சுப்பிரமணிய சுவாமிக்கு தர்ம அடி போட்ட காங்கிரஸார்

உத்தரப் பிரதேசத்தில் சு.சுவாமிக்கு அடி, உதை
ஏப்ரல் 22, 2006

ரே பரேலி (உத்தரப் பிரதேசம்):

ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக ஆட்சேப மனுவைக் கொடுக்கச் சென்றபோது இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களால், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கப்பட்டார்.




காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரே பரேலி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந் நிலையில் அவர் குறித்த ஒரு ஆட்சேப மனுவைக் கொடுக்க ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ¬ரே பரேலி சென்றார்.

கட்சியின் உ.பி. மாநலத் தலைவர் சங்காத்கருடன் ரே பரேலி தொகுதி தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்கு சுவாமி சென்றார்.

ஆனால் அலுவலகத்திற்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. இவர்களை வழிமறித்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சுவாமியையும், மற்றவர்களையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

இதனால் சுவாமியும் மற்றவர்களும் திரும்பினர். திரும்பும் வழியில் சுவாமியையும் மற்றவர்களையும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கினர். சுவாமிக்கு முகத்திலும் முதுகிலும் அடி விழுந்தது.

இதையடுத்து காருக்குள் ஓடிச் சென்று அமர்ந்தார் சுவாமி. ஆனால், அவரை வெளியே இழுத்து அடிக்க காங்கிரசார் முயன்றனர். இதைத் தொடர்ந்து சுவாமியும் மற்றவர்களும் வேக வேகமாக அங்கிருந்த கிளம்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து சுவாமி கூறுகையில், நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னை வெளியே இழுத்து அடிக்க முயன்றனர், கொலை செய்யவும் முயன்றனர்.

ரே பரேலி தொகுதியில் அராஜகம் நிலவுகிறது. அங்கு ராணுவத்தைத்தான் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். என் மீதான தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்பேன்.

நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்குப் போடுவேன் என்றார் சுவாமி.

1 comments:

வஜ்ரா said...

there has been a complete black out of this news in all news channels...

no channel has reported it properly...

sankar