எச்சூஸ் மீ என்ன நடக்குது இங்க?



படம் எடுத்தவரின் வேண்டுகோளுக்கிணங்க படத்தை எடுத்த நபர் யாரென்று சொல்லமாட்டேன். நான் இந்த விளையாட்டில் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் போட்டுத்தான் தீரணும் என்று அடம்பிடித்த இன்னொரு நண்பருக்கு மட்டும் கண்டணங்கள்

37 comments:

Anonymous said...

They are drinking one cooldrink with two straw

அருள் குமார் said...

ஒரு நட்பின் அடிப்படையில், அவர் சிகரெட் பற்றவைக்க இவர் உதவுகிறார். அவ்வளவுதான்.

சும்மா அதிருதுல said...

அருள் குமார் said...
ஒரு நட்பின் அடிப்படையில், அவர் சிகரெட் பற்றவைக்க இவர் உதவுகிறார். அவ்வளவுதான்.
//

அனுபவம்...???

:)

வெங்கட்ராமன் said...

திறந்த வெளி சினிமா தியேட்டர்,
திறந்த ஓட்டல்,
திறந்த பார்,

மாதிரி சென்னை மெரினா ங்குறது ஒரு திறந்த வெளி லாட்ஜ்.

நீங்க போட்டோ புடிச்சதெல்லாம் சும்மா ஜுஜுபி . . . . .

விஜயன் said...

//அவர் சிகரெட் பற்றவைக்க இவர் உதவுகிறார//

யாருக்கு யார்??????????

:))

முகமூடி said...

// எச்சூஸ் மீ என்ன நடக்குது இங்க? //
// சென்னை மெரினா ங்குறது ஒரு திறந்த வெளி லாட்ஜ்.நீங்க போட்டோ புடிச்சதெல்லாம் சும்மா ஜுஜுபி //

கேவலமாக இருக்கிறது... பீச் போன்ற ஒரு பொது இடத்தில் காதலர்கள் தங்கள் போக்கில் தனிமையில் இருப்பதை எட்டிப்பார்க்கும்/விமர்சனம் செய்யும் இந்த போக்குதான் அதிகாரம் கிடைத்தால் அண்ணா நகர் டவர் பார்க்கில் கைது செய்து வைப்பதற்கும் வட இந்தியாவில் காத்லிக்கும் பெண்ணை பெண் போலீஸ் கண்டபடி அடிப்பதற்கும் ஆதார புள்ளி.... சமுக நீதி காவலர்கள் பண்பாடு பற்றி பாடம் எடுக்கும், பைக்கில் கட்டிப்பிடித்து செல்லும் காதலர்களை கண்டு 'நாய்க்காதல்' என்று விமர்சனம் செய்யும் அருகதை படைத்த 'காணாமல் காதலிக்கும்' கருமாந்திர காதலனின் எச்சக்கலை நண்பனின் அறிவுரை வேதமாக ஏற்கும் நாட்டில்தால் உடலழகை மறுத்து இருட்டில் புணர்ந்து புணர்ந்தே பில்லியனை தாண்டி சாதனை படைத்துக்கொண்டிருக்கிறோம்.

பூனைக்குட்டி said...

என்ன நடக்குதுன்னு பாயைப் பிராண்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

முகமூடி ரொம்ப நல்ல விஷயத்தைச் சொல்லியிருக்கீங்க, ஏத்துக்குறேன்...

சாட்டிலும் மெயிலிலுமாக வந்து கொட்டியவர்களுக்கு(:() நன்றிகள்.

வெங்கட்ராமன் said...

முகமூடி
நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியாது.

பொது இடத்துல மலம் கழிப்பது போல் தான் இவர்கள் செய்வது.

இவர்கள் காதலர்களா. . . .?

ilavanji said...

வெங்கட்ராமன்,

// இவர்கள் காதலர்களா. . . .? //

athai kekkaratukku nama yaarungga?!

Anonymous said...

வெங்கட்ராமா,

இவர்கள்தான் காதலர்கள். உன்னால முடியாட்டியும் அவங்க சந்தொஷமா இருக்கறத பார்த்தாவது சந்தொஷப்படு. அத்த உட்டுட்டு வயிரெறியாத.

வெங்கட்ராமன் said...

மடையன்க பேச்செல்லாம் நான் கேட்கறதில்ல.

அவுங்கள சந்தோஷமா இருக்க வேணாம்னு யாரு சொன்னா.
இப்படி பொது இடத்துல எதுக்குன்னு தான் நான் கேக்கிறேன். . . .

வெங்கட்ராமன் said...

// இவர்கள் காதலர்களா. . . .? //

athai kekkaratukku nama yaarungga?!

கரெக்டு தான்

கண்ட நாய்ங்கள பத்தி நமக்கு என்ன கவலை. . . .?

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

அய்யா ஊருல இருக்கீகளா?
இங்கன உங்கள ஆட்டத்துல சேர்த்திருக்கேன் பார்த்தீகளா?
http://pktpariarasu.blogspot.com/2007/08/blog-post_8336.html

Anonymous said...

மெரினா பீச்சை ஏன்யா படம் புடிச்சை? அடுத்தவன் பெட்ரூமையெல்லாம் படம் புடிக்க கூடாதுன்னு தெரியாது?, நான்சென்ஸ்... சின்னபுள்ளதனமால்ல இருக்கு.

மாசிலா said...

வெயிலுக்கும் மணலுக்கு பாதுகாப்பா காத்துல கரைந்து விடாம இருக்க இப்படி மூடிக்கினு ஐஸ் கீரீமு சாப்புடுறாங்கப்பா. தூரத்துல பாருங்க ஐஸ் காரரு ஐஸ் விக்கறாரு. இதுக்கு போய் இவ்வளவு சவுண்டா?

ILA (a) இளா said...

//இவர்கள் காதலர்களா. . . .? //
நாய் காதல்ன்னு நம்ம பதிவர்களும் முத்திரை குத்தி இருக்காங்க.

Anonymous said...

ஒழுங்கா பொட்டி தட்றத விட்டுட்டு உனக்கு இது அவசியந்தானா?

Unknown said...

அடுத்த 'படி' க்கு முதல் 'படி' யோ?
கலி முத்திடுச்சா இல்ல மக்களுக்கு கிலி வத்திடிச்சா தெரியல!

SurveySan said...

பீச்சில் காதலிக்கரது தப்பில்லை. வரம்பு மீறாம இருக்கர வரைக்கும்.
இப்ப‌ இருக்க‌ர‌ வ‌ர‌ம்பு, அள‌வு கோல் ரொம்ப‌ 'டைட்'
கொஞ்சம் கொஞ்சமா வரம்பு எல்லையை ஏத்தணும் நம்ம ஊர்ல. (அதாவ‌து, ப்ரீட‌ம் த‌ர‌ணும்).

சும்மா, உள்ள வெம்பி வெம்பி சென்னை இளைஞர்கள்/இளைஞிகள் தேவைக்கு அதிகமாகவே, கட்டுப்படுத்தப்படராங்க.

பாம்பே, டில்லி எல்லாம் இப்படி இல்ல.

p.s: but, I condemn you taking the picture and posting it in public.
:)

ilavanji said...

வெங்கட்ராமன்,

உங்க சமுதாய அக்கறையும் காதலர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என பொழிப்புரை கட்ட இருக்கும் துடிப்பும் புல்லரிக்க வைக்கிறது.

உண்மையிலேயே உங்களது கோபம் முதலில் பீச்சில் அமர்ந்திருக்கும் ஒரு சோடியை வில்லங்கமான கோணத்தில் பர்ப்பவர் மனதில் விகாரமான எண்ணம் வரும் வகையில் புகைப்படமெடுத்து போட்ட பதிவரின் சட்டையைப்பிடித்து அவர் நோக்கத்தை கேள்விகேட்கும் வகையிலல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்?! அதைப்பற்றி உங்களுக்கு ஒரு கவலையுமில்லை! ஆனால் பீச்சில் தேமேயென உட்கார்ந்திருந்தற்காவும் பதிவரின் கண்ணில் வில்லங்கமான ஆங்கிளில் பட்ட ஒரே காரணத்திற்காகவும் அவர்கள் "கண்ட நாய்கள்" ஆகி விட்டார்கள்!

நடிகையின் கவர்ச்சிப் படங்களை கண்டு மகிழ்ந்து கக்கூசில் கையடித்துவிட்டு அந்த களைப்பிலும் சுயபச்சாதபத்திலும்
அதே நடிகையின் மீதான சமுதாயத்தின் பாலியல் தாக்குதல்களை மனம் விட்டு அலசும் தமிழர் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவா நாம்! நடக்கட்டும்! (கையே அடித்ததில்லை என அடுத்த சமுதாய அதிர்ச்சி புள்ளி விவரங்களோடு வராதீங்க! )

ஒன்று மட்டும் உண்மை! இதே படத்துடன் இந்த பதிவு "சீரழியும் சென்னை கடற்கரை" என்ற தலைப்புடன் வந்திருந்தால் அது இதைவிட இன்னும் அருவருப்பாக இருந்திருக்கும்.

