Twitter, தமிழ் விக்கிபீடியா இன்னும் பல

பதிவெழுதுவதை விடவும் twitter உபயோகிப்பது சுலபமாக இருக்கிறது என்றாலும் twitter, தினப்பதிவுகளின் நீட்சியாகப் பார்க்கலாம். உலகைப் புரட்டிப்போடப்போகும் வலை உலகின் நீட்சியாக எல்லாம் இதைக் கருத முடியாது, அதனால் கடப்பாரையாக பதிவைக் கருதாத எவரும் சுலபமாக twitterராக மாறமுடியும். Javaவிற்கும் சேர்த்து API கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் விளையாடிக் கொண்டிருந்தேன். நல்லா வருது, ஆனால் கைவசம் dynamic application ஒன்று இல்லாத குறையை உணர்கிறேன். முன்பொருமுறை ப்ளாக்கர் API வைத்து பின்னூட்ட விளையாட்டு விளையாண்டது நினைவில் வருகிறது.

தீவிரமாக பதிவெழுதாமல் இருக்கும் பொழுதெல்லாம் எனக்கு தமிழ் விக்கிபீடியா நினைவிற்கு வரும், அதுபோல் தான் தற்சமயமும். ஜூலை 2006ல் தொடங்கியது என்றாலும் என்னுடைய தமிழ் விக்கி பங்களிப்பு அங்கையோடு நின்றது ஒரு சோகம் என்று தான் சொல்வேன். ஆதித்த கரிகாலன் பற்றி எழுதியது தான் முதல் கட்டுரை, விக்கிநடை பற்றி தெரியாத கணம், இன்னும் சொல்லப்போனால் என் நடையில் காதல் வர ஆரம்பித்த தருணம், வேகவேகமாகத் தட்டிப்போட்ட கட்டுரை என் நடையிலும், சிறிது எழுத்துப் பிழையுடனும் இருந்தது போலும் அதற்கு தமிழ் விக்கி மக்களிடம் இருந்து வந்த ரெஸ்பான்ஸ் என்னை ஒரு வருடம் அந்தப் பக்கம் அண்ட விடாமல் செய்தது. அது அவர்கள் தவறும் இல்லை சொல்லப்போனால் என் தவறும் இல்லை. விக்கிக்கு செய்வது/எழுதுவது என்பது 'வறட்சியான' ஒன்று.

சொல்லப்போனால் என்னைப் போன்ற ஒரு ஆள் அதனை செய்திருக்கவே முடியாது. Gone in 60 seconds படத்தில் நிக்கோலஸ் கேஜ் கடைசியில், 49 கார்களை கடத்திவிட்டு கடைசி ஒன்றையும் கொண்டு வந்து நிறுத்து, I need some appreciation என்பார் அதைப் போல் எனக்கு அந்தக் காலத்தில் தேவைப்பட்டது appreciation என்று சொல்ல முடியாது ஒரு கட்டுரைக்கு என்ன அப்ரிஷேஷன் வேண்டிக்கிடக்கு. இன்னும் சாதாரணமான மொழியில் எப்படி எழுதுவது என்று புரியும் படி சொல்லியிருக்கலாம்(ஈகோ உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் என்ன சொல்லியிருந்தாலும் விளங்கியிருக்காது! :)), சோழர்கள் பற்றி எழுதும் ஆவல், ஆதித்த கரிகாலன் பற்றி எழுதும் ஆவல் என்று வெறியுடன் வந்தால் அப்படி ஒரு பதில். இப்பொழுது சிரிப்பாக இருந்தாலும் அன்றைக்கு நினைத்தது அப்படித்தான். மற்றவர்களைப் பற்றித் தெரியாது எனக்கும் விக்கிநடை என்று புழக்கத்தில் இருக்கும் ஒரு விஷயத்திற்கும் பெரும் தொலைவு உண்டு.

