கைவிலங்குடன் ஜெயேந்திரர்!

இதைப்பற்றிய செய்தியொன்றையும் நான் பதிவுகளில் பார்க்காததால்.

கைவிலங்குடன் ஜெயேந்திரர்: பேனர் வைத்த மந்திரி மீது வழக்கு!

காஞ்சிபுரம்:

காஞ்சி சங்கராச்சாரியாரை முதல்வர் ஜெயலலிதாவின் மேற்பார்வையில் போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வது போல பேனர் வைத்த அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.(இடது) முதலில் வைக்கப்பட்ட பேனர். பின்னர் மாற்றப்பட்ட பேனர் (வலது)

இந்த பேனருக்கு எதிராக காஞ்சி மட பக்தர் மகாதேவன் என்பவர் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்துத் துறவிக்கு கைவிலங்கிட்டு பேனர் வைத்ததன் மூன் இந்துக்களை புண்படுத்திவிட்டனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி, உடனே கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி இந்த பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனருக்கு எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து அடுத்த சில நாட்களிலேயே ஜெயேந்திரர்விஜயேந்திரர் இருந்த போர்ஷனைத் தூக்கிவிட்டு பெரிய ஜெயலலிதா படத்தை அதில் ஒட்டினர் அதிமுகவினர்.

இந்த விவகாரம் பெரிதானதையடுத்து அமைச்சரைக் கூப்பிட்டு ஜெயலலிதா டோஸ் விட்டதையடுத்து பின்னர் அந்த பேனரே தூக்கப்பட்டுவிட்டது.

3 comments:

பொன்ஸ்~~Poorna said...

எப்படிங்க பூனால இருந்துகிட்டு காஞ்சிபுரம் மேட்டர் எல்லாம் எழுதறீங்க?? காஞ்சிபுரத்திலேயே, இப்படி பேனர் வச்சது கொஞ்சம் அதிகம் தான்..

முத்து(தமிழினி) said...

மோகன்,

இப்படித்தான் மேரி மாதா பிரச்சினை வந்தது.தொண்டர்கள் உணர்ச்சி வசப்படுவது ஜகஜம்தானே.

மோகன்தாஸ் said...

Nandri பொன்ஸ், முத்து ( தமிழினி)