வெங்கட்ராமன் said...

இளவஞ்சி
Location: United Kingdom

அதனால தான். . . .

வில்லங்கமான கோணத்தில் பர்ப்பவர் மனதில் விகாரமான எண்ணம் வரும் வகையில் புகைப்படமெடுத்து. . . . . .

ன்னு சொல்லி இருக்கீங்க.

சென்னை மெரீனா பீச்ல நடக்கறது உங்களுக்கு தெரியவாய்ப்பில்லை.

திருவல்லிக்கேனி மேன்சனில் உங்கள் நண்பர்கள் யாராவது தங்கி இருக்க கூடும், அவர்களிடம் விச்சரியுங்கள் அங்கே என்ன நடக்கிறது என்று.

வெங்கட்ராமன் said...

கவிஞர். ப. விஜய் கூட இதைப் பற்றி தன்னுடைய கவிதை புத்தகம் ஒன்றில் கவிதையே எழுதி உள்ளார்.

சரி இளவஞ்சி.

நம்மிள் எழும் உணர்சிகளை, இடம் பொருள் ஏவல் பார்க்காமல் நாம் தீர்த்துக் கொண்டால் நமக்கும் மார்கழி மாத நாய்க்கும் என்ன வித்தியாசம்.

வெங்கட்ராமன் said...

மோகன் தாஸ் ஐயா, கொஞ்சம் பின்னூட்டத்தை எல்லாம் திருத்தி போடலாமே. . . . .

நெருங்கிய நண்பர்களிடம் கூட பேச தயங்குகிற விஷயத்தை இப்படி பச்சையாக பதிவுகளில் வேண்டாமே. . . . .

பூனைக்குட்டி said...

இல்லை இளவஞ்சி எழுதியிருந்ததில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

வெங்கட்ராமன் said...

தவறு என்று நான் சொல்லவில்லை . . .
வேறு வார்த்தைகளை பிரயோகித்திருக்கலாம் என்பது தான் நான் சொல்வது. . . . .

Anonymous said...

கமெண்ட் 1:
அடுத்தவர் பெட்ரூமை எட்டிப்பார்க்கக் கூடாது.

கமெண்ட் 2: மெரினா பீச் என்பது இன்னமும் பொதுஇடம் என்று நினைக்கலாம் தானே..

கமெண்ட் 3: பொது இடத்தில் எப்படி நடப்பது என்கிற இங்கிதமில்லாதது 'அவர்களின்' குற்றம்

'விழிப்புணர்வு' என்னும் சாக்கில் மேலும்மேலும் 'விழி புணர்வு'களுக்கு வழிவகுத்தது 'இவர்களின்' வக்கிரம்.

யாரை நோவது?
அம்புட்டுதேன்.

TBCD said...

இது தான் பின்நவீனத்துவமா.....விளங்கிடும்....
//*நடிகையின் கவர்ச்சிப் படங்களை கண்டு மகிழ்ந்து கக்கூசில் கையடித்துவிட்டு அந்த களைப்பிலும் சுயபச்சாதபத்திலும்
அதே நடிகையின் மீதான சமுதாயத்தின் பாலியல் தாக்குதல்களை மனம் விட்டு அலசும் தமிழர் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவா நாம்! நடக்கட்டும்! )*//

ilavanji said...

வெங்கட்ராமன்,

// நம்மிள் எழும் உணர்சிகளை, இடம் பொருள் ஏவல் பார்க்காமல் நாம் தீர்த்துக் கொண்டால் நமக்கும் மார்கழி மாத நாய்க்கும் என்ன வித்தியாசம் //

நான் இங்கே கடற்கரையில் கட்டிப்புரளும் ஜோடிகளுக்கு கட்டில்மெத்தை வாங்கிக்கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவு திரட்ட பீச்சுல என்ன நடந்தா உமக்கென்ன எனவும் கேட்கவில்லை.

ஜோடிகளாக உட்கார்ந்திருப்பதாலேயே போகிற போக்கில் இவங்க எல்லாம் காதலர்களா? பொது இடத்தில் மலம் போறாங்க, கண்ட நாய்கள் என பொதுமைப்படுத்தி திட்டும் குணத்துக்கு பின்னாலிருக்கும் நமது தகுதிகளை பற்றியே எனது கேள்வி!

குமுதத்தில் வரும் நடுப்பக்க கவர்ச்சிப்படத்தை பற்றி எனக்கு எந்தவித குறையும் இல்லை. பார்த்து ரசிப்பது உட்பட. ஆனால் அதே குமுதத்தில் ஒரு நடிகையின் கதை எனவும் என யோக்கியவான்கள் போல எழுதிக்கொண்டே அடுத்தவரின் அந்தரங்களை நாகரீக போர்வையில் விற்கும்போதுதான் அது ஆபாசமாகிறது. விற்கும் அவர்களுக்குகூட பெரிய நட்டமில்லை. அதனை தவறாமல் படித்து இது அவனா இது அவளா என தவறாமல் படித்து புளங்காகிதம் அடையும் நம் புத்தி எந்த புத்தி? உள்ளுக்குள் அடுத்தவர்களின் அந்தரங்களை நோண்டும் அதே சமயம் வெளிக்கு சமுதாய அவலங்களை சாடுவதான தொணியுடன் தனியா பீச்சுக்கு வந்திருக்கா... இவ கேசாதான் இருக்கும். ஓரமா ஒதுங்கி உக்கார்றாங்க... கண்டிப்பா தடவறதுக்குதான் இருக்கும்னு லத்திய தூக்கிட்டு சமூகக் கண்கானிப்பாளராக கெளம்புவதுதான் அசிங்கமாவும் அருவருப்பாவும் இருக்கு.

வாராவாரம் வெள்ளிக்கிழமை மோகன் தாஸ் அருமையான நல்ல க்ளாமர் படங்கள் க்ளாமர் படங்கள் என்றே சொல்லிப் போடுவாப்புல! அருமையா இருக்கும். பார்த்து ரசிங்க! ஆனா இந்த பதிவுல இருக்கற அடுத்தவங்க அந்தரங்களை ஒளிந்திருந்து பார்த்து நம் கற்பனைக்கேற்ப நியாயங்களை பேசுவதிலும் கிளுகிளுப்பு அடைவதிலும் எனக்கு உடன்பாடில்லை.

Geetha Sambasivam said...

நல்ல வெயில் நேராமாத் தெரியுதே? ம்ம்ம்ம்?

பூனைக்குட்டி said...

இளவஞ்சி,

//ஆனா இந்த பதிவுல இருக்கற அடுத்தவங்க அந்தரங்களை ஒளிந்திருந்து பார்த்து நம் கற்பனைக்கேற்ப நியாயங்களை பேசுவதிலும் கிளுகிளுப்பு அடைவதிலும் எனக்கு உடன்பாடில்லை.//

இந்த வரிகளுக்காக மட்டும் சில விளக்கங்கள். நான் இந்தப் படத்தைப் போட்டு தலைப்பு வைக்க நினைத்த பொழுது கவர்ந்திழுப்பதற்காக போட்டது தான் மேற்கண்ட தலைப்பு...

ஆனால் பதிவர்கள் நான் அவர்களிடம் கேள்வி கேட்பதாக நினைத்து பதில் சொன்னது உண்மையில் நானே எதிர்பாராத ஒன்றுதான் :( சொல்லப்போனால் இன்னும் நிறைய எதிர்ப்பைத்தான் எதிர்பார்த்தேன் இந்தப் பதிவிற்கு. சப்போர்ட்டையோ இல்லை மேற்சொன்ன "நடக்கிற விஷயங்களை"யோ இல்லை.

நான் அந்தப் படம் போட்டதற்காக என்னை டிபண்ட் செய்துகொள்ளவில்லை. இந்த விளக்கம் அப்படியில்லை என்றே நினைக்கிறேன்.

வெங்கட்ராமன் said...

சென்னை மெரீனா கடற்கரையில் நடக்கிற கண்றாவிகளைப் பற்றித்தான் நான் சொல்ல வந்தேன். . . .

நீங்க உடனே தனிப்பட்ட தகுதி பொதுப்படையா திட்றானுக ன்னு குதிக்கிறீங்க.

இளவஞ்சி உங்களுக்கு என்ன சொல்லி புரியவைக்கிறதுன்னு தெரியல.

சென்னை மேரினா கடற்கரைய பத்தி ஒரு பதிவு விளக்கமா போடுறேன். . . .
(விரைவில் போட முயற்சி செய்கிறேன்)

மோகன்தாஸ் சார் அப்ப இந்த படத்த அங்க பயண்படுத்திகலாமா. . . . . ?

லக்கிலுக் said...

//நீங்களும் சொல்லுங்க ஏதாச்சும் //

இந்த போட்டோ எடுத்தப்ப நானும் பக்கத்துலே நின்னு தொலைச்சேன் :-(

லக்கிலுக் said...

//வெங்கட்ராமன் said...
சென்னை மெரீனா கடற்கரையில் நடக்கிற கண்றாவிகளைப் பற்றித்தான் நான் சொல்ல வந்தேன். . . .
//

வெங்கட்ராமன் இந்த விவாதங்களை உற்று நோக்கியதில் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க நினைக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.

இளவஞ்சி பேசுவது உள்மன வக்கிரம் பற்றி. அது உங்களுக்கும் உண்டு, எனக்கும் உண்டு, அவருக்கும் உண்டு. சந்தர்ப்பம் வரும்போது வெளிப்பட்டு விடுகிறது. அவ்வளவு தான்.

போட்டோ எடுத்த போட்டோகிராபரும் பட்டும், படாமலும் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்கவும் :-)

வெங்கட்ராமன் said...

லக்கிலுக் நீங்க சொல்றதும் புரியுது,
இளவஞ்சி சொல்றதும் புரியுது,

திரும்ப திரும்ப திரும்ப நான் சொன்னாலும் அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

****************************
ஜோடிகளாக உட்கார்ந்திருப்பதாலேயே போகிற போக்கில் இவங்க எல்லாம் காதலர்களா? பொது இடத்தில் மலம் போறாங்க, கண்ட நாய்கள் என பொதுமைப்படுத்தி திட்டும்
****************************

போகிற போக்கில் நான் திட்டுவதாக கூறுகிறார். அந்த அளவுக்கு மட்டமான சிந்தனை எனக்கு இல்லை.

அதனால் தான் நான் மீண்டும் மீண்டும் சொன்னேன் "மெரீனா விஷயம்" என்று

உங்கள மாதிரியே அவருக்கும் என் மேல ஏதோ கோபம் போலிருக்கு சந்தர்ப்பம் கிடைக்குதேன்னு தாளிக்கிறார். . . .

சரி விடுங்கள், ஒரு பதிவு எழுத தலைப்பு கொடுத்திருக்கிறார்.

பூனைக்குட்டி said...

அனானி இப்ப ஓக்கேவா?

ilavanji said...

வெங்கட்ராமன்,

// உங்கள மாதிரியே அவருக்கும் என் மேல ஏதோ கோபம் போலிருக்கு சந்தர்ப்பம் கிடைக்குதேன்னு தாளிக்கிறார். . . .//

என்னாங்க இப்படி சொல்லிட்டீங்க?

இப்படி நாம மாத்திமாத்தி பின்னூட்டம் போட்டுக்கறதால நாளப்பின்ன தாஸையும் லக்கியையும் நேர்ல பார்த்தா ரோட்டுல கட்டிப்புடிச்சி உருளவா போறோம்? இல்ல உங்களை சென்னைல பார்த்தா இதே மெரினா பீச்சுல எனக்கு மொளகா பஜ்ஜி வாங்கித்தர மாட்டீங்களா? :)

// உள்மன வக்கிரம் பற்றி. அது உங்களுக்கும் உண்டு, எனக்கும் உண்டு, அவருக்கும் உண்டு. சந்தர்ப்பம் வரும்போது வெளிப்பட்டு விடுகிறது. அவ்வளவு தான்.// இதோ! நான் சொல்ல வந்ததுல முதல் பாதி இதுதான். அவரவர் ஆழ்மனது ரகசியங்கள் அவரவருக்கு. இரண்டாவது அடுத்தவர் அந்தரங்கள் மீதாக கண்டிக்கவும் தண்டிக்கவும் நாம் எந்தவிதமான அளவுகோல்களை கையிலெடுக்கிறோம்னு சொல்ல வந்தது. இந்த இரண்டையும் சொல்வதாலேயே நான் இதெல்லாம் கடந்த புனிதன்... அந்த தகுதில மத்தவங்களை திட்டறான்னு நினைக்கறீங்க போல! இதை தவறு என முழுமையாக "உணர்ந்தவன்" என்று மட்டுமே இப்போதைக்கு உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

நீங்க உங்களை தனிப்பட்ட முறையில் வாய்ப்புக்கிடைத்ததற்காக தாக்குவதாக நினைப்பதால், உங்கள் மன வருத்தத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

உங்க பதிவையும் கண்டிப்பா எழுதுங்க. சென்னை வந்த அந்த மொளகா பஜ்ஜி மறந்துறாதீங்க. :)

வெங்கட்ராமன் said...

*************************************
உங்க பதிவையும் கண்டிப்பா எழுதுங்க. சென்னை வந்த அந்த மொளகா பஜ்ஜி மறந்துறாதீங்க. :)
*************************************

கண்டிப்பா ரெண்டும் உண்டு....