மருதநாயகமும் 100 கோடி பேரமும்



சென்னை:

அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு நடிகர் கமல்ஹாசனிடம் ரூ. 100 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட கமல் உடனடியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பிரபல திரைப்பட நடிகரை அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வருமாறும், இதற்காக ரூ. 100 கோடி வரை கொடுக்க அதிமுக முன் வந்ததாகவும், ஆனால், அந்த நடிகர் அதை ஏற்கவில்லை என்றும் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

இதையடுத்து அந்த நடிகர் யார்? ரஜினியா என்று நிருபர்கள் கருணாநிதியிடம் கேட்டனர்.

அதற்கு, அவர் இல்லை. அவர் பெயரை நான் சொல்ல மாட்டேன் என பதிலளித்தார்.

இந் நிலையில் அந்த நடிகர் யார் என்பது இப்போது வெளியில் வந்துள்ளது.

நான் அரசியலிலேயே இல்லை.. நான் இலக்கியவாதி என்று கூறிக் கொண்டு அரசியல் செய்து வரும் தில்லை அம்பலத்தார் தான் கமலையும் அதிமுகவுக்கு இழுக்க முயற்சி செய்துள்ளார்.

கமல் தரப்பைத் தொடர்பு கொண்டு, நிதிப் பற்றாக்குறையால் நின்று போய்விட்ட உங்கள் மருதநாயகம் படத்தை முடித்துத் தருகிறோம். உங்களுக்கு ரூ. 100 கோடி தரவும் தயாராக இருக்கிறோம் என்று பேரம் பேசியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன கமல், எனக்கு அரசியலே வேண்டாம். எனக்கு அது சரிப்பட்டு வராது என்று கட்அண்ட்ரைட்டாக சொல்லிவிட்டார்.

அத்தோடு இங்கிருந்தால் தொல்லை தொடரும் என்பதால் உடனே அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். தேர்தல் முடிந்த பின்னரே அவர் ஊர் திரும்புவார் என்று தெரிகிறது.

இது குறித்து கமலின் உதவியாளர் குணசீலன் கூறுகையில், கமல் சாரை யாரும் அணுகவில்லை. தனது தசாவதாரம் பட வேலை விஷயமாக அவர் அமெரிக்கா போயுள்ளார் என்றார்.

மேலும் அவர் மே மாதம் 20ம் தேதி தான் சென்னை திரும்புவார் என்றார்.

மே 8ம் தேதி தேர்தலும் 11ம் தேதி வாக்குப் பதிவும் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர், நடிகையர்கள் களத்தில் குதித்தும் கூட அதிமுகவுக்கு நிலைமை சாதகமாகத் திரும்பாததாலும், ரஜினி கைவிட்டுவிட்டதாலும் கமலை ஆளும் தரப்பு குறி வைத்ததாகத் தெரிகிறது.

PS: அவருடைய கனவுப்படத்தை முடிக்கும் ஆசையை காட்டினாலும், சாக்கடை அரசியலில் விழாத கமலுக்கு தலை வணங்குகிறேன்.

13 comments:

ஜோ/Joe said...

இது உண்மையானால் கமல் ஒரு நிஜ ஹீரோ என்று பொருள்!

Muthu said...

ஜோ,

அதே

Pavals said...

நேற்று இதே செய்தி ரஜினி'ய முன்வைத்து வந்தது, இன்னைக்கு கமல்.. நாளைக்கு.. யாருங்க விஜய்?? அப்புறம் ...

ஆனாலும்.. ஜோ கருத்துக்கு ஒரு 'ஜே'

ஜெ. ராம்கி said...

நல்ல தரமான சினிமா தமிழர்களுக்கு கிடைக்காமல் போயிருப்பது வருத்தமான விஷயம்.

Bharaniru_balraj said...

ஆஸ்கார் நாயகனை அவமானப்படுத்துகிறார்கள்

ஜோ/Joe said...

ரஜினி ராம்கி,
திரையில் நடிக்கத் தெரியாதவர்கள் நிஜத்தில் நடிகர் திலகங்களாகவும் ,திரையில் நடிகர் திலகங்கள் நிஜத்தில் நடிப்பில் சொதப்புவதும் ..யாம் அறிந்ததே!

பெத்தராயுடு said...

//நல்ல தரமான சினிமா தமிழர்களுக்கு கிடைக்காமல் போயிருப்பது வருத்தமான விஷயம்.//

ஹூம்..., இவிங்களுக்கெல்லாம் இது நெக்கிலா கீது.

ILA (a) இளா said...

பணத்தின் மீது அவா இருந்தாலும் கொள்கைக்காக இதை மறுத்த கமலை பாராட்ட வேண்டும்

siva gnanamji(#18100882083107547329) said...

if it is a fact, hatsoff to kamal

Vasudevan Letchumanan said...

இந்த அரசியல் விஷயம் எல்லாம் கமலுக்குப் புரியாதுங்க...

"இது என்ன கடவுளே,
புரியாது கடவுளே!"
அவர் பாடிய பாடல்தானே...

நியோ / neo said...

>> நல்ல தரமான சினிமா தமிழர்களுக்கு கிடைக்காமல் போயிருப்பது வருத்தமான விஷயம். >>

இதுதான் பாப்பாரத்தனம் என்பது.

இவன் படத்தை எதிர்த்த்து என்பதற்காக ரசினி 16 வருடங்களாக எதிர்த்து சீன் போட்டு வந்த ஜெ. மாமியின் காலிலே போயி விழுந்தாப்புல - கமலும் விழலியே என்கிற காண்டுல இவுருக்கு இப்பிடி பேச்சு ஓவரா வருது.

இந்தெ லெச்சனத்தில இவுரு கலைஞரைப் பத்தி 'நடுநிலையா' எளுதப் போறாராம்.

'பரம்பரைப் பகை'ன்னு அந்தம்மா சும்மாவா சொல்லுச்சு - இவனுக 'ஈனியல்' (நன்றி இராம.கி அவர்கள்) கட்டமைப்பே இப்பிடித்தான்றது சரிதான் போல.

நியோ / neo said...

பதிவுக்கு நன்றி நண்பரே. நானும் இது பற்றி ஒரு பதிவு ஏற்கெனவே போட்டிருக்கிறென்.

நியோ / neo said...

>> இதில் பாப்பாரத்தனம் எங்கிருந்து வந்தது. >>


நாகரீகக் கோமாளி அவர்களே - இந்தக் கேள்விக்கு சற்று விரிவாகத்தான் பதில் சொல்ல வேண்டும்.

நான் பதில் சொன்னது ரஜினி ராம்கிக்கு என்பதால் அவருடைய 'ரஜினி' சார்பை முன்வைத்துத்தான் இந்த இடத்தில் கருத்து இடவேண்டியுள்ளது.

2002-இல் 'பாபா' படம் வெளிவருவதற்கு ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் - ரஜினி அவர்கள் பெங்களூரில் ராஜ்குமாருக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார் "வீரப்பனை வதம் செய்ய வேண்டும்" என்று ஆவேசமாக 'கன்னடிக பிட்டெ" போலமுழங்கினார்! (அப்படி முழங்கியதால்தான் கர்நாடகாவில் அவருடைய 'பாபா'வுக்கு சிறப்பு அனுமதியாக படம் வெளியிட கன்னட திரைத்துறையினர் ஒப்புக்கொண்டனர்!)

தமிழகத்தில் பேசவில்லை( என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?!) - ராஜ்குமார் விடுவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கழித்து பெங்களூரின் தேவையில்லாமல் அந்தப் பிரச்சனையைப் பேசினார்.

அவரது இந்த provocative speech-தான் மருத்துவரை கோபமாக ரஜினியை விமர்சிக்க வைத்தது - அதுவரை அவர் ரஜினியை விமர்சித்த்து இல்லை என்பது கவனித்தில் கொள்ள வேண்டும்.

அதனாலேயே 'பாபா' (படம் இயல்பாகவே Flop -ஆன பிறகும்!) படத்துக்கு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தது இன்னபிற நிகழ்விகள் நடந்தன.

Provocateur ரஜினிதான் - ஆனா தன்னை எதிர்த்தவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காகவே 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்தும், அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரித்தும் ரஜினி 'குரல்' கொடுத்தார் - எந்த அதிமுக 1989-இலிருந்தே ரஜினி எதிர்த்துக் கொண்டிருக்கும் ஜெ.வின் அதிமுக!
(எதிர்ப்பு ஊத்திக் கொண்டதும் வேறு விஷயம்!)

அப்படிப்பட்டவ்ரின் ரசிகருக்கு - கமல்ஹாசனின் 'அரசியலில் ஈடுபடுவதில்லை' என்கிற கமலின் கொள்கை முடிவை கிண்டல் பண்ணுகிற - அதுவும் - அதிமுக 100 கோடி கொடுத்தும் மறுத்துவிட்டு தன் நடுநிலையை நிரூபித்த கமலின் தரத்தைக் கொச்சைப் படுத்துவது போல - பணத்தை வாங்கிக் கொண்டு மருதநாயகத்தை எடுக்க வேண்டியதுதானே என்கிற ஆணவ நக்கல் கொப்பளிக்க - "நல்ல தரமான சினிமா தமிழர்களுக்கு கிடைக்காமல் போயிருப்பது வருத்தமான விஷயம்." - என்று பேசுவது என்ன மாதிரியான தன்மை?

இப்போது அதிமுக வெளிப்ப்டையாகவே ரஜினி ரசிகர்களை கொடியோடு பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகிறது - ஆனால் இவர்களின் தலைவர் மயிற்பீலியால் தடவிக் கொடுக்கிறார்!

கமலின் கொள்கை முடிவைப் பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து அருகதை வந்தது?

ஜெ.மாமிக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் உண்டாகியிருக்கும் தனிப்பாசத்தை அவர்களோடயே வைத்துக் கொள்ளட்டும்.