பின்னர் எனக்கு நானே தமிழ் விக்கிபீடியா படும் அவஸ்தைகளைப் புரிந்து கொண்டு என் ஈகோவைக் கடாசிவிட்டு திரும்பவும் இறங்கிய பொழுது ஒரு வருடம் ஓடியிருந்தது. முதல் கட்டுரை 28 ஜூலை 2006, இரண்டாவது கட்டுரை 17 மே 2007. நான் மட்டுமல்ல விக்கிபீடியாவும் மாறியிருந்ததாகத் தெரிந்தது. ஏற்கனவே எழுதி இருந்த சோழர் வரலாறு பத்திகளை, கொஞ்சம் போல் விக்கிநடைக்கு மாற்றி போட ஆரம்பித்தேன். பின்னர் தொடர்ச்சியாக என்று சொல்லாவிட்டாலும் ஏதோ என்னால் ஆன, நேரம் செலவு செய்ய முடிந்த அளவிற்கு தமிழ் விக்கிக்கு எழுதினேன். சொல்லப்போனால் நானெல்லாம் இன்னும் ஒன்றும் செய்யவே ஆரம்பிக்கலை. இப்போதைக்கு சோழர்கள் பற்றி ஆங்கில விக்கிபீடியா அளவிற்கு இல்லை அதற்கும் மேல் விவரம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது.

ஆழ உழுவது என்றும் அகல உழுவது என்றும் பதிவுகளிலேயே பேச்சு உண்டு, பதிவுலகில் அகல உழுவதையே நான் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் விக்கியில் ஆழ உழுவதைத் தேர்ந்தெடுத்தேன். ஆங்கில விக்கிபீடியாவை நாளொன்றுக்கு இருபது இருபத்தைந்து முறைக்கு மேல் உபயோகிப்பவன் என்ற முறையில் இதை நான் செய்ய வேண்டியது என் கடமை என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு கொஞ்சம் "நீலகண்ட சாஸ்திரி" நடையில் வருகிறது சோழர் கட்டுரைகள் என்றாலும் ஓரளவிற்கு முடித்துவிட்டு எழுதிய எல்லாக்கட்டுரையையும் இன்னும் பொது நடைக்கு கொண்டு வரவேண்டும். ஆச்சர்யமாகயிருக்கிறது, விரும்பி ஏற்றுக் கொண்ட என் நடையை விட்டு விலகி இதைச் செய்கிறேன் எனும் பொழுது ஆனால் முன்னர் சொன்ன காரணம் தான் மீண்டும் மீண்டும் நினைவில் வருகிறது. என்னைக் கேட்டால் தமிழ் விக்கிபீடியாவிற்கு பதிவர்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்றே சொல்வேன்.

எடுத்துக் கொள்ள விஷயமா இல்லை, உங்களுக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி எழுதலாம்(தனித்தனி புத்தகங்களாக), எழுத்தாளர்களைப் பற்றி, சினிமாக்களைப் பற்றி ஆனால் ஒரேயொரு பிரச்சனை தான் நடை பொதுவாக இருக்க வேண்டும் appreciation பதிவுலகத்தில் கிடைக்கும் அளவிற்குக் கிடைக்காது அதனால் பின்வரும் ஒரு சந்ததிக்கு விஷயம் கொடுத்தவர்களாயிருப்பீர்கள்.

சமீபத்தில் மாற்றங்கள் செய்த மூன்று கட்டுரைகள்.

இராஜராஜ சோழன்
இராஜேந்திர சோழன்
புதுக்கோட்டை(பாதியில் நிற்கிறது)

ஏற்கனவே mohandoss.in என்ற இணையதளம் என்னிடம் தான் இருந்தது/இருக்கிறது, அதற்கு இணைப்பு கொடுத்திருந்த ஜாவா, டேட்டாபேஸ் சப்போர்ட் வாய்ந்த என் மற்றொரு இணையதளம் மறதியில் கைவிட்டுப் போனதால் mohandoss.in ன்னும் அப்படியே நின்றது. இப்பொழுது mohandoss.com வாங்கி, blog.mohandoss.comல் செப்புப்பட்டயம் ஏற்றப்பட்டுவிட்டது. எனக்கு ப்ளாக்கர் விட்டுச் செல்ல அத்தனை ஆசையில்லை, சொல்லப்போனால் kundavai.wordpress.com நான் கொஞ்ச காலமாகவே உபயோகித்துவரும் ஒரு இணையதளம் தான் என்றாலும். ப்ளாக்கர் ஃபீவர் இன்னும் போகலை. முழுசும் சொந்தமா code எழுதி Java, J2EE, structs, springs என்று கையில் கிடைச்சதையெல்லாம் போட்டு ஒரு சொந்த இணையதளம் வைச்சிக்கணும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் இது திரும்பவும் சக்கரம் கண்டுபிடிக்கிற கதைதான்னாலும் அப்படி ஒரு வெறி இருந்தது, இப்ப ரொம்ப கொஞ்சமா இருக்கு. :)

