ரவிசங்கருக்கு ஒரு பின்னூட்டம்

Open source பற்றி பேசுகிற ரவிசங்கர், பதிவிற்கான கமெண்ட்களை முடக்கி விட்டதால் அவருக்கு போட இருந்த பின்னூட்டம் பதிவாக.

//OPML தொகுக்கவோ, பதிவுகளைத் திரட்டவோ எவரது அனுமதியும் தேவை இல்லை என்பதே எனது இப்போதைய நிலைப்பாடும். இந்தச் செயற்பாடுகளால் பதிவரின் பதிவுக்கு வருகை கூடுமே தவிர ஒரு போதும் குறையவே குறையாது.//

கூகுள் ரீடரிலேயே படிச்சிட்டுப் போறவங்களால பதிவுக்கு வருகை எப்படிக் கூடும் புரியலையே!

//பயன்படுத்தும் திரட்டிகள் ஒரு சில வரிகள் மட்டும் காட்டுதல் நலம் என்று குறிப்பிடப்பட்டே OPML வெளியிடப்பட்டுள்ளது. //

எனக்கும் நினைவிருக்கு, ஆனால் mandatory கிடையாதுன்னு நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் உங்கக்கிட்டேர்ந்து எடுத்துட்டு உங்ககிட்டேர்ந்து எடுக்கலை நானா சேர்த்தேன்னு சொல்லி முழுசா போட்டா?

//அது பதிவர்களுக்கு நன்மையா இழப்பா?//

பதிவர்களுக்கு இழப்புன்னு நினைச்சா "ஓடையை" சுருக்கிக்கிட்டு போய்டுவாங்க, open sourceக்குப் பிரச்சனைன்னு சொல்லுங்க சரியா!

//தனி நபர் பிரச்சினையைப் பொதுவில் தெரிவிக்க வேண்டாம் என்ற உங்கள் மேலான அறிவுரைக்கு நன்றி. இது தமிழ்மணத்தில் இணைந்துள்ள 2900+ பேர், இணையாத இன்னும் பலருக்கான பொதுப் பிரச்சினை.//

புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன். நான் முழுசா காண்பிக்கிறதைப் பத்தி சொன்னது இல்லை அது, கேளிர் திரட்டி பற்றியும், தமிழ்மணத்தில் நீங்களா சேராமாமல் கேளிர் திரட்டி மூலமாய் உங்களை இணைத்துக் கொண்டு அதை பொதுவில் காட்டுவதை தவிர்த்திருக்கலாம்னு நீங்க சொன்னதைத்தான்.

அதைத்தான் இப்படி "தானா இணையாமல் கேளீர் திரட்டி" மூலமா திரட்டுரதைப் பத்தி சொன்னதையே 'குறிக்கிக் கொள்ளாமல்' பொதுவாய்ப் பேசலாம் என்று சொன்னேன்.

இதைத்தான் தனிநபர் பிரச்சனை என்று சொன்னேன், அதாவது(இன்னொரு முறை) நீங்கள் தமிழ்மணத்தில் இல்லாவிட்டாலும் கேளிர் திரட்டி மூலமா உங்கள் பதிவு திரட்டப்படுவதையும் அதையும் முழுசா காண்பிப்பதில் பிரச்சனையிருந்தா 'கருத்து' சொல்லாமல் தமிழ்மணத்தில் இருந்து விலகியிருக்கலாமேன்னு கேட்டேன்.

---

நன்றி

7 comments:

வெட்டிப்பயல் said...

ஏன்ப்பா... ஏதாவது லிங் கொடுத்தா தானே புரியும்...

Unknown said...

//Open source பற்றி பேசுகிற ரவிசங்கர், பதிவிற்கான கமெண்ட்களை முடக்கி விட்டதால் அவருக்கு போட இருந்த பின்னூட்டம் //
இதோ இங்க

//ஒருவரின் தனிப்பயன்பாட்டுக்காகப் பயன்படும் கூகுள் ரீடர் போன்றவற்றையும் பல்லாயிரக்கணக்கானோருக்குக் காட்சிப்படுத்தும் தமிழ்மணம் போன்ற வலைவாசல்களையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது.//

இது மிகவும் சரி.

நிறைய பேருக்கு இப்படி ஒரு செட்டிங் இருப்பதே தெரியாமல் இருந்தது. இப்போது தெரிந்து விட்டது. இனிமேல் நான் வலைப்பதிவுகள் படிக்காமல் வேலையைப் பார்க்க வேண்டியதுதான் போல :))))

Nilofer Anbarasu said...

//தமிழ்மணத்தின் புதிய வசதியால் எழும் பிரச்சினைகள் இரண்டு//
நான் மூன்றாவதாக இன்னொன்றையும் சேர்க்க வேண்டுகிறேன், + குறி அழுத்தி முழு ஓடையையும் வாசிக்கும் போது, இடுகையில் உள்ள testஐ மட்டுமே காட்டுகிறது, அதற்கு தொடர்பான போட்டோ, வீடியோ, ஹைபெர்லிங்க்,போன்றவற்றை பார்க்க இயலாது. இதனால் ஒருவருடைய இடுக்கையின் முழு பொருளையும் படிப்பவர்கள் உணர முடியது. இந்த மாற்றம் வரவேற்க்கதக்கதல்ல.

Anonymous said...

தங்கள் வலைப்பதிவில் செய்தியோடையில் முழு வலைப்பதிவும் வெளியாகுமாறு அமைப்பிக்க வேண்டும். (For example, in blogger.com settings, Settings→Sitefeed→Description→Full.) இது மிக முக்கியம் இது தமிழ்மணம் வாசகர் பக்கத்தில் சில பத்திகளாவது காட்ட ஏதுவாக இருக்கும்.

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=star_of_the_week

The above is the instruction from Thamizmanam(Star week Instructions)

//பதிவர்களுக்கு இழப்புன்னு நினைச்சா "ஓடையை" சுருக்கிக்கிட்டு போய்டுவாங்க,//
Why there is a conflict? Is policy changes for version?

லக்கிலுக் said...

//Open source பற்றி பேசுகிற ரவிசங்கர், பதிவிற்கான கமெண்ட்களை முடக்கி விட்டதால் அவருக்கு போட இருந்த பின்னூட்டம் பதிவாக. //

இது... இதுதான் மோகன் டச்! :-))))


ஆனாலும், ரவிசங்கரின் வேண்டுகோளை ஏற்று என் பதிவின் முழு ஓடையும் தெரியும் வண்ணம் செட்டிங்ஸில் மாற்றிவைத்துவிட்டேன்!

Nimal said...

//கூகுள் ரீடரிலேயே படிச்சிட்டுப் போறவங்களால பதிவுக்கு வருகை எப்படிக் கூடும் புரியலையே! //

பின்னூட்டம் போட வருவாங்க...
(இப்ப நான் வந்தது போல)

Mohandoss said...

////கூகுள் ரீடரிலேயே படிச்சிட்டுப் போறவங்களால பதிவுக்கு வருகை எப்படிக் கூடும் புரியலையே! //

பின்னூட்டம் போட வருவாங்க...
(இப்ப நான் வந்தது போல)//

என்னோட பதிவு எத்தனை படிச்சிருப்பீங்க, எத்தனையில் பின்னூட்டம் போட்டீங்க சொல்லுங்களேன் நீங்களே!