கார்த்திக் கடத்தப்பட்டாரா???

கார்த்திக் சந்திப்பு:

இந் நிலையில் நேற்று முழுவதும் காணாமல் போய்விட்ட பார்வர்ட் பிளாக் தலைவர் கார்த்திக் மாலையில் திடீரென மதுரை வந்தார்.

அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த வேட்பாளர் செந்திலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். (இதன் பின்னர் நள்ளிரவில் தான் செந்தில் இறந்தார்)

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் கார்த்திக். அப்போது, நீங்கள் ஆண்டிப்பட்டியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிடாமல் தடுக்க உங்களை ஆளும் தரப்பினர் கடத்திச் சென்றுவிட்டதாக செய்திகள் வந்ததே என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கார்த்திக், என்னை யாரும் கடத்தவில்லை என்றார்.

அப்படியானால் நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?

உங்களை கட்சியினரால் கூட தொடர்பு கொள்ள முடியவில்லையே? செல்போனையும் ஆப் செய்து வைத்து விட்டீர்கள், உங்களை யாரும் கடத்தினார்களா? என்று நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு கார்த்திக் பதிலளிக்கையில், என்னை யாரும் கடத்தவில்லை, அப்படி வெளியான செய்தியில் உண்மை இல்லை. நான் ஆண்டிப்பட்டியில் போட்டியிடவில்லை. அப்படி நான் ஒருபோதும் சொல்லவில்லை என்றார்.

அதன் பின்னர் மீண்டும் அவர் சென்னைக்குத் திரும்பினார்.

இதற்கிடையே, நான் நேரடியாக பிரசாரத்திற்கு வர மாட்டேன் என்று கட்சியினரிடம் கார்த்திக் கூறி விட்டதாகத் தெரிகிறது.

அதற்குப் பதிலாக, தனது பேச்சு அடங்கிய கேசட்டுகளை அனைத்து மாவட்ட கட்சி நிர்வாகிகளிட¬ம் கார்த்திக் கொடுத்துள்ளார்.

அந்த கேசட்டுகளை ஊர் ஊராக சென்று ஒலிபரப்பி பிரசாரம் செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிமுக தரப்பிலிருந்து வரும் கடும் நெருக்கடிகள், மிரட்டல்கள் காரணமாகவே கார்த்திக் தலைமறைவு அரசியல்வாதி போல மாறி விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, திருமங்கலம் தொகுதியில் செந்திலுக்குப் பதில் துணை நடிகரான ராஜு என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் கார்த்திக், சத்தியராஜ் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்தான்.

கார்த்திக்கை ஆளும் தரப்பினர் கடத்தி விட்டதாக நேற்று முழுவதும் பார்வர்ட் பிளாக் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தன்னை யாரும் கடத்தவில்லை என்று கார்த்திக் கூறினாலும், ஏதோ ஒன்று நடக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

இதற்கிடையே செந்திலின் மரணத்தைத் தொடர்ந்து ஏராளமான பார்வர்ட் பிளாக் தொண்டர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

0 comments: