முகமூடி



பல்தெரிய சிரித்தபடி
எதிர்பாராத சந்திப்புக்களில் காத்திருக்கிறது
என்றோ ஒரு நாள்
கழற்றி எறிந்த முகமூடிகள்

கடந்த காலத்தின்
முகமூடிகளோடு பொருந்தாமல்
நிகழ்கால முகமூடிகளுடனான
முகம் விகாரமாகிறது

குறிப்புக்களுடனேயே தொடரும்
பயணத்தில்
முகமூடிகளுடனான கால இடைவெளிகளை
மட்டும் நினைவில் நிறுத்தியபடி நான்

4 comments:

நண்பன் said...

முகமூடி பற்றி நானும் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்.

http://nanbanshaji.blogspot.com/2006/02/blog-post_13.html

பல காலம் கழித்து, முகமூடிகளைப் பற்றி மீண்டும் ஒரு கவிதையை வாசித்ததும், பழைய கவிதையைப் படித்துப் பார்க்கத் தோன்றியது.

அப்படியே, என்னைப் போலவே சிந்திக்கக் கூடிய நண்பர்களும் இருக்கிறார்கள் என்றும் தெரிய வருகையில் மகிழ்ச்சியே.

இத்தனை நாளும் வாசிக்காமலிருந்து விட்டோமோ என்ற வருத்தமும் உண்டாகிறது.

இனி அது நீங்கலாம்...

பாராட்டுகள்,

அன்புடன்
நண்பன்

Anonymous said...

ஐயா என்ன இது?முகமூடி என்று சொல்லிவிட்டு கிழமத்தூர் காரரின் போட்டோவை போட்டிருக்கிறீர்கள்?கொழுப்பா?

பூனைக்குட்டி said...

ஷாஜகான் உண்மைதான் நம்மைப் போலவே யோசிப்பவர்களைப் பார்த்தால் சந்தோஷம் வரும்தான். நான் இதை உணர்ந்திருக்கிறேன்.

நீங்கள் சொன்ன அந்தக் கவிதை அருமையாக இருக்கிறது.

பூனைக்குட்டி said...

அனானி என்ன விளையாட்டிது.