எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஹில்டன் அம்மாவும்

பக்கத்தில் ஒரு சீரியஸ் பிரச்சனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. நான் முன்பே எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தைப் பற்றி எழுதிக் கிழித்தவன் ஆதலால், எனக்கு போட்டி வைக்கும் நோக்கில் இந்தத் தலைப்பு என் முன் வைக்கப்பட்டது.

"Existentialism is a philosophical movement which claims that individual human beings have full responsibility for creating the meanings of their own lives. என்பதைத்தான் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தின் ஒருவார்த்தைக் குறிப்பாகச் சொல்கிறது விக்கிபீடியா." என்கிற முறையில் இப்பொழுது ஒருவர் தன்னுடைய "Meanings of lives" அடைய விடாமல் எப்படி இந்தச் சமுதாயத்தால் பாதிக்கப்படுகிறார் என்று பார்ப்போம்.



பக்கத்தில் Play boy புகழ் Hugh Hefner பேட்டியில் கேட்கப்பட்ட "பாரீஸ் ஹில்டன் ஜெயிலில் இருந்து விடுதலையானதும் Play Boy பத்திரிக்கைக்கு "Pose" கொடுக்க கேட்கப்படுவாறா?" என்ற கேள்விக்கு. அப்படிப்பட்ட Offer அவரிடம் ஏற்கனவெ கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் அவருடைய அம்மையார் கேத்தி ஹில்டன் அதை விரும்பாததால் தட்டிக் கழிக்கப் படுவதாக வருத்தத்துடன் தெரிவித்தார். அவர் சொல்வதைப் பார்த்தால் பாரீஸ் ஹில்டனுக்கு அதில் விருப்பம் இருப்பதாகத் தான் தெரிகிறது.

இதிலிருந்து நான் மேற்சொன்ன கருத்து உத்திரவாதப்படுத்தப்படுகிறது இல்லையா.

Jokes apart, பாரீஸ் ஹில்டன் நாளை ஜெயிலில் இருந்து விடுதலையாவார் என்று தெரிகிறது. மொத்த 45 நாட்களில் அவருடைய நன்னடத்தை காரணமாக பாதி தண்டனையை அனுபவித்ததும் விடுவிக்கப்படுவார் என்று "ஏஜென்ஸி" செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவருக்காக டாலர்கள் காத்திருக்கின்றன என்பது உண்மை,

"Paris, 26, will earn a reported £150,000 for a magazine interview and a further £500,000 for her first TV interview revealing all about her time in prison."

இந்தம்மா ஜெயிலுக்குப் போய் வந்ததைக் கூட காசாக்கமுடிகிறது. என்னடாயிது எக்ஸிஸ்டென்ஷியலிஸத்திற்கு வந்த சோதனை என்று புலம்புவது கேட்கிறது. என்ன செய்வது.

0 comments: