மீண்டும் போட்டியிட கலாம் ரெடி?

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அப்துல் கலாம் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா தலைமையிலான மூன்றாவது அணி அவரையே மீண்டும் போட்டியிடுமாறு கோரியுள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகையை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டனர்.

அப்போது, மூன்றாவது அணியில் தலைவர்கள் நாளை (20ம் தேதி) அப்துல் கலாமை சந்தித்துப் பேச உள்ளனர். அதன் பின்னரே எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியும் என்று பதில் கிடைத்துள்ளது.

இதன்மூலம் மீண்டும் போட்டியிட கலாம் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

இதற்கிடையே மூன்றாவது அணியில் ஆதரவு இல்லாத நிலையில் தனது தோல்வி நிச்சயமாகிவிட்டதால் போட்டியில் இருந்து விலக பாஜக சார்பிலான சுயேச்சை வேட்பாளரான பைரோன்சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக பாஜக தலைவரும் மாஜி பிரதமருமான வாஜ்பாயை அவர் நேற்றிரவு சந்தித்துப் பேசினார். அப்போது போட்டியில் இருந்து விலக வேண்டாம் என ஷெகாவத்தை வாஜ்பாய் கேட்டுக் கொண்டார். ஆனால், விலகிவிடுவதில் ஷெகாவத் தீவிரமாக உள்ளதாகத் தெரிகிறது.

இச் சந்திப்புக்குப் பின் ஷெகாவத் வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதியாக அப்துல் கலாமே தொடர்வதாக இருந்தால் அதை விட மகிழ்ச்சியான விஷயம் ஏதும் இல்லை. அவரை ஒருமனதாக தேர்வு செய்ய அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்தால் நான் போட்டியில் இருந்து விலகத் தயார் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குடியரசு தலைவராக மீண்டும் அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நானும் அவரும் 5 வருடங்களாக இணைந்து பணியாற்றியுள்ளோம்.

இதுவரை ஒரு முறை கூட எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது கிடையாது. அதனால் அனைத்து கட்சிகளும் சேர்ந்து அவரை குடியரசு தலைவராக்க விரும்பினால் நான் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.

ஜெ. நாளை டெல்லி பயணம்:

இந் நிலையில் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் தலைமையிலான மூன்றாவது அணியின் தலைவர்கள் நாளை ஜனாதிபதி கலாமை சந்தித்து மீண்டும் போட்டியிடுமாறு வலியுறுத்தவுள்ளனர்.

இதற்காக ஜெயலலிதா நாளை டெல்லி செல்கிறார்.

தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

நன்றி - தட்ஸ்தமிழ்

8 comments:

பூனைக்குட்டி said...

அனானிமஸ் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாது.

மாப்பு.

Anonymous said...

இது நல்லா இருக்கே பின்னூட்டம் வராவிட்டால், வெளியிடமுடியாது என்று நாமே பின்னூட்டம் போட்டுக்கொள்ளலாம்:-))

பூனைக்குட்டி said...

அனானிமஸ் நீங்கள் என் பக்கத்திற்கு புது ஆள் போலிருக்கு நல்லாயிருங்க.

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

உங்கள் நண்பன்(சரா) said...

//தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
//

மோகன்தாஸ் அரசியல்வாதிகளை விடுங்கள், நமது பதிவர்கள் கூட அதிகமாக ஆர்வம் காட்டாதது போல் தான் எனக்குத் தேன்றுகிறது.
சிவாஜி பற்றி மாஞ்சு மாஞ்சு எழுதுறாங்க, மற்றைய ஜாதி விசயத்திற்கு இன்னும் மெனக்"கெடு"ராங்க, ஆனால் அப்துல் கலாம் பற்றி யாரும் அவ்வளவாக வாய்திறந்தது மாதிரித் தெரியலையே ஏன்?

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

மோகன்தாஸ் சொன்னது...
அனானிமஸ் நீங்கள் என் பக்கத்திற்கு புது ஆள் போலிருக்கு நல்லாயிருங்க.

யாருக்கும் என்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

நீங்க ரெம்ப நல்லவன் என்று சொன்னாங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவீங்க என்று, இந்த சீண்டலுக்கே இப்படி கோவிக்கிறீங்களே.

இந்தாள் ரெம்ப கெட்டவனய்யா:-)

நாகை சிவா said...

//மோகன்தாஸ் அரசியல்வாதிகளை விடுங்கள், நமது பதிவர்கள் கூட அதிகமாக ஆர்வம் காட்டாதது போல் தான் எனக்குத் தேன்றுகிறது.
சிவாஜி பற்றி மாஞ்சு மாஞ்சு எழுதுறாங்க, மற்றைய ஜாதி விசயத்திற்கு இன்னும் மெனக்"கெடு"ராங்க, ஆனால் அப்துல் கலாம் பற்றி யாரும் அவ்வளவாக வாய்திறந்தது மாதிரித் தெரியலையே ஏன்?//

என்ன சரா இப்படி சொல்லிட்ட... கலாமுக்கு உண்மையிலே ஆர்வம் இருந்தால் அதை விட பெரிய சந்தோசம் நமக்கு வேற என்ன சொல்லு... ஆனா அவருக்கு ஆர்வம் இல்லை என்பதை பல மாதங்களாக அவரின் பேட்டி கலந்து கொண்ட கூட்டத்தின் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்...

ஆக கலாம் கண்டிப்பாக போட்டியில் இல்லை என்று தான் அனைவரும் நினைத்து இருந்தோம். இப்ப மூன்றாம் அணி கலாமை சம்மதிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள். இதில் வெற்றி அடைந்தால் அவர்களுக்கு தான் லாபம். கலாம் எதிர்த்து நம் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் ஒட்டு அளித்தால் சில மக்களின் எதிர்ப்புக்கு அவர்கள் ஆளாக கூட என்பது உண்மை.அதை நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பார்களா என்பதும் தெரியவில்லை.

கலாமிம் முடிவு தெரியாமல் இதில் கருத்து கூற ஏதும் இல்லை என்பது தான் பலரின் நிலைப்பாடு. பாக்கலாம்

Anonymous said...

------------------
//தமிழரான கலாமை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திமுகவுக்கும் கருணாநிதிக்கும் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
// ------------

அதுசரி, ஒருபெண்ணான பிரதீபாவை ஆதரிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இருப்பதாக ....இன்னும் பதில் வரவில்லையா?

உங்கள் நண்பன்(சரா) said...

//பலரின் நிலைப்பாடு. பாக்கலாம் //

பார்க்கலாம்