கலாநிதி கொலை மிரட்டல் - சரத் விடும் கரடி

என்னையும், எனது மனைவி ராதிகாவையும் 'ஃபினிஷ்' செய்து விடுவதாக சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தாக நடிகர் சரத்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.


அதிமுகவில் சேர்ந்துள்ள நடிகர் சரத்குமார், சென்னையில் முதலில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் நேற்று தூத்துக்குடிக்குச் சென்ற சரத்குமார் அம்மாவட்டத்தில் சூறாவளிப் பிரசாரத்தைத் தொடங்கினார்.

திருச்செந்தூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கலாநிதி மாறன் குறித்து பரபரப்புப் புகாரைக் கூறினார்.

சரத் பேசுகையில், திமுகவில் இருந்தபோது, நான் பட்ட அவமானங்கள் ஒன்று, இரண்டல்ல. அத்தனையையும் நியாய, தர்மத்திற்காக பொறுத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் என்னால் பொறுக்க முடியவில்லை. கலைஞரிடம் கொட்டித் தீர்த்தேன்.

அவரை சந்தித்து விட்டு வந்த பிறகு எனக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. பேசியது யார்? கலாநிதி மாறன். என்னிடம் பேசியது போல எனது மனைவி ராதிகாவிட¬ம் பேசியுள்ளார் கலாநிதி மாறன்.

அன்று இரவு என் மனைவி, அவரை பற்றி நான் ஒரு விஷயம் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மிகவும் தைரியமான பெண்மணி அவர், ஆனால் அன்று இரவு அவர் என்னிடம் கதறிக் கதறி அழுதார். அவர் அழுது நான் அன்றுதான் பார்த்தேன்.

ராதிகாவிடம் கலாநிதி மாறன் சொல்லியுள்ளார், அவரை பத்திரமாக இருக்கச் சொல்லு, இந்த விளையாட்டை என்னிடம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர் மிரட்டியுள்ளார்.

இன்னும் என்னென்னவோ சொல்லி மிரட்டியுள்ளார். இதைக் கேட்டதும் ராதிகா பயந்து போய் விட்டார். கதறி அழுதபடி என்னிடம், நீங்கள் உடனே கலாநிதி மாறனுக்குப் போன் செய்து மன்னிப்பு கேளுங்கள்.

இல்லாவிட்டால் என்னைத் தொழில் செய்ய விட மாட்டார்கள், உங்களையும் ஃபினிஷ் செய்து விடுவார்கள், நம்மை பிரித்து விடுவார்கள் என்று கதறிக் கதறி அழுதார்.

அவ்வளவு தைரியம் மிக்க ராதிகா அப்படிக் கதறி அழுது பயந்து போய் என்னிடம் கெஞ்சுகிறார் என்றால் எந்த அளவுக்கு அவர்கள் மிரட்டியிருப்பார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

இன்று தயாநிதி மாறனுக்கும், ஸ்டாலினுக்கும் முதல்வர் பதவியைப் பிடிப்பதில் பெரும் மோதல் நடந்து வருகிறது என்றார் சரத்குமார்.

1 comments:

Bharaniru_balraj said...

இன்னும் இரண்டு வருடம் கழித்து,

ராதிகா சொல்வார்:

சரத் பற்றி நான் ஒரு விஷயம் பெருமையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மிகவும் தைரியமானவர், ஆனால் அன்று இரவு அவர் என்னிடம் கதறிக் கதறி அழுதார். அவர் அழுது நான் அன்றுதான் பார்த்தேன்.

அப்படிக் கதறி அழுது பயந்து போய் என்னிடம் கெஞ்சுகிறார் என்றால் எந்த அளவுக்கு சசியும், ஜெயாவும் சரத்தை மிரட்டியிருப்பார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

அதனால்தான் மீண்டும் அப்பாவிடமே போய் விடலாம் என்று சொல்லி தி மு க வில் பணியாற்ற எங்க்ளை அர்ப்பணிக்கிறோம்.

காசேதான் கடவுளடா.