பதற்கு தகுதி வேண்டும் தான். ஆனால் நீங்க சொல்லும் விஷயத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு அந்தத் தகுதியை மிக எளிதாக உங்களால் அடைய முடியும். ஆனால் நீங்கள் சொன்ன முறையில் இந்த தகுதியை அடைவது என்பது பிறப்பின் வழியாய் மட்டுமே முடியும் என்று நிலைநிறுத்தப்பட்டது. அதுதான் வித்தியாசம்.

அது போல் இங்கே தகுதி என்பது நீங்கள் சொன்ன முயற்சியையும் உழைப்பையும் மட்டுமே கருத்தில் கொண்டது. ஜாதியை அல்ல.(குறைந்த பட்சம் என் வரையில்)

இங்கேயுமே கூட பிரதியை வாசிக்கும் அளவும் புரிந்து கொள்ளும் அளவும் 'Enjoy' செய்யும் அளவும் தகுதிவாய்ந்தவர்களும் ஜெயமோகனுடைய பிரதிகளை நிராகரிக்கிறார்கள் என்றால் அதற்கு அவர் பிரதி காரணம் அல்ல அவர் தான் காரணம்.

அருண்மொழி said...

விளம்பரம் தேடும் ஆசாமி என்றேன். அது முற்றிலும் உண்மை என்று தெரிகின்றது. என் வலைபதிவை இப்போது இவ்வளவு பேர் பார்த்துள்ளனர் என்று புள்ளிவிபரம் அடுக்குகின்றார் நமது புள்ளிராஜா.

சாருநிவேதாவின் சாட்டைஅடியை படித்தீர்களா?

தென்றல் said...

/சாருநிவேதாவின் சாட்டைஅடி/

உஷ்...ப்பா.. சூடு தாங்கலை..
எல்லாம் ஒரு மார்க்கமாதான் இருக்காங்க போல...

ஓகை said...

ஜெயமோஹனின் அந்த இரண்டு கட்டுரைகளையும் என்னால் இரசிக்க முடியவில்லை. மாறாக அங்கதம் என்ற பெயரில் இவ்வளவு வன்மம் சொட்டும் வரிகளை வார்க்குமளவுக்கு அவர்கள் பேரில் இவருக்கு என்ன கோபம் என்ற எண்ணமே வந்தது.

என்னைப்போல் பலரும் எண்ணுவார்கள் என்றே நம்புகிறேன்.

வவ்வால் said...

மோஹன்,

//இது மிகவும் மோசமான ஒப்பீடு :) ஏறக்குறைய எழுதுபவர்கள் அனைவரையும் ஒரே சட்டியில் அடைத்துவிட முடியும் 'தர'த்தைப் பற்றிப் பேசி. இலக்கியத்திற்கு ISI போல் ஏதாவது கொண்டு வரும் உத்தேசம் இருக்கிறதா உங்களுக்கு :)
//

மோசமான ஒப்பீடு என்றாலும் உழைப்பு, முயற்சி எழுத தேவை என்றால் , அதுவே ஒரு எழுத்தாளரை தெய்வீக பீடத்தில் வைக்க போதும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்லவே அதை சொன்னேன்.

நான் என்று இல்லை ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வாசகனே தர நிர்ணயம். சும்மா நான் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று சொல்லும் சுய தம்பட்டங்கள் அல்ல, தர நிர்ணயம்.

//மிக நிச்சயமாய் ஒரு புத்தகத்தைப் படிப்பதற்கு தகுதி வேண்டும் தான். ஆனால் நீங்க சொல்லும் விஷயத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு அந்தத் தகுதியை மிக எளிதாக உங்களால் அடைய முடியும். ஆனால் நீங்கள் சொன்ன முறையில் இந்த தகுதியை அடைவது என்பது பிறப்பின் வழியாய் மட்டுமே முடியும் என்று நிலைநிறுத்தப்பட்டது. அதுதான் வித்தியாசம்.//

எடுத்ததுமே ஜாதிய மேலாண்மையும் அப்படியே பிறப்பின் மூலம் வந்துவிடவில்லை, இப்படிலாம் கட்டமைத்து காலப்போக்கில் பிறப்பின் மூலம் என்று திரிந்து நின்றது, இன்று இவர் என்னைப்பற்றிப்பேச தகுதி வேண்டும் என்பவர் முந்தைய ஜாதிய மேலாண்மையின் எச்சம் இவரிடம் ஒட்டி இருப்பதையே காட்டுவதாக எனக்கு தெரிகிறது.

படிக்க தகுதி வேண்டும், இவரோடு பேச தகுதி வேண்டும் என்பதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம், இவர் எழுத வந்தக்காலத்தில் யாராவது எழுதவே தகுதி வேண்டும் உனக்கு இருக்கா என்று ஜெய மோகனை கேட்டிருந்தால் அவருக்குள்ள தகுதியாக எதைக்காட்டி இருப்பார்?

வாசகனின் தகுதி படிப்பதன் மூலம் தானே விருத்தியாகி விடும், நான் 4 ஆம் வகுப்பு படிக்கும் போதே பொன்னியின் செல்வன் கொஞ்சம் கொஞ்சம் படிக்க துவங்கினேன், 6 வகுப்பில் முழு தொகுதியையும் படித்து முடித்தேன்.5 வகுப்பில் படிக்கும் போது எல்லாம் சங்கர்லால் வரிசைக்கதைகள் எல்லாம் படித்துவிட்டேன், அதாவது அந்தக்கதைகள் எல்லாம் படிக்க உனக்கு தகுதி இருக்கானு அப்போ கேட்டிருந்தால் நான் என்ன சொல்லி இருக்க முடியும், எனக்கு அப்போது அவையே இலக்கியமாக தெரிந்தது.

என்னைப்படிக்க தகுதி வேண்டும் என்று சொல்லிக்காத ஆசிரியர்களின் நூல்களையே படிக்க தோன்றும்.

இப்படி படிக்க அதைப்பத்தி பேசக்கூட ஒரு தகுதி வேண்டும் என்று நிர்ணயிக்க இவர் யார், அப்படி எனில் இவர் புத்தகம் போட்டதும் , முதல் பக்கத்தில் தகுதி உள்ளவர்கள் மட்டும் படிக்கணும், இப்புத்தகத்தை படிக்க தேவையான தகுதிகள் என்று இவரே எழுதி வைக்கணும்!

நல்ல வேளை என் நூலைப்படிக்கும் போது அணிய வேண்டிய உடைகள், எப்படி உட்கார்ந்து எந்த திசைப்பார்த்து ,எந்த நேரத்தில் படிக்கணும்னு எல்லாம் சொல்லாம போனாரே ஜெய மோஹன் :-))

அவர் சொன்னதை விட கொடுமை நீங்களும் படிக்க தகுதி வேண்டும் என்று பின்ப்பாட்டு பாடுவது தான்? இது என்ன ugc கல்வியா :-))

ஒரு புத்தகத்தை வாசிப்பதன் மூலம் தானே அவனுக்குண்டான அனுபவ தகுதியை அந்நூல் வழங்க வேண்டும் இல்லை எனில் அது வெறும் கிறுக்கலே!

வாசிப்பனுவம் என்பது informal one, அதுக்கு எல்லாம் தகுதி , டிரஸ்கோட் எல்லாம் போடக்கூடாது.
--------------------------------

//சாருநிவேதாவின் சாட்டைஅடியை படித்தீர்களா?//

சாரு நிவேதிதாவைவே சாட்டையால் அடிக்கப்பட வேண்டியவர், அவர் சாட்டையை சுழற்றுகிறாராமா :-))

Unknown said...

//அவருடைய எழுத்துக்களை படித்தவன் என்ற முறையில் அவர் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாதவர். மிக நிச்சயமாக!//
இன்று அவரே இதே போல எழுதியிருக்கிறார். கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் அது ஓரளவுக்கு உண்மையும் கூட.

Anonymous said...

Mohan,
The page has some problems while opening in IE. Please fix it.

Thnaks.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கல்வெட்டு,

/படைப்பு எப்படி மற்றவர்களிடம் சலனத்தை/கோபத்தை/அங்கதத்தை....ஏற்படுத்துகிறது என்பதை விலகி நின்று இரசிக்கத்தெரியாதவர்களை என்ன செய்வது?/

உங்களின் கருத்தோடு ஒத்துப் போகிறேன். முதலில், ஆசிரியன் இறந்து விட்டான் என்ற கோட்பாட்டை முன்வைத்து ஏன் புகைப்படம் வெளியிட வேண்டும், அனானியாக வெளியிடலாமே என்பது போல் எழுதியிருந்ததாலேயே என் முதல் எதிர்வினை.

நன்றி.

Mohandoss said...

//அவர் சொன்னதை விட கொடுமை நீங்களும் படிக்க தகுதி வேண்டும் என்று பின்ப்பாட்டு பாடுவது தான்? இது என்ன ugc கல்வியா :-))
//

வவ்வால்,

முதலிலேயே சொன்னதுதான் இதைத்தான் சொன்னேன் இதை எழுத்தில் சொல்ல முடியாது; சொல்லப்போனால் சொல்லக்கூடாது :).

பிரதி எழுதுபவருக்கும் படிப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணர்வைக் கொண்டுவருவதில்லை. அதனால் நாமொன்று நினைத்துக் கொண்டு எழுத வேறுமாதிரியாக வந்து நிற்கும். நாம் நேரில் சந்திக்கும் பொழுது பேசலாம்.

Mohandoss said...

//Mohan,
The page has some problems while opening in IE. Please fix it.

Thnaks.//

அண்ணை எனக்கு வொர்க் ஆகுதே!

நான் எக்ஸ்பியில் எஸ்க்ப்ளோரர் சலாத்துறேன்!

Anonymous said...

/அண்ணை எனக்கு வொர்க் ஆகுதே!

நான் எக்ஸ்பியில் எஸ்க்ப்ளோரர் சலாத்துறேன்!/

அண்ணை?? :( I'm not that much old.

I'm using Vista.

Anonymous said...

Soory for the late comment !!
***ஜெயமோஹனின் அந்த இரண்டு கட்டுரைகளையும் என்னால் இரசிக்க முடியவில்லை. மாறாக அங்கதம் என்ற பெயரில் இவ்வளவு வன்மம் சொட்டும் வரிகளை வார்க்குமளவுக்கு அவர்கள் பேரில் இவருக்கு என்ன கோபம் என்ற எண்ணமே வந்தது.****

YES ..I can only say ,
Either he is 'sick man' or he may acceptable in malayalam field..

Anonymous said...

Please see this post about mohan

http://www.chandramowlee.
blogspot.com/

He..he..he..he..he..he he