Adventure tourism என்று சொல்லி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் வயநாட்(கேரளா) போகலாமா என்று கேட்டிருந்தார் என் பெயர் எல்லாம் டீபால்ட்டாகவே உண்டென்றாலும் வேறு எதுவும் ப்ளான் இருக்கக்கூடாதென்பதற்கான ஒரு அப்படி ஒரு கேள்வி. யார் யார் வருவார்கள் என்று தெரிந்தாலும் டீம் முழுவதற்கும் மெயில் அனுப்பப்பட்டது. பதில் எப்பொழுதும் போலத்தான் bachelor எல்லாம் in, married எல்லாம் out. :))))) கல்யாணம் செய்துக்கிறதைப் பத்தி தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

PS: தமிழ்மணத்தில் இன்னமும் புதிய பதிவின் உரல் சேர்க்கப்படாததால் பூனைக்குட்டியை எழுப்பி விட்டிருக்கிறேன்.

12 comments:

ரவிசங்கர் said...

mohandoss, தமிழ் விக்கிப்பீடியா பற்றி எழுதியதற்கு நன்றி. உங்களைப் போன்று துறை / ஆர்வம் சார்ந்து பங்களிக்க இன்னும் நிறைய பேர் வேண்டும்.

1. புதிய பங்களிப்பாளர்களை இன்னும் அரவணைத்து, விளக்கமாக சில விசயங்களைச் சொல்லித் தர வேண்டி இருப்பதை உணர்கிறோம். வழிகாட்டுக் குறிப்புகளை விரிவுபடுத்துவோம்.

2. விக்கிப்பீடியா நடை கொஞ்சம் வறட்சியானது என்பது உண்மை தான். ஆனால், இது தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டும் உள்ளதன்று. ஆங்கில விக்கிப்பீடியாவில் பங்களித்தாலும் இதை நீங்கள் உணரலாம். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு நடையில் இருந்தால் படிப்பவர் குழம்புவார் என்பதால் ஒரு கலைக்களஞ்சிய நடையைப் பின்பற்ற வேண்டி இருக்கிறது. நாம் பள்ளியில் படிக்கும் பாடப்புத்தகங்கள் எல்லாம் ஒரே தொனியில் இருப்பது போல் இதைக் கருதலாம். தங்கள் நடையில் எழுத விருப்பமானால் விக்கி நூல்களில் எழுதலாம். அங்கு கூடிய சுதந்திரம் உண்டு.

3. பதிவுலகில் கிடைக்கும் அளவுக்கு விக்கிப்பீடியாவில் பாராட்டுகள் கிடைக்காது என்பது உண்மை தான். ஏனெனில் நம் வீட்டைக் கட்டியெழுப்பும் போது நாமே மாற்றி மாற்றிப் பாராட்டிக் கொண்டிருப்பதில்லையே :) அப்படியும் சில முக்கியமான கட்டுரைகளுக்கு அவ்வப்போது பாராட்டுகள் வருவைத் கவனித்திருப்பீர்கள். 1000க்கணக்கில் கட்டுரை எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டுரைக்கும் பாராட்டினால் comedy ஆகிவிடும் :) அனைத்து விக்கிப்பீடியர்களும் மிகுந்த வேலை நெருக்கடிக்கு இடையிலேயே பங்களிக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு மணித்துளியும் கட்டுரை ஆக்கம், துப்புரவு, கட்டுரை மேம்பாடு ஆகியவற்றில் செலவழிப்போம் என்ற எழுதப்படாத புரிந்துணர்வோடு செயல்படுவோம்.

நன்றி.

TBCD said...

இப்ப எப்படியாம்.. :P

///
ஈகோ உச்சக்கட்டத்தில் இருந்த சமயம் என்ன சொல்லியிருந்தாலும் விளங்கியிருக்காது!
///

"தான்"னை களைவது என்பது அவ்வளவு சுலபமா...?

தூங்கப் பண்ணலாம்...முயன்றதில்லை...

:)

மோகன்தாஸ் said...

ரவி,

நான் சொல்லவந்ததெல்லாம் ஒன்றுதான், தமிழ்விக்கிபீடியாவிற்கு எழுத பதிவர்களோ/புதியவர்களோ வருவது என்பது எத்தனை அரிய விஷயம் என்பது புரியும் பொழுது, நேற்று நீங்கள் twitterல் தந்த statisticsஐயே எடுத்துக் கொண்டால்.

//Tamil wikipedia crosses 3000 registered users. current active contributors r less than 15 :( (0.5%)//

இதில் நிச்சயம் பிரச்சனை இருக்கிறது. 3000பேர்கள் சும்மா ப்ரொபைல் தயாரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

நான் interview எடுக்கத் தொடங்கிய பொழுது, நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு திறமை இல்லை என்று நிறைய பேரை ரிஜக்ட் செய்து கொண்டிருந்தோம்(சொல்லப்போனால் basic தெரியாமல் வந்தவர்கள்.) எங்கள் பக்கம் தவறே இல்லாத பொழுதும் எங்களை அழைத்து நிர்வாகம், interviewவிற்கு வருபவர்கள்/paper வாங்குபவர்கள் விகிதத்தை(அதுவும் .5 தான்) வைத்து கேள்வி எழுப்பினார்கள்.

turnout நிறைய இல்லையே என்று நிச்சயம் தமிழ் விக்கிபீடியாவும் இதைப் பற்றி கவலை கொள்ள வேண்டும். யார் மீதும் தவறும் இல்லாத பொழுதும் நிச்சயம் என்ன பிரச்சனை என்று கவனிக்க வேண்டும், ஏனென்றால் பிரச்சனை நிச்சயமாய் இருக்கிறதில்லையா?

மோகன்தாஸ் said...

//இப்ப எப்படியாம்.. :P//

TBCD,

என்னை அறிந்தவன் என்ற முறையில் சொல்றேன். நான் தமிழ் விக்கிபீடியாவிற்கு இரண்டாம் கட்டுரை எழுதியது பெரிய அதிசயம். இன்னொரு பிரச்சனையில் என்னிடம் இருந்து இந்த result உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.

தூக்கியெறிந்தது என்னைப் பொறுத்தவரை எறிந்ததாகத்தான் இருந்திருக்கிறது, இப்பொழுது இல்லை. பல விஷயங்களை இப்பொழுது Egoவிற்கு உள் இழுத்துக் கொள்வதில்லை என்பது தான் என் பதிலாக இருக்க முடியும்.

Egoவிற்குள் இழுத்துக் கொண்டது இன்னமும் அப்படியே தான் தொடர்கிறது.

//"தான்"னை களைவது என்பது அவ்வளவு சுலபமா...?//

இரண்டு 'தான்'கள் ஒன்றாகயிருக்க முடியாது, என்னுடைய முடிந்த போன 'தான்' இப்பொழுது இருக்கும் 'தானை' விடவும் மூர்க்கமானது.

//தூங்கப் பண்ணலாம்...முயன்றதில்லை...//

என்னது தூங்கப் பண்ணுறதா, Egoஎன்பது புலி மாதிரியான விஷயம் தூங்கவே முடியாது. என்ன ஒன்று நிறைய விஷயங்களை Ego வட்டத்திற்குள் இழுத்துக் கொள்ளாமல் இருக்கலாம்.

Anonymous said...

http://blog.twitter.com/2008/04/twitter-to-rescue.html

There is some interesting news
about a rescue in Egypt, thanks to
twitter

சிறில் அலெக்ஸ் said...

விக்கியில் ஒவ்வொரு கட்டுரையை எழுதியபின்னும் பதிவில் இணைப்பையோ அல்லது முழு வடிவத்தையோ தரலாம். பாராட்டுக்கு வழிவகுக்கும்.

பக்கப் பட்டையில் இதுவரை செய்த விக்கிவேலை என ஒரு குறும்பட்டையை நிறுவலாம்.

விக்கிக்கான பங்களிப்பு மகத்தானது. பாராட்டுக்கள். (பாராட்டவாவது செய்வோமே).

கொழுவி said...

புலி மாதிரியான விஷயம் தூங்கவே முடியாது //

பார்த்து பேசுங்க :)

மோகன்தாஸ் said...

அனானிமஸ், நான் பதிவையே கடப்பாரையா உபயோகிக்கக்கூடாதுங்கிறவன், நீங்கள் twitterஐ அப்படி உபயோகிப்பதைப் பற்றி சொல்கிறீர்கள். நான் என்ன சொல்ல?!

மோகன்தாஸ் said...

சிறில்,

நான் பாராட்டுக்களைப் பற்றி சொன்னது, புதிதாய் வருபவர்களை இன்னும் இன்முகத்துடன் வரவேற்பதற்காக மட்டும் தான்.

அதுமட்டுமல்லாமல், தமிழ் விக்கி மக்கள் அனைவரும் ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கவே மேம்படுத்தவோ செய்கிறார்கள் என்பதால் பட்டை போடுறதெல்லாம் உதவாது.

மற்றவர் பாராட்டுக்களுக்காக செய்வது என்பதைத் தாண்டி சொந்த satisfactionக்காக செய்யத் தொடங்கி நாட்களாகிவிட்டாலும் பாராட்டு என்பது எப்பொழுதும் ஊக்கப்படுத்தும் ஒன்றுதான்.

மோகன்தாஸ் said...

கொழுவி அண்ணை, No comments :)

செல்வராஜ் (R.Selvaraj) said...

மோகன்தாஸ், உங்களைப் போலவே விக்கிப்பீடியாவில் நானும் ஓராண்டுக்கும் முன்னர் பதிவு செய்துகொண்டாலும், அண்மையில் தான் அதிகம் எழுத ஆரம்பித்திருக்கிறேன். வலைப்பதிவில் எழுதுவதை விட வேறு வகையான நடையில் எழுதவேண்டியிருப்பது ஆரம்பத்தில் ஆர்வக் குறைவைத் தந்தது உண்மை தான். மீண்டும் நீங்கள் சொல்லியிருப்பதைப் போலவே ஆங்கில/தமிழ் விக்கிப்பீடியாக்களை பயன்படுத்துவது அதிகமாக இருக்கிறபோது நம்மால் ஆனதைச் செய்வோமே என்று தான் நானும் ஆரம்பித்திருக்கிறேன்.

சோழர் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பினும் நீங்கள் எழுதுவதன் பக்கம் இன்னும் வரவில்லை. நேரக்குறைவு தான் காரணம். அண்மையில் ஆரம்பித்த பிறகு ஒரு நாளுக்குச் சிறிதாவது எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்களும் நான் எழுதும் வேதிப்பொறியியல் பக்கமாய் வந்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன் :-)

பின்னூட்டம் இடவில்லையெனினும், உங்கள் பிற இடுகைகளையும் பயணங்கள் பற்றியும் பிறவும் படித்தே வருகிறேன்.

Anonymous said...

//அனானிமஸ், நான் பதிவையே கடப்பாரையா உபயோகிக்கக்கூடாதுங்கிறவன், நீங்கள் twitterஐ அப்படி உபயோகிப்பதைப் பற்றி சொல்கிறீர்கள். நான் என்ன சொல்ல?!//
சிறு துரும்பும் பல் குத்த உதவும்!? பழமொழி சரியாக நினைவில்லை. இயற்க்கை சீறிய பொழுதொன்றில்,twitter ஐ மக்கள் சிலர், தங்கள் நிலை உணர்த்துவதற்காக உபயோகித்ததாக
செய்தி வந்திருந்தது!